Archive for the ‘ஸ்மிருதிகள்’ Category

மறைமலை அடிகள் – ஈவேரா மோதல்கள் தீடீரென்று வெடித்து மறைந்தது சைவ-சுயமரியாதையா, சூத்திர-பகுத்தறிவா, அதிகார-பயமா?

ஜூன் 21, 2019

மறைமலை அடிகள்ஈவேரா மோதல்கள் தீடீரென்று வெடித்து மறைந்தது சைவசுயமரியாதையா, சூத்திரபகுத்தறிவா, அதிகாரபயமா?

Adigal and EVR, anti-saiva

சைவத்தைப் பற்றி, தவறான விளக்கம் மற்றும் முறைதவறி சென்ற நிலை: சைவர்களின் புராணங்களைக் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் இடம் பெற்ற கட்டுரைகள் ‘குடிஅரசு’ இதழில் 1927-ஆம் ஆண்டு தொடங்கி வெளிவரத் தொடங்கின. இது நவீனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பின்னர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் தலைவரான பெரியாரையும் பகைஉணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினர். இது எந்த அளவுக்கு இருந்ததென்றால் ‘சுத்த சைவ இரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா?’ என்று தம் உரையில் மறைமலை அடிகள் குறிப்பிடும் அளவுக்குச் சென்றது (குடிஅரசு, 29.7.1928). பின்னர் இக்கூற்றை மறுத்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும் நன்முயற்சிகள் இனிது நடைபெறுக” என்று மறைமலை அடிகள் வாழ்த்தி உள்ளார். (குடிஅரசு, 27.8.1928) இந்நிகழ்வுகளின் விளைவாக ‘சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும்’, ‘சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை’ என்ற கட்டுரைகளை அடிகளார் எழுதினார். இந்நிகழ்வுகள் அடிகளாரை மிகவும் பாதித்தன. 1928 ஜுலை 31ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் அடிகளார் இவ்வாறு எழுதியுள்ளார், கடந்த நான்கு நாட்களாக இரவும் பகலும் நன்றாக உறங்க இயலவில்லை. அத்துடன் என் கனவில் கூட நாத்தீக சுயமரியாதை இயக்கம் என் சிந்தனையில் இடம் பெறுகிறது. இதன் சித்தாந்தங்களையும், எப்படி மறுப்பது, இதன் பரவுதலை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டுள்ளேன்.”

DK blaspheme Appar, Sambandar-booklet

ஈவேராவின் சைவ தூஷணத்தால் துடித்ததுமறைமலை அடிகளின் இரட்டை நிலை ஏன்?:இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கமானது எரிச்சலூட்டும் இயக்கமாகவே அடிகளாருக்கு இருந்துள்ளது என்பதை 1929 பிப்ரவரி 14ஆம் நாள் அவர் எழுதிய நாட்குறிப்புச் செய்தி வெளிப்படுத்துகிறது[1]: கடவுள் மறுப்பு இயக்கம் எல்லாப் பகுதிகளிலும் பரவிவருகிறது. வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருத இதிகாசங்கள் அதன் தமிழ்வடிவங்கள் மீதான கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். இருந்தாலும் அருளாளர்களான மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர் மீதும் இவர்களை ஒத்தவர்கள் மீதும் நிகழ்த்தும் குறும்புத்தனமான முறையற்ற தாக்குதலை நான் விரும்பவில்லை என்பதோடு அதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இவர்களுக்கு நல்லறிவையும், கருணையையும், அச்சத்தையும் இறைவன் அருள்வாராக. சமஸ்கிருத இலக்கியம் ஆதாரம் இல்லாமல், சைவமே இல்லை. மேலும், சங்க இலக்கியத்தில், “சிவன்” என்ற சொற்பிரயோகமும் இல்லை. “வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருத இதிகாசங்கள் அதன் தமிழ்வடிவங்கள் மீதான கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்,” என்றது, அவரது, சமஸ்கிருத-எதிர்ப்பு, பிராமண-எதிர்ப்பு என்பதையெல்லாம் மீறி, வேறோதையோ தான் காட்டுகிறது. “கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்,” என்றது, அவரது மெத்தப் படித்த பாண்டித்யம், பண்பாடு, ஞானம் முதலியவற்றையும் தாண்டியுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டுகிறது. எனவே, முதலியாரின், நாயக்கருடனான நட்பு, பொல்லாதது, அதனால், இழிவு தான் வந்து சேர்ந்தது.

DK blaspheme Appar, Sambandar

வேதாசல முதலியாருக்கும், ராமசாம நாயக்கருக்கும் நடந்த லடாய் என்ன?: “22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற .வெ.ரா.வும் அவரியக்கமும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத்தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று அடிகள் பேசினார்”, என்று படிக்கும் போது, வியப்பாக உள்ளது[2]. அடிகளார் பேச்சுக்கு எதிர்வினையாகத் ‘திராவிடன்’ ஏட்டில் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதலில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘குடலைப் பிடுங்கி மாலையாகப் போடுவது போலெல்லாம் பேசுவதா?’ எனத் ‘திராவிடன்’ ஆசிரியர் கண்ணப்பன் போன்றோர் மறைமலையடிகள் மீது வழக்குப் போடவும் முனைந்துள்ளனர்[3]. ஆனால் இந்நிகழ்வுகளின் போது வெளியூர்ப் பயணங்களில் இருந்த ஈ.வெ.ரா. உடனே இதில் தலையிட்டுத் தம் இயக்கத்தார் செயல்களுக்காக மறைமலையைடிகள் மன்னித்துக் கொள்ள வேண்டு மென்று மடல் எழுதியுள்ளார்[4]. “சுயமரியாதை இயக்கத் தலைவர் ஒரு வைஷ்ணவர் ஆவர். அவரது சகோதரரும், வைஷ்ணவராக இருந்து கொண்டு, பல அப்பாவி சைவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியிருக்கிறார்கள். அதற்கு துணைபோனவர்களும் வைஷ்ணவர்கள் தான். சில நீதிகட்சி தலைவர்களும் வைஷ்ணவர்கள் தான். மேலும் அவர்கள் வைஷ்ணவர்கள் மட்டுமில்லை, தெலுங்கு பேசுபவர்களாகவும் இருக்கின்றனர்,” என்றார் மறைமலையடிகள். அப்படியென்றால், ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய நிலையினையும் ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அமைதியைக் குலைப்பதாக உள்ளது.

Justice party, vishnavism vs saivism

சைவவைணவ மோதலை உண்டாக்க முயன்ற நாயக்கரும், முதலியாரும்: மறை. திருநாவுக்கரசு. ‘கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு எழுதியது : “நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த நல்லி சைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண் டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால், கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால்ஆரவாரமானஏராளமான பொருளற்ற கற்பனைகளால் வரைதுறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர் நாகரிகஇன உணர்வைத் தம் கதையால் கெடுத்துவிட்டார் என்றும் கருதினார்அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக சமயஇன உணர்வுக்கு மாறானகம்பராமாயணத்தைப் பயிலுதலும், அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப் பரப்புதலும் தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வெளியிட்டும் எழுதியும் வந்தார்[5]. தமிழேந்தி[6], “உண்மையில் மறைமலையடிகளின் கம்பராமாயண எதிர்ப்பு பகுத்தறிவு நெறியின்பாற் பட்டதன்று. அவர் நெஞ்சுக்குள் புகுந்த சைவநெறிப் பூதம் அவரை அப்படியெல்லாம் எழுத வைத்தது. …. இராமாயணத்திற்கு எதிராகத் தன்மான இயக்கம் போர் முரசு கொட்டிய போது, பூரித்து மகிழ்ந்த அடிக ளார், அவ்வியக்கம் பெரிய புராணத்தின் மீது கை வைத்த போது, அலறியடித்துக் கொண்டு ஓடினார்……,” என்று நக்கலாக எழுதியுள்ளார்[7]. இவ்வாறு விமர்சித்தாலும், சைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

Justice party, Saivite friends- stamps

போலி பிராமண எதிர்ப்பில் உயர் ஜாதியினரில் அரசியல், மேம்பட்டது அவர்கள், பாதிக்கப் பட்டது மற்றவரே: பிராமணர், பார்ப்பனர் என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் செய்து, ஆட்சிக்கு வந்தது, முதலியார், சூத்திரர், மேனன், கவுண்டர் போன்றோரே. இதில் ஜெயலலிதாவை ஜாதி ரீதியில் குறிப்பிட முடியாது. 60 ஆண்டுகளில் பார்ப்பனர் ஓடி மறைந்து விட்டனர். எல்லா இடங்க்களிலும், பார்ப்பனர்-அல்லாதவர் தாம் ஆட்சி செய்கின்றனர். பிறகு, இந்த 60 ஆண்டுகளில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, பொருளாதார ரீதியில் உண்டான சிறப்புகள் என்ன, அரசிய ஆளுமையில் நடந்த நன்மைகள் என்ன என்று கூற முடியுமா என்று கவனிக்க வேண்டும். லஞ்சம், மோசடிகள், குற்றங்கள், சட்டமீறல்கள் குறைந்தனவா? கல்வி, மருத்துவம், பொது வாழ்வு, குடும்பம், முதலியவற்றில் தேவையான ஒழுக்கம், வேலை நேர்மை, தொழில் தர்மம் முதலியவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா? தினசரி வழக்கமான காரியங்கள் அமைதியாக செய்ய முடிகிறதா? எல்லா விண்ணப்பங்களிலும் ஜாதி கேட்கப் படுகிறது, படிப்பு-தொழில்-சலுகைகள் எல்லாமே ஜாதி கேட்டுத்தான் நடக்கிறது. இத்தனை போதித்தும், ஜாதித்துவம் இருக்கிறது, கொலைகள் நடக்கின்றன. இவற்றில் எப்பொழுதும் தாக்கப்படும் பார்ப்பனீயம் அல்லது சமத்துவம் அல்லது …….த்துவம் உள்ளதா? அனுபவிக்கும் மக்கள் தான் சொல்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-06-2019

Justice party, Saivite friends- stamps-2

[1] ஆ.சிவசுப்பிரமணியன், மறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950, 13 மார்ச் 2016.

http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan16/30413-1876-1950

[2] 22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற ஈ.வெ.ரா.வும் அவரியக்க மும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார் களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத் தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று இன் றைய இந்து முன்னணி இராமகோபாலன், எச். இராசா, அருச்சுன் சம்பத் பாணியில் பேசியுள்ளார்.

தமிழேந்தி, மறைமலையடிகளும் பெரியாரும், நவம்பர்.19, 2015.

[3] http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29683-2015-11-19-07-17-38

[4] “On the 24′ of August 1928, Adigal noted in his diary:” … Mr.T.V. Kalyanasundara Mudaliar, Mr. Balasundara Mudaliar and Mr. Viswanatha Pillai of Trichi came to conciliate me to Mr. E.V. Rarnasarni Naicker’s side and requested me to write him a letter in a fiendly tone which I readily did and gave the letter to Visvanatha Pillai … By the grace of Lord rnay there be peace over all!”

Maraimalai Adigal. Marai Malai Adiagal Diaries. (“MMAD”) available at Marai Malai Adigal Library, Madras, Tamil Nadu:unpublished, 1898-1950.

[5] மறை. திருநாவுக்கரசு, தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62, பக்.568

 

[6] தமிழேந்தி, மறைமலையடிகளும் பெரியாரும், நவம்பர்.19, 2015.

[7] http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29683-2015-11-19-07-17-38