Posts Tagged ‘ஓரியூர்’

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும் – தேர் எரிந்ததும், மனித உடல் எரிந்ததும் – சில ஊடகங்களின் பாரபட்சம் மிக்க செய்தி வெளியீடுகள் (2)

செப்ரெம்பர் 3, 2015

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும் – தேர் எரிந்ததும், மனித உடல் எரிந்ததும் – சில ஊடகங்களின் பாரபட்சம் மிக்க செய்தி வெளியீடுகள் (2)

Oriyur - people demand CB-CID probe into death of S Charles - The Hindu photo

Oriyur – people demand CB-CID probe into death of S Charles – The Hindu photo

சிவகங்கை பிஷப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்பாட்டம் (01-09-2015): செவ்வாய்கிழமை ஆர்பாட்டம் நடத்தியவர்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது[1]. கிராமத்தவர், சர்ச்-வளாகத்தில் புகுந்து, ஒரு அலுவலகரைத் தாக்கினர். இளைஞர்கள் சிவகங்கை சர்ச்-சுபீரியர் மற்றும் சர்ச்-துறவி முதலியோரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்ட வந்தனர். போஸ்டர்கள் ஒட்டிய பிறகு, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தடுத்த போது, சிவகங்கை பிஷப், சர்ச்-சுபீரியர் மற்றும் சர்ச்-துறவி முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக வழக்குத் தொடர கோரிக்கையிட்டு வற்புறுத்தினர். அவர்கள் சிவகங்கை பிஷப் ரெவ்.சூசை மாணிக்கம்[2], சர்ச்-சுபீரியர் வொய்.எஸ். யகு மற்றும் சர்ச்-துறவி ஐ. வேதநாயகம் முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 3012ன் கீழ் வழக்குத் தொடர போலீஸாரிடம் கட்டாயமாக பிடிவாதம் பிடித்தனர்[3]. சர்ச் வளாகத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு செப்டம்பர்.9 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த விழாவும் செவ்வாகிழமையோடு நிறுத்தப்பட்டதால், அவ்விடம் வெறிச்சோடு கிடந்தது. செப்டம்பர் 8ம் தேதி அவ்விழா முடிவதாக இருந்தது. தேர்த்திருவிழா இவ்வாறாக முடிந்தது போலும்! ஆனால், போராட்டத்தை கிராம மக்கள் விடவில்லை.

Oriyur - people demand CB-CID probe into death of S Charles -News

Oriyur – people demand CB-CID probe into death of S Charles -News

பரஸ்பர புகார்கள்: சர்ச்-அதிகாரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது வன்முறையைத் தூண்டுவதாக புகார் கொடுத்தது. இந்நிலையில் திருவிழாவை தன்னிச்சையாக நடத்தியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக நடந்து கொண்டதாகவும் ஓரியூர், புல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சார்லஸ், அருள் ராஜசேகர், அருள்சாமி, சூசை அருள், ஆரோக்கியசாமி, ஆரோக்கிய அருளானந்து, குமார், ஆரோக்கிய சாமி, அருளானந்து உள்ளிட்ட 10 பேர் மீது எஸ்.பி. பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[4]. “கடந்த 28ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை புறக்கணிப்பதாக புகார் எழுந்தது. இதனால் கொடியேற்றத்தின்போது, இருதரப்பு இடையே பதற்றம் நிலவி வந்தது. போலீசாரின் சமாதான நடவடிக்கையால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை,” என்று தினகரன் குறிப்பிடுகிறது[5]. செங்கல்சூளை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அவரது சடலத்தை 2ஆவது நாளாக புதன்கிழமையும் அவரது உறவினர்கள் வாங்க மறுத்து திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது, என்று தினமணி செய்தியை வெளியிட்டுள்ளது[6]. அதாவது சார்லஸ் செங்கல்சூளை உரிமையாளர் உரிமையாளர் என்ற கூடுதல் தகவலைக் கொடுத்துள்ளது[7]. போராட்டத்தின் மீது, போலீஸார் தடுத்த போது, சிவகங்கை பிஷப், சர்ச்-சுபீரியர் மற்றும் சர்ச்-துறவி முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக வழக்குத் தொடர கோரிக்கையிட்டு வற்புறுத்தினர். அவர்கள் சிவகங்கை பிஷப் ரெவ்.சூசை மாணிக்கம்[8], சர்ச்-சுபீரியர் வொய்.எஸ். யகு மற்றும் சர்ச்-துறவி ஐ. வேதநாயகம் முதலியோர் மீது கொலைக்குற்றத்திற்க்காக இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 3012ன் கீழ் வழக்குத் தொடர போலீஸாரிடம் கட்டாயமாக பிடிவாதம் பிடித்தனர்[9], என்ற நிலையிருந்தது கவனிக்கவேண்டும். எனவே, பதிலுக்கு பதில் புகார்கள், வழக்குப் பதிவுகள் என்று தொடரும் போலிருக்கிறது.

Oriyur Christian clash - one dead under mysterious circumastances DM - Madurai

Oriyur Christian clash – one dead under mysterious circumastances DM – Madurai

சிபிசிஐடி புலன் விசாரணைக்கு விடவேண்டும் என்று கோரிக்கையிட்ட கிராமத்தவர்களும், கிரைம்பிராஞ்சுபோலீஸ் விசாரணைக்கு ஒப்படைத்த போலீஸும் (02-09-2015)[10]:  புதன்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்த கிராமத்தவர்கள் சிபி-சிஐடி புலன் விசாரணைக்கு விடவேண்டும் என்று கோரிக்கையிட்டு, எஸ். சார்லஸின் உடலைப் பெற மறுத்து ஆர்பாட்டம் செய்தனர். தலித் தலைவரான பி. சந்திரபோஸ் போஸ்ட் மார்டம் அறிக்கையைப் பார்த்தபிறகு தான் உடலை வாங்குவது பற்றி தீர்மானிப்போம் என்று உறுதியாகக் கூறினார்[11]. ஒரு மருத்துவர் குழு போஸ்ட் மார்டம் செய்தது மற்றும் அந்த முழு நிகழ்வும் விடியோ எடுக்கப்பட்டது. ஆனால், போராட்டக் காரர்கள் மசிவதாக இல்லை. போஸ்ட் மார்டம் அறிக்கை மூலம் கொலை என்று தெரியவந்தால், வழக்கு பதிவு செய்து கொலையாளியைப் பிடித்து தண்டிக்க வேண்டும் அல்லது தற்கொலை என்று தெரியவந்தால், அவ்வாறு தற்கொலைக்குத் தூண்டியவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கூறினர். சி. சார்லஸின் மகன், சி. அருள் செபாஸ்டியன், “எது எப்படியாகிலும், இவ்வழக்கை சிபி-சிஐடி புலன் விசாரணைக்கு விடவேண்டும்”, என்று “தி இந்துவிடம்” சொன்னார்[12]. சர்ச்-அதிகாரத்திற்கும், சார்லஸுக்கும் பேதம் இருந்ததினால், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கிராமத்தினர் கூறினர். போலீஸ் சூப்பிரென்டென்டன்ட், விசாரணை நேர்மையாக நடக்கும் என்று உறுதியளித்து, கணபதி டி.எஸ்.பி(கிரைம் பிராஞ்சு)யிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்[13].

Diocese of Sivaganga, bishop and others

Diocese of Sivaganga, bishop and others

இருவிதமான தேர்த்திருவிழாக்கள், வெவ்வேறான கருத்து பதிவுகள், மௌனங்கள்: தமிழகத்தில் 17 நாட்கள் இடைவெளியில், இரண்டு தேர்த்திருழாக்களில், கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடந்துள்ளன. சேஷசமுத்திரத்தில் தேர் எரிக்கப்பட்டது, அதாவது தலித்துகளின் தேர். ஓரியூரில் ஒரு மனித உடல் எரிந்துள்ளது, அதாவது ஒரு தலித்தின் உடல். இரண்டுமே ஒரே நிலயில் தான் ஏற்பட்டுள்ளது. எரிந்தது எப்படி, யார் எரித்தனர், எதற்காக எரிந்தது-எரிக்கப்பட்டது போற்ற கேள்விகளை எழுப்பலாம். ஏற்கெனவே எழுப்பியும் உள்ளனர். ஆனால், பதில் சொல்வதில் ஒருதலைப்பட்சம், பாரபட்சம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கருத்து அடமானம் வைத்த தனம், கருத்தடிமைத்தனம், செக்யூலரிஸம் என்ற பற்பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. செய்திகளை வெளியிடுவதில் அவை தாராளமாகவே வெளிப்பட்டுள்ளன.  சேஷசமுத்திர விசயம், உலக செய்தியாகக் கூட மாறிவிட்டது. ஜாதி-இந்துக்கள் தலித்துகளை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று சந்தோஷமாக செய்திகளை வெளியிட்டன. “ஜாதி தேர்தலில் எரிந்து போன ஆலயத் தேர்” என்று பிபிசி நக்கலாகவோ, காட்டமாகவோ, கிண்டலாகவோ தலைப்பிட்டு இச்செய்தியை வெளியிட்டது அதற்குத்தான் தெரியும்[14]. தினத்தந்தியும் அவ்வாறே செய்தி வெளியிட்டது[15]. எவிடென்ஸ் கதிர், சமூகச் செயல்பாட்டாளர் என்றொருவர்[16],

தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி - தமிழ்.இந்து

தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி – தமிழ்.இந்து

தமிழ்.இந்துவில், “தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி” என்ற தலைப்பில் பொரிந்து தள்ளினார்[17]. “தேர் ஏன் கண்களை உறுத்தியது?…என்று ஆரம்பித்து, “ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை நாடே கொண்டாடிக் கொண்டிருந்த போது, தங்களுடைய வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்றதற்காக தலித் மக்கள் உலா இழுத்துச் செல்லவிருந்த தேரை எரித்தழித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். அரசை மட்டும் குறை சொல்லி ஆகப்போவது ஒன்றும் இல்லை. நமக்குள் இருக்கும் சாதியை என்ன செய்யப்போகிறோம்? சேஷசமுத்திரத் தேரின் சாம்பலிலிருந்து எழும் எரிக்க முடியாத கேள்வி இதுதான்!”, என்று கேள்வி கேடு முடித்துவிட்டார்[18]. இவையெல்லாம், அந்நிய ஊடகங்களுக்கு அல்வா சாப்பிட்டது போலத்தான். ஆனால், ஓரியூர் விசயத்தில், அமுக்கி வாசித்துள்ளது வியப்பாக உள்ளது. இந்த “எவிடென்ஸ் கதிருக்கும்” இதுவரை, எரிந்த தலித்-உடல் உறுத்தவில்லை போலும்!

சாதி மோதலில் எரிந்து போன ஆலயத்தேர் - பிபிசி செய்தி

சாதி மோதலில் எரிந்து போன ஆலயத்தேர் – பிபிசி செய்தி

ஓரியூர் தேர்த்திருவிழா நிறுத்தப்பட்டது பற்றி திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோரும் இதுவரை வாய் திறக்கவில்லை. ஒரு தலித் தலைவர் மர்மமாக இறந்தது அல்லது தூண்டுதல் பேரில் தற்கொலை செய்து கொண்டது பற்றிய செய்திகளும் அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு தலித்தின் உடல் எரிந்துள்ளது என்று யாரும் சீறவில்லை, குரல் கொடுக்கவில்லை. அப்படியென்றால், சர்ச்-அதிகாரம் அதனை கட்டுப்படுத்துகிறதா? இதைப்பற்றிய விவரங்கள் அதிகமாக வெளிவந்தால், அவர்களது குட்டு வெளிப்படும் என்று அஞ்சுகிறார்களா? கற்பழிப்புகள், பணமோசடி, போன்ற விசயங்களைத் தான் மறைக்கிறார்கள் என்றால், “தலித்” விவகாரங்களையும் ஏன் மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஓரியூர் பிரச்சினை - லாரன்ஸ், சார்லஸ், பிஷப்

ஓரியூர் பிரச்சினை – லாரன்ஸ், சார்லஸ், பிஷப்

© வேதபிரகாஷ்

03-09-2015


 ———————————————————————————————————————–

[1] D. J. Walter Scott,  Villagers storm churh, assault employee, Ramanathapuram, September.2, 2015; The Hindu, Updated: September 2, 2015 10:41 IST

[2] Bishop Jebamalai Susaimanickam was born on Sept. 25, 1945, in Marudakanmoi, Andichurani parish in Sivagangai diocese. He was ordained a priest on Jan. 27, 1971, and appointed the second Bishop of Sivagangai on April 1, 2005. His episcopal ordination was on May 15, 2005. Bishop Susaimanickam was vicar general of Madurai archdiocese before his appointment as the diocesan prelate. He is also now secretary of the Tamil Nadu Bishops’ Council’s Commission for Bible. Bishop Jebamalai Susaimanickam Bishop’s House, Britto Nagar, Melur Road, Sivagangai 630561, Tamil Nadu, India; (91) 4575-246666 (personal), 241744 (official); Fax :(91) 4342-262200; svgbishop@sancharnet.in

[3] http://www.thehindu.com/news/national/tamil-nadu/villagers-storm-church-assault-employee/article7605645.ece

[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=485779&cat=504

[5] தினகரன், தொண்டி அருகே திருவிழாவில் பிரச்னை 10 பேர் மீது வழக்கு, பதிவு செய்த நேரம்:2015-09-01 10:39:41.

[6] தினமணி, ஓரியூரில் செங்கல்சூளை உரிமையாளர் மர்மச் சாவு: 2ஆவது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு,  By ராமநாதபுரம், First Published : 03 September 2015 01:31 AM IST.

[7]http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2015/09/03/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE/article3007458.ece

[8] Bishop Jebamalai Susaimanickam was born on Sept. 25, 1945, in Marudakanmoi, Andichurani parish in Sivagangai diocese. He was ordained a priest on Jan. 27, 1971, and appointed the second Bishop of Sivagangai on April 1, 2005. His episcopal ordination was on May 15, 2005. Bishop Susaimanickam was vicar general of Madurai archdiocese before his appointment as the diocesan prelate. He is also now secretary of the Tamil Nadu Bishops’ Council’s Commission for Bible. Bishop Jebamalai Susaimanickam Bishop’s House, Britto Nagar, Melur Road, Sivagangai 630561, Tamil Nadu, India; (91) 4575-246666 (personal), 241744 (official); Fax :(91) 4342-262200; svgbishop@sancharnet.in

[9] http://www.thehindu.com/news/national/tamil-nadu/villagers-storm-church-assault-employee/article7605645.ece

[10] D. J. Walter Scott,  CB-CID probe into church employee’s death, Ramanathapuram, September.3, 2015; The Hindu, Updated: September 3, 2015 05:45 IST

[11] Demanding a CB-CID probe, villagers and family members refused to accept the body of S. Charles, vice president of the Parish Council of St Arulanandar Church in Oriyur, who allegedly immolated himself on Monday. A team of doctors conducted the post mortem at the Government District headquarters hospital here and videographed the process, but leaders led by Dalit leader P Chandrabose said they would take a decision on accepting the body only after seeing the post-mortem report.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-probe-into-church-employees-death-sought/article7609574.ece

[12] If the report suggested that it was a case of murder, police should immediately book those responsible for the murder and if it was a case of self-immolation, police should register a case against those who were responsible for the suicide, they said. “In any case, we will accept the body only after the case was transferred to the CB-CID,” C Arul Sabastian, son of Charles told The Hindu .

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-probe-into-church-employees-death-sought/article7609574.ece

[13] The villagers suspected foul play in the death as Charles as he had a rift with the church priests over carrying the flag at the festival on August 29. Before the post-mortem, the team held talks with Superintendent of Police N M Mylvahanan, who explained the line of investigation and assured that the investigation would be done in a fair manner by a Deputy Superintendent of Police (DSP) under his direct supervision. Later in the evening, the SP ordered that the investigation would be done by Ganapathy, DSP, District Crime Branch (DCB).

http://www.thehindu.com/news/national/tamil-nadu/cbcid-probe-into-church-employees-death-sought/article7609574.ece

[14] தமிழ்.பிபிசி, ஜாதி தேர்தலில் எரிந்து போன ஆலயத் தேர், ஆகஸ்ட்.16, 2015.

http://www.bbc.com/tamil/india/2015/08/150816_templecar_burnt

[15]தினத்தந்தி, சங்கராபுரம் அருகே கோவில் தேர் எரிப்பு:கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு; 144 தடைஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டது, மாற்றம் செய்த நாள்: திங்கள் , ஆகஸ்ட் 17,2015, 5:18 AM IST;பதிவு செய்த நாள்:திங்கள் , ஆகஸ்ட் 17,2015, 5:18 AM IST.

[16] எவிடென்ஸ் கதிர், சமூகச் செயல்பாட்டாளர், தொடர்புக்கு: info@evidence.org.in

[17] எவிடென்ஸ் கதிர், தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி, Published: August 29, 2015 08:53 ISTUpdated: August 29, 2015 08:53 IST.

[18]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article7593373.ece

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும் – தேர் எரிந்ததும், மனித உடல் எரிந்ததும் – சில ஊடகங்களின் பாரபட்சம் மிக்க செய்தி வெளியீடுகள் (1)

செப்ரெம்பர் 3, 2015

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும் – தேர் எரிந்ததும், மனித உடல் எரிந்ததும் – சில ஊடகங்களின் பாரபட்சம் மிக்க செய்தி வெளியீடுகள் (1)

Police deployed in front of St. Arulanandar Church at Oriyur in Ramanathapuram district on Tuesday 01-09-2015 -Photo-L. BALACHANDAR.

Police deployed in front of St. Arulanandar Church at Oriyur in Ramanathapuram district on Tuesday 01-09-2015 -Photo-L. BALACHANDAR.

ஓரியூர் அருளானந்தர் சர்ச் – ஞாயிற்றுக்கிழமை, 30-08-2015: திருவாடானை தாலுகா ஓரியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிறப்பு திருப்பலி, மறையுரை, மாதா மன்றாட்டு நிகழ்ச்சி, நோயாளிகள் மந்திரிப்பு, பாவ சங்கீர்த்தனம் போன்றவை நடைபெறும்[1]. அதேபோல, இந்த ஆண்டும் -2015- ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் ஆரோக்கிய அன்னை திருவிழாவிற்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பதட்ட நிலை ஏற்பட்டது[2]. திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவை யொட்டி, 30-08-2015 அன்று இரவு 7 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என, தலித் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், நேற்று மாலை கொடியேற்ற விழாவில், தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை எனக்கூறி, தலித் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு நடந்த சமாதான கூட்டத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு பிரச்னைகளை பேசிக்கொள்வோம் என ஆலய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தலித் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆலயத்தில் தினமும் சிறப்பு திருப்பலி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி செப்.,7 .2015 இரவில் நடைபெறும், என்று தினமலரில் செய்தி வந்தது[3]. ஆனால், திங்கட்கிழமை நிகழ்ச்சிகள் வேறுமாதிரி இருந்தன.

தேர்த்திருவிழா கலவரம் - சேஷசமுத்திரமும், ஓரியூரும்

தேர்த்திருவிழா கலவரம் – சேஷசமுத்திரமும், ஓரியூரும்

அலுவலக உறுப்பினளர் சர்ச் அருகே தற்கொலை செய்து கொண்டார்[4](தி இந்துவின் செய்தி): திருவாடானை அருகே, ஆலய திருவிழா தொடர்பாக, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தலித் பிரமுகர், உடல் கருகி, மர்மமான முறையில் இறந்தார். இதனால், கடைகள், பள்ளிகள் மூடப்பட்டன[5]. ஓரியூரில் உள்ள அருளானந்தர் சர்ச்சை [Arulanandar Church in Oriyur] சேர்ந்தவர் சார்லஸ் [Charles (55) of Pullur] புல்லூரைச் சேர்ந்தவர். சிவகங்கை டையோசிஸைச் சேர்ந்த அந்த சர்ச்சில் இவர் வேலை செய்து வந்தார், “பங்கு பேரவையின்” உறுப்பினராகவும் இருந்தார்[6]. 31-8-2015 திங்கட்கிழமை மாலையில் சர்ச் அதிகாரத்துடன் பேச்சு நடத்தி விவாதம் ஏற்பட்டதால், தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் கூறுகின்றனர்[7]. மேலும் போலீஸார், சார்லஸ் தன்னை எரித்துக் கொண்ட அதே இடத்தில் இறந்து விட்டதாகவும், அவரது கருகிய உடலை போஸ்ட் மார்ட்டம் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததனர், என்று கூறுகின்றனர்[8]. 29-08-2015 சனிக்கிழமை அன்று நடந்த பேச்சு வார்த்தையில் சார்லஸ் தலைமையில் கொடியேற்றம் செய்யப்பட்டு, விழா நடத்த முடியாது என்று சர்ச்-அதிகாரம் கூறிவிட்டது. அதனால், திங்கட்கிழமை தேர்த்திருவிழா நடத்தக் கூடாது என்று சார்லஸ் கேட்டுக் கொண்டார். ஆனால், சர்ச்-பாதிரியார் தேத்திருவிழாவை நடத்தியதால் அதை எதிர்த்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸார் விளக்கினர்[9]. இவ்வாறு பிரச்சினை கொலையா-தற்கொலையா என்று வெடித்தது.

சார்லஸ், லாரன்ஸ்

சார்லஸ், லாரன்ஸ்

தலித் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு – தினமலர் செய்தி: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில், ஆரோக்கிய அன்னை பிறந்த நாள் ஆலய திருவிழா நடத்துவது குறித்து, தங்களையும் அழைத்து பேச வேண்டும் என, தலித் கிறிஸ்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை, ஆலய நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். இது தொடர்பாக, ஒரு மாதம் முன், பாதிரியார் தலைமையில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தது. கடந்த ஆக., 29ல், ஆலய திருவிழாவிற்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது, தலித் கிறிஸ்தவர்கள், தங்களை அழைத்து பேசாததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவ்விழா பத்து நாட்கள் நடத்துவார்கள். ஓரியூர் அருகே, புல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ், 50; தலித் கிறிஸ்தவ அமைப்பில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர் தலைமையில், ‘ஆலய கொடியேற்றத்தில், நாங்களும் கலந்து கொண்டு கொடியேற்றுவோம்’ என, கூறியதால் பிரச்னை ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமரசம் செய்த பின், பாதிரியார் கொடியேற்றினார். இந்நிலையில், நேற்று முன்தினம், புல்லுார் கிராம மக்கள் சார்பில் திருவிழா நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, தேர் பவனி நடந்தபோது, ஆலயம் அருகில், கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதியில், சார்லஸ் தீ வைத்து கொண்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அனைவரும் சென்று பார்த்தனர். தீக்காயங்களுடன், சார்லஸ் இறந்து கிடந்தார். சார்லசை கொலை செய்து, தீ வைத்து எரித்ததாக கூறி, கிராம மக்கள், நேற்று, ஓரியூர் ஆலயத்தை முற்றுகையிட்டனர். இதனால், கிறிஸ்தவ ஆலயம், பள்ளிகள் மூடப்பட்டன; பஸ்கள் ஓடவில்லை. பாதிரியார் மீது தாக்குதல்: ஆலயத்திற்குள் புகுந்த சிலர், கோரிக்கைகளை வலியுறுத்தி, போஸ்டர்கள் ஒட்டினர். அறைக்குள் பாதிரியார் ஒளிந்திருப்பதாக கருதிய சிலர், அவரது அறை கதவை தட்டினர். மற்றொரு அறையில் இருந்த, முன்னாள் பாதிரியார் லாரன்ஸ் கபிரியேல், 75, மீது தாக்குதல் நடத்தினர். படுகாயமடைந்த அவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் நடந்த பேச்சில், ‘சார்லஸ் உடல் பிரேத பரிசோதனைக்கு பின், டாக்டர் சான்றிதழ்படி, கொலை வழக்காக மாற்றி, கொலையாளிகள் கைது செய்யப்படுவர்’ என, போலீசார் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்[10].

Oriyur Christian clash - one dead under mysterious circumastances DM - Coimbatore edition

Oriyur Christian clash – one dead under mysterious circumastances DM – Coimbatore edition

© வேதபிரகாஷ்

03-09-2015


 ————————————————————————————————————————————————

[1] http://www.dailythanthi.com/News/Districts/2014/09/09015402/Oriyur-Health-Mother-born-in-Sunset-Ceremony-terpavani.vpf

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1330062

[3] தினமமலர், ஓரியூர் புனித அருளானந்தர் ஆலய விழா கொடியேற்றத்தில் பதட்டம், ஆகஸ்ட்.30.2015, 00:11.

[4] The Hindu, Office-bearer commits suicide near church, Updated: September 1, 2015 05:52 IST.

[5] தினமலர், திருவிழாவில் மோதல்; கடைகள் அடைப்பு ,செப்டம்பர்.2, 2015, 01.45.

[6] The Hindu, Office-bearer commits suicide near church, Updated: September 1, 2015 05:52 IST.

[7] An office-bearer of parish priest, attached to Arulanandar Church in Oriyur, allegedly committed self-immolation after a dispute with the church authorities in celebrating the 10-day long annual ‘Arokkiya Annai’ birth anniversary, which began with flag hoisting on August 29. Police said that Charles (55) of Pullur, who had a dispute with the church authorities over carrying of the flag for the flag-hoisting ceremony, poured kerosene on his body and committed self-immolation behind the church late Monday evening.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/officebearer-commits-suicide-near-church/article7601602.ece

[8] Police said that Charles (55) of Pullur, who had a dispute with the church authorities over carrying of the flag for the flag-hoisting ceremony, poured kerosene on his body and committed self-immolation behind the church late Monday evening. Police said that he died on the spot and his charred body was brought to the District Headquarters Hospital here for post-mortem.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/officebearer-commits-suicide-near-church/article7601602.ece

[9] After he was denied permission to carry the flag in a procession on Saturday, Charles demanded that the car festival on Monday should not be held. When the priest went ahead with the procession stating he could not stop the traditional procession, he committed self- immolation in protest, police added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/officebearer-commits-suicide-near-church/article7601602.ece

[10] http://www.dinamalar.com/news_detail.asp?id=1332344