Archive for the ‘மலம் அள்ளுதல்’ Category

திராவிடநாடு எதற்காக மனித மலத்தை அள்ள ஊக்குவிக்கிறது – நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நலதிட்டங்கள் முதலியன (5)

ஜூன் 17, 2023

திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறதுநீதிமன்ற தீர்ப்புகள் மூலம் நலதிட்டங்கள் முதலியன (5)

2019 – கழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லைஉச்ச நீதிமன்றம் வேதனை;

  • கழிவுநீர்த்தொட்டிக்கு ஒரு மனிதரை இறக்கி அவர் விஷவாயுவில் இறக்கச் செய்வது வேறு எங்கும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக கண்டித்துள்ளது.
  • எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தண்டனை சட்டத்தை சீராய்வு  செய்வது குறித்து மனுவில் உச்ச நீதிமன்றம் கருத்துக்களை கூறியுள்ளது.
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் சாதி பாகுபாடி இன்னும் நாட்டில் தொடர்கிறது.  இன்னும் கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்குத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே சமூகம் பயன்படுத்துகிறது.
  • மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்தான் ஆனால், அவர்கள் அனைவருக்கும் சமமான உரிமை , வசதிகள் அளிக்கப்படுகிறதா? கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கும் தொழிலாளர்களுக்கு முறையாக  பாதுகாப்பு கவசமான முகமூடி, ஆக்ஸிஜன் சிலிண்டர், ஏன் வழங்கப்படுவதில்லை? கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் அவலம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.
  • ஒவ்வொரு மாதமும் 4 முதல் 5 பேர் கழிவுநீர்த் தொட்டியில் சிக்கி இறக்கிறார்கள். கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் மனிதருக்குப் போதுமான பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் பணியைச் செய்ய வற்புறுத்துவது மனித  தன்மையற்றது.
  • இதன் மூலம் நாட்டில் தீண்டாமை மறைமுகமாக இருக்கிறது என்று நம்புகிறோம். இந்திய அரசியலமைப்பு தீண்டாமையை ஒழித்துவிட்டது.நான் உங்களிடம் கேட்கிறேன். கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் தொழிலாளியுடன் கை குலுக்குவீர்களா? அதற்கு இல்லை என்று தானே  பதில். இந்த வழியில்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்பும் இன்னும் இது போன்ற கொடுமை நடந்து வருகிறது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மே 2023 – தமிழக அரசு அரிக்கைஆணை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலை மையில் கழிவுநீர் மேலாண்மை ஒழுங்கு முறை மற்றும் செயல் பாட்டு வழிகாட்டு தல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகக் கூட்ட ரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மனிதக் கழிவு களை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறு வாழ்வு சட்டம் 2013, பிரிவு 7இன் படி, எந்தவொரு நபரும், ஒப்பந்த தாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது.

விதிகளை மீறுவோர் மீது தண்டனை: அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபரின் மீது மேற்படி சட்டத்தின் பிரிவு 9இன்படி முதன் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 2 லட்சம் ரூபாய் அபரா தம் அல்லது இரண்டும் தண்டனை யாக விதிக்கப்படும். இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலி ருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக் கப்படுவார்கள். மேலும், இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்தி கரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவு நீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சென்னை குடிநீர் வாரியத் தின் மூலம் உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இழப்பீட்டு தொகை எவ்வாறு கொடுக்கப் படவேண்டும்?: அதன்படி, சட்ட விரோதமாக கழிவு நீர்த் தொட்டியிலிருந்து கழிவு நீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ரூ.25,000- அபராத மும், இரண்டாம் முறை விதிமீறலுக்கு ரூ.50,000 அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப் பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவையான அனைத்து பாது காப்பு உபகரணங்களும் / சாதனங்களும் கழிவுநீர் லாரிகளில் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய் யும் பணியில் ஈடுபடுத்தி. அப் பணியாளர் இறக்க நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை ரூ.15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். பகுதிப் பொறியாளர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்று வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப் பாக, விரிவாக்கப் பட்ட பகுதி களில் வீடுவீடாக துண்டு பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோக்கள் மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

  • பல ஆண்டுகளாக நம் நாட்டின் தூய்மைப் பணிகளுக்கு கழிப்பறைகள் முதல் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் வரை அனைத்து நிலைகளிலும் 50 லட்சத்துக்கும் அதிகமானோரின் உழைப்பு மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமுடக்க காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கட்டப்பட்ட உலா்ந்த கழிவறைகளால் மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் இழிநிலை ஏற்பட்டது.
  • மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நம் சமுதாயத்தின் சாபக்கேட்டினை ஒழிப்பதற்கான முயற்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1994-ஆம் ஆண்டில் உருவான ‘சபாய் கா்மாச்சரி அந்தோலன்’ (துப்புரவுப் பணியாளா்கள் கிளா்ச்சி) இயக்கம் அரசு ஊழியா்கள், வழக்குரைஞா்கள், கல்வியாளா்களிடையே மிகப்பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
  • 2021 ஏப்ரல் மாதம் 30-க்குள் அனைத்து மலம் மக்கல் தொட்டிகளையும் (செப்டிக் டேங்க்) கழிவுநீா் தொட்டிகள நீா் தொட்டிகளையும் சுத்தம் செய்யும் பணிகளில் முழுமையாக இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு 2020-ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 243 நகரங்களில் ‘சஃபைமித்ரா சுரக்ஷா சேலஞ்ச்’ திட்டம் தொடங்கப்பட்டது.
  • 2008-ஆம் ஆண்டில் 7,70,338 ஆக இருந்த மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டு 42,303 ஆகக் குறைந்துள்ளதாக இந்திய அரசின் அதிகாரபூா்வ தரவு ஒன்று கூறுகிறது. ஆனால், பதினான்கு இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் சமூக நீதி -அதிகாரமளித்தல் அமைச்சக உத்தரவின் பேரில் தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழகம் நடத்திய கணக்கெடுப்பு, 2018-ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை 87,913 போ் என தெரிவிக்கிறது.
  • 2011 ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1,82,505 போ் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியினை முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனா் எனக் கூறுகிறது. அதே சமயம் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உலா் கழிப்பறைகளின் எண்ணிக்கை சுமாா் 26 லட்சம் என மதிப்பிடப்பட்டிருப்பதால், துப்புரவுப் பணியாளா்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம் என்று சபாய் கா்மாச்சரி அந்தோலன் மதிப்பிட்டுள்ளது.
  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, சபாய் கா்மாச்சரி அந்தோலன் தரவு, தேசிய தூய்மை பணியாளா்கள் நிதி மேம்பாட்டு கழக தரவு ஆகியவற்றை ஆராயும்போது அரசாங்கத்தின் முயற்சிகள் தீவிரமாக இருந்ததால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பழைமையான நடைமுறை ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 89 சதவிகிதம் குறைந்துள்ளது.
  • ஆனாலும், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணி இந்திய நகரங்களில் மட்டுமே உள்ள பிரச்னை போன்று இந்திய நகா்ப்புற தரவுகளை மட்டுமே கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிலும் மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
  • மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடை – மறுவாழ்வு சட்டத்தில் கடுமையான விதிகள் இருந்தபோதிலும் 2014-ஆம் ஆண்டில் இவ்வகைக் குற்றங்களுக்கு இந்தியாவின் எந்த ஒரு காவல் நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை ஒன்றுகூடப் பதிவாகவில்லை என்கிறது சமூக நீதி – அதிகாரமளித்தலுக்கான 57-ஆவது நிலைக்குழு அறிக்கை. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2015-ஆம் ஆண்டில் மனிதக் கழிவு அகற்றும் தொழிலாளா் தடைசட்டத்தின் கீழ் இரண்டு வழக்குகள் மட்டும் கா்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அதில் ஒன்று மட்டுமே விசாரணைக்கு வந்தது.
  • துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணைய தரவின்படி 2013 – 2017 ஆண்டுகளுக்கிடையில் 608 துப்புரவுப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது இறந்துள்ளனா். துப்புரவுப் பணியாளா் தேசிய ஆணையம் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 123 துப்புரவுப் பணியாளா்களின் இறப்பினை பதிவு செய்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் தில்லி பிராந்தியத்தில் மட்டும் 429 துப்புரவுப் பணியாளா்கள் இறந்துள்ளதாக சபாய் கா்மாச்சரி அந்தோலன் அறிக்கை தெரிவித்துள்ளது. எனவே தேசிய ஆணைய தரவின் நம்பகத்தன்மை குறித்து சட்ட வல்லுநா்கள் பலா் கவலை எழுப்பியுள்ளனா்.
  • 2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளா்களின் விடுதலை – மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட 42,203 தூய்மைப் பணியாளா்களில் 27,268 பேருக்கு மட்டுமே ஒருமுறை வழங்கப்படும் நாற்பதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கப்பட்டதாக 2017-18-ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் 2014-ஆண்டு முதல், கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுமார் 1,000 லட்சம் கழிப்பறைகளில், 13 சதவீதவீம் இரட்டைக் குழி கழிப்பறைகளாகவும், 38 சதவீதவீம் கழிவு நீா் ப்போக்குக் குழிகளுடன் (சோக் பிட்) கூடிய மலம் மக்கல் தொட்டி கொண்ட கழிப்பறைகளாகவும், 20 சதவீதவீம் ஒற்றைக் குழி கழிப்பறைகளாகவும் இருந்தன என்று 2017-18 ஆண்டுக்கான தேசிய வருடாந்திர ஊரக சுகாதார மதிப்பீட்பீ டு ஆய்வு கூறுகிறது.
  • இரட்டைக் குழி கழிப்பறை கள் தவிர மற்ற இரண்டு வகைக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனித உழைப்போ இயந்திரமோ தேவைப்படுகிறது. கழிவு நீா் ப்போக்குக் குழி, ஒற்றைக் குழி வகையிலான கழிப்பறைகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதாலும், கிராமபுறங்களில் இயந்திர பயன்பாடு குறைவாக இருப்பதாலும் பெரும்பாலான கழிப்பறைகளை மனிதா்களே சுத்தம் செய்வது வெளிப்படையாக தெரிகிறது.
  • இந்திய கழிவறைப் பயன்பாட்டிலும் கட்டமைப்பிலும் பெரும் மாற்றம் ஏற்படுத்திய தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைப் பணியாளா் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஏற்படுத்தும் என நம்புவோம். நன்றி: தினமணி (06 – 03 – 2022)

© வேதபிரகாஷ்

17-06-2023

திராவிடநாடு எதற்காக மனித மலத்தை அள்ள ஊக்குவிக்கிறது – நீதிமன்ற தீர்ப்புகள் விடிவுகாலத்தை எட்டச் செய்கிறதா? (4)

ஜூன் 17, 2023

திராவிடநாடு எதற்காக மனிதமலத்தை அள்ள ஊக்குவிக்கிறதுநீதிமன்ற தீர்ப்புகள் விடிவுகாலத்தை எட்டச் செய்கிறதா? (4)

2008 முதல் 2023 வரை பிரச்சினை தொடர்வது: பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தமிழகத்தில் இருந்து வருவது, நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிப்பது, செப்டிக் டேங்கில் வேலை செய்யக் கூடாது என்றாலும் பணியாளர்களை அமர்த்துவது, போன்றவை தொடர்ந்தன. ஆகஸ்ட் 2008ல், திருமதி சௌத்ரி என்ற தேசிய சபாயி கர்மச்சாரிகளுக்கான கமிஷனின் தலைவர் (Ms. Chowdhary, Chairperson of National Commission for Safai Karamcharis) சென்னைக்கு வந்திருந்தபோது, தமிழ்நாடு, இன்னும் இந்த அவலநிலையை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்[1]. அப்பொழுது கருணாநிதிக்கு போபம் வந்து, வழக்கம் போல அம்மையால் விவரங்களை அறியாமல் பேசிவிட்டார் என்று, புள்ளிவிவரங்களைக் கொடுத்து மறைக்கப் பார்த்தார்[2]. அதுவும் எடுபடாமல் போகவே, அருந்ததியருக்கு ஒதுக்கீடு என்று ஆரம்பித்தார். ஆனால், அதிலும் பங்கை வெட்டி முஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏமாற்றினர். இதன் மூலம், மலம் அள்ளும் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டது[3]. இப்பொழுது 14 ஆண்டுகள் ஆன பிறகும் பிரச்சினையும் தீரவில்லை, இறப்புகளும் நிற்கவில்லை. இந்நிலையில் இந்த விசயங்கள் வருகின்றன.

மார்ச்.2023- உச்சநிதிமன்ற தீர்ப்பும், தூய்மை செய்யும் பணியாளருக்கான நலன்களுக்கான ஆணை: சஃபாய் கரம்சாரி அந்தோலன் தீர்ப்பில், கையால் சுத்தம் செய்பவர்களின் மறுவாழ்வு, பண உதவி, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, வீட்டு மனைகள் ஒதுக்கீடு, வாழ்வாதாரத் திறன் பயிற்சி மற்றும் மாதாந்திர உதவித்தொகை, சலுகைக் கடன்கள் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்கியது[4]. மேலும், கழிவுநீர் கால்வாயில் ஏற்படும் இறப்புகளுக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்குவதுடன், தண்டவாளங்களில் கைமுறையாக குப்பைகளை அள்ளுவதை நிறுத்துமாறு ரயில்வேக்கு உத்தரவிட்டது[5]. நாட்டில் துப்புரவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் பரிசீலித்தது. 2023 பிப்ரவரியில், கையால் தோட்டிகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கும், அவர்களின் மறுவாழ்வுச் சட்டம் 2013 இன் படி, கையால் சுத்தம் செய்பவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுமாறு இந்திய யூனியனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2014 தீர்ப்பில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் “சஃபை கரம்சாரி அந்தோலன் அண்ட் அதர்ஸ் வெர்சஸ். யூனியன் ஆஃப் இந்தியா அண்ட் அதர்ஸ்” தீர்ப்பில் காணலாம்[6].

அரசு சலுகைகளை அறிவித்தல்; சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அதாவலே மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது[7]: கழிவுகளை கையால் அகற்றும் பணியில் ஒருவரும் உயிரிழக்கவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 276 பேரின் குடும்ப உறுப்பினர்கள் இழப்பீடு பெற்றுள்ளனர். இதன் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2003ம் ஆண்டு தாக்கல் செய்த ரிட் மனு மீது, உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறப்பித்த உத்தரவில், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறியது.  இது போன்ற விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மறுவாழ்வு பலன்களை அளித்து வருகின்றன. மேலும், கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சுய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

துப்புரவு தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக அளிக்கப்படும் உதவிகள்: குடும்பத்தில் உள்ள ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ரூ.40,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 உதவி அளிக்கப்படுகிறது. சுகாதாரம் தொடர்பான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கடன் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் வரை மூலதன மானியம்  அளிக்கப்படுகிறது.  கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. கழிவுகளை கையால் அகற்றும் வேலைக்கு தடை  மற்றும் மறுவாழ்வு சட்டம்(எம்எஸ்) 2013-ன் கீழ் கையால் மனித கழிவுகளை அகற்றும் வேலை கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி முதல் நாடு முழுவதும்  தடை செய்யப்பட்டது .  அன்று முதல் யாரும், எந்த நிறுவனமும், கழிவுகளை கையால் அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.  இதை மீறுபவர்களுக்கு  எம்எஸ் 2013 சட்டத்தின் 8வது பிரிவுபடி  2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்[8]. மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்[9]:

© வேதபிரகாஷ்

17-06-2023


[1]  Santosh Chowdhary, Tamil Nadu employing huge number of scavengers”, in “The Hindu” dated 23-08-2008, see athttp://www.hindu.com/2008/08/23/stories/2008082360661000.htm

[2]  தினமலர், துப்புரவு  பணியாளர்  கமிஷன் குற்றச்சாட்டு : உண்மையில்லை என முதல்வர் மறுப்பு, ஆகஸ்ட் 24,2008,00:00 IST.

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=3257&cls=row3&nc at=TN

[3] VEDAPRAKASH, Why “Dravidanadu” promotes manual scavenging?

http://vedaprakash.indiainteracts.in/2008/08/23/why-%E2%80%9Cdravidanadu%E2%80%9D-promotes-manual-scavenging/

[4] LiveLaw, Prohibition Of Manual Scavenging: Supreme Court Asks Centre To Convene Meeting With Secretaries Of All States, Union Territories, Rintu Mariam Biju, 12 Apr 2023 9:32 PM.

The Court was considering a plea to seeking steps to curb hiring manual scavengers in the country. In February, the Court directed the Union of India to place on record the steps taken by it to prevent the employment of manual scavengers as per the Prohibition of Employment as Manual Scavengers and Their Rehabilitation Act 2013. The Court had asked the Centre to inform the steps taken in pursuance of the guidelines issued in the 2014 judgment “Safai Karamchari Andolan And Others vs. Union of India And Others”.

[5] https://www.livelaw.in/top-stories/supreme-court-employment-of-manual-scavengers-226195

In Safai Karamchari Andolan judgment, the Court had issued a slew of guidelines for the rehabilitation of manual scavengers, including cash assistance, scholarship for their children, allotment of residential plots, training in livelihood skill and monthly stipends, concessional loans etc. The judgment had also issued prescribed the minimum compensation in cases of sewer deaths and directed the Railways to end manual scavenging on tracks.

[6]உச்சநீதி மன்ற தீர்ப்பை முழுவதுமாக இங்கே படிக்கலாம்ஊ பதிவிறக்கம் செய்து கொள்லலாம் – https://main.sci.gov.in/jonew/judis/41346.pdf

[7] பிரஸ் இன்வார்மேஷன் பீரோ, கையால் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கான நலத்திட்டம், Posted On: 15 MAR 2022 4:01PM by PIB Chennai

[8] https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806164

[9] https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806288