Archive for the ‘சூத்ரர்’ Category

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது – இந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளதுஇந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

முந்தைய அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட கமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2010ல் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம் மாறிய தலித்துகளுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்து மதத்தில் தான் தீண்டாமை பழக்கம் இருந்துள்ளதுகிறிஸ்தவ மதத்திலோ முஸ்லிம் மதத்திலோ தீண்டாமை வழக்கம் இல்லை. எனவே, இந்த மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரிய சலுகை அளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்து மதத்தை சேர்ந்த தலித்துகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். மதம் மாறிய தலித் குழந்தைகள், கான்வென்ட்டில் படிக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார் படேல் போன்றவர்கள் மதம் மாறிய தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை ஏற்கவில்லை.மதம் மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகை அளிக்கப்பட்டால் மேலும் மதமாற்றம் நடப்பது அதிகரிக்கும். இது ஆரோக்கியமான போக்கல்ல. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்த கமிஷன் அளித்த அறிக்கையை அமல்படுத்தக்கூடாது.அதே சமயம், புத்த அல்லது சீக்கிய மதத்தில் உள்ள தலித் என்கிறபோது அவர்கள் அடிப்படை வேறானதுசலுகை தொடர வேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].

2021ல் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சலுகை முடியாது என்று எடுத்துக் காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவின் படி முடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.

தமக்குள் ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இடவொதிக்கீடு கேட்கும் முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.

2008 – சதீஷ் தேஷ்பாண்டே கமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].

2024 தேர்தலும், பிஜேபி நிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தினமலர், மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை: பா.., எதிர்ப்பு, Added : மார் 27, 2010  04:29,

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=307

[3] தமிழ்.நியூஸ்.18, கிறிஸ்துவம், இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாதுசட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல், NEWS18 TAMIL, LAST UPDATED : FEBRUARY 13, 2021, 13:36 IST.

[4] https://tamil.news18.com/news/national/dalits-who-convert-to-islam-or-christianity-wont-get-quota-says-law-minister-in-rajya-sabha-aru-410541.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து: முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am

[6] https://tamil.indianexpress.com/india/ex-cji-named-head-of-panel-on-sc-status-for-dalit-converts-521852/

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

பட்டியலின மக்கள் பட்டியலில் 1950 இல் தலித் இந்துக்களைச் சேர்க்க முதல் உத்தரவு வந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது.  இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

30-08-2022 உச்சநீதி மன்ற தீர்ப்பும், கமிஷன் அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது[6].

அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை– 1950 தெளிவாக உள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.

சட்டப் பிரிவு 341-இன் கீழ் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

மூன்று அங்கத்தினர் கமிஷன் ஆராய வேண்டிய அம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:

* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.

* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.

* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.

மதம் மாறிய SCக்களுக்கு எப்படி SC அந்தஸ்து கொடுக்க முடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தமிழ்.இந்து, மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – மத்திய அரசு அமைத்துள்ள ஆணையத்தின் முழு விவரம், செய்திப்பிரிவு, Published : 08 Oct 2022 06:02 AM, Last Updated : 08 Oct 2022 06:02 AM.

[2] https://www.hindutamil.in/news/india/880117-sc-status-for-converts-full-details-of-the-commission-set-up-by-the-central-government.html

[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.

[4] தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழுமத்திய அரசு அறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST 

[5] https://tamil.news18.com/news/explainers/centre-sets-up-panel-on-sc-status-for-dalit-converts-815568.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை, By Mani Singh S Published: Saturday, October 8, 2022, 14:42 [IST]

[7] https://tamil.oneindia.com/news/delhi/commission-to-examine-and-decide-on-concessions-to-dalit-converts-central-govt-479570.html

[8]தினத்தந்தி, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன்மத்திய அரசு அமைத்தது, அக்டோபர் 8, 6:11 am.

[9]  https://www.dailythanthi.com/News/India/commission-set-up-by-central-government-to-examine-the-provision-of-concessions-to-dalit-converts-809695

[10] தினமணி, மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு, By DIN  |   Published On : 08th October 2022 12:28 AM  |   Last Updated : 08th October 2022 12:28 AM

[11] https://www.dinamani.com/india/2022/oct/08/sc-for-the-converted-dalit-community-3928696.html

பெரியார் – நாயக்கரா, பலிஜா நாயுடுவா, சூத்திரரா, தெலுங்கரா, கன்னடியரா, தமிழனா, திராவிடனா, யார்?

ஜூன் 23, 2019

பெரியார் நாயக்கரா, பலிஜா நாயுடுவா, சூத்திரரா, தெலுங்கரா, கன்னடியரா, தமிழனா, திராவிடனா, யார்?

EVK Ilangovan with EVR and parents-2

திராவிட அரசியலில் சூத்திரன் உருவான நிலை: சங்க இலக்கியத்தை சரித்திரமாக கொண்டு வரலாற்றுரீதியில் புத்தகங்கள் எழுதப்பட்டன. சங்க காலத்தை, சரித்திர காலமாக உலக அறிஞர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், சங்க இலக்கியங்களில் சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை, பிராமணன் என்ற வார்த்தையும் இல்லை அதேபோல திராவிடன் என்ற சொல்லும் இல்லை, ஆனால் ஆரியர் ஆரியர் போன்ற பிரயோகங்கள் 7 இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே புலையன், இழிபிறப்பாளர் மற்றும் துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை போன்ற புறநானூற்றின் குறிப்புகளை வைத்துக் கொண்டு பார்த்தாலும், சூத்திரன் போன்ற பிரயோகம் இல்லை. சுமார் 1000 வருடங்களுக்கு பிறகு தேவாத்தில் காணப்படுகின்ற சூத்திரன், வர்ணாசிரம சூத்திரன் ஆக முடியாது அதேபோல அதிலிருந்து ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கல்வெட்டில் காணப்படும் சூத்திரர்கள், சூத்திரன் ஆக முடியாது எனவே 19-20ம் நூற்றாண்டுகளில் இவ்வார்த்தைக்கு வேண்டுமென்று விளக்கம் கொடுத்து அதனால் சூத்திரர் என்ற வார்த்தை சூத்திரன் ஆகி நான்காவது வண்ணத்துடன்  ஒப்புமை படுத்தப் பட்டது. ஒரு புதிய தவறான கருதுகோளை முன்வைத்து அரசியல் ரீதியாக அதனை உண்மையான சித்தாந்தம் போன்ற வழக்கில் ஏற்றி விட்டனர்.

EVK Ilangovan with EVR and parents

கல்வெட்டுகளில் காணப்படும்சூத்திரர்: கே. ஆர். அனுமந்தன்[1], “தமிழகத்தில் தீண்டாமை,” என்ற தனது ஆராய்ச்சியில், எவ்வாறு சூத்திரர், எஸ்.சிக்கள் முதலியோர், குறுநில மன்னர்களாக, தலைவர்கள், வீரர்களாக இருந்துள்ளனர், கோவில்களுக்கு தானம் வழங்கியிருந்தனர் என்பதையெல்லாம் சரித்திர ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[2]. ஆனால், எந்த ஆராய்ச்சியாளனும், இத்தகைய உண்மைகளை மறைப்பதால், பொய்மைகளையே உண்மை என்று நம்பிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள சோழமாதேவியில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில், “பறையனான சூத்திர ராயன்” என்ற சொற்றோடர் காணப்படுகிறது.

  • “மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்” (S.I.I. Vol. XXVI, No.241), (1203 – 1204 CE).
  • “மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்” (S.I.I. Vol. XXVI, No.243), (1202 – 1203 CE).
  • “மன்றாடி பூசகரிலரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி” (S.I.I. Vol. XXVI, No.239), (12th – 13th century CE).
  • “பறையனான சூத்திரராயன்” (S.I.I. Vol. XXVI, No.240), (12th – 13th century CE).

EVR attitude towards working caste

ஈவேராவின் ஜாதி என்ன?: ஈவேராவை கிருத்துவ மிஷினரிகள் [Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur. Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur] – அவர் சூத்ரர்களில் மேலட்டுக்கில் நாயக்கர் ஜாதியைச் சேர்ந்தவர் [He belonged to the Naicker caste the upper stratum of the Sudras[3]] மற்றும் சிலர்[4] நாயக்கர் என்றும் குறிப்பிடுகின்றனர். கன்னட பலிஜ நாயுடு வகுப்பினர், ‘நாயக்கர்’ என்பது பட்டப்பெயர். .. என்றும் குறிப்புள்ளது[5]. இவர்களை ஈவேரா (பெற்றோரை) கன்னடிடய நாயக்கர் என்றும் நாயுடுகள் என்றும் வழங்குவர்[6]. மேலும் அம்பேத்கரையும், ஈ.வே.ராமசாமி நாயக்கர் குறைகூறியுள்ளார்[7], “…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்”. அம்பேத்கருக்கு, சட்டப் படி, நிலைஎன்ன என்பது தெரியும் என்பதால் தான், எஸ்.சி, எஸ்.டி என்று குறிப்பிட்டார். ஜாதிகளை வைத்து சண்டை, சச்சரவுகள் உருவாக்க வேண்டும், அரசியல் செய்யவேண்டும் என்பது அவருடைய எண்ணம் அல்ல.

EVR, paraiyan, Gandhi, mastan

ஈவேரா பறையர்களை, மற்ற பட்டியல் ஜாதியினரை மதிக்கவில்லை: ஈவேரா தன்னை சூத்திரன் என்று சொல்லிக் கொண்டாலும், உயர் ஜாதித்துவ முறையில் தான் நடந்து கொண்டார். ஜின்னாவிடம் தோற்றார், அம்பேத்கரை விமர்சித்தார். ஆனால், அவர் “சூத்திரத்துவம்” பேசி தோல்வி கண்டார். உதாரணங்கள் சில கொடுக்கப் படுகின்றன:

  • ‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு4.1926).
  • ‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு).
  • “……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.(நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947).
  • “இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950).
  • 3.1963 ஆம் ஆண்டு “நாத்திகம்” வார இதழுக்கு ஆசிரியர் அவர்களுக்கு பகுதியில் “ஆதி திராவிடர்களும் பெரியாரும்என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார். அது வருமாறு:துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்! வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம்
    பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்.”
  • “நான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக்கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலையில்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?”[8]

EVR, not steady in any stand

1970களில் செத்து விட்ட சூத்திரன் மற்றும் காலமான பெரியார் ஈவேரா: கருணாநிதி, “சுத்திரன்” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, பார்ப்பன-எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், பெரியாரிடம் இது எடுபடவில்லை. 24 டிசம்பர் 1973 அன்று இறந்து விட்டதற்குப் பிறகு, இவ்வார்த்தை பிரயோகம் குறைந்து, மறைந்து விட்டது எனலாம். விவாத-விவாதங்களில் மட்டும் குறிப்பிடப் படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது, கருணாநிதி, சில திமுக பேச்சாளர்கள் முரசொலியில், மேடைகளில்  “பாப்பாத்தி,”  என்றும் “ஆரிய அம்மையார்” என்று எதிர்மறை வாதங்கள் மூலம், தங்களது வெறுப்பைக் காட்டியுள்ளனர்[9]. இன்று யாரும் தமிழகத்தில் “சூத்திரன்” என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அம்பேத்கர் சிலைகள் அதிகமாகும் நிலையில், பெரியாரும் பிந்தள்ளப் படுகிறார்.

வேதபிரகாஷ்

19-06-2019

Caste abolition seminar -EVR casteism-old-10-11-2018

[1] Hanumanathan, K.R., Evolution of Untouchability in Tamil Nadu A.D. up to 1600, IHR 23/1–2, 1996–1997, pp.41–65.

[2] Hanumanthan, Krishnaswamy Ranaganathan. Untouchability: A Historical Study Upto 1500 AD: with Special Reference to Tamil Nadu. Madurai: Koodal Publishers, 1979.

[3] Robertson, S. “Periyar EV Ramasami’s critique of priestly Hinduism and its implications for social reforms.” Indian Journal of Theology 45 (2003): 75-87.

[4] Anita Diehl, Periyar E. V. Ramasami: A Study of the Influence of a Personality in Contemporary South india, B. J. Publications, 54. Janpath, New Delhi, 1978, p.19.

[5] ந. சுப்புரெட்டி, தந்தை பெரியார் சிந்தனைகள், யாழ் வெளியீடு, சென்னை, 2001, ப.136.

[6]  சாமி.சிதம்பரனார், தமிழர் தலைவர், சென்னை, 1939, ப.25.

[7] விடுதலை 10-07-1947.

[8] http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=07210509&week=jul2105

[9] https://dravidianatheism2.wordpress.com/2016/04/07/karunanidhi-attacked-and-getting-attacked-on-caste-basis/

அம்பேத்கரின் சூத்ரர், ஈவேராவின் சூத்திரன், ஜின்னாவின் காபிர்! [2]

ஜூன் 22, 2019

 

அம்பேத்கரின் சூத்ரர், ஈவேராவின் சூத்திரன், ஜின்னாவின் காபிர்! [2]

jinnah-periyar-ambedkar-1940

காபிர்நாயக்கர், ஜின்னாவின் முன் தாக்குப் பிடிக்க முடியவில்லை: ஜின்னாவைப் பொறுத்த வரையில், அவர் மிகத்தெளிவாக இருந்தார் என்று தெரிகிறது. 1940 மற்றும் பிறகு நாயக்கரை சந்தித்த போது, அதனை உறுதி செய்தார். ஆமாம், தான் முஸ்லிம்களுக்குத் தான் பாடுபட முடியும், முஸ்ல்லிம் அல்லாதவர் – காபிர்களுக்கு பாடுபட முடியாது என்று தெளிவாக தெரிவித்தார். ராமசாமி நாயக்கர் தான், இவ்விசயம் தெரிந்தும், அவரிடம் தேவையில்லாமல் உறவு வைத்துக் கொண்டு, வலிய-வலிய பேசினார். ஆனால், என்னைக்கு வந்தபோது கூட அவரை ஜின்னா கண்டு கொள்ளவில்லை. ஆக, சூத்திரன் பற்றியெல்லாம் ஜின்னாவுக்கு கவலையில்லை, தேவையில்லை. ஈவேரா இதே போலத்தான், அலி சகோதரர்களை வீட்டிற்கு வரவழைத்து உபசரித்தார். ஆனால், அவர்களோ, காந்தி விசயத்திலேயே, கேடுகெட்ட-மோசமான முஸல்மானை மதிப்பேனேத் தவிர, ஒரு காபிரை மதிக்க முடியாது என்று சொன்னது, ஒருவேளை பிறகு உறைத்திருக்கலாம்.

Jinnahs reply to EVR

அம்பேத்கரும், நாயக்கருடன் ஒத்துப் போகவில்லை: அம்பேத்கர், தெளிவாக ஆரிய இனம் இல்லை என்பதை எடுத்துக் ஆகவே, ஈவேராவின் “சூத்திரன்” அல்லது பெரியாரின் “சூத்திரன்கள்” அவருடைய உருவாக்கம் தான். அதற்கு மற்ற உயர்ஜாதியினர் ஒத்துழைத்தனர்.

அம்பேத்கரின்சூத்ரர்பற்றிய முடிவுகள் [1946]: அம்பேத்கர், தம்முடைய “சூத்ரர் யார்?” [“Who were Shudras?”] என்ற புத்தகத்தில், சூத்ரர் ஆரியர் மற்றும் க்ஷத்திரியர் [degraded khatriyas] என்பதை எடுத்துக் காட்டினார் என்பது முன்னமே குறிப்பிடப் பட்டது. அவர், இனி சூத்ரர் பற்றி வந்த முடிவுகளை, கீழ் கண்டவாறு கொடுக்கப் படுகிறது[1]:

  1. சூதரர், சூரியகுலத்து ஆரிய சமுதாய கூட்டகளில் ஒரு சமுதாயமாக இருந்தது.

காட்டினார். இது, ஈவேராவின் “ஆரிய சித்தாந்தத்திற்கு” பேரிடியாக போனது. மேலும், சூத்திரர் அதாவது சூத்ரர் விசயத்திலும், அம்பேத்கரின் முடிவு தெளிவாக இருந்தது. ஆகவே, அந்நிலையில், ஈவேராவின் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ambedkar-meetimng-periyar

ஈவேராவின் சூத்திரன் ஏன் தோற்றது? ஈவேரா கொடுத்துள்ள விளக்கம் [1945]: ஜின்னா மற்றும் அம்பேத்கர் பற்றி ஈவேரா சொன்னதே திகைப்பாக இருக்கிறது. இதோ அவர் சொன்னது[2], “ஜின்னாவின் வெற்றி என்னவென்றால் முஸ்லீம்களுக்கு, இந்துக்களுக்கு உள்ளதுபோல், சம உரிமை பங்கில் உண்டு என்பதல்லாமல், முஸ்லீம்களுக்கு முஸ்லீம் லீக் தவிர வேறு யாரும் பிரதிநிதித்துவம் அல்ல என்பதை உறுதிப்படுத்திவிட்டார். அம்பேத்கருக்கு வெற்றி என்னவென்றால்ஷெட்யூல்டு வகுப்புக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அம்பேத்கர்தான் பிரதிநிதி என்பதோடு, காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொண்டாடுவது சரியல்ல என்று செய்யப்பட்டுவிட்டது. இனி, நமக்கு வெற்றி என்னவென்றால், இனப்படி, மதப்படி, வகுப்புப்படி எந்த அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டும் என்று போராடினவர்கள் இந்நாட்டில் நாமேயாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக, காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை தலைமையை உதறித் தள்ளிவிட்டு, நடுமாநாட்டில் நாலாயிரம் பேர் இடையில், ‘காங்கிரஸ் இங்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளாததினால், நான் கவலைப்படவில்லை. இதற்காக வெளியேறி வேறு ஸ்தாபனம் ஆரம்பித்து, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளச் செய்கிறேன் இல்லையா பார்என்று பந்தயம் கூறி, மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு வந்த என் பந்தயப் பிரச்சனை, சிம்லா மாநாட்டில் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு கல்சாசனமாக்கப் பட்டுவிட்டது என்பதேயாகும். அதுவும் நம் விகிதப்படி என்றால் இன்னும் மகிழ்ச்சி அல்லவா?”,

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-6

ஈவேரா அம்பேத்கரிடம் மாறுபட்டது [1947]: ஈவேரா சொன்னதாவது[3], “……ஆதித்திராவிடர்களுக்குத் திடீர் என்று வந்தயோகம் டாக்டர் அம்பேத்கர்நான் இந்து அல்ல; பஞ்சமன் அல்ல; இந்து மதத்தின் எந்தப் பாடுபாட்டுக்கும் சம்பந்தப்பட்டவன் அல்லஎன்று சொன்னதால்தான். கோயில் திறக்கப்பட்டதும், ‘லிஸ்ட்டு கொடுங்கள்; உத்தியோகம் கொடுக்கிறேன்என்று மந்திரி கேட்பதும், ‘உங்களுக்கு நீதிக்குமேல், அளவுக்குமேல் நன்மை செய்கிறேன். என்ன வேண்டும்? கேள்என்று பட்டேல் சொல்லுவதும், ‘நானும் ஆதித்திராவிடன், பங்கிஎன்று காந்தியார் சொல்வதும் ஆன காரியங்களுக்குக் காரணம்நான் இந்துவல்லஎன்று அஷ்டாட்சர மந்திரமேயாகும். டாக்டர் அம்பேத்காருக்கும் அய்ந்து வருடத்துக்கு முன்பே, நான், 1925ல் சொன்னேன், ஆனால் எனக்கு 5 வருடத்துக்குப் பின்பு சொன்ன அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் இனியும்இந்து அல்லஎன்றுதான்வாயிலாவது சொல்லிக் கொண்டே எல்லா உரிமைகளும் பெறப்போகிறார்கள்”……   அதாவது ஈவேரா அம்பேத்கரிடம் என்ன பேசினார் என்பது கூட முழுமையாகத் தெரியவில்லை[4].

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-2

அம்பேத்கர் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டார், ஆனால், நாம் (சுத்திரர்) கேட்கவில்லை [1951][5]: ‘‘டாக்டர் அம்பேத்கர் மட்டும் ஏதோ ஆதித்திராவிடர்களுக்காகப் போராடினார். இவரிடம் ‘உம் சங்கதிக்கு மட்டும் தடையில்லாமல் எது வேண்டுமானாலும் சொல் – செய்கிறோம்; ஆனால், மற்றவர்கள் விஷயத்தைப் பற்றிப் பேசாதே’ என்று கூறிவிட்டனர். அதன்படியே அம்பேத்காரும் தன் சமூகத்தாருக்கு வழிதேடிக் கொண்டார். ஆகவே, ஆதித்திராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி விகிதாச்சாரம் கொடுப்பதாகக் கூறிச் சட்டமும் செய்துவிட்டனர். அந்தச் சட்டத்திலே ஆதிதிராவிடர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி சகலவற்றிலும் பங்கு கொடுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கேட்டபடி, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின்படி ஸ்தானங்கள் கொடுத்துவிட்டனர். ஆகவே அவராவது அவ்வளவு பெற்றுவிட்டார். ஆனாலும், நம்மவர்களுக்காக (நான்காம் சாதி) எவனாவது இதுவரை ஏதும் கேட்டது கிடையாது. ஆதித்திராவிடர்களுக்கு இவ்வளவு ஒதுக்கிவிட்டு, நாம் விகிதாச்சாரம் கேட்பது தப்பு என்று சொல்லுகிறார்கள். ஆகவே, யாராவது இதைப் பற்றி கேட்டால், அவரை ‘வகுப்புவாதி’ என்று கூறிவிடுகிறார்கள்.’’

jinnah-periyar-ambedkar-1940.Bombay

‘‘அம்பேத்கர் கொஞ்சம் நம் உணர்ச்சியுள்ளவர். அவர் என்னைக் கேட்டார். ‘உன்னுடைய மக்களுக்கு என்ன செய்யவேண்டும்?’ என்று. நிறைய விவரங்களையெல்லாம் அவரிடம் கொடுத்தேன்; அதையெல்லாம் அவர் பேச ஆரம்பித்தார். உடனே பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்னவிலையென்றால், அவர் தன்னுடைய மக்களுக்கு 100-க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார். அவன் ‘15-ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான்.! அவனுக்குத் தெரியும் 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர்கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக் கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார். மற்றவர்களுடைய சங்கதியைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை.’’ (விடுதலை 11.11.1957).

Cnstituent Assembly members

ஈவேரா, அம்பேத்கரை இழிவுபடுத்தி எழுதியது: ஈவேரா சொன்னார்[6], ‘இந்திய அரசியல் சட்டம் ஓட்டுரிமை வருவதற்கு முன்னேயே செய்யப்பட்ட அரசியல் சட்டம். ஓட்டுரிமை வந்தது 1951-லே. அரசியல் சட்டம் செய்யப்பட்டது 1948 – 1949லேஅந்த அரசியல் சட்டம் செய்கிறபோது யார் யார் இருந்தாங்கன்னா? அஞ்சுபேரு இருந்தானுங்க. அவர்கள்தான் கமிட்டி. ஒருத்தர் என்.கோபால்சாமி அய்யங்கார். ஒருத்தர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். இன்னொருத்தர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இன்னொருவர் கே.எம்.முன்ஷி. அப்புறம் எவரோ அனாமதேய துலுக்கர். அப்புறம் டாக்டர் அம்போத்கர். அம்பேத்கர் கொஞ்சம் குதித்தார். அவருக்கு லஞ்சம் கொடுத்திட்டாங்க. என்னடான்னாஉங்கள் சாதிக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்க. மற்றவங்களைப் பற்றிப் பேசாதேன்னுட்டாங்க. அவரு இதுதான் சமயம்னு உடனே எங்க சாதிக்கு விகிதாச்சாரம் கொடுன்னிட்டார். அந்த ஆதிதிராவிட சாதிக்கு 100க்கு 16 இடம். அவர்கள் ஜனத்தொகை 100க்கு 16 ஆக இருந்தது அப்போ. எடுத்துக் கொள்ளுன்னுட்டாங்க. மற்றவங்க பேசினான். பேசக் கூடாதுன்னுட்டாங்க. பேசாமல் அவர்கள் நாலுபேரும் பண்ணினதற்கு கையெழுத்துப் போட்டிட்டாரு அம்பேத்கர். அவனவன் வேண்டியபடி எழுதிக்கிட்டான்.’

Save Sudra rule campaign opposing Jeya

உள்ள சூத்திரன் ஆட்சியைக் காப்போம்: 1960-1970களில் திராவிட கட்சி வேட்பாளர்கள் ஜாதி பெயர் சொல்லி மேடைகளில் பேசுவது வழக்கமாக இருந்தது. சில நிலைகளில், ஜனாதிபதி ஆட்சி அமூல் படுத்தப் போகிறது, என்ற விவரம் அறிந்த போது, “உள்ள சூத்திரன் ஆட்சியைக் காப்போம்” என்று சுவரொட்டிகள் ஒட்டினார்கள். ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்று மேடைகளில் பேசி, மறைமுகமாக “சூத்திரன்” என்று காட்டிக் கொள்ளவும், அதாவது, உணர்ச்சிகளைத் தூண்டி, ஜாதி துவேசத்தை கிளப்ப, உண்டாக்க முயன்றது தெரிந்த விசயமாக உள்ளது. இப்பொழுது பன்றிக்கு பூணூல் போடும் விசயத்தில் கூட, ““பார்ப்பானை பிராமணன் ஆக்குவதும்– தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணுலே..”” என்று சுவர்களில் எழுதினர். அதாவது, அப்பொய்மையை, பிரச்சார ரீதியாக பரப்பும் குணம், மனப்பாங்கு, போக்கு முதலியவற்றை தொடர்ந்து காணலாம்.

© வேதபிரகாஷ்

18-06-2019

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-3

[1]  B.R. Ambedkar, Who were Shudras?, Introduction, pp.iv-v, also see Chapter.XII, The Theory in the crucible, pp.239-245.

[2] குடியரசு 28-7-1945.

[3] இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947

[4] இதைப் பற்றி பெரியார் தாசர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொகுப்பாளர்கள் சொல்வதில்லை.

[5]  விடுதலை 22-9-1951.

[6] கரூர் பொங்கல் விழா பொதுக்கூட்டம் ஈவேரா உரை, தேதி 17.1.68. விடுதலை 2004 பொங்கல் மலர் பக்.38.

அம்பேத்கரின் சூத்ரர், ஈவேராவின் சூத்திரன், ஜின்னாவின் காபிர்! [1]

ஜூன் 22, 2019

அம்பேத்கரின் சூத்ரர், ஈவேராவின் சூத்திரன், ஜின்னாவின் காபிர்! [1]

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-8

ஜின்னா சூத்திரர்களுடன் விளையாடியது [1940-47]: 1946 நேரிடை செயல்பாடு [Direction Action Day] என்ற தீவிரவாத தாக்குதல் மூலம், துலுக்கர் தமது வெறித்தனத்தை வெளிப்படுத்தினர். இதில் பாதிக்கப் பட்டது இந்துக்கள் தாம், அதாவதி எஸ்.சி இந்துக்கள். 14-08-1946 அன்று துலுக்கர் கல்கத்தாவில் ஊர்வலமாகச் சென்று ஜின்னா-அம்பேத்கர் தலைமை ஏற்போம் என்று குரல் கொடுத்தனர்[1]. ஜோகேந்திர நாத் மண்டல் [Jogendra Nath Mandal] என்ற எஸ்சியை வைத்துக் கொண்டு, ஜின்னா மோசடி வேலை செய்தார். சூத்திரர்-துலுக்கர் ஒற்றுமை போர்வையில், வங்காளத்தில், அவரை உபயோகித்துக் கொண்டார். பிறகு, பாகிஸ்தான் உருவானதும், “இந்துவிற்கு” பிரதிநிதுத்துவம் அளிக்கிறேன் என்ற போர்வையில். இவரை சட்ட அமைச்சராக்கினார். ஆனால், அடிப்படைவாத-மதவெறி துலுக்கர்களால் அதிகமாக இம்சிக்கப் பட்டார். இதனால், இவர், ராஜினாமா செய்து, இந்தியாவிற்கு ஓடிவர நேர்ந்தது. ஆக, நாயக்கருக்கு நேரிலும், கடிதம் மூலமும் அதிர்ச்சி கொடுத்தார் என்றால், ஜோகேந்திர நாத் மண்டலுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுத்து வெளியேற்றினார் எனலாம். ஏனெனில், சூத்திரனாக இருந்தாலும், காபிர் பதவி தான் கிடைக்கும், சூரையாடப் படுவான். ஆனால், ஈவேரா துலுக்கனாக மாறாலாம் என்றெல்லாம் எழுதி, பேசியுள்ளது, அவரது போலித் தனத்தையே காட்டுகிறது.

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India

அலி சகோதரர்களும், ஈவேராவும்: மௌலானானா மொஹம்மது அலி ஜௌஹர் (Maulana Mohammad Ali Jouhar) மற்றும் மௌலானா சௌகத் அலி (Maulana Shaukat Ali) ராமசாமி நாயக்கர் வீட்டிற்கு வந்ததாக சொல்லிக் கொள்கிறார்கள். மொஹம்மது அலி ஜௌஹர் (10 December 1878 – 4 January 1931) மற்றும் சௌகத் அலி (1873 – 1939) “அலி சகோதர்கள்” என்று குறிப்பிடப் படுகிறார்கள், கிலாபத் இயக்கத்தின் போது, காந்தி இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால், அவர்கள் காந்தியை மதிக்கவில்லை. அலி சகோதரர்களை, பெரியார் தமது தாயார், மனைவிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது, ”இந்த உலகமே காந்தியுடன் இருக்கும்போழுது, அந்த மஹாத்மாவோ, இந்த மௌலானா முஹம்மது அலியின் சட்டைப்பையில் இருக்கிறார்” என்று சொன்னார், என்றெல்லாம் பெரியாரைப் பற்றியுள்ள புத்தகங்களில் காணப்படுகிறது. அலி சகோதரர்களுக்கு தமிழ் தெரியாது, அப்படியானால். நாயக்கர் இந்தியில் / உருதில் அவர்களுடன் பேசியிருக்க வேண்டும். ஆங்கிலத்திலும் பேசியிருக்கலாம். காசி எல்லாம் சென்று வந்திருப்பதாலும், பெரிய வியாபாரி என்பதாலும் நாயக்கருக்கு இந்தி தெரியும். ஆகவே, அவர் எப்படி இந்தி எதிர்த்தார் என்று தெரியவில்லை!Who were sudra- ambedkar thesis


அம்பேத்கரின் விளக்கம் [1946]:  வேத-இலக்கியங்கள் மூலமாகப் பெறப்படும் விவரங்களை, “பிராமண கருதுகோள் மூலம் சூத்ரரகளின் தோற்றம்,” என்ற தலைப்பில் அலசி, அவையெல்லாம் அர்த்தமற்றவை, சரித்திர மாணவன் அவற்றை பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டான் என்று ஒதுக்கிறார்[2]. அம்பேத்கர், தம்முடைய “சூத்ரர் யார்?” [“Who were Shudras?”] என்ற புத்தகத்தில், சூத்ரர் ஆரியர் மற்றும் க்ஷத்திரியர் [degraded khatriyas] என்பதை எடுத்துக் காட்டினார்[3]:

1) சூத்திரர்களும் ஆரியர்களே.

2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர்.

அவர், அவர் காலத்தில் இருந்த புத்தகங்களை எல்லாம் தீர படித்தவர். அவருக்கு அந்நேரத்தில் இருந்த விவரங்களை வைத்து எழுதியதால், “ஆரியர்” என்றார். மேலும், பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட அவருக்கு, பௌத்தமத நூல்களில் “ஆரியர்” என்பது, இனப்பெயர் கிடையாது என்பதும் தெரியும். ஏனெனில், புத்தரையே “ஆரிய” என்று சீடர்கள் விளித்துள்ளனர். ஆனால், ஈவேராவுக்கு இதெல்லாம் தெரியாது. இல்லை தெரிந்தாலும், தெரியாதது போல நடந்து கொண்டார். ஏனெனில், அவரது பேச்சு, எழுத்து எல்லாமே ஆதாரங்கள் இல்லாமல், அரைகுறையாக இருந்தன.

Who were Sudras, Ambedkar

அம்பேத்கரின் சூத்ரர் பற்றிய ஆராய்ச்சி [1946]: அம்பேத்கர் சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ள நூல்களைப் படித்த்து, சூத்ரர், சத்திரியர் தான், காலப் போக்கில், சூத்ர-சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது என்று எடுத்துக் காட்டினார். அதனால், சூத்ரர், சத்திரியர்களிடமிருந்து பிரிந்து, சூத்ரர் என்ற நான்காம் பிரிவாக உருவெடுத்தார்கள். ஆனால், ஈவேரா அத்தகைய நூல்களை / புத்தகங்களைப் படித்தாரா இல்லையா அல்லது அவருக்கு அம்மொழிகள் தெரியுமா-தெரியாதா, இல்லை, படித்து அவருக்கு சொன்னவர், முறையாக சொன்னார்களா இல்லையா என்று தெரியவில்லை. அதனால் தான், அம்பேத்கருடன் மாறுபட்டு, சூத்திரன் என்று உருவாக்கி, அவர்களை வேறுவிதமாக, தாழ்த்தி, கேவலப்படுத்தினார். ஈவேரா, அம்பேத்கர் அவ்வளவு அந்நியோன்னிய நண்பர்கள் என்றால், ஒன்று கூடி பேசினார்கள், திட்டம் போட்டார்கள் என்றால், இவ்விசயத்தில் எப்படி எத்ரும்-புதிருமாக ஆனார்கள்? இந்தோ-ஆரிய சமூகத்தில், சத்திரிய-வர்ணத்தில், அவர்கள், சத்திரியர்களுக்கு இணையாக வைத்து மதிக்கப் பட்டனர்.

  1. அக்காலத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர் என்று ஆரிய சமூகத்தில் மூன்று வர்ணத்தவர் தான் இருந்தனர். சூத்திரர் தனியாக வர்ணமாக இருக்கவில்லை. சத்திரிய வர்ணத்தவராக இருந்தனர்.
  2. சூத்ர-அரசர்களுக்கும், பிராமணர்கக்கும் சச்சரவுகள் இருந்தன [விசுவாமித்திரர்-வசிஷ்டர்[4]]. அவற்றில் பிராமணர்கள், சூத்ரர்களால் பலவித அவமானங்களுக்கும், கொடுமைகளுக்கும், உட்பட நேர்ந்தது.
  3. சூதரர்களின் அத்தகைய கொடிய மற்றும் அடக்குமுறைகளால் பாதிக்கப் பட்ட பிராமணர் அவர்களுக்கு, பூணூல் அணிவிக்கும் சடங்கை செய்ய மறுத்தனர்.
  4. பூணூலை இழந்த சூத்ரர் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகினர். இதனால், சத்திரிய நிலையை இழந்து, வைசியர்களுக்கும் கீழாக வைக்கப் பட்டனர். இவ்வாறுதான், சூதரர் என்ற நான்காவது வர்ணம் உண்டாயிற்று.

EVR Paraichi cartoon

சூத்ரர் பற்றி ஈவேரா: ஈவேரா ஒழுங்காக புத்தகங்களைப் படிக்காமல், மொழிபெயர்ப்புகள் மற்றும் பாலசுப்ரமணியன், ராமநாதன், அண்ணாதுரை போன்றோர் மொழிபெயர்த்து சொனதை வைத்துக் கொண்டு எழுதியது அரைகுறையாகத்தான் உள்ளது. சமஸ்கிருதம் தெரியாது. எனவே, கருத்துகளும் இவ்விசயத்தில் பிழையாகவே இருக்கின்றன:

  • “நான் பிறப்பதற்கு முன்னோலேயே தேவடியா மக்கள் நீங்கள், நான் பிறப்பதற்கு முன்பே சூத்திரர்கள் நீங்கள்- நான்காவது சாதி நீங்கள், இப்போது நாளைக்கு நான் சாகப்போகிறேன் – சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன்… (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3205)”
  • “… சாஸ்த்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான், பார்ப்பானுக்கு பிறந்தவன் என்கிறான், சூத்திரனுக்கு பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான்…(இதையெல்லாம்) யார் கவனித்தீர்கள்… ((பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3234)”
  • “..ஆனதினாலே, நாம் முதலாவது இப்போது மானத்துக்காகப் போராடுகிறோம், வேறே எதற்காகவும் இல்லை. இழிவு – தேவடியாள் மகன், பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன், தாசிப் புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது.. (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3249):
  • என்போன்றசூத்திரன்என்று சொல்லப்படுபவன்பறையன்என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.” (குடியரசு4.1926).
  • தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்குச் செய்ததாகுமே ஒழிய, உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது…………….” (குடியரசு 16-6-1929).
  • ‘‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.’’ (குடியரசு10.1931).
  • ‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு 6-7-1946)

இதிலிருந்தே, ஈவேரா, அம்பேத்கரை விட எந்த அளவுக்கு முரண்படுகிறார் என்பதை கவனிக்கலாம். மேலும், எம். பாலசுப்ரமணிய முதலியார் போன்றோரை, சூத்திரர் என்று சொல்லியே வசைப் பாடியுள்ளார்[5].

© வேதபிரகாஷ்

17-06-2019

Joginder Nath Mandal-First Law Minister, later defected to India-7

[1] A day prior, the Secretary of the Calcutta District Muslim League issued a statement urging Muslims to support the Federation’s protest.10 A procession of Federation and League activists paraded through several streets in central Calcutta and converged at the designated Ochterlony monument. Mandal presided over a meeting where the speakers condemned the Cabinet Mission and the Congress for by passing the legitimate demands of the Scheduled Castes and called upon the members to be prepared for any future struggle under the leadership of Dr Ambedkar and Mr. Jinnah.

[2] On reading these Brahmanic speculations on the origin of the four Varnas and particularly of tlie Shudras one is very much reminded of tliese words of Prof. Max Muller. All these speculations are really the twaddles of idiots and ravings of madmen and as such they ore no use to the student of history who is in search of a natural explanation of a human problem.

Max Muller, Ancient Sanskrit Literature (Panini’s office edition), p. 200.

[3] .R. Ambedkar, Who were Shudras?, Chapter.VIII, The Shudras were Kshatriyas, p.121

see Chapter.XII, The Theory in the crucible, p.241.

[4] Chapter.IX, Brahmins verss Shudras, pp.155-176.

[5] மக்கள் மூடர்களாயிருக்கும் வரையில் தான் திரு. எம். பாலசுப்பிரமணியம் போன்ற வருணாச்சிரம அழுக்கு மூட்டைகளின் ஏமாற்றுதல்களும் ஆஸ்திகப் பிரசாரமும் பலிக்குமே ஒழிய வேறில்லை. திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் வெற்றி பெற்றால் நமது மக்களை இன்னும் மூடர்களாய் இருக்கிறார்கள். பகுத்தறிவற்றவர்களாயிருக்கிறார்கள் என்பது தான் உறுதிப்படுமே தவிர மற்றபடி சுயமரியாதைக் கொள்கையில் ஒரு அணுவளவும் அதற்காக அசைந்து விடாது. ஜாதியையும், கடவுள்களையும், மதத்தையும், கோவில்களையும் காப்பாற்றுவதற்காக திரு. பாலசுப்பிரமணிய முதலியார் சட்டசபைக்குப் போவதும் அவரை மக்கள் அனுப்புவதும் உண்மையானால் திரு. பால சுப்பிரமணியம் ஜாதிப்படி சூத்திரராகவும், மதப்படி பார்ப்பனர் அடிமை யாகவும் தான் இருக்கத் தகுதி உடையவரே தவிர அவர் சட்டசபையில் இருந்து ராஜரீக விஷயம் கவனிக்க சிறிதும் யோக்கியதை அற்றவர் என்று நம்மால் மெய்ப்பிக்க முடியும். திரு. கள்ளிப்பட்டி கிருஷ்ணசாமி நாயக்கராவது தன்னை க்ஷத்திரியன் என்று சொல்லிக் கொள்ளுகின்றார். திரு. பாலசுப்ரமணிய முதலியார் தன்னை சூத்திரன் அல்லது சற்சூத்திரன் என்று தானே தேவாரம், திருவாசகம் பெரியபுராணம், இராமாயணம் முதலிய “நம் அரும் பெரும் நூல்கள்” படி சொல்லிக்கொள்ள வேண்டும். குடி அரசு – துணைத் தலையங்கம் – 17.08.1930

மறைமலை அடிகள் – ஈவேரா மோதல்கள் தீடீரென்று வெடித்து மறைந்தது சைவ-சுயமரியாதையா, சூத்திர-பகுத்தறிவா, அதிகார-பயமா?

ஜூன் 21, 2019

மறைமலை அடிகள்ஈவேரா மோதல்கள் தீடீரென்று வெடித்து மறைந்தது சைவசுயமரியாதையா, சூத்திரபகுத்தறிவா, அதிகாரபயமா?

Adigal and EVR, anti-saiva

சைவத்தைப் பற்றி, தவறான விளக்கம் மற்றும் முறைதவறி சென்ற நிலை: சைவர்களின் புராணங்களைக் குறித்த எதிர்மறையான கருத்துக்கள் இடம் பெற்ற கட்டுரைகள் ‘குடிஅரசு’ இதழில் 1927-ஆம் ஆண்டு தொடங்கி வெளிவரத் தொடங்கின. இது நவீனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பின்னர் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் தலைவரான பெரியாரையும் பகைஉணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கினர். இது எந்த அளவுக்கு இருந்ததென்றால் ‘சுத்த சைவ இரத்த ஓட்டம் உள்ளவர்கள் இன்னமும் இவர்களைக் கொல்லாமல் இருக்கலாமா?’ என்று தம் உரையில் மறைமலை அடிகள் குறிப்பிடும் அளவுக்குச் சென்றது (குடிஅரசு, 29.7.1928). பின்னர் இக்கூற்றை மறுத்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் மக்கள் முன்னேற்றத்தின் பொருட்டுத் தாங்கள் செய்துவரும் நன்முயற்சிகள் இனிது நடைபெறுக” என்று மறைமலை அடிகள் வாழ்த்தி உள்ளார். (குடிஅரசு, 27.8.1928) இந்நிகழ்வுகளின் விளைவாக ‘சைவ சமயமும் சுயமரியாதை இயக்கமும்’, ‘சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை’ என்ற கட்டுரைகளை அடிகளார் எழுதினார். இந்நிகழ்வுகள் அடிகளாரை மிகவும் பாதித்தன. 1928 ஜுலை 31ஆம் நாள் எழுதிய நாட்குறிப்பில் அடிகளார் இவ்வாறு எழுதியுள்ளார், கடந்த நான்கு நாட்களாக இரவும் பகலும் நன்றாக உறங்க இயலவில்லை. அத்துடன் என் கனவில் கூட நாத்தீக சுயமரியாதை இயக்கம் என் சிந்தனையில் இடம் பெறுகிறது. இதன் சித்தாந்தங்களையும், எப்படி மறுப்பது, இதன் பரவுதலை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டுள்ளேன்.”

DK blaspheme Appar, Sambandar-booklet

ஈவேராவின் சைவ தூஷணத்தால் துடித்ததுமறைமலை அடிகளின் இரட்டை நிலை ஏன்?:இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கமானது எரிச்சலூட்டும் இயக்கமாகவே அடிகளாருக்கு இருந்துள்ளது என்பதை 1929 பிப்ரவரி 14ஆம் நாள் அவர் எழுதிய நாட்குறிப்புச் செய்தி வெளிப்படுத்துகிறது[1]: கடவுள் மறுப்பு இயக்கம் எல்லாப் பகுதிகளிலும் பரவிவருகிறது. வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருத இதிகாசங்கள் அதன் தமிழ்வடிவங்கள் மீதான கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். இருந்தாலும் அருளாளர்களான மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர் மீதும் இவர்களை ஒத்தவர்கள் மீதும் நிகழ்த்தும் குறும்புத்தனமான முறையற்ற தாக்குதலை நான் விரும்பவில்லை என்பதோடு அதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இவர்களுக்கு நல்லறிவையும், கருணையையும், அச்சத்தையும் இறைவன் அருள்வாராக. சமஸ்கிருத இலக்கியம் ஆதாரம் இல்லாமல், சைவமே இல்லை. மேலும், சங்க இலக்கியத்தில், “சிவன்” என்ற சொற்பிரயோகமும் இல்லை. “வேதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், சமஸ்கிருத இதிகாசங்கள் அதன் தமிழ்வடிவங்கள் மீதான கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்,” என்றது, அவரது, சமஸ்கிருத-எதிர்ப்பு, பிராமண-எதிர்ப்பு என்பதையெல்லாம் மீறி, வேறோதையோ தான் காட்டுகிறது. “கருணையற்ற விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்,” என்றது, அவரது மெத்தப் படித்த பாண்டித்யம், பண்பாடு, ஞானம் முதலியவற்றையும் தாண்டியுள்ள வெறுப்பை எடுத்துக் காட்டுகிறது. எனவே, முதலியாரின், நாயக்கருடனான நட்பு, பொல்லாதது, அதனால், இழிவு தான் வந்து சேர்ந்தது.

DK blaspheme Appar, Sambandar

வேதாசல முதலியாருக்கும், ராமசாம நாயக்கருக்கும் நடந்த லடாய் என்ன?: “22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற .வெ.ரா.வும் அவரியக்கமும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத்தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று அடிகள் பேசினார்”, என்று படிக்கும் போது, வியப்பாக உள்ளது[2]. அடிகளார் பேச்சுக்கு எதிர்வினையாகத் ‘திராவிடன்’ ஏட்டில் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதலில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘குடலைப் பிடுங்கி மாலையாகப் போடுவது போலெல்லாம் பேசுவதா?’ எனத் ‘திராவிடன்’ ஆசிரியர் கண்ணப்பன் போன்றோர் மறைமலையடிகள் மீது வழக்குப் போடவும் முனைந்துள்ளனர்[3]. ஆனால் இந்நிகழ்வுகளின் போது வெளியூர்ப் பயணங்களில் இருந்த ஈ.வெ.ரா. உடனே இதில் தலையிட்டுத் தம் இயக்கத்தார் செயல்களுக்காக மறைமலையைடிகள் மன்னித்துக் கொள்ள வேண்டு மென்று மடல் எழுதியுள்ளார்[4]. “சுயமரியாதை இயக்கத் தலைவர் ஒரு வைஷ்ணவர் ஆவர். அவரது சகோதரரும், வைஷ்ணவராக இருந்து கொண்டு, பல அப்பாவி சைவர்களை வைஷ்ணவர்களாக மாற்றியிருக்கிறார்கள். அதற்கு துணைபோனவர்களும் வைஷ்ணவர்கள் தான். சில நீதிகட்சி தலைவர்களும் வைஷ்ணவர்கள் தான். மேலும் அவர்கள் வைஷ்ணவர்கள் மட்டுமில்லை, தெலுங்கு பேசுபவர்களாகவும் இருக்கின்றனர்,” என்றார் மறைமலையடிகள். அப்படியென்றால், ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய நிலையினையும் ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில், அது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தி, அமைதியைக் குலைப்பதாக உள்ளது.

Justice party, vishnavism vs saivism

சைவவைணவ மோதலை உண்டாக்க முயன்ற நாயக்கரும், முதலியாரும்: மறை. திருநாவுக்கரசு. ‘கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு எழுதியது : “நம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த நல்லி சைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண் டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால், கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால்ஆரவாரமானஏராளமான பொருளற்ற கற்பனைகளால் வரைதுறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர் நாகரிகஇன உணர்வைத் தம் கதையால் கெடுத்துவிட்டார் என்றும் கருதினார்அத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக சமயஇன உணர்வுக்கு மாறானகம்பராமாயணத்தைப் பயிலுதலும், அவைக்களங்களில் அதனை விரித்தெடுத்து ஓதிப் பரப்புதலும் தவறென்று தம் சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வெளியிட்டும் எழுதியும் வந்தார்[5]. தமிழேந்தி[6], “உண்மையில் மறைமலையடிகளின் கம்பராமாயண எதிர்ப்பு பகுத்தறிவு நெறியின்பாற் பட்டதன்று. அவர் நெஞ்சுக்குள் புகுந்த சைவநெறிப் பூதம் அவரை அப்படியெல்லாம் எழுத வைத்தது. …. இராமாயணத்திற்கு எதிராகத் தன்மான இயக்கம் போர் முரசு கொட்டிய போது, பூரித்து மகிழ்ந்த அடிக ளார், அவ்வியக்கம் பெரிய புராணத்தின் மீது கை வைத்த போது, அலறியடித்துக் கொண்டு ஓடினார்……,” என்று நக்கலாக எழுதியுள்ளார்[7]. இவ்வாறு விமர்சித்தாலும், சைவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள்.

Justice party, Saivite friends- stamps

போலி பிராமண எதிர்ப்பில் உயர் ஜாதியினரில் அரசியல், மேம்பட்டது அவர்கள், பாதிக்கப் பட்டது மற்றவரே: பிராமணர், பார்ப்பனர் என்று சொல்லிக் கொண்டு பிரச்சாரம் செய்து, ஆட்சிக்கு வந்தது, முதலியார், சூத்திரர், மேனன், கவுண்டர் போன்றோரே. இதில் ஜெயலலிதாவை ஜாதி ரீதியில் குறிப்பிட முடியாது. 60 ஆண்டுகளில் பார்ப்பனர் ஓடி மறைந்து விட்டனர். எல்லா இடங்க்களிலும், பார்ப்பனர்-அல்லாதவர் தாம் ஆட்சி செய்கின்றனர். பிறகு, இந்த 60 ஆண்டுகளில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, பொருளாதார ரீதியில் உண்டான சிறப்புகள் என்ன, அரசிய ஆளுமையில் நடந்த நன்மைகள் என்ன என்று கூற முடியுமா என்று கவனிக்க வேண்டும். லஞ்சம், மோசடிகள், குற்றங்கள், சட்டமீறல்கள் குறைந்தனவா? கல்வி, மருத்துவம், பொது வாழ்வு, குடும்பம், முதலியவற்றில் தேவையான ஒழுக்கம், வேலை நேர்மை, தொழில் தர்மம் முதலியவை கடைப்பிடிக்கப் படுகின்றனவா? தினசரி வழக்கமான காரியங்கள் அமைதியாக செய்ய முடிகிறதா? எல்லா விண்ணப்பங்களிலும் ஜாதி கேட்கப் படுகிறது, படிப்பு-தொழில்-சலுகைகள் எல்லாமே ஜாதி கேட்டுத்தான் நடக்கிறது. இத்தனை போதித்தும், ஜாதித்துவம் இருக்கிறது, கொலைகள் நடக்கின்றன. இவற்றில் எப்பொழுதும் தாக்கப்படும் பார்ப்பனீயம் அல்லது சமத்துவம் அல்லது …….த்துவம் உள்ளதா? அனுபவிக்கும் மக்கள் தான் சொல்ல வேண்டும்.

© வேதபிரகாஷ்

16-06-2019

Justice party, Saivite friends- stamps-2

[1] ஆ.சிவசுப்பிரமணியன், மறைமலை அடிகளும் நவீன சைவ மற்றும் தமிழ்த் தேசிய இயக்கங்களும் 1876-1950, 13 மார்ச் 2016.

http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan16/30413-1876-1950

[2] 22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற ஈ.வெ.ரா.வும் அவரியக்க மும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார் களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத் தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ? என்று இன் றைய இந்து முன்னணி இராமகோபாலன், எச். இராசா, அருச்சுன் சம்பத் பாணியில் பேசியுள்ளார்.

தமிழேந்தி, மறைமலையடிகளும் பெரியாரும், நவம்பர்.19, 2015.

[3] http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29683-2015-11-19-07-17-38

[4] “On the 24′ of August 1928, Adigal noted in his diary:” … Mr.T.V. Kalyanasundara Mudaliar, Mr. Balasundara Mudaliar and Mr. Viswanatha Pillai of Trichi came to conciliate me to Mr. E.V. Rarnasarni Naicker’s side and requested me to write him a letter in a fiendly tone which I readily did and gave the letter to Visvanatha Pillai … By the grace of Lord rnay there be peace over all!”

Maraimalai Adigal. Marai Malai Adiagal Diaries. (“MMAD”) available at Marai Malai Adigal Library, Madras, Tamil Nadu:unpublished, 1898-1950.

[5] மறை. திருநாவுக்கரசு, தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62, பக்.568

 

[6] தமிழேந்தி, மறைமலையடிகளும் பெரியாரும், நவம்பர்.19, 2015.

[7] http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29683-2015-11-19-07-17-38

திருமுறை சூத்திரர், நாவலர்-அடிகள் சத்-சூத்திரர், ஈவேராவின் சூத்திரர்: சைவ-வைணவ மோதலா, ஆத்திக-நாத்திக மோதலா?

ஜூன் 20, 2019

திருமுறை சூத்திரர், நாவலர்அடிகள் சத்சூத்திரர், ஈவேராவின் சூத்திரர்: சைவவைணவ மோதலா, ஆத்திகநாத்திக மோதலா?

Arumuga Navalar, M M Adigal

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் (1822-1879) ஆதரித்த சத்சூத்திரர்: தமிழகத்தில் சில வேளாளார்கள், வைசியர் என்ற நிலையை கோரியபோது, ஆறுமுக நாவலர், வேளாளார்கள் தம்மை “சத்-சூத்திரர்” என்று கூறிக் கொள்ளலாம் என்று ஆலோசனை கொடுத்தார். சிலர் அதை விமர்சித்தும் உள்ளனர். 16ம் நூற்றாண்டில், கோவிலைக் கட்ட விதிமுறைகளை விளக்கும்,  ஆகமங்களில், இத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன, அவற்றை சில சைவ பூஜாரிகள் எழுதி வத்தனர்  என்றார். கோவில்களும், பூஜாரிகளும் வெள்ளாளர்களை நம்பி இருந்ததால், அவர்களை உயர்த்தி “சத்-சூத்திரர்கள்” ஆக்கினர். பூஜாரிகளும், நாளடைவில் தம்மை பிராமணர் என்று கூறிக் கொண்டனர். இதனால், பிறகு வந்த மறைமலை அடிகள் அத்தகைய, வெள்ளாளர்களின் ஜாதித்துவத்தை எதிர்த்தார். ஆனால், ஆரிய பிராமணர்களை விட தங்கள் ஜாதி சிறந்தது என்று சொல்லிக்கொண்டார். அதனால், சூத்திரர்களாக கூறிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், ஈவேராவோ, சைவத்தையும் எதிர்த்தார், தன்னை சூத்திரன் என்று சொல்லிக் கொண்டார்.  இவ்விதமாக, மறைமலை அடிகளுக்கும், ஈவேராவுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அடிகள் என்ன முயன்றும், சைவத்தை சீர்திருத்த முடியவில்லை, ஏனெனில், ஒர் நிலையில் நாத்திகம், இன்னொரு நிலையில் விஞ்ஞானம், இறுதியில் தத்துவம் என்றிருந்து குழப்பி / குழம்பி விட்டது தான் மிச்சம்.

Saiva, Jaina sculptures

வேளாளர்களுக்கு, ஜைனர்கள் தாம் எதிரிகளாக இருந்திருக்க வேண்டும்:  ஜைனர்கள் உழவு, வேளாண்மை, விவசாயம் முதலியவற்றை எதிர்ப்பவர்கள். கண்ணுக்குப் புலனாகாத உயிரினங்களையும் பாதிக்கக் கூடாது என்றதால், முகத்தை மறைந்து [கண்கள் தவிர], அவர்கள் நடந்து செல்லும் பாதையைக் கூட, மயில்பீலி துடப்பத்தால் பெருக்கி, சுத்தம் செய்து கொண்டே நடப்பர். திகம்பரரோ, ஆடையே ஹிம்சையின் அடையாளம் என்று அதையும் துறந்து, நிர்வாணமாகவே நடந்தனர். எந்த உயிருக்கும் தீங்கு நேரக்கூடாது என்றதால், தீவிர ஜைனர்கள், ஒருநிலையில், எதையும் உண்ணாமல், வடக்கிருந்து இறக்கவும் துணிந்தனர், இன்றும் சிலர் துணிகின்றனர். ஒருவேளை, ஜைனர்களில் அத்தகைய முறைகளைப் பின்பற்றுவோர், உயர்ந்தவர்களாகக் கருதப் பட்டிருக்கலாம். ஆனால், எல்லா ஜைனர்களும் அவ்வாறாக இல்லை, நன்றாக உண்டு, வளர்ந்திருக்கிறார்கள். க்ஷத்திரியர்களாக-வைசியர்களாக சிறந்திருக்கிறார்கள்.

Jaina picture

ஜைனர்கள் 100% அஹிம்சாவாதிகள் என்றால், க்ஷத்திரவைசியர்களாக இருந்திருக்க முடியாது: ஆகவே, இந்த மூன்று வகுப்பினரும் – ஜைன முனிகள், அரசர்கள் மற்றும் வியாபாரிகள் – சிறந்து, செல்வர்களாக இருந்த நிலையில், ஊழியம் செய்ய மக்கள் தேவைப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல், வைசியர்களுக்கு வேண்டிய பொருட்கள் உற்பத்தி ஆகியிருக்காது, வியாபாரம் செய்து பொருள் ஈட்டியிருக்க முடியாது. க்ஷத்திரியர்களுக்கும் வீரர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். மேலும், சரவணபெலகோலாவில் மற்ற இடங்களில் ஜைன சிற்பங்கள், கோவில்கள் செதுக்க-கட்ட தேவைப்பட்ட சிற்பிகள், வேலையாட்கள் முதலியோர் ஜைனர்களாக இல்லை என்றதால், அவர்கள் இந்துக்கள் தான். ஆக, ஜைனர்கள் தாம், அத்தகையப் பிரிவினரை தங்களது மூன்று பிரிவிகளுக்கு கீழாக வைத்து பாவித்திருக்க வேண்டும். தம்மிடம் இருந்த பணபலத்தினால், வேலையை வாங்கியிருக்கிறார்கள்.

Periyar-adigal-changed hue

ஜைனர்கள் விசயத்தில் அடிகளுக்கும், ஈவேரா தொண்டர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவு: 22—07-1928 அன்று மறைமலை அடிகள் ராமசாமி நாயக்கர் மற்றும் சுயமையாதை இயக்கத்தினரின் நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினார். அப்பொழுது, என். தண்டபாணி பிள்ளை மற்றும் ஜே.எஸ். கண்ணப்பன், திருஞான சம்பந்தரால்,   ஜைனர்கள் கழுவேற்றப் பட்டதைக் குறிப்பிட்டு கேள்விகள் கேட்டார்கள்.  அடிகள், அவையெல்லாம் கட்டுக் கதை என்றும், உண்மை இல்லை என்றும் விளக்கினார். ஆனால், அவர்கள் ஏற்காமல், மேல்-மேல் கேள்வி கொண்டு கலாட்டா செய்தனர். இதனால், அவையில் சச்சரவு ஏற்பட்டது. ஆனால், குடி-அரசில் மாறுபட்ட விவரங்களை வெளியிட்டனர். அடிகள் அரங்கத்தில் உள்ளவர்களைத் தூண்டி கொலை செய்ய முயன்றார் என்ற ரீதியில் எழுதப்பட்டது. அடிகள் தரப்பில், “திராவிட பொய்மை நடந்த வண்ணம் உரைத்தல்” என்று சிறு சுற்றும் தயாரிக்கப் பட்டு விநியோகிக்கப் பட்டது[1]. அடிகள் 1950ல் தான் காலமானார். ஆனால், அதுவரை அவர் ஈவேராவின் பிள்ளையார் உடைப்பு முதலியவற்றை எதிர்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

Vellalar, Kaundar etc

சூத்திரர்வேளாளர் பற்றி 19-20 நூற்றாண்டுகளின் நிலை: களப்பிரர்-ஜைன காலத்தில், தமிழகத்தில் நடந்த கொடுமைகள், திரிபுகள், சமூக சீரழிவுகள் முதலியவற்றை முறைப்படி ஆராய்ச்சி செய்யாமலும், ஆவணப் படுத்தாமலும் தமிழக ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். சங்க இலக்கியங்களில் காணப்படும் “வேளிர்,” தொல்காப்பிய “வேளாண்” முதலியவற்றை வைத்துக் கொண்டு, இணைப்பதற்கு சில ஆராய்ச்சியாளர் முயன்றுள்ளனர்[2]. வைணவர்களுக்கும், ஜைனர்களுக்கும் ஏன் மோதல்கள் ஏற்படவில்லை என்று தெரியவில்லை. சைவர்களுக்கும் ஜைனர்களுக்கும் மோதல் ஏற்பட காரணம் என்ன? இதை மதரீதியில் நோக்க முடியுமா? ஆதாரங்கள் என்ன? களப்பிரர் காலத்திலுருந்து தொடர்வதும் திகைப்படைய செய்கிறது.  விவசாயம், உழவு விசயத்தில் சைவ வேளாளர்களுக்கும், ஜைன அஹிம்சா வாதிகளுக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. தொல்காப்பிய வேளாண் மாந்தர் சூத்திரர் ஆக முடியாது, அதேபோல, மறைமலை அடிகளின் சூத்திரரும், இவர்களும் ஒன்றா என்றும் சொல்லமுடியாது. வேளாளர், வியாபாரம் செய்வதற்காக, தம்மிலிருந்தே, வைசியரை உண்டாக்கினர் என்று மறைமலை அடிகள் சொல்வது ஏற்புடையாதாக இல்லை[3]. அவர் சூத்திரர்களையும் வேளாளர் கூட்டத்தில் இணைக்கிறார்[4]. தமிழகத்தில் “வர்ணாஷ்ரமத்தைத்” தோற்றுவித்து அதை நடைமுறைப் படுத்தியவர்கள் தமிழர்களான வேளாளர்களே என்று முடிவுக்கு வருகிறார் அவர். கீழ்கண்ட, 18 பிரிவுகளையும் வேளாளர் என்றதில் சேர்த்தார்.

1.       கைக்கோளர்,

2.       தச்சர்,

3.       கொல்லர்,

4.       கம்மாளர்,

5.       தட்டார்,

6.       கன்னார்,

7.       செக்கார்,

8.      மருத்துவர்,

9.       குயவர்,

10.   வண்ணார்,

11.    துன்னர்,

12.    ஓவியர்,

13.    பாணர்,

14.    கூத்தர்,

15.    நாவிதர்,

16.    சங்கறுப்பார்,

17.    பாகர்,

18.   பறையர்

Vel, velir, velan, velala, vellala etc

வேளாளர் உயர்ஜாதியாக்க முனைந்த திட்டத்தில் என்ன உள்ளது?: ஈவேராவோ, வேளாளரை சூத்திரர் என்றே குறிப்பிடுகிறார்[5]. வேளாளர்-ஜைன மோதல்கள் தான், சைவ-ஜைன மோதல்களாக மாறின. இதை மறைக்க வேளாளர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள உருவான திட்டம் தான், பிராமண எதிர்ப்பு. இதை ஆரம்பித்தவர்கள் பெரும்பாலோர் உயர்ஜாதிக்காரர்கள் – முதலியார், செட்டியார், பிள்ளை, ரெட்டி, என்று தான் இருந்தனர். பதவிகள் பெற்று செல்வம் சம்பாதித்து, மேம்பட்டனர். ஆனால், கீழ்ஜாதியினரோ இன்றும் அப்படியே அல்லது இன்னும் கீழே போக நேர்ந்தது. பிராமணர் இப்போராட்டங்களில் இல்லை மற்றும் ஒதுங்கி விட்ட நிலையில், தாக்குதல்களுக்கு ஆளானவர்கள், கீழ் ஜாதியினர் தான். சில குடிகள் தங்களை சூத்திரர் என்று சொல்லிக் கொண்டு பலன்களைப் பெற முயன்றன. சிலர் மறுத்து தாங்கள் உயர்ந்தவர் என்று காட்டிக் கொள்ள முயன்றனர். சில ஜாதியினர் பிற்பட்டவர் BC, எஸ்.சி SC, எஸ்.டி ST, என்றிருந்தாலும், பிற்பட்டவர்களில் சிலர் மிகவும் பிற்பட்டவர் என்று சொல்லிக் கொண்டு, இடவொதிக்கீடு கேட்டுப் போராடினர், எம்.பி.சி – MBC, என்ற தகுதியைப் பெற்றனர். ஆனால் எஸ்.சி SC, எஸ்.டி ST சமூகத்தவர், மிகவும் போன்ற MSC, MST – நிலையைக் கேட்கவில்லை.

© வேதபிரகாஷ்

16-06-2019

thiruvika- between adigal and evr

[1] ஆனால், இப்பொழுது, இவ்விவரங்கள், ஆவணங்கள் முதலியவை மறைக்கப் படுகின்றன. பொது மக்கள் உண்மை அறிய வேண்டும் என்றால், இவ்விவரங்கள் தெரியப்படுத்த வேண்டும்.

[2]  எஸ். ராமச்சந்திரன், http://www.sishri.org/velaalar1.html, http://www.sishri.org/velaalar2.html ஏழு கட்டுரைகளையும் இங்கு வரிசையாக வாசிக்கலாம்.

[3]  மலர்மன்னன்,  திராவிட இயக்கம்: புனைவும், உண்மையும், கிழக்குப் பதிப்பகம், சென்னை,

[4] V. Ravi Vaithees, Religion, Caste and Nation in South India, Maraimalai Adigal, the Neo-Saivite Movement and Tamil Nationalism, 1876-1950, Oxford University Press, 2015.

[5] பசு.கவுதமன், .வெ.ராமசாமி என்கிற நான், பாரதி புத்தகலயம், 2009.

சூத்திரம், சூத்திரர் – திருமறை கொடுக்கும் விளக்கம், நிலை முதலியன

ஜூன் 19, 2019

சூத்திரம், சூத்திரர்திருமறை கொடுக்கும் விளக்கம், நிலை முதலியன

Sudra as per Nikandus-1

சூத்திரர், வேளாளர் என்ற பொருள், பெரியபுராணத்தில் வருகிறது: “தேவாரம்” என்ற இணைதளத்திலிருந்து, இவற்றை “காப்பி-பேஸ்ட்” செய்துள்ளேன்[1]. இங்கு உபயோகித்துக் கொள்வது, ஆராய்ச்சிற்காகத் தான்.

அம்பொன் நீடிய அம்ப

லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்

தம்பி ரானடி மைத்தி றத்துயர்

சால்பின் மேன்மைத ரித்துளார்

நம்பு வாய்மையில் நீடு சூத்திர

நற்கு லஞ்செய்த வத்தினால்

இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை

யான்கு டிப்பதி மாறனார். [பெரியபுராணம், இளையான்குடி மாறனார் புராணம், 12.4]

வேளாண்குலத்தைச் சூத்திரர் என்னும் பெயரால் குறிக்கின்றார் ஆசிரியர். “சூத்ரா சுத்த குலோ தீபவா” என்பது சிவாகமம், இதனால் இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர் என்பது பெறுதும். இதுபற்றியே “சூத்திர நற்குலம்” என்றார் ஆசிரியர். இவ்வாறு ஈண்டுக் கூறிய தோடன்றி, வாயிலார் புராணத்தும் அவ்வடியவர் தோன்றிய இவ்வேளாண்குலத்தைத் “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” (தி.12 பு.51 பா.6) எனக் குறிப்பர். இதுவன்றி இச்சொற்குப் பிறவாறு உரைப்பன வெல்லாம் ஆசிரியருக்குக் கருத்தன்று. இனிச் சூத்திரர் என்பதற்கு ஆட்டுவிப்பவர் எனப் பொருள் கொண்டு, இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர் எனக் கூறலும் பொருந்துவ தாகும்.

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்

நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்

தன்மை வாயிலார் என்னுந் தபோதனர். [திருத்தொண்டர் புராணம், பகுதி.9, செய்யுள்.4084]

பொழிப்புரை: நிலை பெற்ற சிறப்புடைய திருமயிலாபுரி என்னும் பெருநகரத்தில், இத்தகைய பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது, நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை அடையுமாறு, உயர்ந்த சீலமும் புண்ணியமும் உடைய வாயிலார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார்.

குறிப்புரை : சூத்திரர் என்பது பற்றி முன் 440ஆவது பாடலில் கூறப்பட்டதை ஈண்டும் கடைப்பிடிக்க.

Mylapore Peacock sculpture-1

ஆக, “சூத்திரர்” என்றால், கீழ் கண்ட பொருள் பெறப்படுகிறது:

  1. “சூத்ரா சுத்த குலோ தீபவா” என்பது சிவாகமம், இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர்.
  2. “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” எனும்போது, சூத்திரர் என்ற குலம், மிக்கத் தொன்மை வாய்ந்தது, நீண்டகாலமாக இருக்கிறது.
  3. சூத்திரர் என்றால் ஆட்டுவிப்பவர் எனப் பொருள் கொண்டு, இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர்.

 

அந்த “சூத்ர = பூமி” ஒப்பீடும் இங்கு பொறுந்துகிறது. எனவே, தேவார சூத்திரர்கள், “சூத்ரர்” இல்லை. அத்தகைய பிரயோகம் நிகண்டுகள் காலத்தில் உண்டானது என்று தெரிகிறது.

Sudra as per Nikandus-2

நிகண்டுகளின் படி, சூத்திரன், சூத்திரர்வார்த்தை பிரயோகம்: இத்தகைய வார்த்தை பிரயோகம் எங்கு ஆரம்பித்தது என்று பார்த்தால், நிகண்டுகளில் தான் ஆரம்பிக்கின்றது என்று தெரிகிறது. நிகண்டுகளைத் தொகுத்தவர் ஜைனர்கள் என்பதால் அவர்களது தாக்கம் அதில் தெரிகிறது. நிச்சயமாக நிகண்டுகளைத் தொகுத்தவர்கள் பாடுபட்டுத்தான் திரட்டித் தொகுத்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கும் எப்படி சமஸ்கிருதத்தில் உள்ள வர்க்க பேதம் தெரியவில்லை என்பது வியப்பாக உள்ளது.

வேளாளர் .எண்.127

மண்மகள் புதல்வர், வாய்ந்த, வளமையா, களமா என்றும்.

உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர், மேழியர்,வே ளாளர்

திண்மைகொள் ஏரின் வாழ்நர் காராளர், வினைஞர் செம்மை

நண்ணுயின் னவர்பன் னொன்று. நவின்றசூத் திரர்தம் பேரே

மண்மகள் புதல்வர், வாய்ந்த

வளமையர், களமர் என்றும்

உண்மைசால் சதுர்த்தர் மாறா

உழவர், மேழியர், வேளாளர்,

திண்மைகொள் ஏரின் வாழ்நர்

காராளர், வினைஞர், செம்மை

நண்ணுபின் னவர்பன் னொன்று

நவின் றசூத் திரர் தம் பேரே

Maraimalai Adigal , EVR misinterpretation sudra

 

பே. பொ. விளக்கம்: சூத்திரர்-சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு, உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன். இங்கு “சூத்திரர்-சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு” என்ற விளக்கம், பின்னணியை எடுத்துக் காட்டுகிறது. அதாவது “சூத்திரம்” என்பதனை “சூத்திரர்” என்றதுடன் இணைக்க அத்தகைய விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.

வளமையர்-நிலவளம் உடையவர்

களமர்-உழவுக்களத்தில் உழைப்போர்

துர்த்தர்-நான்காம் வருணத்தர்

மேழியர்-ஏர் பிடிப்பவர்

வேளாளர்-வேள்-மண்) மண்ணைவளப்படுத்தி ஆள்பவர்

ஏரின் வாழ்நர்-ஏர்த்தொழிலால் வாழ்பவர்

காராளர்-மழையால் பயன் விளைப்போர்

வினைஞர்-தொழில் புரிவோர்

பின்னவர்-பின்குலத்தவர்

செம்மை நண்ணு பின்னவர்-செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர்

ஒப்பீடு [நிகண்டுகளில் சூத்திரர் பிரயோகம்]
சூடாமணி-12 பிங்கலம்-780 கயாதரம்-97 நாமதீபம்-152
சூத்திரர் 1-1 சூத்திரர் 1-13 சூத்திரர் 9 சூத்திரன் 14
மண்மகள்புதல்வர் மண்மகள்புதல்வர் மண்புதல்வர் பூபாலன்

திருமறைசூத்திரர்,” திராவிடசூத்திரன்இல்லை: தேவாரத்தில் வரும் சூத்திரர், சூத்திரத்துடன் தொடர்பு கொண்டவர். அதாவது சூத்திரம் வேதங்களுடன் தொடர்பு கொண்டது. வேதங்களை மதிக்கின்றவர். அதனால், அவர்கள் நம்பிக்கையாளர்கள், நாத்திகர் அல்ல. ஆனால், திராவிட சித்தாந்திகள், திராவிடத்துவ வாதிகள், சூத்திரன்களை பலவாறு குறிப்பிட்டு, இழிவாக சித்தரித்து வருகின்றனர். ஆகவே, அத்தகைய மோசமான-திரிபு விளக்கம் தேவார சூத்திரர்களுக்கு சம்பந்தம் இல்லை.

Ayodhi Das confused about the terinology of Brahmin, Shudra etc

விகிபீடியா விளக்கம்: ஆனால், விகிபீடியா, இவ்வாறு, விளக்கம் கொடுக்கிறது, “சூத்திரர் என்போர் குலப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட இந்து சமயக் கோட்பாட்டின்படி கடைநிலை ஊழியர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் பணிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர், சத்திரியர் (அரசகுடியினர்), மற்றும் வணிகர் ஆகிய மூன்று பிரிவினரைவிட தாழ்ந்தவர்கள் என அறிவித்து மற்ற பிரிவினருக்குப் பணி செய்வதையே இவர்களது கடமை என்ற முறையை பின்பற்றினர்”, இது தவறாகும். ஏனெனில், மேற்குறிப்பிட்ட மூலங்களை விடுத்து, தானாகவே வலிய பொருள் கொண்டு, அவற்றை கூறும் போக்கு வெளிப்படுகிறது. உண்மையான ஆராய்ச்சியாளன் என்றால், மூலங்களில் இருக்கின்ற எல்லாவற்றையும் எடுத்து, தொகுத்து, புரிந்து, பிறகு, விளக்கம் கொடுக்கவேண்டும்.

© வேதபிரகாஷ்

15-06-2019

Mylapore Peacock sculpture-2

[1] http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12

சூத்ர (शूद्र), சூத்ரா (शूद्राः), சூத்திரர்: சமஸ்கிருதம்-தமிழ் தெரியாமல் வளர்த்த பொய்மை திரிபு விளக்கம்!

ஜூன் 19, 2019

சூத்ர (शूद्र), சூத்ரா (शूद्राः), சூத்திரர்: சமஸ்கிருதம்தமிழ் தெரியாமல் வளர்த்த பொய்மை திரிபு விளக்கம்!

Sudra, Shudra, Cuttiran - explanation- Vedaprakash

சூத்ர [शूद्र] வார்த்தை, அலசல்: சமஸ்கிருதத்தில், சூத்ர [शूद्र] சொல் உள்ளது உண்மை.

சூத்ர [शूद्र] என்பது தமிழில், சூத்ரா என்று குறிப்பிட்டு, பிறகு அது சூத்திரர் ஆகியது. இது மிகத்தவறானதாகும். ஆனால், தொடர்கிறது.

தமிழில் “த” மற்றும் “ச” எழுத்திற்கு, மற்ற மொழிகளைப் போன்று நான்கு வர்க்கங்கள் இல்லை. அதனால், त, थ, द, ध  என்றவற்றை “த” என்றே குறிப்பிடப் படுகிறது. “ச”வும் च, छ, ज, झ என்றில்லாமல், ஒரே மாதிரி உபயோகப் படுகிறது. தமிழ் மற்றும் சமஸ்கிருத உயிர்-மெய் எழுத்துகள் கொடுக்கப் பட்டுள்ளன, அவற்றில் க, ச, ட, த, ப எழுத்துகளுக்கு வர்க்கங்கள் இல்லாததைக் கவனிக்கலாம்

உயிர்மெய் சமஸ்கிருதம்
க, ங, ச, ஞ, ட,

ண, த, ந, ப, ம, ய

ர, ல, வ,

ழ, ள, ற, ன

क, ख, ग, घ, ङ

च, छ, ज, झ, ञ

ट, ठ, ड, ढ, ण

त, थ, द, ध, न

प, फ, ब, भ, म

य, र, ल, व,

श, ष, स, ह

இதனால் தான், இப்பிரச்சினை உருவானதா அல்லது வேண்டுமென்றே, அத்தகைய விளக்கம் கொடுக்கப் பட்டதா என்று ஆராயலாம்.

தமிழ்-தமிழ் என்று கூப்பாடு போட்டு, உணர்ச்சி தூண்டி பேசி, கத்தி, பிரச்சாரம் செய்தாலும், தமிழை ஒழுங்காக, தொல்காப்பியர் போதித்த இலக்கணத்தையும் மறந்து தான், இவ்வாறு எழுதி-பேசி, “சுத்திரர்களை” உண்டாக்கியுள்ளார்கள் போலும்.

Sudra, Shudra, Cuttiran - explanation- Vedaprakash-2

 சூத்ர [शूद्र] = சூத்ரா =“சூத்திரர்” என்றாகி, அது இழிசொல்லாக கருதப் பட்டது. போதா குறைக்கு அந்த பிழையானதற்கு திரிபு வுளக்கம் கொடுக்கப்பட்டது.

சூத்ர [शूद्र] ஒருமை என்றால், பன்மை சூத்ரர் [शूद्राः  [சமஸ்கிருதம்]/ शूद्रों [இந்தி]] என்றுதான் வரவேண்டும். ஆனால், அதை “சூத்திரர்” என்று குறிப்பிட்டதும் மிகத் தவறாகும்.

பிறகு ரிக்வேதத்தில் [10:90] வருகின்ற புருஷஸுக்தம் [पुरुषसूक्तम्] என்ற சுலோகத்தில் வரும் கீழ் கண்ட வரியை வைத்துக் கொண்டு, திரிபுவாதம் தொடங்கியது:

राजन्य: कृत: ब्राह्मणोऽस्य मुखामासीद्वाहू। ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत॥१३॥

இதே வரி, சுக்ல யஜுர்வேத சம்ஹிதை 30.1-16; அதர்வ வேத சம்ஹித 19.6 முதலியவற்றிலும் காணலாம்.

அவரது முகம் பிராமணன் ஆயிற்று .

கைகள் சத்ரியன் ஆயிற்று .

தொடைகள் வைசியன் ஆயிற்று .

அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்.

13வது வரி, இப்படி இருக்கிறது என்றால், 15வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்றுள்ளது [9]

ஆகவே சூத்ர [शूद्र] என்றது கெட்ட வார்த்தை இல்லை, சமஸ்கிருதம் தெரியாமல், தமிழும் அறியாமல், உளறிய பொய்மை-திரிபு விளக்கம் இது.

Purusha Suktam cosmogony appreciated by Ambedkar

சூத்ரரும், பூமியும் ஒன்றா?: பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்…“……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின, அதாவது, கால்களிலிருந்து சூத்திரன் மற்றும் பூமியும் தோன்றின என்றால், சூத்திரனும், பூமியும் சகோதரர்கள். மற்ற எல்லோரும், இவர்கள் இல்லாமல் இல்லை என்றாகிறாது. ஆக இதெல்லாம் ஒரு உருவகம் என்றாகிறது. மேலே குறிப்பிட்டபடி, “15வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்றுள்ளது” என்பதற்கு ஏற்ப, பூமியுடன், நிலத்துடன், மண்ணுடம் தொடர்பு படுத்தப் பட்டனர்.

Caturvarna, Ambedkar object to 11 and 12

புருஷ ஸுக்தம் முழுமையாகக் கொடுக்கப்படுகிறது: வேடிக்கை என்னவென்றால், படித்தவர்கள் கூட சூத்திரர் என்றதற்கு, ஏதோ ஏற்புடைய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு விளக்கம் கொடுக்கிறார்கள். வசதிற்காகவும், ஆராய்ச்சிற்கு உதவியாகவும், “புருஷ சுக்தம்” முழுவதும் – 25 சுலோகங்கள், கீழே கொடுக்கப்படுகிறது:

सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात्। स भूमिं विश्वतो वृत्वात्यतिष्ठद्दशांगुलमं॥१

पुरुष एवेदम् यत् भूतम् यच्च भव्यम्। उतामृतत्वस्येशानो यदह्नेना तिरोहति॥२

एतावानस्य महिमातो ज्यायांश्च पूरुषः। पादोऽस्य विश्वा भूतानि त्रिपादस्यामृतं दिवि॥३॥

त्रिपादूर्द्ध्वः उदैत् पुरुषः पादोस्येहा पुनः। ततो विष्वं व्यक्रामच्छाशनान शने अभि॥४

तस्मात् विराडजायत विराजो अधिपूरुषः। सहातो अत्यरिच्यत पश्चात् भूमिमथॊ पुरः॥५

यत् पुरुषेण् हविषा देवा यज्ञमतन्वत। वसन्तो अस्या सीदाज्यम् ग्रीष्म इद्ध्म शरधवि॥६

सप्तास्यासन्परिधयस्त्रिः सप्त समिधः कृताः। देवा यद्यज्ञं तन्वाना अबध्नन्पुरुषं पशुं॥७॥

तं यज्ञं बर्हिषि प्रौक्षन्पुरुषं जातमग्रतः। तेन देवा अयजन्त साध्या ऋषयश्च ये॥८॥

तस्माद्यज्ञात्सर्वहुतः संभृतं पृषदाज्यं। पशून्तांश्चक्रे वायव्यानारण्यान्ग्राम्याश्च ये॥९॥

तस्माद्यज्ञात्सर्वहुत ऋचः सामानि जज्ञिरे। छंदांसि जज्ञिरे तस्माद्यजुस्तस्मादजायत॥१०॥

तस्मादश्वा अजायंत ये के चोभयादतः। गावो ह जज्ञिरे तस्मात्तस्माज्जाता अजावयः॥११॥

यत्पुरुषं व्यदधुः कतिधा व्यकल्पयन्। मुखं किमस्य कौ बाहू का उरू पादा उच्येते॥१२॥

राजन्य: कृत: ब्राह्मणोऽस्य मुखामासीद्वाहू। ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत॥१३॥

चंद्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत। मुखादिंद्रश्चाग्निश्च प्राणाद्वायुरजायत॥१४॥

नाभ्या आसीदंतरिक्षं शीर्ष्णो द्यौः समवर्तत। पद्भ्यां भूमिर्दिशः श्रोत्रात्तथा लोकाँ अकल्पयन्॥१५॥

वेदाहमेतम् पुरुषम् महान्तम् आदित्यवर्णम् तमसस्तु पारे। सर्वाणि रूपाणि विजित्य धीरो नामानि कृत्वा भिवदन्यदास्ते॥१६

धाता पुरस्ताद्यमुदाजहार शक्रफ्प्रविद्वान् प्रतिशश्चतस्र। तमेवम् विद्वान् अमृत इह भवति नान्यफ्पन्धा अयनाय विद्यते॥१७

यज्ञेन यज्ञमयजंत देवास्तानि धर्माणि प्रथमान्यासन्। ते ह नाकं महिमानः सचंत यत्र पूर्वे साध्याः संति देवा:॥१८॥

இதன் பொருளை பல இணைதளங்கள் தமிழில் வெளியிட்டுள்ளதால், மறுபடியும் அது இங்கு கொடுக்கப்படவில்லை. இது, அண்ட-பேரண்ட, உயிரினங்கள் தோன்றுவது பற்றி உருவகமாக விவரிக்கப் படுகின்ற கவிதையாலும். அதனால், உண்மையிலேயே, அவ்வாறுதான் நிகழ்ந்தன என்பதாகாது. இங்கு நான்கு பிரிவினர் உருவானது, அவற்றின் பெயர், குறிப்பாக “சூத்ர” என்பது தான் முக்கியம். ஏனெனில், அதை வைத்துதான், சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Purusha Suktam cosmogony appreciated by Ambedkar object to 11 and 12

நான்கு வகை அரசு உத்தியோகங்கள்: அம்பேத்கர், இவ்வரிகளைக் குறிப்பிட்டு, அதிலுள்ள பேரண்டவியல் [Cosomogony] வர்ணனையைப் பாராட்டுகிறார். ஆனால், வரிகள் 11 மற்றும் 12 மீது சந்தேகம் கொள்கிறார், ஏனெனில், அதிதான், மனிதர்களைப் பிரிக்கும் மனப்பாங்கு நுழைந்து, சூத்ரரை கீழ் வைக்கிறது என்கிறார். இதற்கு ஆபதஸ்ம்ப[1], வசிஸ்ட[2] தர்ம சூத்திர வரிகளை ஆதாரம் காட்டுகிறார். பிறகு மனுவும் அதையே குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறார்[3]. ஆகவே, வேதகாலத்தில் இருந்த சமத்துவம் எப்படி பிரிக்கப் படுகிறது என்று நோக்கும் போது, அதனை, பின்வந்தவர்கள் செய்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அங்குதான், ஜைன-பௌத்த இடைசெருகல்கள் வேலை செய்தனவா என்று ஆராய வேண்டியுள்ளது. இன்று கூட, அரசு வேலைகளில் Class – I, II, II, IV என்றெல்லாம் உள்ளது. அதனால், அப்பிரிவுகள் எல்லாம் அடக்கி ஆள்வது, ஆதிக்கச் சாதித்துவம், ….கொண்டது என்றெல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது. படித்து பரீட்சையில் அதிக மார்க்குகள் வாங்கினால், Class – IV கூட Class – I ஆகலாம், அதில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால், Class – IV நேரிடையாக, Class – I  அறைக்குச் சென்று, நான் இந்த ஜாதி, அதனால், நான் இங்கே உட்காருவேன் என்று அடம் பிடிக்க முடியாது, உரிமை கோர முடியாது. இதனை அம்பேத்கரும் எதிர்க்கவில்லை. இங்கு “புருஷன்” என்று ஒரு பேரண்டவியல் [Cosomogony] ரீதியில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. அதிலிருந்து, அண்டங்கள், உயிரினங்கள் முதலியவை தோன்றியதை விளக்குகிறது.

© வேதபிரகாஷ்

14-06-2019

[1] Prasna, PatalaI, Khanda I, Sutra. 4.5.

[2] Prasna, PatalaI, Khanda I, Sutra. 6.

[3]  Manu Smruti, Chapter.X, verse.4

சூத்ர, சூத்திரன் – வார்த்தைகளுக்கு அகராதிகள், மனு ஸ்ம்ருதி  கொடுக்கும் அர்த்தம், விளக்கம் முதலியன!

ஜூன் 18, 2019

சூத்ர, சூத்திரன்வார்த்தைகளுக்கு அகராதிகள், மனு ஸ்ம்ருதி  கொடுக்கும் அர்த்தம், விளக்கம் முதலியன!

Sudra as per Nikandus

அகராதிகளில்சூத்திரன்என்ற சொல்லுக்கு கொடுக்கும் விளக்கம்: எல்லாவிதமான அகராதிகளில் கொடுத்துள்ள பொருல், விளக்கம் முதலியவற்றாஇத் தொகுத்து, கீழே கொடுக்கப் படுகிறது[1]:

  1. சதுர அகராதி, தொகை அகராதி முதலியவற்றிலும், “சூத்திரன்” என்ற வார்த்தை இல்லை.
  2. இசையினி தமிழ் அகராதியில், சூத்திரன் என்றால், நான்காவது ஜாதி, பிரம்மாவின் கால்களில் இருந்து உண்டானான் என்றுள்ளது[2].
  3. சூத்திரன் என்றால், முப்புரி நூல் அணிந்தவன் என்றும் சொல்கிறது[3].
  4. தச்சன், நான்காம் வருணத்தோன் என்றெல்லா குறிப்பிட்டு, பிறகு புஷ்பராகம், வைடூரியம் என்றெல்லாம் பொருள் சேர்க்கிறது[4].
  5. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, இவை எல்லாவற்றையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளது.
  6. ஜே.பி.ஃபேப்ரிசியஸ் அகராதியில், “ (fem. சூத்திரச்சி, pl. சூத்தி ரர், com. சூத்திராள்) a Sudra, a member of the 4th caste. சூத்திரசாதி, the Sudra caste, ” என்றெல்லாம் உள்ளது.
  7. மிரான் வின்ஸ்லோ அகராதியில், “cūttirṉ The topaz, புஷ்பராகம். 2. The cat’s eye, a precious stone, வைடூரியம். (M. Dic.) cūttirṉ s. (plu. சூத்திரர்.) The last of the fourfold divisions of castes, the servile tribe, said to have sprung from the feet of Brahma. See சாதி W. p. 854. SUDRA. சூத்திரநாகம், s. One of the four high castes of the நாகம், snakes. See நாகம். சூத்திரநாபி, s. An antidote for the poison of வச்சநாபி. See நாபி. சூத்திரச்சி–சூத்திரிச்சி, s. A female of the Sudra caste, நான்காம்வருணப்பெண். (c.) சூத்திரர்தொழில்-சூத்திரவிருத்தி, s. The duties of the servile castes. See தொழில். சூத்திரன், s. (plu.) People of the fourth caste, சூத்திரர். Colloq.)”

இதிலிருந்து, தொகுத்தவர்கள், இப்பாடத்தைப் பற்றி, முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும், அவரவர் இம்முயற்சியை மேற்கோண்ட போது, என்ன அறிந்தார்களோ [மற்றவர் மூலம்] அவற்றையெல்லாம் தொகுத்து எழுதி, பதிப்பித்துள்ளார்கள் என்று தெரிகிறது. “சூத்திரன்” சொல்லுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருளை கவனித்தால், உயர்ந்தநிஐயிலிருந்து, தாழ்ந்த நிலைவரை குறிப்பிட்டுள்ளது தெரிகிறது. மேலும், “முப்புரிநூல் அணிந்தவன்” என்பது விசித்திரமாக உள்ளது. அதாவது, ஒரு காலம் வரை சூத்திரர் பூணூல் பொட்டுக் கொண்டிருந்தனர் என்று தெரிகிறது. ஒருவேளை ஆங்கிலேயர் ஆண்ட காலத்திலும் அப்பழக்கம் இருந்திருக்கிறது. பிறகு, ஏனில்லை என்ற கேள்வி எழுகின்றது. எப்படியாகிலும், அச்சொல் இழிவாகக் கருதப் படவில்லை.

EVR and Sudra

சூத்ரர் – Sudra / Shudra ஜாதியா Caste or அல்லது குலமா tribe?: ஆங்கிலேயர் தமது எழுத்துகளில் Sudra caste சூத்திரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர் கேஸ்ட் [Caste] அதாவது ஜாதி அல்லது குடி [tribe] என்ற வார்த்தைகள் குழப்பத்துடன் அல்லது வேண்டுமென்றே குழப்பவே அவ்வாறு உபயோகித்தனர் என்று தெரிகிறது. சூத்திரர்கள் பூசாரிகளாகவும் இருந்திருக்கின்றனர்[5]. எவ்வாறு பல குலத்தவர் தாங்கள் சூத்திரர்கள் அது சூத்திரர் அல்ல என்று கூறிக்கொண்டார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது[6]. மேலும் சுத்தமான தூய்மையான சூத்திரர்கள் [Pure Shudras] என்று சொல்லிக்கொள்ளும் குழுக்களும் இருந்தது தெரிகிறது[7]. இது உள்ள குறிப்புகளின் படி பார்த்தால் இந்நிலை 19 ஆம் நூற்றாண்டில் வரை இருந்திருப்பது தெரிகிறது.

EVR and Sudra, paraiyan

சூத்ரன், சூத்திரன் ஆக்கி, கெட்டப்பெயர் கொண்டு மற்றும் மோசமான பொருள் கொடுப்பதேன்?: திராவிட, திராவிட சித்தாந்த, திராவிடத்துவ, நாத்திக, இந்துவிரோத சிந்தனையாளர்கள், இவ்வார்த்தையை “சூத்திரன்” என்று குறிப்பிட்டு, இழிந்தவன், இழிபிறப்பாளன், வேசி மகன், தேவிடியா பையன், ….என்ற வரைக்கும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். இதற்கு ஈவேரா தான் காரணம்[8]. இன்றும் எழுதி-பேசி வருகிறார்கள். ஆனால், அவர்களில் யாரும் மூல சமஸ்கிருத நூல்களைப் படிக்கவில்லை, ஒழுங்காகப் படிக்கவில்லை, அல்லது அடுத்தவர் சொன்னதை வைத்து, தவறு-தவறாக எழுதி வைத்துள்ளார்கள் என்று தெரிகிறது. மனுஸ்மிருதி, புருஷ ஸுக்தம் போன்றவற்றையும் குழப்பியுள்ளனர், சுலோக எண்களையும் ஏதோ, தமது கற்பனையில் தோன்றியது போல எண்களைக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக “சூத்ர” என்ற சொல்லையே குறிப்பிடாமல், “சூத்திரன்” என்றே எழுதி-பேசி தவற்றையே, உண்மை போல வைத்துக் கொண்டு, பிரச்சார செய்துள்ளது போலவும் தெரிகிறது. இனி அவ்வாறு ஏன் நடந்தது என ஆராயலாம்.

Manu Amruti 8.415

வேசிமகன், விபச்சாரி மகன் என்பதற்கான ஆதாரமும் இல்லை: பொதுவாக இந்த திராவிடத்துவவாதிகள், மனுஸ்மிருதியில் உள்ளது என்று சொல்லி, பொய்யைத்தான் பரப்பி வருகிறார்கள். இதோ அந்த சுலோகம்[9]:

ध्वजाहृतो भक्तदासो गृहजः क्रीतदत्त्रिमौ ।

पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥ ४१५ ॥

 

dhvajāhto bhaktadāso ghaja krītadattrimau |

paitriko daṇḍadāsaśca saptaite dāsayonaya || 415 ||

There are seven kinds of slaves—

(1) captured under a banner, / he who is made a captive under a standard

(2) slave on food, /  he who serves for his daily food

(3) born in the house,

(4) bought,

(5) presented,

(6) hereditary, he who is inherited from ancestors, and

(7) slave by punishment./ he who is enslaved by way of punishment.

இதை, இப்படி, மொழிபெயர்த்துள்ளனர்:

சூத்திரன் என்றால் ஏழுவகைப்படும்.

  1. போரில் புறங்காட்டி ஓடியவன்,
  2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன்,
  3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன்,
  4. விபச்சாரி மகன்,
  5. விலைக்கு வாங்கப்பட்டவன்,
  6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்,
  7. தலைமுறைதலைமுறையாக ஊழியம் செய்பவன்.

ஆதாரம்: மனுசாஸ்திரம், அத்தியாயம் 8, ஸ்லோகம் 415

இங்கு சூத்ர என்ற வார்த்தை இல்லை, விபச்சாரி என்று பொருள்பட வரும் எந்த வார்த்தையும் இல்லை. ஆகவே, பொய் சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

வேதபிரகாஷ்

13-06-2019

Who were Sudras, Ambedkar

[1] தமிழ்ப்புலவர், https://tamilpulavar.org/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

[2] [ cūttirṉ, ] s. (plu. சூத்திரர்.) The last of the fourfold divisions of castes, the servile tribe, said to have sprung from the feet of Brahma. See சாதி W. p. 854. SUDRA.

[3] cūttiraṉ, n. < sūtra. One whowears the triple cord or the sacred thread; முப்புரிநூ லணிந்தோன். (யாழ். அக.)

[4] cūttiraṉ, n. < sūtra. Carpenter; தச்சன். (அக. நி.), cūttiraṉ, n. < šūdra. 1.Person of the fourth or lowest of the originalcastes of the Hindus; நான்காம் வருணத்தோன்.(பிங்.) 2. Topaz; புஷ்பராகம். (W.) 3. Cat’seye; வைடூரியம். (W.)

[5] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.330.

[6] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.154, 172, 303, 414, 482…..

[7] Francis Buchanan, A Journey from Madras through the countries of Mysore, Canara and Malabar, Vol.II, p.404. Vol.III, p.22, 32, 184,

[8] “வைப்பாட்டிக் கதை” ‘-குடிஅரசு’, துணைத் தலையங்கம், 05.09.1926.

http://viduthalai.periyar.org.in/20091220/news28.html

[9] Gangadhara Jha, Manu Smriti, பூலர் போன்றோரும் இதே பொருளைத்தான் கொடுத்துள்ளார்கள்.