Posts Tagged ‘பறைச்சி’

பெரியார் – நாயக்கரா, பலிஜா நாயுடுவா, சூத்திரரா, தெலுங்கரா, கன்னடியரா, தமிழனா, திராவிடனா, யார்?

ஜூன் 23, 2019

பெரியார் நாயக்கரா, பலிஜா நாயுடுவா, சூத்திரரா, தெலுங்கரா, கன்னடியரா, தமிழனா, திராவிடனா, யார்?

EVK Ilangovan with EVR and parents-2

திராவிட அரசியலில் சூத்திரன் உருவான நிலை: சங்க இலக்கியத்தை சரித்திரமாக கொண்டு வரலாற்றுரீதியில் புத்தகங்கள் எழுதப்பட்டன. சங்க காலத்தை, சரித்திர காலமாக உலக அறிஞர்கள், அகழ்வாய்வு நிபுணர்கள் மற்றும் சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால், சங்க இலக்கியங்களில் சூத்திரன் என்ற சொல்லாடல் இல்லை, பிராமணன் என்ற வார்த்தையும் இல்லை அதேபோல திராவிடன் என்ற சொல்லும் இல்லை, ஆனால் ஆரியர் ஆரியர் போன்ற பிரயோகங்கள் 7 இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே புலையன், இழிபிறப்பாளர் மற்றும் துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை போன்ற புறநானூற்றின் குறிப்புகளை வைத்துக் கொண்டு பார்த்தாலும், சூத்திரன் போன்ற பிரயோகம் இல்லை. சுமார் 1000 வருடங்களுக்கு பிறகு தேவாத்தில் காணப்படுகின்ற சூத்திரன், வர்ணாசிரம சூத்திரன் ஆக முடியாது அதேபோல அதிலிருந்து ஒரு ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகு கல்வெட்டில் காணப்படும் சூத்திரர்கள், சூத்திரன் ஆக முடியாது எனவே 19-20ம் நூற்றாண்டுகளில் இவ்வார்த்தைக்கு வேண்டுமென்று விளக்கம் கொடுத்து அதனால் சூத்திரர் என்ற வார்த்தை சூத்திரன் ஆகி நான்காவது வண்ணத்துடன்  ஒப்புமை படுத்தப் பட்டது. ஒரு புதிய தவறான கருதுகோளை முன்வைத்து அரசியல் ரீதியாக அதனை உண்மையான சித்தாந்தம் போன்ற வழக்கில் ஏற்றி விட்டனர்.

EVK Ilangovan with EVR and parents

கல்வெட்டுகளில் காணப்படும்சூத்திரர்: கே. ஆர். அனுமந்தன்[1], “தமிழகத்தில் தீண்டாமை,” என்ற தனது ஆராய்ச்சியில், எவ்வாறு சூத்திரர், எஸ்.சிக்கள் முதலியோர், குறுநில மன்னர்களாக, தலைவர்கள், வீரர்களாக இருந்துள்ளனர், கோவில்களுக்கு தானம் வழங்கியிருந்தனர் என்பதையெல்லாம் சரித்திர ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[2]. ஆனால், எந்த ஆராய்ச்சியாளனும், இத்தகைய உண்மைகளை மறைப்பதால், பொய்மைகளையே உண்மை என்று நம்பிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு சில கொடுக்கப் படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள சோழமாதேவியில் உள்ள குலசேகரசுவாமி கோயிலில் சோழர்கள் காலத்திய பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றில், “பறையனான சூத்திர ராயன்” என்ற சொற்றோடர் காணப்படுகிறது.

  • “மன்றாடி பூசகரிலரைசன் பறையனான சூத்திர ராயனான பொய்யாத தமிழன்” (S.I.I. Vol. XXVI, No.241), (1203 – 1204 CE).
  • “மன்றாடி பூசகர் அச்சன் பறையனான சூத்திலராயனான பொய்யாத தமிழன்” (S.I.I. Vol. XXVI, No.243), (1202 – 1203 CE).
  • “மன்றாடி பூசகரிலரைசன் பறையனான பொய்யாத் தமிழ் நம்பி” (S.I.I. Vol. XXVI, No.239), (12th – 13th century CE).
  • “பறையனான சூத்திரராயன்” (S.I.I. Vol. XXVI, No.240), (12th – 13th century CE).

EVR attitude towards working caste

ஈவேராவின் ஜாதி என்ன?: ஈவேராவை கிருத்துவ மிஷினரிகள் [Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur. Dr. S.Robertson teaches Religions at Bethel Bible College, Guntur] – அவர் சூத்ரர்களில் மேலட்டுக்கில் நாயக்கர் ஜாதியைச் சேர்ந்தவர் [He belonged to the Naicker caste the upper stratum of the Sudras[3]] மற்றும் சிலர்[4] நாயக்கர் என்றும் குறிப்பிடுகின்றனர். கன்னட பலிஜ நாயுடு வகுப்பினர், ‘நாயக்கர்’ என்பது பட்டப்பெயர். .. என்றும் குறிப்புள்ளது[5]. இவர்களை ஈவேரா (பெற்றோரை) கன்னடிடய நாயக்கர் என்றும் நாயுடுகள் என்றும் வழங்குவர்[6]. மேலும் அம்பேத்கரையும், ஈ.வே.ராமசாமி நாயக்கர் குறைகூறியுள்ளார்[7], “…………டாக்டர் அம்பேத்கரை சுவாதீனம் செய்து கொண்டுவிட்டார்கள். பிராமணர்கள், சூத்திரன், பஞ்சமன் என்ற பிரிவு இருக்கக்கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதாடமல் செய்து விட்டார்கள்……. தனித் தொகுதியை ஓழிப்பதற்குக் கூட அவரால் தொல்லை நேராமல் பார்த்துக் கொண்டார்கள்”. அம்பேத்கருக்கு, சட்டப் படி, நிலைஎன்ன என்பது தெரியும் என்பதால் தான், எஸ்.சி, எஸ்.டி என்று குறிப்பிட்டார். ஜாதிகளை வைத்து சண்டை, சச்சரவுகள் உருவாக்க வேண்டும், அரசியல் செய்யவேண்டும் என்பது அவருடைய எண்ணம் அல்ல.

EVR, paraiyan, Gandhi, mastan

ஈவேரா பறையர்களை, மற்ற பட்டியல் ஜாதியினரை மதிக்கவில்லை: ஈவேரா தன்னை சூத்திரன் என்று சொல்லிக் கொண்டாலும், உயர் ஜாதித்துவ முறையில் தான் நடந்து கொண்டார். ஜின்னாவிடம் தோற்றார், அம்பேத்கரை விமர்சித்தார். ஆனால், அவர் “சூத்திரத்துவம்” பேசி தோல்வி கண்டார். உதாரணங்கள் சில கொடுக்கப் படுகின்றன:

  • ‘… என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.’’ (குடியரசு4.1926).
  • ‘திராவிடர் கழகம்’ என்பது, 4வது வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரம் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் கோடி மக்கள் சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும்.” (குடியரசு).
  • “……சாயபுகளும் பதவி விகிதாச்சாரம் பெற்று, ஷெட்யூல்டு வகுப்பாரும் பதவி உத்தியோகமும் கல்வி விகிதாச்சாரமும் பெற்று, மீதி உள்ளதில் பார்ப்பனர் ஏகபோகமாய் உட்கார்ந்து கொண்டால் – திராவிடனே அல்லது தமிழனே, அதாவது பார்ப்பானல்லாத, முஸ்லிம் அல்லாத, கிறிஸ்தவன் அல்லாத, ஆதித்திராவிடன் அல்லாத (ஷெட்யூல்டு வகுப்பார்) திராவிடனே! ‘சூத்திரனே!’ உன் கதி, உன் எதிர்காலம் என்ன ஆகும்? சிந்தித்துப்பார்! அரசியல் நிர்ணய சபையில் உனக்கு பிரதிநிதி எங்கே? ஷெட்யூல்டு வகுப்புக்கு, பார்ப்பானுக்கு, கொள்ளை அடிக்கும் வியாபாரிக்கு, கொடுமை முறை சங்கராச்சாரிக்கு அங்கே பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ‘நான் ஏன் சூத்திரன்’ என்று பதறுகிற திராவிடனுக்குப் பிரதிநிதிகள் எங்கே? சிந்தித்துப்பார்.(நூல் – இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து, 1947).
  • “இன்று சமுதாயத்தில் பார்ப்பனர், சூத்திரர், பஞ்சமர் என்ற மூன்று பெரும் பிரிவுகள் இருக்கின்றன. இதில் மேல்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பார்ப்பனனும், கீழ்சாதிக்காரன் என்ற காரணத்தினால் பஞ்சமனும் தங்களுக்கு வேண்டிய சலுகைகள் பெறுகின்றனர். ஆனால், இடையில் இருக்கும் சூத்திரர்கள் சலுகை இல்லாமல் வேதனைப்படுகின்றனர்.” (விடுதலை 16-4-1950).
  • 3.1963 ஆம் ஆண்டு “நாத்திகம்” வார இதழுக்கு ஆசிரியர் அவர்களுக்கு பகுதியில் “ஆதி திராவிடர்களும் பெரியாரும்என்ற தலைப்பில் கடிதமொன்றை எழுதினார். அது வருமாறு:துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான்! வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம்
    பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்.”
  • “நான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக்கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலையில்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?”[8]

EVR, not steady in any stand

1970களில் செத்து விட்ட சூத்திரன் மற்றும் காலமான பெரியார் ஈவேரா: கருணாநிதி, “சுத்திரன்” என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு, பார்ப்பன-எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால், பெரியாரிடம் இது எடுபடவில்லை. 24 டிசம்பர் 1973 அன்று இறந்து விட்டதற்குப் பிறகு, இவ்வார்த்தை பிரயோகம் குறைந்து, மறைந்து விட்டது எனலாம். விவாத-விவாதங்களில் மட்டும் குறிப்பிடப் படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது, கருணாநிதி, சில திமுக பேச்சாளர்கள் முரசொலியில், மேடைகளில்  “பாப்பாத்தி,”  என்றும் “ஆரிய அம்மையார்” என்று எதிர்மறை வாதங்கள் மூலம், தங்களது வெறுப்பைக் காட்டியுள்ளனர்[9]. இன்று யாரும் தமிழகத்தில் “சூத்திரன்” என்று சொல்லிக் கொள்ள யாரும் இல்லை. அம்பேத்கர் சிலைகள் அதிகமாகும் நிலையில், பெரியாரும் பிந்தள்ளப் படுகிறார்.

வேதபிரகாஷ்

19-06-2019

Caste abolition seminar -EVR casteism-old-10-11-2018

[1] Hanumanathan, K.R., Evolution of Untouchability in Tamil Nadu A.D. up to 1600, IHR 23/1–2, 1996–1997, pp.41–65.

[2] Hanumanthan, Krishnaswamy Ranaganathan. Untouchability: A Historical Study Upto 1500 AD: with Special Reference to Tamil Nadu. Madurai: Koodal Publishers, 1979.

[3] Robertson, S. “Periyar EV Ramasami’s critique of priestly Hinduism and its implications for social reforms.” Indian Journal of Theology 45 (2003): 75-87.

[4] Anita Diehl, Periyar E. V. Ramasami: A Study of the Influence of a Personality in Contemporary South india, B. J. Publications, 54. Janpath, New Delhi, 1978, p.19.

[5] ந. சுப்புரெட்டி, தந்தை பெரியார் சிந்தனைகள், யாழ் வெளியீடு, சென்னை, 2001, ப.136.

[6]  சாமி.சிதம்பரனார், தமிழர் தலைவர், சென்னை, 1939, ப.25.

[7] விடுதலை 10-07-1947.

[8] http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=07210509&week=jul2105

[9] https://dravidianatheism2.wordpress.com/2016/04/07/karunanidhi-attacked-and-getting-attacked-on-caste-basis/