திராவிடநாடு எதற்காக மனித மலத்தை அள்ள ஊக்குவிக்கிறது – நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நலதிட்டங்கள் முதலியன (5)

திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறதுநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நலதிட்டங்கள் முதலியன (5)

2019 – கழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லைஉச்ச நீதிமன்றம் வேதனை;

  • கழிவுநீர்த்தொட்டிக்கு ஒரு மனிதரை இறக்கி அவர் விஷவாயுவில் இறக்கச் செய்வது வேறு எங்கும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது.
  • எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தண்டனை சட்டத்தை சீராய்வு  செய்வது குறித்து மனுவில் உச்ச நீதிமன்றம் கருத்துக்களை கூறியுள்ளது.
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதி பாகுபாடி இன்னும் நாட்டில் தொடர்கிறது.  இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது.
  • மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை , வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக  பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை? கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.
  • ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள். கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனித  தன்மையற்றது.
  • இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். இந்திய அரசியலமைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது.நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்று தானே  பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இது போன்ற கொடுமை நடந்து வருகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மே 2023 – தமிழக அரசு அரிக்கைஆணை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலை மையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல் பாட்டு வழிகாட்டு தல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகக் கூட்ட ரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மனிதக் கழிவு களை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறு வாழ்வு சட்டம் 2013, பிரிவு 7இன் படி, எந்தவொரு நபரும், ஒப்பந்த தாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.

விதிகளை மீறுவோர் மீது தண்டனை: அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9இன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபரா தம் அல்லது இரண்டும் தண்டனை யாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலி ருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக் கப்படுவார்கள். மேலும், இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவு நீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சென்னை குடிநீர் வாரியத் தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இழப்பீட்டு தொகை எவ்வாறு கொடுக்கப் படவேண்டும்?: அதன்படி, சட்ட விரோதமாக கழிவு நீர்த் தொட்டியிலிருந்து கழிவு நீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25,000- அபராத மும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ.50,000 அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப் பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவையான அனைத்து பாது காப்பு உபகரணங்களும் / சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய் யும் பணியில் ஈடுபடுத்தி. அப் பணியாளர் இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். பகுதிப் பொறியாளர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்று வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக, விரிவாக்கப் பட்ட பகுதி களில் வீடுவீடாக துண்டு பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோக்கள் மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

  • பல ஆண்டுகளாக நம் நாட்டின் தூய்மைப் பணிகளுக்கு கழிப்பறைகள் முதல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் வரை அனைத்து நிலைகளிலும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரின் உழைப்பு மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கட்டப்பட்ட உலா்ந்த கழிவறைகளால் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் இழிநிலை ஏற்பட்டது.
  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நம் சமுதாயத்தின் சாபக்கேட்டினை ஒழிப்பதற்கான முயற்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1994-ஆம் ஆண்டில் உருவான ‘சபாய் கா்மாச்சரி அந்தோலன்’ (துப்புரவுப் பணியாளா்கள் கிளா்ச்சி) இயக்கம் அரசு ஊழியா்கள், வழக்குரைஞா்கள், கல்வியாளா்களிடையே மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
  • 2021 ஏப்ரல் மாதம் 30-க்குள் அனைத்து மலம் மக்கல் தொட்டிகளையும் (செப்டிக் டேங்க்) கழிவுநீா் தொட்டிகள நீா் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 243 நகரங்களில் ‘சஃபைமித்ரா சுரக்ஷா சேலஞ்ச்’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • 2008-ஆம் ஆண்டில் 7,70,338 ஆக இருந்த மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 42,303 ஆகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் அதிகாரபூா்வ தரவு ஒன்று கூறுகிறது. ஆனால், பதினான்கு இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சமூக நீதி -அதிகாரமளித்தல் அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழகம் நடத்திய கணக்கெடுப்பு, 2018-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 87,913 போ் என தெரிவிக்கிறது.
  • 2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1,82,505 போ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியினை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனா் எனக் கூறுகிறது. அதே சமயம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உலா் கழிப்பறைகளின் எண்ணிக்கை சுமாா் 26 லட்சம் என மதிப்பிடப்பட்டிருப்பதால், துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் என்று சபாய் கா்மாச்சரி அந்தோலன் மதிப்பிட்டுள்ளது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சபாய் கா்மாச்சரி அந்தோலன் தரவு, தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழக தரவு ஆகியவற்றை ஆராயும்போது அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரமாக இருந்ததால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பழைமையான நடைமுறை ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 89 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • ஆனாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணி இந்திய நகரங்களில் மட்டுமே உள்ள பிரச்னை போன்று இந்திய நகா்ப்புற தரவுகளை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
  • மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடை – மறுவாழ்வு சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும் 2014-ஆம் ஆண்டில் இவ்வகைக் குற்றங்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்கிறது சமூக நீதி – அதிகாரமளித்தலுக்கான 57-ஆவது நிலைக்குழு அறிக்கை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடைசட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டும் கா்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே விசாரணைக்கு வந்தது.
  • துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணைய தரவின்படி 2013 – 2017 ஆண்டுகளுக்கிடையில் 608 துப்புரவுப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனா். துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 123 துப்புரவுப் பணியாளா்களின் இறப்பினை பதிவு செய்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் தில்லி பிராந்தியத்தில் மட்டும் 429 துப்புரவுப் பணியாளா்கள் இறந்துள்ளதாக சபாய் கா்மாச்சரி அந்தோலன் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தேசிய ஆணைய தரவின் நம்பகத்தன்மை குறித்து சட்ட வல்லுநா்கள் பலா் கவலை எழுப்பியுள்ளனா்.
  • 2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களின் விடுதலை – மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 42,203 தூய்மைப் பணியாளா்களில் 27,268 பேருக்கு மட்டுமே ஒருமுறை வழங்கப்படும் நாற்பதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டதாக 2017-18-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 2014-ஆண்டு முதல், கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுமார் 1,000 லட்சம் கழிப்பறைகளில், 13 சதவீதவீம் இரட்டைக் குழி கழிப்பறைகளாகவும், 38 சதவீதவீம் கழிவு நீா் ப்போக்குக் குழிகளுடன் (சோக் பிட்) கூடிய மலம் மக்கல் தொட்டி கொண்ட கழிப்பறைகளாகவும், 20 சதவீதவீம் ஒற்றைக் குழி கழிப்பறைகளாகவும் இருந்தன என்று 2017-18 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர ஊரக சுகாதார மதிப்பீட்பீ டு ஆய்வு கூறுகிறது.
  • இரட்டைக் குழி கழிப்பறை கள் தவிர மற்ற இரண்டு வகைக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனித உழைப்போ இயந்திரமோ தேவைப்படுகிறது. கழிவு நீா் ப்போக்குக் குழி, ஒற்றைக் குழி வகையிலான கழிப்பறைகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாலும், கிராமபுறங்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான கழிப்பறைகளை மனிதா்களே சுத்தம் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
  • இந்திய கழிவறைப் பயன்பாட்டிலும் கட்டமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைப் பணியாளா் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்தும் என நம்புவோம். நன்றி: தினமணி (06 – 03 – 2022)

© வேதபிரகாஷ்

17-06-2023

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக