Archive for the ‘வினைஞர்’ Category

சூத்திரம், சூத்திரர் – திருமறை கொடுக்கும் விளக்கம், நிலை முதலியன

ஜூன் 19, 2019

சூத்திரம், சூத்திரர்திருமறை கொடுக்கும் விளக்கம், நிலை முதலியன

Sudra as per Nikandus-1

சூத்திரர், வேளாளர் என்ற பொருள், பெரியபுராணத்தில் வருகிறது: “தேவாரம்” என்ற இணைதளத்திலிருந்து, இவற்றை “காப்பி-பேஸ்ட்” செய்துள்ளேன்[1]. இங்கு உபயோகித்துக் கொள்வது, ஆராய்ச்சிற்காகத் தான்.

அம்பொன் நீடிய அம்ப

லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்

தம்பி ரானடி மைத்தி றத்துயர்

சால்பின் மேன்மைத ரித்துளார்

நம்பு வாய்மையில் நீடு சூத்திர

நற்கு லஞ்செய்த வத்தினால்

இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை

யான்கு டிப்பதி மாறனார். [பெரியபுராணம், இளையான்குடி மாறனார் புராணம், 12.4]

வேளாண்குலத்தைச் சூத்திரர் என்னும் பெயரால் குறிக்கின்றார் ஆசிரியர். “சூத்ரா சுத்த குலோ தீபவா” என்பது சிவாகமம், இதனால் இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர் என்பது பெறுதும். இதுபற்றியே “சூத்திர நற்குலம்” என்றார் ஆசிரியர். இவ்வாறு ஈண்டுக் கூறிய தோடன்றி, வாயிலார் புராணத்தும் அவ்வடியவர் தோன்றிய இவ்வேளாண்குலத்தைத் “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” (தி.12 பு.51 பா.6) எனக் குறிப்பர். இதுவன்றி இச்சொற்குப் பிறவாறு உரைப்பன வெல்லாம் ஆசிரியருக்குக் கருத்தன்று. இனிச் சூத்திரர் என்பதற்கு ஆட்டுவிப்பவர் எனப் பொருள் கொண்டு, இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர் எனக் கூறலும் பொருந்துவ தாகும்.

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்

நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்

தன்மை வாயிலார் என்னுந் தபோதனர். [திருத்தொண்டர் புராணம், பகுதி.9, செய்யுள்.4084]

பொழிப்புரை: நிலை பெற்ற சிறப்புடைய திருமயிலாபுரி என்னும் பெருநகரத்தில், இத்தகைய பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது, நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை அடையுமாறு, உயர்ந்த சீலமும் புண்ணியமும் உடைய வாயிலார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார்.

குறிப்புரை : சூத்திரர் என்பது பற்றி முன் 440ஆவது பாடலில் கூறப்பட்டதை ஈண்டும் கடைப்பிடிக்க.

Mylapore Peacock sculpture-1

ஆக, “சூத்திரர்” என்றால், கீழ் கண்ட பொருள் பெறப்படுகிறது:

  1. “சூத்ரா சுத்த குலோ தீபவா” என்பது சிவாகமம், இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர்.
  2. “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” எனும்போது, சூத்திரர் என்ற குலம், மிக்கத் தொன்மை வாய்ந்தது, நீண்டகாலமாக இருக்கிறது.
  3. சூத்திரர் என்றால் ஆட்டுவிப்பவர் எனப் பொருள் கொண்டு, இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர்.

 

அந்த “சூத்ர = பூமி” ஒப்பீடும் இங்கு பொறுந்துகிறது. எனவே, தேவார சூத்திரர்கள், “சூத்ரர்” இல்லை. அத்தகைய பிரயோகம் நிகண்டுகள் காலத்தில் உண்டானது என்று தெரிகிறது.

Sudra as per Nikandus-2

நிகண்டுகளின் படி, சூத்திரன், சூத்திரர்வார்த்தை பிரயோகம்: இத்தகைய வார்த்தை பிரயோகம் எங்கு ஆரம்பித்தது என்று பார்த்தால், நிகண்டுகளில் தான் ஆரம்பிக்கின்றது என்று தெரிகிறது. நிகண்டுகளைத் தொகுத்தவர் ஜைனர்கள் என்பதால் அவர்களது தாக்கம் அதில் தெரிகிறது. நிச்சயமாக நிகண்டுகளைத் தொகுத்தவர்கள் பாடுபட்டுத்தான் திரட்டித் தொகுத்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கும் எப்படி சமஸ்கிருதத்தில் உள்ள வர்க்க பேதம் தெரியவில்லை என்பது வியப்பாக உள்ளது.

வேளாளர் .எண்.127

மண்மகள் புதல்வர், வாய்ந்த, வளமையா, களமா என்றும்.

உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர், மேழியர்,வே ளாளர்

திண்மைகொள் ஏரின் வாழ்நர் காராளர், வினைஞர் செம்மை

நண்ணுயின் னவர்பன் னொன்று. நவின்றசூத் திரர்தம் பேரே

மண்மகள் புதல்வர், வாய்ந்த

வளமையர், களமர் என்றும்

உண்மைசால் சதுர்த்தர் மாறா

உழவர், மேழியர், வேளாளர்,

திண்மைகொள் ஏரின் வாழ்நர்

காராளர், வினைஞர், செம்மை

நண்ணுபின் னவர்பன் னொன்று

நவின் றசூத் திரர் தம் பேரே

Maraimalai Adigal , EVR misinterpretation sudra

 

பே. பொ. விளக்கம்: சூத்திரர்-சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு, உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன். இங்கு “சூத்திரர்-சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு” என்ற விளக்கம், பின்னணியை எடுத்துக் காட்டுகிறது. அதாவது “சூத்திரம்” என்பதனை “சூத்திரர்” என்றதுடன் இணைக்க அத்தகைய விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.

வளமையர்-நிலவளம் உடையவர்

களமர்-உழவுக்களத்தில் உழைப்போர்

துர்த்தர்-நான்காம் வருணத்தர்

மேழியர்-ஏர் பிடிப்பவர்

வேளாளர்-வேள்-மண்) மண்ணைவளப்படுத்தி ஆள்பவர்

ஏரின் வாழ்நர்-ஏர்த்தொழிலால் வாழ்பவர்

காராளர்-மழையால் பயன் விளைப்போர்

வினைஞர்-தொழில் புரிவோர்

பின்னவர்-பின்குலத்தவர்

செம்மை நண்ணு பின்னவர்-செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர்

ஒப்பீடு [நிகண்டுகளில் சூத்திரர் பிரயோகம்]
சூடாமணி-12 பிங்கலம்-780 கயாதரம்-97 நாமதீபம்-152
சூத்திரர் 1-1 சூத்திரர் 1-13 சூத்திரர் 9 சூத்திரன் 14
மண்மகள்புதல்வர் மண்மகள்புதல்வர் மண்புதல்வர் பூபாலன்

திருமறைசூத்திரர்,” திராவிடசூத்திரன்இல்லை: தேவாரத்தில் வரும் சூத்திரர், சூத்திரத்துடன் தொடர்பு கொண்டவர். அதாவது சூத்திரம் வேதங்களுடன் தொடர்பு கொண்டது. வேதங்களை மதிக்கின்றவர். அதனால், அவர்கள் நம்பிக்கையாளர்கள், நாத்திகர் அல்ல. ஆனால், திராவிட சித்தாந்திகள், திராவிடத்துவ வாதிகள், சூத்திரன்களை பலவாறு குறிப்பிட்டு, இழிவாக சித்தரித்து வருகின்றனர். ஆகவே, அத்தகைய மோசமான-திரிபு விளக்கம் தேவார சூத்திரர்களுக்கு சம்பந்தம் இல்லை.

Ayodhi Das confused about the terinology of Brahmin, Shudra etc

விகிபீடியா விளக்கம்: ஆனால், விகிபீடியா, இவ்வாறு, விளக்கம் கொடுக்கிறது, “சூத்திரர் என்போர் குலப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட இந்து சமயக் கோட்பாட்டின்படி கடைநிலை ஊழியர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் பணிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர், சத்திரியர் (அரசகுடியினர்), மற்றும் வணிகர் ஆகிய மூன்று பிரிவினரைவிட தாழ்ந்தவர்கள் என அறிவித்து மற்ற பிரிவினருக்குப் பணி செய்வதையே இவர்களது கடமை என்ற முறையை பின்பற்றினர்”, இது தவறாகும். ஏனெனில், மேற்குறிப்பிட்ட மூலங்களை விடுத்து, தானாகவே வலிய பொருள் கொண்டு, அவற்றை கூறும் போக்கு வெளிப்படுகிறது. உண்மையான ஆராய்ச்சியாளன் என்றால், மூலங்களில் இருக்கின்ற எல்லாவற்றையும் எடுத்து, தொகுத்து, புரிந்து, பிறகு, விளக்கம் கொடுக்கவேண்டும்.

© வேதபிரகாஷ்

15-06-2019

Mylapore Peacock sculpture-2

[1] http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12