Posts Tagged ‘பறையர்’

பெரியார் – நாயக்கரா, பலிஜா நாயுடுவா, சூத்திரரா, தெலுங்கரா, கன்னடியரா, தமிழனா, திராவிடனா, யார்?

ஜூன் 23, 2019

பெரியார் நாயக்கரா, பலிஜா நாயுடுவா, சூத்திரரா, தெலுங்கரா, கன்னடியரா, தமிழனா, திராவிடனா, யார்?

EVK Ilangovan with EVR and parents-2

திராவிட அரசியலில் சூத்திரன் உருவான நிலை: சங்க இலக்கியத்தை சரித்திரமாக கொண்டு வரலாற்றுரீதியில் புத்தகங்கள் எழுதப்பட்டன. சங்க காலத்தை, சரித்திர காலமாக உலக அறிஞர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், சங்க இலக்கியங்களில் சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை, பிராமணன் என்ற வார்த்தையும் இல்லை அதேபோல திராவிடன் என்ற சொல்லும் இல்லை, ஆனால் ஆரியர் ஆரியர் போன்ற பிரயோகங்கள் 7 இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே புலையன், இழிபிறப்பாளர் மற்றும் துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை போன்ற புறநானூற்றின் குறிப்புகளை வைத்துக் கொண்டு பார்த்தாலும், சூத்திரன் போன்ற பிரயோகம் இல்லை. சுமார் 1000 வருடங்களுக்கு பிறகு தேவாத்தில் காணப்படுகின்ற சூத்திரன், வர்ணாசிரம சூத்திரன் ஆக முடியாது அதேபோல அதிலிருந்து ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கல்வெட்டில் காணப்படும் சூத்திரர்கள், சூத்திரன் ஆக முடியாது எனவே 19-20ம் நூற்றாண்டுகளில் இவ்வார்த்தைக்கு வேண்டுமென்று விளக்கம் கொடுத்து அதனால் சூத்திரர் என்ற வார்த்தை சூத்திரன் ஆகி நான்காவது வண்ணத்துடன்  ஒப்புமை படுத்தப் பட்டது. ஒரு புதிய தவறான கருதுகோளை முன்வைத்து அரசியல் ரீதியாக அதனை உண்மையான சித்தாந்தம் போன்ற வழக்கில் ஏற்றி விட்டனர்.

EVK Ilangovan with EVR and parents

கல்வெட்டுகளில் காணப்படும்சூத்திரர்: கே. ஆர். அனுமந்தன்[1], “தமிழகத்தில் தீண்டாமை,” என்ற தனது ஆராய்ச்சியில், எவ்வாறு சூத்திரர், எஸ்.சிக்கள் முதலியோர், குறுநில மன்னர்களாக, தலைவர்கள், வீரர்களாக இருந்துள்ளனர், கோவில்களுக்கு தானம் வழங்கியிருந்தனர் என்பதையெல்லாம் சரித்திர ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[2]. ஆனால், எந்த ஆராய்ச்சியாளனும், இத்தகைய உண்மைகளை மறைப்பதால், பொய்மைகளையே உண்மை என்று நம்பிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள சோழமாதேவியில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில், “பறையனான சூத்திர ராயன்” என்ற சொற்றோடர் காணப்படுகிறது.

  • “மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்” (S.I.I. Vol. XXVI, No.241), (1203 – 1204 CE).
  • “மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்” (S.I.I. Vol. XXVI, No.243), (1202 – 1203 CE).
  • “மன்றாடி பூசகரிலரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி” (S.I.I. Vol. XXVI, No.239), (12th – 13th century CE).
  • “பறையனான சூத்திரராயன்” (S.I.I. Vol. XXVI, No.240), (12th – 13th century CE).

EVR attitude towards working caste

ஈவேராவின் ஜாதி என்ன?: ஈவேராவை கிருத்துவ மிஷினரிகள் [Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur. Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur] – அவர் சூத்ரர்களில் மேலட்டுக்கில் நாயக்கர் ஜாதியைச் சேர்ந்தவர் [He belonged to the Naicker caste the upper stratum of the Sudras[3]] மற்றும் சிலர்[4] நாயக்கர் என்றும் குறிப்பிடுகின்றனர். கன்னட பலிஜ நாயுடு வகுப்பினர், ‘நாயக்கர்’ என்பது பட்டப்பெயர். .. என்றும் குறிப்புள்ளது[5]. இவர்களை ஈவேரா (பெற்றோரை) கன்னடிடய நாயக்கர் என்றும் நாயுடுகள் என்றும் வழங்குவர்[6]. மேலும் அம்பேத்கரையும், ஈ.வே.ராமசாமி நாயக்கர் குறைகூறியுள்ளார்[7], “…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்”. அம்பேத்கருக்கு, சட்டப் படி, நிலைஎன்ன என்பது தெரியும் என்பதால் தான், எஸ்.சி, எஸ்.டி என்று குறிப்பிட்டார். ஜாதிகளை வைத்து சண்டை, சச்சரவுகள் உருவாக்க வேண்டும், அரசியல் செய்யவேண்டும் என்பது அவருடைய எண்ணம் அல்ல.

EVR, paraiyan, Gandhi, mastan

ஈவேரா பறையர்களை, மற்ற பட்டியல் ஜாதியினரை மதிக்கவில்லை: ஈவேரா தன்னை சூத்திரன் என்று சொல்லிக் கொண்டாலும், உயர் ஜாதித்துவ முறையில் தான் நடந்து கொண்டார். ஜின்னாவிடம் தோற்றார், அம்பேத்கரை விமர்சித்தார். ஆனால், அவர் “சூத்திரத்துவம்” பேசி தோல்வி கண்டார். உதாரணங்கள் சில கொடுக்கப் படுகின்றன:

  • ‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு4.1926).
  • ‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு).
  • “……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.(நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947).
  • “இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950).
  • 3.1963 ஆம் ஆண்டு “நாத்திகம்” வார இதழுக்கு ஆசிரியர் அவர்களுக்கு பகுதியில் “ஆதி திராவிடர்களும் பெரியாரும்என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார். அது வருமாறு:துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்! வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம்
    பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்.”
  • “நான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக்கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலையில்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?”[8]

EVR, not steady in any stand

1970களில் செத்து விட்ட சூத்திரன் மற்றும் காலமான பெரியார் ஈவேரா: கருணாநிதி, “சுத்திரன்” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, பார்ப்பன-எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், பெரியாரிடம் இது எடுபடவில்லை. 24 டிசம்பர் 1973 அன்று இறந்து விட்டதற்குப் பிறகு, இவ்வார்த்தை பிரயோகம் குறைந்து, மறைந்து விட்டது எனலாம். விவாத-விவாதங்களில் மட்டும் குறிப்பிடப் படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது, கருணாநிதி, சில திமுக பேச்சாளர்கள் முரசொலியில், மேடைகளில்  “பாப்பாத்தி,”  என்றும் “ஆரிய அம்மையார்” என்று எதிர்மறை வாதங்கள் மூலம், தங்களது வெறுப்பைக் காட்டியுள்ளனர்[9]. இன்று யாரும் தமிழகத்தில் “சூத்திரன்” என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அம்பேத்கர் சிலைகள் அதிகமாகும் நிலையில், பெரியாரும் பிந்தள்ளப் படுகிறார்.

வேதபிரகாஷ்

19-06-2019

Caste abolition seminar -EVR casteism-old-10-11-2018

[1] Hanumanathan, K.R., Evolution of Untouchability in Tamil Nadu A.D. up to 1600, IHR 23/1–2, 1996–1997, pp.41–65.

[2] Hanumanthan, Krishnaswamy Ranaganathan. Untouchability: A Historical Study Upto 1500 AD: with Special Reference to Tamil Nadu. Madurai: Koodal Publishers, 1979.

[3] Robertson, S. “Periyar EV Ramasami’s critique of priestly Hinduism and its implications for social reforms.” Indian Journal of Theology 45 (2003): 75-87.

[4] Anita Diehl, Periyar E. V. Ramasami: A Study of the Influence of a Personality in Contemporary South india, B. J. Publications, 54. Janpath, New Delhi, 1978, p.19.

[5] ந. சுப்புரெட்டி, தந்தை பெரியார் சிந்தனைகள், யாழ் வெளியீடு, சென்னை, 2001, ப.136.

[6]  சாமி.சிதம்பரனார், தமிழர் தலைவர், சென்னை, 1939, ப.25.

[7] விடுதலை 10-07-1947.

[8] http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=07210509&week=jul2105

[9] https://dravidianatheism2.wordpress.com/2016/04/07/karunanidhi-attacked-and-getting-attacked-on-caste-basis/

சூத்திரம், சூத்திரர் – திருமறை கொடுக்கும் விளக்கம், நிலை முதலியன

ஜூன் 19, 2019

சூத்திரம், சூத்திரர்திருமறை கொடுக்கும் விளக்கம், நிலை முதலியன

Sudra as per Nikandus-1

சூத்திரர், வேளாளர் என்ற பொருள், பெரியபுராணத்தில் வருகிறது: “தேவாரம்” என்ற இணைதளத்திலிருந்து, இவற்றை “காப்பி-பேஸ்ட்” செய்துள்ளேன்[1]. இங்கு உபயோகித்துக் கொள்வது, ஆராய்ச்சிற்காகத் தான்.

அம்பொன் நீடிய அம்ப

லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்

தம்பி ரானடி மைத்தி றத்துயர்

சால்பின் மேன்மைத ரித்துளார்

நம்பு வாய்மையில் நீடு சூத்திர

நற்கு லஞ்செய்த வத்தினால்

இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை

யான்கு டிப்பதி மாறனார். [பெரியபுராணம், இளையான்குடி மாறனார் புராணம், 12.4]

வேளாண்குலத்தைச் சூத்திரர் என்னும் பெயரால் குறிக்கின்றார் ஆசிரியர். “சூத்ரா சுத்த குலோ தீபவா” என்பது சிவாகமம், இதனால் இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர் என்பது பெறுதும். இதுபற்றியே “சூத்திர நற்குலம்” என்றார் ஆசிரியர். இவ்வாறு ஈண்டுக் கூறிய தோடன்றி, வாயிலார் புராணத்தும் அவ்வடியவர் தோன்றிய இவ்வேளாண்குலத்தைத் “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” (தி.12 பு.51 பா.6) எனக் குறிப்பர். இதுவன்றி இச்சொற்குப் பிறவாறு உரைப்பன வெல்லாம் ஆசிரியருக்குக் கருத்தன்று. இனிச் சூத்திரர் என்பதற்கு ஆட்டுவிப்பவர் எனப் பொருள் கொண்டு, இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர் எனக் கூறலும் பொருந்துவ தாகும்.

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்

தொன்மை நீடிய சூத்திரத் தொல்குலம்

நன்மை சான்ற நலம்பெறத் தோன்றினார்

தன்மை வாயிலார் என்னுந் தபோதனர். [திருத்தொண்டர் புராணம், பகுதி.9, செய்யுள்.4084]

பொழிப்புரை: நிலை பெற்ற சிறப்புடைய திருமயிலாபுரி என்னும் பெருநகரத்தில், இத்தகைய பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது, நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை அடையுமாறு, உயர்ந்த சீலமும் புண்ணியமும் உடைய வாயிலார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார்.

குறிப்புரை : சூத்திரர் என்பது பற்றி முன் 440ஆவது பாடலில் கூறப்பட்டதை ஈண்டும் கடைப்பிடிக்க.

Mylapore Peacock sculpture-1

ஆக, “சூத்திரர்” என்றால், கீழ் கண்ட பொருள் பெறப்படுகிறது:

  1. “சூத்ரா சுத்த குலோ தீபவா” என்பது சிவாகமம், இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர்.
  2. “தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்” எனும்போது, சூத்திரர் என்ற குலம், மிக்கத் தொன்மை வாய்ந்தது, நீண்டகாலமாக இருக்கிறது.
  3. சூத்திரர் என்றால் ஆட்டுவிப்பவர் எனப் பொருள் கொண்டு, இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர்.

 

அந்த “சூத்ர = பூமி” ஒப்பீடும் இங்கு பொறுந்துகிறது. எனவே, தேவார சூத்திரர்கள், “சூத்ரர்” இல்லை. அத்தகைய பிரயோகம் நிகண்டுகள் காலத்தில் உண்டானது என்று தெரிகிறது.

Sudra as per Nikandus-2

நிகண்டுகளின் படி, சூத்திரன், சூத்திரர்வார்த்தை பிரயோகம்: இத்தகைய வார்த்தை பிரயோகம் எங்கு ஆரம்பித்தது என்று பார்த்தால், நிகண்டுகளில் தான் ஆரம்பிக்கின்றது என்று தெரிகிறது. நிகண்டுகளைத் தொகுத்தவர் ஜைனர்கள் என்பதால் அவர்களது தாக்கம் அதில் தெரிகிறது. நிச்சயமாக நிகண்டுகளைத் தொகுத்தவர்கள் பாடுபட்டுத்தான் திரட்டித் தொகுத்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கும் எப்படி சமஸ்கிருதத்தில் உள்ள வர்க்க பேதம் தெரியவில்லை என்பது வியப்பாக உள்ளது.

வேளாளர் .எண்.127

மண்மகள் புதல்வர், வாய்ந்த, வளமையா, களமா என்றும்.

உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர், மேழியர்,வே ளாளர்

திண்மைகொள் ஏரின் வாழ்நர் காராளர், வினைஞர் செம்மை

நண்ணுயின் னவர்பன் னொன்று. நவின்றசூத் திரர்தம் பேரே

மண்மகள் புதல்வர், வாய்ந்த

வளமையர், களமர் என்றும்

உண்மைசால் சதுர்த்தர் மாறா

உழவர், மேழியர், வேளாளர்,

திண்மைகொள் ஏரின் வாழ்நர்

காராளர், வினைஞர், செம்மை

நண்ணுபின் னவர்பன் னொன்று

நவின் றசூத் திரர் தம் பேரே

Maraimalai Adigal , EVR misinterpretation sudra

 

பே. பொ. விளக்கம்: சூத்திரர்-சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு, உயிர்களை இயக்கும் தொழில் புரிபவன். இங்கு “சூத்திரர்-சூத்திரம் இயக்கும் இலக்கணக் கயிறு” என்ற விளக்கம், பின்னணியை எடுத்துக் காட்டுகிறது. அதாவது “சூத்திரம்” என்பதனை “சூத்திரர்” என்றதுடன் இணைக்க அத்தகைய விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.

வளமையர்-நிலவளம் உடையவர்

களமர்-உழவுக்களத்தில் உழைப்போர்

துர்த்தர்-நான்காம் வருணத்தர்

மேழியர்-ஏர் பிடிப்பவர்

வேளாளர்-வேள்-மண்) மண்ணைவளப்படுத்தி ஆள்பவர்

ஏரின் வாழ்நர்-ஏர்த்தொழிலால் வாழ்பவர்

காராளர்-மழையால் பயன் விளைப்போர்

வினைஞர்-தொழில் புரிவோர்

பின்னவர்-பின்குலத்தவர்

செம்மை நண்ணு பின்னவர்-செம்மையான வாழ்வு பொருந்திய பின்னவர்

ஒப்பீடு [நிகண்டுகளில் சூத்திரர் பிரயோகம்]
சூடாமணி-12 பிங்கலம்-780 கயாதரம்-97 நாமதீபம்-152
சூத்திரர் 1-1 சூத்திரர் 1-13 சூத்திரர் 9 சூத்திரன் 14
மண்மகள்புதல்வர் மண்மகள்புதல்வர் மண்புதல்வர் பூபாலன்

திருமறைசூத்திரர்,” திராவிடசூத்திரன்இல்லை: தேவாரத்தில் வரும் சூத்திரர், சூத்திரத்துடன் தொடர்பு கொண்டவர். அதாவது சூத்திரம் வேதங்களுடன் தொடர்பு கொண்டது. வேதங்களை மதிக்கின்றவர். அதனால், அவர்கள் நம்பிக்கையாளர்கள், நாத்திகர் அல்ல. ஆனால், திராவிட சித்தாந்திகள், திராவிடத்துவ வாதிகள், சூத்திரன்களை பலவாறு குறிப்பிட்டு, இழிவாக சித்தரித்து வருகின்றனர். ஆகவே, அத்தகைய மோசமான-திரிபு விளக்கம் தேவார சூத்திரர்களுக்கு சம்பந்தம் இல்லை.

Ayodhi Das confused about the terinology of Brahmin, Shudra etc

விகிபீடியா விளக்கம்: ஆனால், விகிபீடியா, இவ்வாறு, விளக்கம் கொடுக்கிறது, “சூத்திரர் என்போர் குலப்பிரிவை அடிப்படையாகக் கொண்ட இந்து சமயக் கோட்பாட்டின்படி கடைநிலை ஊழியர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் பணிக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர், சத்திரியர் (அரசகுடியினர்), மற்றும் வணிகர் ஆகிய மூன்று பிரிவினரைவிட தாழ்ந்தவர்கள் என அறிவித்து மற்ற பிரிவினருக்குப் பணி செய்வதையே இவர்களது கடமை என்ற முறையை பின்பற்றினர்”, இது தவறாகும். ஏனெனில், மேற்குறிப்பிட்ட மூலங்களை விடுத்து, தானாகவே வலிய பொருள் கொண்டு, அவற்றை கூறும் போக்கு வெளிப்படுகிறது. உண்மையான ஆராய்ச்சியாளன் என்றால், மூலங்களில் இருக்கின்ற எல்லாவற்றையும் எடுத்து, தொகுத்து, புரிந்து, பிறகு, விளக்கம் கொடுக்கவேண்டும்.

© வேதபிரகாஷ்

15-06-2019

Mylapore Peacock sculpture-2

[1] http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=12

சூத்ர (शूद्र), சூத்ரா (शूद्राः), சூத்திரர்: சமஸ்கிருதம்-தமிழ் தெரியாமல் வளர்த்த பொய்மை திரிபு விளக்கம்!

ஜூன் 19, 2019

சூத்ர (शूद्र), சூத்ரா (शूद्राः), சூத்திரர்: சமஸ்கிருதம்தமிழ் தெரியாமல் வளர்த்த பொய்மை திரிபு விளக்கம்!

Sudra, Shudra, Cuttiran - explanation- Vedaprakash

சூத்ர [शूद्र] வார்த்தை, அலசல்: சமஸ்கிருதத்தில், சூத்ர [शूद्र] சொல் உள்ளது உண்மை.

சூத்ர [शूद्र] என்பது தமிழில், சூத்ரா என்று குறிப்பிட்டு, பிறகு அது சூத்திரர் ஆகியது. இது மிகத்தவறானதாகும். ஆனால், தொடர்கிறது.

தமிழில் “த” மற்றும் “ச” எழுத்திற்கு, மற்ற மொழிகளைப் போன்று நான்கு வர்க்கங்கள் இல்லை. அதனால், त, थ, द, ध  என்றவற்றை “த” என்றே குறிப்பிடப் படுகிறது. “ச”வும் च, छ, ज, झ என்றில்லாமல், ஒரே மாதிரி உபயோகப் படுகிறது. தமிழ் மற்றும் சமஸ்கிருத உயிர்-மெய் எழுத்துகள் கொடுக்கப் பட்டுள்ளன, அவற்றில் க, ச, ட, த, ப எழுத்துகளுக்கு வர்க்கங்கள் இல்லாததைக் கவனிக்கலாம்

உயிர்மெய் சமஸ்கிருதம்
க, ங, ச, ஞ, ட,

ண, த, ந, ப, ம, ய

ர, ல, வ,

ழ, ள, ற, ன

क, ख, ग, घ, ङ

च, छ, ज, झ, ञ

ट, ठ, ड, ढ, ण

त, थ, द, ध, न

प, फ, ब, भ, म

य, र, ल, व,

श, ष, स, ह

இதனால் தான், இப்பிரச்சினை உருவானதா அல்லது வேண்டுமென்றே, அத்தகைய விளக்கம் கொடுக்கப் பட்டதா என்று ஆராயலாம்.

தமிழ்-தமிழ் என்று கூப்பாடு போட்டு, உணர்ச்சி தூண்டி பேசி, கத்தி, பிரச்சாரம் செய்தாலும், தமிழை ஒழுங்காக, தொல்காப்பியர் போதித்த இலக்கணத்தையும் மறந்து தான், இவ்வாறு எழுதி-பேசி, “சுத்திரர்களை” உண்டாக்கியுள்ளார்கள் போலும்.

Sudra, Shudra, Cuttiran - explanation- Vedaprakash-2

 சூத்ர [शूद्र] = சூத்ரா =“சூத்திரர்” என்றாகி, அது இழிசொல்லாக கருதப் பட்டது. போதா குறைக்கு அந்த பிழையானதற்கு திரிபு வுளக்கம் கொடுக்கப்பட்டது.

சூத்ர [शूद्र] ஒருமை என்றால், பன்மை சூத்ரர் [शूद्राः  [சமஸ்கிருதம்]/ शूद्रों [இந்தி]] என்றுதான் வரவேண்டும். ஆனால், அதை “சூத்திரர்” என்று குறிப்பிட்டதும் மிகத் தவறாகும்.

பிறகு ரிக்வேதத்தில் [10:90] வருகின்ற புருஷஸுக்தம் [पुरुषसूक्तम्] என்ற சுலோகத்தில் வரும் கீழ் கண்ட வரியை வைத்துக் கொண்டு, திரிபுவாதம் தொடங்கியது:

राजन्य: कृत: ब्राह्मणोऽस्य मुखामासीद्वाहू। ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत॥१३॥

இதே வரி, சுக்ல யஜுர்வேத சம்ஹிதை 30.1-16; அதர்வ வேத சம்ஹித 19.6 முதலியவற்றிலும் காணலாம்.

அவரது முகம் பிராமணன் ஆயிற்று .

கைகள் சத்ரியன் ஆயிற்று .

தொடைகள் வைசியன் ஆயிற்று .

அவரது பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்.

13வது வரி, இப்படி இருக்கிறது என்றால், 15வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்றுள்ளது [9]

ஆகவே சூத்ர [शूद्र] என்றது கெட்ட வார்த்தை இல்லை, சமஸ்கிருதம் தெரியாமல், தமிழும் அறியாமல், உளறிய பொய்மை-திரிபு விளக்கம் இது.

Purusha Suktam cosmogony appreciated by Ambedkar

சூத்ரரும், பூமியும் ஒன்றா?: பாதங்களில் இருந்து சூத்திரன் தோன்றினான்…“……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின, அதாவது, கால்களிலிருந்து சூத்திரன் மற்றும் பூமியும் தோன்றின என்றால், சூத்திரனும், பூமியும் சகோதரர்கள். மற்ற எல்லோரும், இவர்கள் இல்லாமல் இல்லை என்றாகிறாது. ஆக இதெல்லாம் ஒரு உருவகம் என்றாகிறது. மேலே குறிப்பிட்டபடி, “15வது வரியில், “……பாதங்களில் இருந்து பூமியும், காதில் இருந்து திசைகளும் தோன்றின அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன….” என்றுள்ளது” என்பதற்கு ஏற்ப, பூமியுடன், நிலத்துடன், மண்ணுடம் தொடர்பு படுத்தப் பட்டனர்.

Caturvarna, Ambedkar object to 11 and 12

புருஷ ஸுக்தம் முழுமையாகக் கொடுக்கப்படுகிறது: வேடிக்கை என்னவென்றால், படித்தவர்கள் கூட சூத்திரர் என்றதற்கு, ஏதோ ஏற்புடைய விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு விளக்கம் கொடுக்கிறார்கள். வசதிற்காகவும், ஆராய்ச்சிற்கு உதவியாகவும், “புருஷ சுக்தம்” முழுவதும் – 25 சுலோகங்கள், கீழே கொடுக்கப்படுகிறது:

सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात्। स भूमिं विश्वतो वृत्वात्यतिष्ठद्दशांगुलमं॥१

पुरुष एवेदम् यत् भूतम् यच्च भव्यम्। उतामृतत्वस्येशानो यदह्नेना तिरोहति॥२

एतावानस्य महिमातो ज्यायांश्च पूरुषः। पादोऽस्य विश्वा भूतानि त्रिपादस्यामृतं दिवि॥३॥

त्रिपादूर्द्ध्वः उदैत् पुरुषः पादोस्येहा पुनः। ततो विष्वं व्यक्रामच्छाशनान शने अभि॥४

तस्मात् विराडजायत विराजो अधिपूरुषः। सहातो अत्यरिच्यत पश्चात् भूमिमथॊ पुरः॥५

यत् पुरुषेण् हविषा देवा यज्ञमतन्वत। वसन्तो अस्या सीदाज्यम् ग्रीष्म इद्ध्म शरधवि॥६

सप्तास्यासन्परिधयस्त्रिः सप्त समिधः कृताः। देवा यद्यज्ञं तन्वाना अबध्नन्पुरुषं पशुं॥७॥

तं यज्ञं बर्हिषि प्रौक्षन्पुरुषं जातमग्रतः। तेन देवा अयजन्त साध्या ऋषयश्च ये॥८॥

तस्माद्यज्ञात्सर्वहुतः संभृतं पृषदाज्यं। पशून्तांश्चक्रे वायव्यानारण्यान्ग्राम्याश्च ये॥९॥

तस्माद्यज्ञात्सर्वहुत ऋचः सामानि जज्ञिरे। छंदांसि जज्ञिरे तस्माद्यजुस्तस्मादजायत॥१०॥

तस्मादश्वा अजायंत ये के चोभयादतः। गावो ह जज्ञिरे तस्मात्तस्माज्जाता अजावयः॥११॥

यत्पुरुषं व्यदधुः कतिधा व्यकल्पयन्। मुखं किमस्य कौ बाहू का उरू पादा उच्येते॥१२॥

राजन्य: कृत: ब्राह्मणोऽस्य मुखामासीद्वाहू। ऊरू तदस्य यद्वैश्यः पद्भ्यां शूद्रो अजायत॥१३॥

चंद्रमा मनसो जातश्चक्षोः सूर्यो अजायत। मुखादिंद्रश्चाग्निश्च प्राणाद्वायुरजायत॥१४॥

नाभ्या आसीदंतरिक्षं शीर्ष्णो द्यौः समवर्तत। पद्भ्यां भूमिर्दिशः श्रोत्रात्तथा लोकाँ अकल्पयन्॥१५॥

वेदाहमेतम् पुरुषम् महान्तम् आदित्यवर्णम् तमसस्तु पारे। सर्वाणि रूपाणि विजित्य धीरो नामानि कृत्वा भिवदन्यदास्ते॥१६

धाता पुरस्ताद्यमुदाजहार शक्रफ्प्रविद्वान् प्रतिशश्चतस्र। तमेवम् विद्वान् अमृत इह भवति नान्यफ्पन्धा अयनाय विद्यते॥१७

यज्ञेन यज्ञमयजंत देवास्तानि धर्माणि प्रथमान्यासन्। ते ह नाकं महिमानः सचंत यत्र पूर्वे साध्याः संति देवा:॥१८॥

இதன் பொருளை பல இணைதளங்கள் தமிழில் வெளியிட்டுள்ளதால், மறுபடியும் அது இங்கு கொடுக்கப்படவில்லை. இது, அண்ட-பேரண்ட, உயிரினங்கள் தோன்றுவது பற்றி உருவகமாக விவரிக்கப் படுகின்ற கவிதையாலும். அதனால், உண்மையிலேயே, அவ்வாறுதான் நிகழ்ந்தன என்பதாகாது. இங்கு நான்கு பிரிவினர் உருவானது, அவற்றின் பெயர், குறிப்பாக “சூத்ர” என்பது தான் முக்கியம். ஏனெனில், அதை வைத்துதான், சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Purusha Suktam cosmogony appreciated by Ambedkar object to 11 and 12

நான்கு வகை அரசு உத்தியோகங்கள்: அம்பேத்கர், இவ்வரிகளைக் குறிப்பிட்டு, அதிலுள்ள பேரண்டவியல் [Cosomogony] வர்ணனையைப் பாராட்டுகிறார். ஆனால், வரிகள் 11 மற்றும் 12 மீது சந்தேகம் கொள்கிறார், ஏனெனில், அதிதான், மனிதர்களைப் பிரிக்கும் மனப்பாங்கு நுழைந்து, சூத்ரரை கீழ் வைக்கிறது என்கிறார். இதற்கு ஆபதஸ்ம்ப[1], வசிஸ்ட[2] தர்ம சூத்திர வரிகளை ஆதாரம் காட்டுகிறார். பிறகு மனுவும் அதையே குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறார்[3]. ஆகவே, வேதகாலத்தில் இருந்த சமத்துவம் எப்படி பிரிக்கப் படுகிறது என்று நோக்கும் போது, அதனை, பின்வந்தவர்கள் செய்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது. அங்குதான், ஜைன-பௌத்த இடைசெருகல்கள் வேலை செய்தனவா என்று ஆராய வேண்டியுள்ளது. இன்று கூட, அரசு வேலைகளில் Class – I, II, II, IV என்றெல்லாம் உள்ளது. அதனால், அப்பிரிவுகள் எல்லாம் அடக்கி ஆள்வது, ஆதிக்கச் சாதித்துவம், ….கொண்டது என்றெல்லாம் விளக்கம் கொடுக்க முடியாது. படித்து பரீட்சையில் அதிக மார்க்குகள் வாங்கினால், Class – IV கூட Class – I ஆகலாம், அதில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால், Class – IV நேரிடையாக, Class – I  அறைக்குச் சென்று, நான் இந்த ஜாதி, அதனால், நான் இங்கே உட்காருவேன் என்று அடம் பிடிக்க முடியாது, உரிமை கோர முடியாது. இதனை அம்பேத்கரும் எதிர்க்கவில்லை. இங்கு “புருஷன்” என்று ஒரு பேரண்டவியல் [Cosomogony] ரீதியில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது. அதிலிருந்து, அண்டங்கள், உயிரினங்கள் முதலியவை தோன்றியதை விளக்குகிறது.

© வேதபிரகாஷ்

14-06-2019

[1] Prasna, PatalaI, Khanda I, Sutra. 4.5.

[2] Prasna, PatalaI, Khanda I, Sutra. 6.

[3]  Manu Smruti, Chapter.X, verse.4

வன்னியர்-எஸ்.சி ஒற்றுமை வளர்ப்பது எப்படி – எரையூரில் கிருஸ்துவம் தோற்றது என்றால், சேஷசமுத்திரத்தில் இந்துத்துவம் தோற்றது (1)

ஓகஸ்ட் 23, 2015

வன்னியர்எஸ்.சி ஒற்றுமை வளர்ப்பது எப்படிஎரையூரில் கிருஸ்துவம் தோற்றது என்றால், சேஷசமுத்திரத்தில் இந்துத்துவம் தோற்றது (1)

சேஷசமுத்ரம் கலவரம் 15-08-2015

சேஷசமுத்ரம் கலவரம் 15-08-2015

சேஷசமுத்திரம் தேர் திருவிழா பிரச்னை ஆர்.டி.., தலைமையில் பேச்சுவார்த்தை (ஜூலை. 23, 2015): விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் காலனியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2012–ம் ஆண்டு இக்கோவில் தேரோட்ட திருவிழாவின் போது இரு சமுகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக அதன் பின்னர் அந்த கோவிலில் திருவிழா நடக்கவில்லை. இதற்கிடையே காலனியை சேர்ந்தவர்கள் இந்த வருடம்-2015 திருவிழா நடத்த முடிவு செய்தனர்[1]. ஆனால், திருவிழா நடத்தினால் மீண்டும் மோதல் ஏற்படும் என கருதி போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனால், காலனி தரப்பினர் வற்புறுத்தியதன் பேரில் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ. மாலதி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் போலீஸ் பாதுகாப்புடன் தேரோட்டம் நடத்தவும் பிரச்சினைக்குரிய வழியாக தேரோட்டத்தை நடத்தகூடாது என்று கூறி அனுமதி அளிக்கப்பட்டது[2]. அதாவது, கூட்டத்தில், வேறு மாற்றுப்பாதை ஏற்பாடு செய்வதற்கு, 10 நாட்கள் கால அவகாசம் அளித்து ஆர்.டி.ஓ., மாலதி உத்தரவிட்டார். இதற்கிடையே சேஷசமுத்திரம் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[3]. முன்பு தர்மபுரியில் ஒரு வன்னிய பெண் ஒரு எஸ்.சியுடன் ஓடிப்போனதால், தற்கொலை செய்துகொண்டபோது 148 எஸ்.சி வீடுகள் எரிக்கப்பட்டன, பிறகு கற்கள் எரியப்படல், பெட்ரோல் குண்டுகள் வீசுதல் முதலியன நடந்தன[4]. அதனால், இங்கும் அத்தகைய கலவரம் ஏற்படக்கூடாது என்று போலீஸார் எச்சரிக்கையாகவே இருந்தனர்.

வன்னியர்எஸ்.சி ஒற்றுமையை உண்டாக்க முடியாத சித்தாந்தவாதிகளும், அரசியல்வாதிகளும் (2012-1015): மூன்று ஆண்டுகளாக வன்னியர்களுக்கும், எஸ்.சிக்களுக்கும் இருக்கும் ஜாதி வேறுபாட்டைக் குறைக்க, மாற்ற மற்றும் இணக்கமாக இருக்க யாரும் செயல்படவில்லை என்று பார்க்கும் போது, அரசியல்வாதிகளின் போலித்தனம் வெளிப்படுகிறது. இந்துத்துவம் பேசும் குழுக்களும், இத்தகைய விசயங்களில் அக்கரை எடுத்துக் கொள்ளாதது விசித்திரமாக உள்ளது. எரையூர் பிரச்சினைக்குப் பிறகும், வன்னியர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனும் போது, ஜாதியத்தை வன்னியர்கள் வளர்க்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது. வன்னியர்களுக்கும், எஸ்.சிக்களுக்கும் இந்து-உணர்வு ரீதியில் ஒற்றுமை ஏற்படுத்துவதில், இந்துத்துவ சித்தாந்திகள், முயற்சிகள் மேற்கொள்ளவில்லையா, அல்லது கண்டுகொள்ளவே இல்லையா என்பதை ஆராய வேண்டியுள்ளது. இந்துத்துவம் பேசும் தமிழக பிஜேபிக்காரர்களுக்கும் இதைப்பற்றி இன்னும் விழிப்புணர்வு வரவில்லை போலும். வன்னிய அடிகள் போன்றவர்களை ராம்தாஸ் போன்றவர்கள் மதிக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகின்ற அன்புமணி இதைப்பற்றி ஏன் கவலைப்படவில்லை என்று தெரியவில்லை. ஆக மொத்தம், அனைவருமே செயல்படாததால், இந்துக்கள் என்ரு சொல்லிக் கொள்ளும் வன்னியர்களும், எஸ்.சிக்களும் தனித்தனியாக சாமி கும்பிடுவது, விழா கொண்டாடுவது ஆச்சரியமான விசயம் தான், ஆனால், ஏற்றுக் கொள்ளமுடியாதது.

17-08-2015 அன்று தேர்த்திருவிழா நடத்த 16-08-2015 அன்று தீர்மானம் செய்யப்பட்டது: ஜூலை.25க்குப் பிறகு காத்திருந்து பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 16-08-2015 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடத்த 15-08-2015 அன்று இரவு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இத்தனை நாட்களில் சம்பந்தப்பட்டவர்களின் மனங்களில் என்ன எண்ணங்கள் ஓடின என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! விழாவிற்காக தேர் அலங்கரிக்கும் பணி நடந்து வந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கு 50–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அந்நிலையில் 15-08-2015 இரவு 7 மணி அளவில் அப்பகுதியில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது[5]. இது சாதாரண நிகழ்வு அல்ல, ஏனெனில், குறிப்பிட்ட மின்சாரப் பெட்டியிலிருந்து இணைப்பை / பியூஸை எடுத்தவர் திட்டமிட்டே எடுத்திருக்கிறார் என்றாகிறது. பிறகு, காத்திருந்தவர்கள் தாக்குதலில் ஈடுப்பட்டார்கள்.

கலவரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது, தொடர்ந்தது: தேர்த்திருவிழா ஏற்பாடுகள் தொடர்ந்து நடப்பதால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த 500–க்கும் மேற்பட்டவர்கள் திபுதிபுவென காலனி பகுதிக்குள் புகுந்தனர். “எரியுங்கடா, ஒரு பறையனைக் கூட விட்டு வைக்கக் கூடாது”, என்று கத்திக் கொண்டே பாய்ந்தனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது[6]. அவர்கள் அரசியல் ஆதிக்கம் கொண்ட வன்னியர் சமூகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று ஆங்கில நாளிதழ்கள் வெளியிட்டுள்ள போது, தமிழ் ஊடகங்கள் அமுக்கி வாசித்துள்ளன. அங்கு தேர் மீதும், வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசினர்[7]. இந்த பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தமிழகத்தில் வளர்ந்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இவர்கள் எவ்வாறு இக்கலையை அமைதியைக் குலைப்பவர்கள், கலவரக்காரர்கள், தீவிரவாதிகள் முதலியோரைப் போல கற்றுத்தேர்ந்துள்ளனர் என்றும் நோக்கத்தக்கது. இதில் 8 வீடுகள் எரிந்து நாசமானது. தேரும் சேதமானது[8].  மேலும் போலீசாரின் 5 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர்[9].  இதில் வீடுகள், பொருள்கள் போன்றவை சேதமடைந்தன. பல இடங்களில் பொருள்கள் சூறையாடப்பட்டன. இதனால், ஒரு பிரிவு மக்கள் ஊரை காலி செய்து விட்டு அருகே உள்ள கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர்[10]. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வெடிகுண்டு வீசியவர்களை தடுக்க முயன்றும் இயலவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர நாயர் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் அங்கு கூடி இருந்த ஊர் தரப்பினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பதிலுக்கு ஊர் தரப்பினர் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அப்போது மர்மகும்பல் கற்களை வீசியதில் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உள்ளிட்ட 8 போலீசார் காயமடைந்தனர்[11]. காயம் அடைந்த போலீசார் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

© வேதபிரகாஷ்

23-08-2015

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1302239

[2]http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-233577.html

[3] தினமலர், சேஷசமுத்திரம் தேர் திருவிழா பிரச்னை ஆர்.டி.., தலைமையில் பேச்சுவார்த்தை, ஜூலை.23, 2015, 01:30.

[4] an eerily similar incident had happened in 2012 when 148 Dalit houses were torched in Dharmapuri following the suicide of a Vanniyar man after his daughter eloped with a Dalit boy — and then followed the petrol bombs and stones.

http://indianexpress.com/article/india/india-others/temple-procession-row-tn-police-nab-75-for-torching-dalit-houses/

[5] மாலைமலர், சங்கராபுரம் அருகே கோவில் விழாவில் கலவரம்: வீடுகளுக்கு தீ வைப்புபோலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, பதிவு செய்த நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 16, 1:29 PM IST.

[6] “Burn them! No Parayas (Dalits) should be let off,” a mob of over 500 shouted on Saturday night while torching a dozen Dalit houses in Seshasamudram village in Tamil Nadu’s Villupuram district. The mob belonged to the politically-powerful Vanniyar community in the state.

http://indianexpress.com/article/india/india-others/temple-procession-row-tn-police-nab-75-for-torching-dalit-houses/

[7] http://www.maalaimalar.com/2015/08/16132913/temple-festival-riot-house-fir.html

[8] http://www.dailythanthi.com/News/State/2015/08/17051805/Temple-Car-Torched-in-Villupuram-144-Ban-enforced.vpf

[9] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=149011

[10]http://www.dinamani.com/tamilnadu/2015/08/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-70-%E0%AE%AA%E0%AF%87/article2977726.ece

[11] தினத்தந்தி, சங்கராபுரம் அருகே கோவில் தேர் எரிப்பு: கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு; 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஆகஸ்ட் 17,2015, 5:18 AM IST

பதிவு செய்த நாள்:திங்கள் , ஆகஸ்ட் 17,2015, 5:18 AM IST

தலித் இறையியல், தலித் கிறிஸ்தவம், தலித் கிறிஸ்தவர்: பிரச்சினை, உண்மை, பொய் மற்றும் மாயைகள் (4)

ஓகஸ்ட் 16, 2015

தலித் இறையியல், தலித் கிறிஸ்தவம், தலித் கிறிஸ்தவர்: பிரச்சினை, உண்மை, பொய் மற்றும் மாயைகள் (4)

Dalit Christians - capping atheist Karu for quota support

Dalit Christians – capping atheist Karu for quota support

பிஷப்புகளின் திமுகஅதிமுக முதலமைச்சர்களுடன் கூடல்ஊடல்: திமுக-அதிமுக ஆட்சிகள் மாறி-மாறி ஆட்சிக்கு வந்தபோதெல்லாம், கிருத்துமஸ் போன்ற பண்டிகைகளின் போது, கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இவர்களுக்கு குல்லா மாட்டியும், கேக் கொடுத்தும், ஊட்டிவிட்டும் தாஜா செய்து வருவர். தலித் கிறிஸ்துவர்களுக்கு இடவொதிக்கீடு பற்றி ஜனாதிபதி, பிரதம மந்திரி முதலியோர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு பிஷப்புகள் அழுத்தம் கொடுப்பர். அவர்களும் கடிதம் எழுதிவிட்டு சும்மா இருந்து விடுவர். ஆனால், இவர்கள் ஊடகங்களில், பிரமாதமாக செய்திகளை வெளியிட செய்வர். தலித் கிறிஸ்துவர்களுக்கு அநியாயம், இடவொதிக்கீட்டில் பாரபட்சம், தலித்துகளை ஒதுக்குகிறார்கள்., தலித்துகளை வஞ்சிக்கிறார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுப்பார்கள், அவ்வாறே செய்திகளும் வெளியிடப்பட்டு வந்தன. தி ஹிந்து போன்ற நாளிதழ்களில், ஓய்வு பெற்ற பல்கலைக்கழக துணைவர்கள் போன்றவர்களை வைத்து, கட்டுரைகளை எழுத வைத்து கருத்துருவாக்கம் உண்டாக்க செய்வர். ஆனால், அவர்கள் ஓன்றையும் சாதிக்க முடியவில்லை, ஏனெனில், அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்று அவர்களுக்கே தெரியும். கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பிறகும் எந்தநிலையும் மாறவில்லை எனும்போது, கிறிஸ்துவ பாதிரிகள், பிஷப்புகள் பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள் என்றாகிறது. மேலும் ஏசுவும் ஏமாற்றி இருக்கிறார் என்று தெரிய வரும் போது, ஏசு உங்களை கைவிடமாட்டார் என்பதெல்லாம் பொய் என்றாகிறது.

ஜாதியா, மதமா- தேவேந்திரகுலத்தார் -கிருஷ்ணசாமி

ஜாதியா, மதமா- தேவேந்திரகுலத்தார் -கிருஷ்ணசாமி

தலித் அரசியல், தலித் அரசியல்வாதிகளை தலித்துகளை நடத்தும் விதம் அதில் கிறிஸ்தவரள் அறுவடை செய்யும் விதம்: பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகள் எஸ்.சி வகுப்பினராக இருந்தாலும், அவர்களை ஒன்றாக நெருங்கி வர அரசியல் கட்சிகளும், கிறிஸ்தவ குழுக்களும் தடுக்கின்றன.

ஜாதியா, மதமா- தேவேந்திரகுலத்தார் குழப்பம்

ஜாதியா, மதமா- தேவேந்திரகுலத்தார் குழப்பம்

பள்ளர்கள் தங்களுக்கும் பறை மற்றும் மறமுழக்குதல், பசுமாமிசம் தின்னுதல் போன்ற காரியங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்கள். தேவேந்திரகுல வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். இவர்கள் 1957லிருந்துதான் எஸ்.சி ஏழ்மையின் காரணமாக தகுதி பெற்றுள்ளார்கள். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர். சக்கிலியர்களில் தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் பிரிவினர் உள்ளார்கள். கிறிஸ்தவ என்.ஜி.ஓ குழுக்கள் பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகளில் வேற்றுமை உண்டாக்க முயன்று வருகின்றனர். ஜெசுவைட் குழுக்கள் அருந்ததியரை “தலித்துக்களில் தலித்துகள்” என்று குறிப்பிட்டு, அவர்களை தாஜா செய்ய முயன்றனர். மலத்தை அள்ளும் வேலையில் அருந்ததியர் ஈடுபடுத்தப்படுகின்றார்கள் என்று குறிப்பிட்டு, ஐரோப்பிய என்.ஜி.ஓக்களிடமிடருந்து நிதியுதவி பெற உதவியுள்ளனர்[1]. அருந்ததியர், ஆதி தமிழர் மக்கள் கட்சி என்ற பெயரில், திமுகவுடன் சேர்ந்து செயல்படுகிறார்கள்.

கிறிஸ்தவ அருந்ததியர் இயக்கம் - நோக்கம் என்னவோ

கிறிஸ்தவ அருந்ததியர் இயக்கம் – நோக்கம் என்னவோ

“டிரை லெட்ரின்” மற்றும் மலம் அள்ளும் அவலமும்: ஆகஸ்ட் 2008ல் மத்திய தேசிய துப்புரவுப் பணியாளர் கமிஷனின் தலைவர் சந்தோஷ் சவுத்ரி தமிழகத்திற்கு வந்திருந்தபோது, மத்திய அரசு கொடுத்த பணம் மற்றும் மானியத்தை சரியாக செலவிடவில்லை மற்றும் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று எடுத்துக் காட்டினார். 2009ல் மனித கழிவுகளை மனிதனே அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோவிலுக்குள் வாளியில் மலம் எடுத்துச் சென்ற ஆதித்தமிழர் பேரவையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்[2].  உண்மையில் “டிரை லெட்ரின்” எனப்படுகின்ற கழிப்பறை முறை ஆங்கிலேயர்களினால் உண்டாக்கப்பட்டது[3]. அவர்கள் தாங்கள் தங்கும் இடங்கள், வீடுகள், விருந்தினர் மாளிகைகளுக்கு அருகில் மலம் கழிக்க வசதியாக அத்தகைய கழிப்பறைகளை, பின்புறத்தில் கட்டிக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இருமுறை வந்து, மலத்தை வாரி பக்கெட்டுகளில் போட்டு கொண்டு செல்வார்கள். இதனை பிறகு, வீடுகள் கட்டும் போது பின்பற்றினார்கள். இதனால், மலத்தை அள்ளும் குறிப்பிட்ட தெலுங்கு பேசும் மக்கள் உபயோகப்படுத்தப்பட்டார்கள்.

Dry latrine - manual scavenging

Dry latrine – manual scavenging

“டிரை லெட்ரின்” முறையும், “கொள்ளைக்கு போவதும்” வெளிப்படுத்தும் உண்மைகள்: இந்தியமுறைப்படி, யாரும் “கொள்ளைக்குத்தான்” போவார்கள், அதாவாது, வயல்வெளிகளில் அல்லது வீட்டிற்கு பின்புறத்தில் மலம் கழித்து, மண்ணைப் போட்டு மூடிவிட்டு வருவார்கள், வாய்கால்களில் கழுவிக் கொண்டு வருவார்கள், இவ்வாறு கழிப்பறைகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்க மாட்டார்கள். ஆனால், இவ்வுண்மைகளையும் மறைத்து, புதிய கதைகளை கிறிஸ்தவ ஆரய்ய்ச்சியாளர்கள் உருவாக்குகிறார்கள். அதனால் தான், பள்ளர் / தேவேந்திரகுல வெள்ளாளர், பறையர் மற்றும் அருந்ததியர் / சக்கிலியர் பிரிவுகளின் பாரம்பரியங்களைப் படித்துப் பார்த்தால், முரணான விவரங்கள் வெலிவருகின்றன. கிராமப்புறங்களில் மற்ற எஸ்.சி பிரிவுகள் தங்களை ஒதுக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் அருந்ததியர் குறைகூறுகின்றனர். ஆனால் மற்றவர்கள் இதனை மறுக்கின்றனர். தேவேந்திரகுலவேளாளர் தலைவர்களில் ஒருவரான பசுபதி பாண்டியனோ அப்படிஒரு சிக்கல் இருப்பதாகவே தன் கவனத்திற்கு வரவில்லை என்கிறார். புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னமும் ஒருபடிமேலே போய் தேவேந்திரகுலத்தவர்க்கும், அருந்ததியருக்கும் இடையே பிரச்சினை இருப்பது எனக்கூறுவதே மேல்சாதியினரின் சதி என்கிறார்[4].

கிறிஸ்தவ அருந்ததியர் - சந்துரு, கிருஷ்ணசாமி, சிவகாமி, திருமா

கிறிஸ்தவ அருந்ததியர் – சந்துரு, கிருஷ்ணசாமி, சிவகாமி, திருமா

சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, சமூக விமர்சகர்இவரது கருத்து[5](டிசம்பர்.2013): சூசை வழக்கும் வல்சம்மா பால் வழக்கும், என்ற தலைப்பில் கூறுவதாவது, 1985-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த சூசை என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி பட்டியல் இன மக்களுக்கான சலுகையை மதத்தின் அடிப்படையில் வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பி.என்.பகவதி மதமாற்றத்துக்குப் பிறகு சாதிக்கொடுமைகள் தொடர்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தென்னிந்தியாவில் மதமாற்றத்துக்குப் பின்னரும் அந்த மக்கள் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்படுகிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மிகச் சொற்பமாகவே கூறப்பட்டுள்ளன என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். 1996-ல், மதம் மாறிய பட்டியல் இனத்தவர் ஒருவரின் சாதிச் சான்றிதழ்பற்றி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ராமசாமி, வல்சம்மா பால் என்ற வழக்கில் தென்னிந்தியாவில் எவ்வாறு பட்டியல் இன மக்கள் மதம் மாறிய பின்னரும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை மிகத் தெளிவாகத் தனது தீர்ப்பில் பதிவுசெய்துள்ளார். சூசை தொடுத்த வழக்குக்குப் பின், கத்தோலிக்கக் குருமார்கள் சபை அன்றைய பிரதமரை சந்தித்துச் சட்டத் திருத்தத்தின் மூலம் மத அடிப்படையிலான வேறுபாட்டை நீக்கக் கோரினர். அதன் பின் 1996-ல் காங்கிரஸ் அரசு சட்டத் திருத்தத்தை மக்களவையில் கொண்டுவந்தபோதும் முழு மனதுடன் அதை நிறைவேற்ற முன்வரவில்லை. பா.ஜ.க-வினரின் ஆதரவை எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சியின் மசோதா மக்களவையின் கால முடிவுக்குப் பின் மரணித்துவிட்டது. மறுபடியும் 2004-ம் ஆண்டு மத அடிப்படையில் தலித் மக்களுக்கான சலுகை வழங்கப்படுவதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டு இன்றும் நிலுவையில் உள்ளது. 2011-ம் ஆண்டு அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்குபற்றிய தகவல்களைப் பொதுமக்கள் கவனத்துக்காக இணையத்தில் வெளியிட உத்தரவிட்டதோடு மட்டுமின்றி, தேசியப் பட்டியல் இன மக்களுக்கான ஆணையத்தின் கருத்தையும் கேட்க அறிவிப்பு கொடுத்தது[6].

Rabi Benard AIADMK supported Dalit Christian reservation

Rabi Benard AIADMK supported Dalit Christian reservation

ரபி பெர்னார்ட் என்ற அதிமுக எம்.பி ஆதரவு தெரிவித்து பேசியது (2014): ரபி பெர்னார்ட் என்ற அதிமுக எம்.பி ராஜ்யசபாவில் மதம் மாறிய எஸ்.சி கிருத்துவர்களுக்கு தொடர்ந்து, இந்துக்களுக்குக் கொடுக்கப்படும் அதே இடவொதிக்கீட்டைக் கொடுக்க வேண்டும் என்று பேசினார்[7]. பிப்ரவரி.24 2014 அன்று,  ஆகஸ்டு.10ம்தேதி அரசியல் நிர்ணயச் சட்டம் (பட்டியல் ஜாதியினர்) ஆணை, 1950னை திருத்த வேண்டும் என்ற மசோதாவை ஆதரித்து பேசினார். 65வது கருப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கத்தோலிக்க பிஷப் கான்பரென்ஸ் அழைப்பு விடுத்தது[8]. அதாவது அரசியல் நிர்ணயச் சட்டம் (பட்டியல் ஜாதியினர்) ஆணை, 1950, இந்தியாவின் முதல் ஜனாதிபதி, ஶ்ரீ ரஜேந்திரபிரசாத்தால் கையெழுத்திடப்பட்டது.

Dr Rajendra Prasad signed Indian Constitution on 10-08-1950

Dr Rajendra Prasad signed Indian Constitution on 10-08-1950

அதனால், அந்நாளை  கருப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கத்தோலிக்க பிஷப் கான்பரென்ஸ் அழைப்பு விடுத்தது[9] என்று காரணம் கூறுவது திடுக்கிட வைப்பதாக இருக்கிறது. உண்மையில் இது தலித்துகள், எஸ்.சிக்கள் அதாவது இந்துக்களை அவமதிப்பதாகும், அது மட்டுமல்லாது ராஜேந்திரபிரசாத்தையே கேவலப்படுத்துவதாகும். இதற்கான இவரங்களை சுற்றறிக்கை மூலம் எம்.பிக்கள், ஊடகங்களுக்கும், அரசு அதிகாரிகள், என எல்லோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.  இனி கிறிஸ்தவரால் உண்டாக்கப்பட்ட ஜாதிமுறைகளைப் பற்றி சரித்திர ரீதியில் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

© வேதபிரகாஷ்

15-08-2015

[1] Arunthathiyars today also receive support from the networked NGO partners of European donors such as Action Aid, Christian Aid, or EveryChild UK, who as a matter of policy have also made Arunthathiyar exclusion and humiliation — especially through ‘manual scavenging’ — a primary or sole focus, encouraging Arunthathiyar led NGOs and movements.

[2] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14939

[3] For the British introduced the first sanitation Bill in India in 1878, which made the construction of toilets compulsory even in huts in Calcutta (now Kolkata), then the capital of India. The Bill also proposed the construction of public toilets. Manual scavenging is manual removal of excreta (night soil) from “dry toilets”, i.e., toilet without the modern flush system, especially in the Indian subcontinent. The system of building public toilets and employing people to remove the excreta was introduced during the British rule in India perhaps in the late 19th century when municipalities were organized. The toilets often used a container that needed to be emptied daily.

Gita Ramaswamy, India Stinking: Manual scavengers Scavengers in Andhra Pradesh and their work, Navayana Publishing, 54, I Floor, Savarirayalu Street, Pondicherry 605 008.

[4] http://www.bbc.com/tamil/highlights/story/2006/03/printable/060314_dalit.shtml

[5]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D/article5513344.ece

[6] சந்துரு, சாதியும் மதமும் சமயமும் பொய், Published: December 29, 2013 00:00 ISTUpdated: December 29, 2013 11:00 IST

[7] Hon. Rabi Bernard, MP’s (AIADMK) speech in the Raja Sabha to include Dalit Christians in the SC list. THE CONSTITUTION (SCHEDULED CASTES) ORDERS (AMENDMENT) BILL, 2014, 24th February 2014,  Rajya Sabha

http://www.dalitchristianscbci.org/hon-rabi-bernard-mps-aiadmk-speech-in-the-raja-sabha-to-include-dalit-christians-in-the-sc-list/

[8] https://allevents.in/new%20delhi/invitation-for-the-black-day-observance-august-10th/396549377207143

[9] observed “Black Day” to mark the 65th anniversary of signing of a presidential order …………the Constitution (Scheduled Caste) order India’s first president Rajendra Prasad signed on August 10, 1950. http://en.radiovaticana.va/news/2015/08/11/india_christians,_muslims_observe_%E2%80%9Cblack_day%E2%80%9D_/1164293