Archive for the ‘கொடி’ Category

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும் – தேர் எரிந்ததும், மனித உடல் எரிந்ததும் – சில ஊடகங்களின் பாரபட்சம் மிக்க செய்தி வெளியீடுகள் (1)

செப்ரெம்பர் 3, 2015

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும் – தேர் எரிந்ததும், மனித உடல் எரிந்ததும் – சில ஊடகங்களின் பாரபட்சம் மிக்க செய்தி வெளியீடுகள் (1)

Police deployed in front of St. Arulanandar Church at Oriyur in Ramanathapuram district on Tuesday 01-09-2015 -Photo-L. BALACHANDAR.

Police deployed in front of St. Arulanandar Church at Oriyur in Ramanathapuram district on Tuesday 01-09-2015 -Photo-L. BALACHANDAR.

ஓரியூர் அருளானந்தர் சர்ச் – ஞாயிற்றுக்கிழமை, 30-08-2015: திருவாடானை தாலுகா ஓரியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிறப்பு திருப்பலி, மறையுரை, மாதா மன்றாட்டு நிகழ்ச்சி, நோயாளிகள் மந்திரிப்பு, பாவ சங்கீர்த்தனம் போன்றவை நடைபெறும்[1]. அதேபோல, இந்த ஆண்டும் -2015- ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் ஆரோக்கிய அன்னை திருவிழாவிற்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதட்ட நிலை ஏற்பட்டது[2]. திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை யொட்டி, 30-08-2015 அன்று இரவு 7 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என, தலித் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், நேற்று மாலை கொடியேற்ற விழாவில், தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக்கூறி, தலித் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு நடந்த சமாதான கூட்டத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு பிரச்னைகளை பேசிக்கொள்வோம் என ஆலய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தலித் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி செப்.,7 .2015 இரவில் நடைபெறும், என்று தினமலரில் செய்தி வந்தது[3]. ஆனால், திங்கட்கிழமை நிகழ்ச்சிகள் வேறுமாதிரி இருந்தன.

தேர்த்திருவிழா கலவரம் - சேஷசமுத்திரமும், ஓரியூரும்

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும்

அலுவலக உறுப்பினளர் சர்ச் அருகே தற்கொலை செய்து கொண்டார்[4](தி இந்துவின் செய்தி): திருவாடானை அருகே, ஆலய திருவிழா தொடர்பாக, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தலித் பிரமுகர், உடல் கருகி, மர்மமான முறையில் இறந்தார். இதனால், கடைகள், பள்ளிகள் மூடப்பட்டன[5]. ஓரியூரில் உள்ள அருளானந்தர் சர்ச்சை [Arulanandar Church in Oriyur] சேர்ந்தவர் சார்லஸ் [Charles (55) of Pullur] புல்லூரைச் சேர்ந்தவர். சிவகங்கை டையோசிஸைச் சேர்ந்த அந்த சர்ச்சில் இவர் வேலை செய்து வந்தார், “பங்கு பேரவையின்” உறுப்பினராகவும் இருந்தார்[6]. 31-8-2015 திங்கட்கிழமை மாலையில் சர்ச் அதிகாரத்துடன் பேச்சு நடத்தி விவாதம் ஏற்பட்டதால், தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர்[7]. மேலும் போலீஸார், சார்லஸ் தன்னை எரித்துக் கொண்ட அதே இடத்தில் இறந்து விட்டதாகவும், அவரது கருகிய உடலை போஸ்ட் மார்ட்டம் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததனர், என்று கூறுகின்றனர்[8]. 29-08-2015 சனிக்கிழமை அன்று நடந்த பேச்சு வார்த்தையில் சார்லஸ் தலைமையில் கொடியேற்றம் செய்யப்பட்டு, விழா நடத்த முடியாது என்று சர்ச்-அதிகாரம் கூறிவிட்டது. அதனால், திங்கட்கிழமை தேர்த்திருவிழா நடத்தக் கூடாது என்று சார்லஸ் கேட்டுக் கொண்டார். ஆனால், சர்ச்-பாதிரியார் தேத்திருவிழாவை நடத்தியதால் அதை எதிர்த்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸார் விளக்கினர்[9]. இவ்வாறு பிரச்சினை கொலையா-தற்கொலையா என்று வெடித்தது.

சார்லஸ், லாரன்ஸ்

சார்லஸ், லாரன்ஸ்

தலித் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு – தினமலர் செய்தி: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில், ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் ஆலய திருவிழா நடத்துவது குறித்து, தங்களையும் அழைத்து பேச வேண்டும் என, தலித் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை, ஆலய நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். இது தொடர்பாக, ஒரு மாதம் முன், பாதிரியார் தலைமையில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தது. கடந்த ஆக., 29ல், ஆலய திருவிழாவிற்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது, தலித் கிறிஸ்தவர்கள், தங்களை அழைத்து பேசாததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விழா பத்து நாட்கள் நடத்துவார்கள். ஓரியூர் அருகே, புல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ், 50; தலித் கிறிஸ்தவ அமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர் தலைமையில், ‘ஆலய கொடியேற்றத்தில், நாங்களும் கலந்து கொண்டு கொடியேற்றுவோம்’ என, கூறியதால் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்த பின், பாதிரியார் கொடியேற்றினார். இந்நிலையில், நேற்று முன்தினம், புல்லுார் கிராம மக்கள் சார்பில் திருவிழா நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, தேர் பவனி நடந்தபோது, ஆலயம் அருகில், கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதியில், சார்லஸ் தீ வைத்து கொண்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அனைவரும் சென்று பார்த்தனர். தீக்காயங்களுடன், சார்லஸ் இறந்து கிடந்தார். சார்லசை கொலை செய்து, தீ வைத்து எரித்ததாக கூறி, கிராம மக்கள், நேற்று, ஓரியூர் ஆலயத்தை முற்றுகையிட்டனர். இதனால், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிகள் மூடப்பட்டன; பஸ்கள் ஓடவில்லை. பாதிரியார் மீது தாக்குதல்: ஆலயத்திற்குள் புகுந்த சிலர், கோரிக்கைகளை வலியுறுத்தி, போஸ்டர்கள் ஒட்டினர். அறைக்குள் பாதிரியார் ஒளிந்திருப்பதாக கருதிய சிலர், அவரது அறை கதவை தட்டினர். மற்றொரு அறையில் இருந்த, முன்னாள் பாதிரியார் லாரன்ஸ் கபிரியேல், 75, மீது தாக்குதல் நடத்தினர். படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் நடந்த பேச்சில், ‘சார்லஸ் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், டாக்டர் சான்றிதழ்படி, கொலை வழக்காக மாற்றி, கொலையாளிகள் கைது செய்யப்படுவர்’ என, போலீசார் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்[10].

Oriyur Christian clash - one dead under mysterious circumastances DM - Coimbatore edition

Oriyur Christian clash – one dead under mysterious circumastances DM – Coimbatore edition

© வேதபிரகாஷ்

03-09-2015


 ————————————————————————————————————————————————

[1] http://www.dailythanthi.com/News/Districts/2014/09/09015402/Oriyur-Health-Mother-born-in-Sunset-Ceremony-terpavani.vpf

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1330062

[3] தினமமலர், ஓரியூர் புனித அருளானந்தர் ஆலய விழா கொடியேற்றத்தில் பதட்டம், ஆகஸ்ட்.30.2015, 00:11.

[4] The Hindu, Office-bearer commits suicide near church, Updated: September 1, 2015 05:52 IST.

[5] தினமலர், திருவிழாவில் மோதல்; கடைகள் அடைப்பு ,செப்டம்பர்.2, 2015, 01.45.

[6] The Hindu, Office-bearer commits suicide near church, Updated: September 1, 2015 05:52 IST.

[7] An office-bearer of parish priest, attached to Arulanandar Church in Oriyur, allegedly committed self-immolation after a dispute with the church authorities in celebrating the 10-day long annual ‘Arokkiya Annai’ birth anniversary, which began with flag hoisting on August 29. Police said that Charles (55) of Pullur, who had a dispute with the church authorities over carrying of the flag for the flag-hoisting ceremony, poured kerosene on his body and committed self-immolation behind the church late Monday evening.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/officebearer-commits-suicide-near-church/article7601602.ece

[8] Police said that Charles (55) of Pullur, who had a dispute with the church authorities over carrying of the flag for the flag-hoisting ceremony, poured kerosene on his body and committed self-immolation behind the church late Monday evening. Police said that he died on the spot and his charred body was brought to the District Headquarters Hospital here for post-mortem.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/officebearer-commits-suicide-near-church/article7601602.ece

[9] After he was denied permission to carry the flag in a procession on Saturday, Charles demanded that the car festival on Monday should not be held. When the priest went ahead with the procession stating he could not stop the traditional procession, he committed self- immolation in protest, police added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/officebearer-commits-suicide-near-church/article7601602.ece

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1332344