Archive for the ‘சத்-சூத்திரன்’ Category

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது – இந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளதுஇந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

முந்தைய அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட கமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2010ல் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம் மாறிய தலித்துகளுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்து மதத்தில் தான் தீண்டாமை பழக்கம் இருந்துள்ளதுகிறிஸ்தவ மதத்திலோ முஸ்லிம் மதத்திலோ தீண்டாமை வழக்கம் இல்லை. எனவே, இந்த மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரிய சலுகை அளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்து மதத்தை சேர்ந்த தலித்துகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். மதம் மாறிய தலித் குழந்தைகள், கான்வென்ட்டில் படிக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார் படேல் போன்றவர்கள் மதம் மாறிய தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை ஏற்கவில்லை.மதம் மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகை அளிக்கப்பட்டால் மேலும் மதமாற்றம் நடப்பது அதிகரிக்கும். இது ஆரோக்கியமான போக்கல்ல. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்த கமிஷன் அளித்த அறிக்கையை அமல்படுத்தக்கூடாது.அதே சமயம், புத்த அல்லது சீக்கிய மதத்தில் உள்ள தலித் என்கிறபோது அவர்கள் அடிப்படை வேறானதுசலுகை தொடர வேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].

2021ல் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சலுகை முடியாது என்று எடுத்துக் காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவின் படி முடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.

தமக்குள் ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இடவொதிக்கீடு கேட்கும் முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.

2008 – சதீஷ் தேஷ்பாண்டே கமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].

2024 தேர்தலும், பிஜேபி நிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தினமலர், மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை: பா.., எதிர்ப்பு, Added : மார் 27, 2010  04:29,

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=307

[3] தமிழ்.நியூஸ்.18, கிறிஸ்துவம், இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாதுசட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல், NEWS18 TAMIL, LAST UPDATED : FEBRUARY 13, 2021, 13:36 IST.

[4] https://tamil.news18.com/news/national/dalits-who-convert-to-islam-or-christianity-wont-get-quota-says-law-minister-in-rajya-sabha-aru-410541.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து: முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am

[6] https://tamil.indianexpress.com/india/ex-cji-named-head-of-panel-on-sc-status-for-dalit-converts-521852/

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

பட்டியலின மக்கள் பட்டியலில் 1950 இல் தலித் இந்துக்களைச் சேர்க்க முதல் உத்தரவு வந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது.  இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

30-08-2022 உச்சநீதி மன்ற தீர்ப்பும், கமிஷன் அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது[6].

அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை– 1950 தெளிவாக உள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.

சட்டப் பிரிவு 341-இன் கீழ் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

மூன்று அங்கத்தினர் கமிஷன் ஆராய வேண்டிய அம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:

* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.

* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.

* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.

மதம் மாறிய SCக்களுக்கு எப்படி SC அந்தஸ்து கொடுக்க முடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தமிழ்.இந்து, மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – மத்திய அரசு அமைத்துள்ள ஆணையத்தின் முழு விவரம், செய்திப்பிரிவு, Published : 08 Oct 2022 06:02 AM, Last Updated : 08 Oct 2022 06:02 AM.

[2] https://www.hindutamil.in/news/india/880117-sc-status-for-converts-full-details-of-the-commission-set-up-by-the-central-government.html

[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.

[4] தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழுமத்திய அரசு அறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST 

[5] https://tamil.news18.com/news/explainers/centre-sets-up-panel-on-sc-status-for-dalit-converts-815568.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை, By Mani Singh S Published: Saturday, October 8, 2022, 14:42 [IST]

[7] https://tamil.oneindia.com/news/delhi/commission-to-examine-and-decide-on-concessions-to-dalit-converts-central-govt-479570.html

[8]தினத்தந்தி, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன்மத்திய அரசு அமைத்தது, அக்டோபர் 8, 6:11 am.

[9]  https://www.dailythanthi.com/News/India/commission-set-up-by-central-government-to-examine-the-provision-of-concessions-to-dalit-converts-809695

[10] தினமணி, மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு, By DIN  |   Published On : 08th October 2022 12:28 AM  |   Last Updated : 08th October 2022 12:28 AM

[11] https://www.dinamani.com/india/2022/oct/08/sc-for-the-converted-dalit-community-3928696.html

இங்கிலாந்தில், அமெரிக்காவில் உள்ள பொருளாதார மற்றும் பாரம்பரிய சமூகப் பிரிவுகள்-ஜாதிகள், “வர்க்கங்கள்” போர்வையில் இருப்பது! [1]

செப்ரெம்பர் 13, 2019

இங்கிலாந்தில், அமெரிக்காவில் உள்ள பொருளாதார மற்றும் பாரம்பரிய சமூகப் பிரிவுகள்ஜாதிகள், “வர்க்கங்கள்போர்வையில் இருப்பது! [1]

Dalit invitation-1

இந்தியாவைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் நியாயமாதா?: பெரும்பாலான இந்தியர் அல்லாத சமூக, பொருளாதார, சமூகவியல், சரித்திர எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முதலியோர், மாறி வரும், உயர்ந்து வரும், இந்திய சமூகத்தை இன்னும் எதிர்மறையாக, சித்தரித்து வருவது வியப்பாக இருக்கிறது. 130 கோடி மக்கள் கொண்ட சமூகத்தை, 10-50 கோடி மக்கள் கூட இல்லாத நாடுகளின் பிரஜைகள் இவ்வாறு எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது. குடும்பம், சமூகம், நாடு முதலியவை பெரிதாக இருக்கும் போது,பொருளாதார ரீதியில் வேறூபாடுகள் இருக்கத் தான் செய்யும். இது ஒன்றும் பெரிய கண்டுபிடிப்பு அல்ல. 130 கோடி மக்கள் கொண்ட நாட்டை 5000 வருடங்களுக்கும் மேலாக மற்ற நாடுகள் கவனிக்கின்றன என்றால், அது எதிர்மறையாக அல்ல, இத்தனை பிரச்சினைகளை வைத்துக் கொண்டும், தொழிற் மற்றும் விஞ்ஞான துறைகளில் சிறந்து விளங்குகிறதே என்றதால் தான். அத்தகையோர் இந்தியாவிலேயே தங்கி விட்டால், இல்லை மற்ற நாடுகளில் இருக்கும் இந்தியர் மற்றும் இந்திய் வம்சாவளியினர் இந்தியாவுக்கு வந்து விட்டால், நிச்சயமாக இந்தியா, வல்லரசாக உருவாகி விடும். அதனால் தான், எப்பொழுதும், இந்திய தேசத்தை, தேசப்பற்றைக் கொச்சைப் படுத்தி வருகிறார்கள். அதற்காக, உள்ளூர் விசுவாசிகளையும் ஊக்குவித்து வருகிறார்கள். அந்நிலையில் தான், இப்பொழுது “தலித்” போர்வையில், அந்நியர்களின் நுழைவு காணப்படுகிறது.

Dalit invitation-2

மற்றவர் கருத்தை மதிக்கத் தெரியாத, கருத்துரிமை போராளிகள்: கௌதம சன்னா படைப்பில் நான்கு நூல்கள் வெளியீடு விழா அழைப்பிதழ் என்று இணைதளத்தில் சுற்றில் உள்ளது. இதைப் படித்தவுடன், கீழ்கண்டவாறு கமென்ட் போட்டேன்[1]. ஹூகோ கோரிட்ஜ் [Hugo Gorringe[2]] மற்றும் மைக்கேல் ஏ. காலின்ஸ் [Michael A. Collins[3]] இந்தியா மற்றும் இதிய சமூகத்திற்கு எதிரான, பாரபட்சக் கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள் என்பது தமது ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம், வெளிப்படுத்தியுள்ளார்கள்[4]. அவர்கள் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தாலே, அவர்களது புரிதல் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளல்லாம்[5]. இவர்களது அத்தகைய, பாரபட்சமான கட்டுரைகளால், பாதிக்கப் பட்ட மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது, மாறாக சமூகத்தில் வேற்றுமையை வளர்த்து, வன்முறையைத் தூண்டும். முன்னர் கைல் வோம்வெட் [Gail Omvedt] என்ற பெண்மணி, இதைப் போன்ற  கட்டுரைகளை, வழக்கம் போல “தி இந்து”வில் எழுதிவந்தார். பிறகு புத்தகமாகக் கூட வெளிவந்தது, ஆனால், இப்பொழுது அவரை யாரும் நினவுகொள்வதில்லை. ஆகையால், இந்தியாவில் இருக்கும் குழுக்கள், கட்சிகள் முதலியோர் இத்தகைய வெளிநாட்டவர்களின் எழுத்துகளை, புத்தகங்களை கவனமாகப் பார்க்க வேண்டும். அத்தகைய விழாக்களை நடத்துவோரும், உண்மைக்குப் புறம்பாக மேலும் மோதல்களை உருவாக்கும் போக்கைக் கவனித்து, உள்ள அமைதி கெடுக்கா வண்ணம் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒரு வேளை, அப்பதிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நீக்கிவிட்டார்கள்[6]. ஆனால், அவர்கள் தாம், கருத்துரிமை பற்றியெல்லாம், அதிகமாக ஆர்பாட்டம் செயவர்கள்.

Gowthama Sannah, with Hugo Gorringe

ஜாதியம், வர்ணம் வளர்ந்த சரித்திரம்: இந்தியாவில் தான் ஜாதி இருக்கிறது என்று எல்லோராலும் சொல்லப் பட்டு, நம்பப் பட்டு வந்து, அதன் படியே எல்லாம் எழுதப் பட்டு வருகின்றது. ஆனால், அதே போல அல்லது, மற்றும் அதைவிட இருக்கமான, சமூகக் கட்டமைப்புகள், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருப்பதை இந் தியாவில் விவாதிப்பது கிடையாது. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. அதனால், இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றில் நம்பிக்கைக் கொண்ட அவர்கள், தங்களது இனத்தூய்மையை காத்திட அத்தகைய ஜாதி அமைப்பை உருவாக்கினர். ஆனால், அவர்களுடைய காலனிய ஆதிக்கத்தில் அவர்கள் மற்ற இனத்தவருடன் தொடர்பு கொண்டதால், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. அதன்படியே, அத்தகைய கலப்பினத்தவரை சமூக அந்தஸ்த்தில் கீழே வைத்தனர். இதனால், காலனிகள் இருந்த நாடுகளில் இத்தகைய கட்டமைப்புகளைக் காணலாம்.

Subashini with Thiruma congratulating his victory 2019

பார்ப்பனீயம் என்ற சுலமான எதிர்ப்புஇலக்கை வைத்து உண்மைகளை மறைப்பது: சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக / வர்க்க மோதல்கள் [class conflict] இருப்பதும் அவர்களுக்குத் தெரிந்தவை தாம். அவர்களது நாளிதழ்களை தொடர்ந்து படித்து வந்தால், அப்பிரச்சினைகள் எவ்வாறு மோசமாக இருக்கின்றன, இருந்து வருகின்றன என்பதனை அறியலாம். ஆனால், அங்கு, அதற்கான காரணங்கள் அடக்கியாள்பவர்களைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியா என்று வரும் போது, அத்தகையோரை மறைத்து, எல்லாவற்றிற்கும் “பார்ப்பனீயம் தான் காரணம்” என்ற போலித்தனமான வாதத்தை வைத்து, தங்களது குற்றங்களை மறைக்கப் பார்க்கிறார்கள். எஸ்.சி / எஸ்.டி மற்றும் இதர ஜாதியினர், அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள், அரசியல் ஆதரவுகள், ஆதிக்கப் பகிர்வு போட்டிகள் முதலியவற்றால் ஏற்படும் மோதல்களில் அவர்களே காரணமாகின்றனர். அங்கு பார்ப்பனர் யாரும் இல்லை மற்றும் சம்பந்தமும் இல்லை. இருப்பினும், தங்களது இயலாமை, மனங்களில் இருக்கும் துவேசம், வன்முறையாக வெளிப்படும் போக்கு, கலவரங்களை உண்டாக்கும் திட்டம், கொலைகளில், சொத்து நாசம் முதலியவை ஏற்படுவதில் முடிய, அவர்கள் தலைவர்களே திட்டமிடுகிறார்கள். அத்தகைய தியாகங்களை வைத்து, பதவிகளை அடைய, தொழிலாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அவற்றால் வளர்ந்து வருகிறனர்.

Hugo Gorringe playing dalit politics

இங்கிலாந்தில் உள்ள சமூகக் கட்டமைப்பு, பிரிவினைகள்: ஆங்கிலேயர், நிறத்தின் அடிப்படையில், பிறகு அரச வம்சம், பிரபுக்களென்ற நிலையில் பிரிவுகளை வைத்துக் கொண்டனர். பிறகு, அவற்றை, பொருளாதாரத்துடன் இணைத்தனர். அவற்றை கீழ்கண்ட அட்டவணையில் பார்க்கலாம்:

எண் ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொற்றொடர் % தமிழ் மொழிபெயர்ப்பு
1 Elite 6 உயரடுக்கு
2 Established middle class 25 நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்
3 Technical middle class 6 தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்
4 New affluent workers 15 புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்
5 Traditional working class 14 பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்
6 Emerging service sector 19 புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்
7 Precariat 15 கீழடுக்கு / தாழ்ந்தவர்

அவர்கள் ஏழடுக்குகளில் பிரித்து காண்ப்/இத்தாலும், கீழ்கண்டவாறு நான்கடுக்குகளில் அடங்குவர் என்பதை கவனிக்கலாம்.

எண் ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொற்றொடர் % தமிழ் மொழிபெயர்ப்பு
1 Elite 6 உயரடுக்கு
2 Established middle class

Technical middle class

25

6

நிறுவனப்படுத்தப் பட்ட மத்திய வர்க்கம்

தொழிற்நுட்பம் அறிந்த மத்திய வர்க்கம்

3

 

New affluent workers

Traditional working class

Emerging service sector

15 புதிய வாதி படைந்த உழைக்கு வர்க்கம்

பாரம்பரிய உழைக்கும் வர்க்கம்

புதியதாக உருவாகும் சேவக வர்க்கம்

14
19
4 Precariat 15 கீழடுக்கு / தாழ்ந்தவர்

அவர்கள் இந்தியாவைப் பற்றி ஆராய்ச்சி செய்வது போல, நாமும் அவர்களது சமூகத்தைப்பற்றி ஆராய்ந்தால், உண்மை விளங்கும். மனிதர்கள் இருக்கும் வரை, அழுக்குகள் வெளியேறிக் கொண்டுதான் இருக்கும், அவற்றை சுத்தப் படுத்த ஆட்கள் தேவைப் பட்டுக் கொண்டுதான் இருப்பார்கள்.

© வேதபிரகாஷ்

13-09-2019

Hugo Gorringe playing dalit politics-2

[1] Hugo Gorringe and Michael A. Collins have been biased researchers writing against India and therefore, how their writings would help Indians or the so-called affected people. Some years back, Gail Omvedt used to write or “The Hindu” promoted her to do so, about the same issues in the same fashion. Now, none remembers her, because of bias and misinterpretation. Thus, the organizers have to be careful about the import of such ideas leading conflict promotion instead of bringing peace.

[2] Hugo Gorringe, Senior Lecturer, Sociology; Co-director – Centre of South Asian Studies, .02, Number 22, George Square, Edinburgh, UK, EH8 9LD, +44 (0)131 650 3940, h.gorringe@ed.ac.uk, Interst-Dalit Politics, Policing, Protest, Social movements, Social Violence, Political Economy of India, Caste, Indian Politics

[3] Michael Collins received his doctorate in South Asia Studies from the University of Pennsylvania. His dissertation, “Recalling Democracy: Electoral Politics, Minority Representation, and Dalit Assertion in Modern India,” provides an ethnographic study of Dalit (ex-untouchable) politics, chronicling the democratic transition of the Viduthalai Chiruthaigal Katchi (Liberation Panthers Party; VCK) from social militancy into electoral politics. His research bridges the disciplines of history, anthropology, and political science to engage with theories of democracy, representation, and political practice in modern South Asia. His most recent work provides an ethnographic study of how election finance norms affect the democratic participation and political representation of social minorities in modern India.

Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.

[4] Gorringe, Hugo. Untouchable citizens: Dalit movements and democratization in Tamil Nadu. Vol. 4. Sage, 2005.

[5] Collins, Michael. Writing Dalit assertion: early Dalit Panther politics and legal advocacy in 1980s Tamil Nadu, Contemporary South Asia 25.3 (2017): 238-254.

[6] As usual, Subashini Tremmel has posted the invitation and she deleted my comment and also the papers of Hugo Gorringe and Michael Collins referred to.

அம்பேத்கரின் சூத்ரர், ஈவேராவின் சூத்திரன், ஜின்னாவின் காபிர்! [2]

ஜூன் 22, 2019

 

அம்பேத்கரின் சூத்ரர், ஈவேராவின் சூத்திரன், ஜின்னாவின் காபிர்! [2]

jinnah-periyar-ambedkar-1940

காபிர்நாயக்கர், ஜின்னாவின் முன் தாக்குப் பிடிக்க முடியவில்லை: ஜின்னாவைப் பொறுத்த வரையில், அவர் மிகத்தெளிவாக இருந்தார் என்று தெரிகிறது. 1940 மற்றும் பிறகு நாயக்கரை சந்தித்த போது, அதனை உறுதி செய்தார். ஆமாம், தான் முஸ்லிம்களுக்குத் தான் பாடுபட முடியும், முஸ்ல்லிம் அல்லாதவர் – காபிர்களுக்கு பாடுபட முடியாது என்று தெளிவாக தெரிவித்தார். ராமசாமி நாயக்கர் தான், இவ்விசயம் தெரிந்தும், அவரிடம் தேவையில்லாமல் உறவு வைத்துக் கொண்டு, வலிய-வலிய பேசினார். ஆனால், என்னைக்கு வந்தபோது கூட அவரை ஜின்னா கண்டு கொள்ளவில்லை. ஆக, சூத்திரன் பற்றியெல்லாம் ஜின்னாவுக்கு கவலையில்லை, தேவையில்லை. ஈவேரா இதே போலத்தான், அலி சகோதரர்களை வீட்டிற்கு வரவழைத்து உபசரித்தார். ஆனால், அவர்களோ, காந்தி விசயத்திலேயே, கேடுகெட்ட-மோசமான முஸல்மானை மதிப்பேனேத் தவிர, ஒரு காபிரை மதிக்க முடியாது என்று சொன்னது, ஒருவேளை பிறகு உறைத்திருக்கலாம்.

Jinnahs reply to EVR

அம்பேத்கரும், நாயக்கருடன் ஒத்துப் போகவில்லை: அம்பேத்கர், தெளிவாக ஆரிய இனம் இல்லை என்பதை எடுத்துக் ஆகவே, ஈவேராவின் “சூத்திரன்” அல்லது பெரியாரின் “சூத்திரன்கள்” அவருடைய உருவாக்கம் தான். அதற்கு மற்ற உயர்ஜாதியினர் ஒத்துழைத்தனர்.

அம்பேத்கரின்சூத்ரர்பற்றிய முடிவுகள் [1946]: அம்பேத்கர், தம்முடைய “சூத்ரர் யார்?” [“Who were Shudras?”] என்ற புத்தகத்தில், சூத்ரர் ஆரியர் மற்றும் க்ஷத்திரியர் [degraded khatriyas] என்பதை எடுத்துக் காட்டினார் என்பது முன்னமே குறிப்பிடப் பட்டது. அவர், இனி சூத்ரர் பற்றி வந்த முடிவுகளை, கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது[1]:

  1. சூதரர், சூரியகுலத்து ஆரிய சமுதாய கூட்டகளில் ஒரு சமுதாயமாக இருந்தது.

காட்டினார். இது, ஈவேராவின் “ஆரிய சித்தாந்தத்திற்கு” பேரிடியாக போனது. மேலும், சூத்திரர் அதாவது சூத்ரர் விசயத்திலும், அம்பேத்கரின் முடிவு தெளிவாக இருந்தது. ஆகவே, அந்நிலையில், ஈவேராவின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ambedkar-meetimng-periyar

ஈவேராவின் சூத்திரன் ஏன் தோற்றது? ஈவேரா கொடுத்துள்ள விளக்கம் [1945]: ஜின்னா மற்றும் அம்பேத்கர் பற்றி ஈவேரா சொன்னதே திகைப்பாக இருக்கிறது. இதோ அவர் சொன்னது[2], “ஜின்னாவின் வெற்றி என்னவென்றால் முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்கு உள்ளதுபோல், சம உரிமை பங்கில் உண்டு என்பதல்லாமல், முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் தவிர வேறு யாரும் பிரதிநிதித்துவம் அல்ல என்பதை உறுதிப்படுத்திவிட்டார். அம்பேத்கருக்கு வெற்றி என்னவென்றால்ஷெட்யூல்டு வகுப்புக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அம்பேத்கர்தான் பிரதிநிதி என்பதோடு, காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொண்டாடுவது சரியல்ல என்று செய்யப்பட்டுவிட்டது. இனி, நமக்கு வெற்றி என்னவென்றால், இனப்படி, மதப்படி, வகுப்புப்படி எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டும் என்று போராடினவர்கள் இந்நாட்டில் நாமேயாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக, காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை தலைமையை உதறித் தள்ளிவிட்டு, நடுமாநாட்டில் நாலாயிரம் பேர் இடையில், ‘காங்கிரஸ் இங்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளாததினால், நான் கவலைப்படவில்லை. இதற்காக வெளியேறி வேறு ஸ்தாபனம் ஆரம்பித்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளச் செய்கிறேன் இல்லையா பார்என்று பந்தயம் கூறி, மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு வந்த என் பந்தயப் பிரச்சனை, சிம்லா மாநாட்டில் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு கல்சாசனமாக்கப் பட்டுவிட்டது என்பதேயாகும். அதுவும் நம் விகிதப்படி என்றால் இன்னும் மகிழ்ச்சி அல்லவா?”,

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-6

ஈவேரா அம்பேத்கரிடம் மாறுபட்டது [1947]: ஈவேரா சொன்னதாவது[3], “……ஆதித்திராவிடர்களுக்குத் திடீர் என்று வந்தயோகம் டாக்டர் அம்பேத்கர்நான் இந்து அல்ல; பஞ்சமன் அல்ல; இந்து மதத்தின் எந்தப் பாடுபாட்டுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்லஎன்று சொன்னதால்தான். கோயில் திறக்கப்பட்டதும், ‘லிஸ்ட்டு கொடுங்கள்; உத்தியோகம் கொடுக்கிறேன்என்று மந்திரி கேட்பதும், ‘உங்களுக்கு நீதிக்குமேல், அளவுக்குமேல் நன்மை செய்கிறேன். என்ன வேண்டும்? கேள்என்று பட்டேல் சொல்லுவதும், ‘நானும் ஆதித்திராவிடன், பங்கிஎன்று காந்தியார் சொல்வதும் ஆன காரியங்களுக்குக் காரணம்நான் இந்துவல்லஎன்று அஷ்டாட்சர மந்திரமேயாகும். டாக்டர் அம்பேத்காருக்கும் அய்ந்து வருடத்துக்கு முன்பே, நான், 1925ல் சொன்னேன், ஆனால் எனக்கு 5 வருடத்துக்குப் பின்பு சொன்ன அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இனியும்இந்து அல்லஎன்றுதான்வாயிலாவது சொல்லிக் கொண்டே எல்லா உரிமைகளும் பெறப்போகிறார்கள்”……   அதாவது ஈவேரா அம்பேத்கரிடம் என்ன பேசினார் என்பது கூட முழுமையாகத் தெரியவில்லை[4].

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-2

அம்பேத்கர் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார், ஆனால், நாம் (சுத்திரர்) கேட்கவில்லை [1951][5]: ‘‘டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித்திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ‘உம் சங்கதிக்கு மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல் – செய்கிறோம்; ஆனால், மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே’ என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்காரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக் கொண்டார். ஆகவே, ஆதித்திராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி விகிதாச்சாரம் கொடுப்பதாகக் கூறிச் சட்டமும் செய்துவிட்டனர். அந்தச் சட்டத்திலே ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டபடி, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆகவே அவராவது அவ்வளவு பெற்றுவிட்டார். ஆனாலும், நம்மவர்களுக்காக (நான்காம் சாதி) எவனாவது இதுவரை ஏதும் கேட்டது கிடையாது. ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள். ஆகவே, யாராவது இதைப் பற்றி கேட்டால், அவரை ‘வகுப்புவாதி’ என்று கூறிவிடுகிறார்கள்.’’

jinnah-periyar-ambedkar-1940.Bombay

‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’ (விடுதலை 11.11.1957).

Cnstituent Assembly members

ஈவேரா, அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதியது: ஈவேரா சொன்னார்[6], ‘இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லேஅந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா? அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி. ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவரோ அனாமதேய துலுக்கர். அப்புறம் டாக்டர் அம்போத்கர். அம்பேத்கர் கொஞ்சம் குதித்தார். அவருக்கு லஞ்சம் கொடுத்திட்டாங்க. என்னடான்னாஉங்கள் சாதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க. மற்றவங்களைப் பற்றிப் பேசாதேன்னுட்டாங்க. அவரு இதுதான் சமயம்னு உடனே எங்க சாதிக்கு விகிதாச்சாரம் கொடுன்னிட்டார். அந்த ஆதிதிராவிட சாதிக்கு 100க்கு 16 இடம். அவர்கள் ஜனத்தொகை 100க்கு 16 ஆக இருந்தது அப்போ. எடுத்துக் கொள்ளுன்னுட்டாங்க. மற்றவங்க பேசினான். பேசக் கூடாதுன்னுட்டாங்க. பேசாமல் அவர்கள் நாலுபேரும் பண்ணினதற்கு கையெழுத்துப் போட்டிட்டாரு அம்பேத்கர். அவனவன் வேண்டியபடி எழுதிக்கிட்டான்.’

Save Sudra rule campaign opposing Jeya

உள்ள சூத்திரன் ஆட்சியைக் காப்போம்: 1960-1970களில் திராவிட கட்சி வேட்பாளர்கள் ஜாதி பெயர் சொல்லி மேடைகளில் பேசுவது வழக்கமாக இருந்தது. சில நிலைகளில், ஜனாதிபதி ஆட்சி அமூல் படுத்தப் போகிறது, என்ற விவரம் அறிந்த போது, “உள்ள சூத்திரன் ஆட்சியைக் காப்போம்” என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்று மேடைகளில் பேசி, மறைமுகமாக “சூத்திரன்” என்று காட்டிக் கொள்ளவும், அதாவது, உணர்ச்சிகளைத் தூண்டி, ஜாதி துவேசத்தை கிளப்ப, உண்டாக்க முயன்றது தெரிந்த விசயமாக உள்ளது. இப்பொழுது பன்றிக்கு பூணூல் போடும் விசயத்தில் கூட, ““பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்– தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..”” என்று சுவர்களில் எழுதினர். அதாவது, அப்பொய்மையை, பிரச்சார ரீதியாக பரப்பும் குணம், மனப்பாங்கு, போக்கு முதலியவற்றை தொடர்ந்து காணலாம்.

© வேதபிரகாஷ்

18-06-2019

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-3

[1]  B.R. Ambedkar, Who were Shudras?, Introduction, pp.iv-v, also see Chapter.XII, The Theory in the crucible, pp.239-245.

[2] குடியரசு 28-7-1945.

[3] இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947

[4] இதைப் பற்றி பெரியார் தாசர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொகுப்பாளர்கள் சொல்வதில்லை.

[5]  விடுதலை 22-9-1951.

[6] கரூர் பொங்கல் விழா பொதுக்கூட்டம் ஈவேரா உரை, தேதி 17.1.68. விடுதலை 2004 பொங்கல் மலர் பக்.38.

மறைமலை அடிகள் – ஈவேரா மோதல்கள் தீடீரென்று வெடித்து மறைந்தது சைவ-சுயமரியாதையா, சூத்திர-பகுத்தறிவா, அதிகார-பயமா?

ஜூன் 21, 2019

மறைமலை அடிகள்ஈவேரா மோதல்கள் தீடீரென்று வெடித்து மறைந்தது சைவசுயமரியாதையா, சூத்திரபகுத்தறிவா, அதிகாரபயமா?

Adigal and EVR, anti-saiva

சைவத்தைப் பற்றி, தவறான விளக்கம் மற்றும் முறைதவறி சென்ற நிலை: சைவர்களின் புராணங்களைக் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் இடம் பெற்ற கட்டுரைகள் ‘குடிஅரசு’ இதழில் 1927-ஆம் ஆண்டு தொடங்கி வெளிவரத் தொடங்கின. இது நவீனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பின்னர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் தலைவரான பெரியாரையும் பகைஉணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினர். இது எந்த அளவுக்கு இருந்ததென்றால் ‘சுத்த சைவ இரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா?’ என்று தம் உரையில் மறைமலை அடிகள் குறிப்பிடும் அளவுக்குச் சென்றது (குடிஅரசு, 29.7.1928). பின்னர் இக்கூற்றை மறுத்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும் நன்முயற்சிகள் இனிது நடைபெறுக” என்று மறைமலை அடிகள் வாழ்த்தி உள்ளார். (குடிஅரசு, 27.8.1928) இந்நிகழ்வுகளின் விளைவாக ‘சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும்’, ‘சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை’ என்ற கட்டுரைகளை அடிகளார் எழுதினார். இந்நிகழ்வுகள் அடிகளாரை மிகவும் பாதித்தன. 1928 ஜுலை 31ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் அடிகளார் இவ்வாறு எழுதியுள்ளார், கடந்த நான்கு நாட்களாக இரவும் பகலும் நன்றாக உறங்க இயலவில்லை. அத்துடன் என் கனவில் கூட நாத்தீக சுயமரியாதை இயக்கம் என் சிந்தனையில் இடம் பெறுகிறது. இதன் சித்தாந்தங்களையும், எப்படி மறுப்பது, இதன் பரவுதலை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டுள்ளேன்.”

DK blaspheme Appar, Sambandar-booklet

ஈவேராவின் சைவ தூஷணத்தால் துடித்ததுமறைமலை அடிகளின் இரட்டை நிலை ஏன்?:இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கமானது எரிச்சலூட்டும் இயக்கமாகவே அடிகளாருக்கு இருந்துள்ளது என்பதை 1929 பிப்ரவரி 14ஆம் நாள் அவர் எழுதிய நாட்குறிப்புச் செய்தி வெளிப்படுத்துகிறது[1]: கடவுள் மறுப்பு இயக்கம் எல்லாப் பகுதிகளிலும் பரவிவருகிறது. வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருத இதிகாசங்கள் அதன் தமிழ்வடிவங்கள் மீதான கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். இருந்தாலும் அருளாளர்களான மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர் மீதும் இவர்களை ஒத்தவர்கள் மீதும் நிகழ்த்தும் குறும்புத்தனமான முறையற்ற தாக்குதலை நான் விரும்பவில்லை என்பதோடு அதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இவர்களுக்கு நல்லறிவையும், கருணையையும், அச்சத்தையும் இறைவன் அருள்வாராக. சமஸ்கிருத இலக்கியம் ஆதாரம் இல்லாமல், சைவமே இல்லை. மேலும், சங்க இலக்கியத்தில், “சிவன்” என்ற சொற்பிரயோகமும் இல்லை. “வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருத இதிகாசங்கள் அதன் தமிழ்வடிவங்கள் மீதான கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்,” என்றது, அவரது, சமஸ்கிருத-எதிர்ப்பு, பிராமண-எதிர்ப்பு என்பதையெல்லாம் மீறி, வேறோதையோ தான் காட்டுகிறது. “கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்,” என்றது, அவரது மெத்தப் படித்த பாண்டித்யம், பண்பாடு, ஞானம் முதலியவற்றையும் தாண்டியுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டுகிறது. எனவே, முதலியாரின், நாயக்கருடனான நட்பு, பொல்லாதது, அதனால், இழிவு தான் வந்து சேர்ந்தது.

DK blaspheme Appar, Sambandar

வேதாசல முதலியாருக்கும், ராமசாம நாயக்கருக்கும் நடந்த லடாய் என்ன?: “22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற .வெ.ரா.வும் அவரியக்கமும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத்தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று அடிகள் பேசினார்”, என்று படிக்கும் போது, வியப்பாக உள்ளது[2]. அடிகளார் பேச்சுக்கு எதிர்வினையாகத் ‘திராவிடன்’ ஏட்டில் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதலில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘குடலைப் பிடுங்கி மாலையாகப் போடுவது போலெல்லாம் பேசுவதா?’ எனத் ‘திராவிடன்’ ஆசிரியர் கண்ணப்பன் போன்றோர் மறைமலையடிகள் மீது வழக்குப் போடவும் முனைந்துள்ளனர்[3]. ஆனால் இந்நிகழ்வுகளின் போது வெளியூர்ப் பயணங்களில் இருந்த ஈ.வெ.ரா. உடனே இதில் தலையிட்டுத் தம் இயக்கத்தார் செயல்களுக்காக மறைமலையைடிகள் மன்னித்துக் கொள்ள வேண்டு மென்று மடல் எழுதியுள்ளார்[4]. “சுயமரியாதை இயக்கத் தலைவர் ஒரு வைஷ்ணவர் ஆவர். அவரது சகோதரரும், வைஷ்ணவராக இருந்து கொண்டு, பல அப்பாவி சைவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியிருக்கிறார்கள். அதற்கு துணைபோனவர்களும் வைஷ்ணவர்கள் தான். சில நீதிகட்சி தலைவர்களும் வைஷ்ணவர்கள் தான். மேலும் அவர்கள் வைஷ்ணவர்கள் மட்டுமில்லை, தெலுங்கு பேசுபவர்களாகவும் இருக்கின்றனர்,” என்றார் மறைமலையடிகள். அப்படியென்றால், ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய நிலையினையும் ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அமைதியைக் குலைப்பதாக உள்ளது.

Justice party, vishnavism vs saivism

சைவவைணவ மோதலை உண்டாக்க முயன்ற நாயக்கரும், முதலியாரும்: மறை. திருநாவுக்கரசு. ‘கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு எழுதியது : “நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த நல்லி சைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண் டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால், கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால்ஆரவாரமானஏராளமான பொருளற்ற கற்பனைகளால் வரைதுறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர் நாகரிகஇன உணர்வைத் தம் கதையால் கெடுத்துவிட்டார் என்றும் கருதினார்அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக சமயஇன உணர்வுக்கு மாறானகம்பராமாயணத்தைப் பயிலுதலும், அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப் பரப்புதலும் தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வெளியிட்டும் எழுதியும் வந்தார்[5]. தமிழேந்தி[6], “உண்மையில் மறைமலையடிகளின் கம்பராமாயண எதிர்ப்பு பகுத்தறிவு நெறியின்பாற் பட்டதன்று. அவர் நெஞ்சுக்குள் புகுந்த சைவநெறிப் பூதம் அவரை அப்படியெல்லாம் எழுத வைத்தது. …. இராமாயணத்திற்கு எதிராகத் தன்மான இயக்கம் போர் முரசு கொட்டிய போது, பூரித்து மகிழ்ந்த அடிக ளார், அவ்வியக்கம் பெரிய புராணத்தின் மீது கை வைத்த போது, அலறியடித்துக் கொண்டு ஓடினார்……,” என்று நக்கலாக எழுதியுள்ளார்[7]. இவ்வாறு விமர்சித்தாலும், சைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

Justice party, Saivite friends- stamps

போலி பிராமண எதிர்ப்பில் உயர் ஜாதியினரில் அரசியல், மேம்பட்டது அவர்கள், பாதிக்கப் பட்டது மற்றவரே: பிராமணர், பார்ப்பனர் என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் செய்து, ஆட்சிக்கு வந்தது, முதலியார், சூத்திரர், மேனன், கவுண்டர் போன்றோரே. இதில் ஜெயலலிதாவை ஜாதி ரீதியில் குறிப்பிட முடியாது. 60 ஆண்டுகளில் பார்ப்பனர் ஓடி மறைந்து விட்டனர். எல்லா இடங்க்களிலும், பார்ப்பனர்-அல்லாதவர் தாம் ஆட்சி செய்கின்றனர். பிறகு, இந்த 60 ஆண்டுகளில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, பொருளாதார ரீதியில் உண்டான சிறப்புகள் என்ன, அரசிய ஆளுமையில் நடந்த நன்மைகள் என்ன என்று கூற முடியுமா என்று கவனிக்க வேண்டும். லஞ்சம், மோசடிகள், குற்றங்கள், சட்டமீறல்கள் குறைந்தனவா? கல்வி, மருத்துவம், பொது வாழ்வு, குடும்பம், முதலியவற்றில் தேவையான ஒழுக்கம், வேலை நேர்மை, தொழில் தர்மம் முதலியவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா? தினசரி வழக்கமான காரியங்கள் அமைதியாக செய்ய முடிகிறதா? எல்லா விண்ணப்பங்களிலும் ஜாதி கேட்கப் படுகிறது, படிப்பு-தொழில்-சலுகைகள் எல்லாமே ஜாதி கேட்டுத்தான் நடக்கிறது. இத்தனை போதித்தும், ஜாதித்துவம் இருக்கிறது, கொலைகள் நடக்கின்றன. இவற்றில் எப்பொழுதும் தாக்கப்படும் பார்ப்பனீயம் அல்லது சமத்துவம் அல்லது …….த்துவம் உள்ளதா? அனுபவிக்கும் மக்கள் தான் சொல்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-06-2019

Justice party, Saivite friends- stamps-2

[1] ஆ.சிவசுப்பிரமணியன், மறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950, 13 மார்ச் 2016.

http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan16/30413-1876-1950

[2] 22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற ஈ.வெ.ரா.வும் அவரியக்க மும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார் களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத் தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று இன் றைய இந்து முன்னணி இராமகோபாலன், எச். இராசா, அருச்சுன் சம்பத் பாணியில் பேசியுள்ளார்.

தமிழேந்தி, மறைமலையடிகளும் பெரியாரும், நவம்பர்.19, 2015.

[3] http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29683-2015-11-19-07-17-38

[4] “On the 24′ of August 1928, Adigal noted in his diary:” … Mr.T.V. Kalyanasundara Mudaliar, Mr. Balasundara Mudaliar and Mr. Viswanatha Pillai of Trichi came to conciliate me to Mr. E.V. Rarnasarni Naicker’s side and requested me to write him a letter in a fiendly tone which I readily did and gave the letter to Visvanatha Pillai … By the grace of Lord rnay there be peace over all!”

Maraimalai Adigal. Marai Malai Adiagal Diaries. (“MMAD”) available at Marai Malai Adigal Library, Madras, Tamil Nadu:unpublished, 1898-1950.

[5] மறை. திருநாவுக்கரசு, தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62, பக்.568

 

[6] தமிழேந்தி, மறைமலையடிகளும் பெரியாரும், நவம்பர்.19, 2015.

[7] http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29683-2015-11-19-07-17-38