Posts Tagged ‘எஸ்சி’

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

பட்டியலின மக்கள் பட்டியலில் 1950 இல் தலித் இந்துக்களைச் சேர்க்க முதல் உத்தரவு வந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது.  இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

30-08-2022 உச்சநீதி மன்ற தீர்ப்பும், கமிஷன் அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது[6].

அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை– 1950 தெளிவாக உள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.

சட்டப் பிரிவு 341-இன் கீழ் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

மூன்று அங்கத்தினர் கமிஷன் ஆராய வேண்டிய அம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:

* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.

* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.

* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.

மதம் மாறிய SCக்களுக்கு எப்படி SC அந்தஸ்து கொடுக்க முடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தமிழ்.இந்து, மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – மத்திய அரசு அமைத்துள்ள ஆணையத்தின் முழு விவரம், செய்திப்பிரிவு, Published : 08 Oct 2022 06:02 AM, Last Updated : 08 Oct 2022 06:02 AM.

[2] https://www.hindutamil.in/news/india/880117-sc-status-for-converts-full-details-of-the-commission-set-up-by-the-central-government.html

[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.

[4] தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழுமத்திய அரசு அறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST 

[5] https://tamil.news18.com/news/explainers/centre-sets-up-panel-on-sc-status-for-dalit-converts-815568.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை, By Mani Singh S Published: Saturday, October 8, 2022, 14:42 [IST]

[7] https://tamil.oneindia.com/news/delhi/commission-to-examine-and-decide-on-concessions-to-dalit-converts-central-govt-479570.html

[8]தினத்தந்தி, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன்மத்திய அரசு அமைத்தது, அக்டோபர் 8, 6:11 am.

[9]  https://www.dailythanthi.com/News/India/commission-set-up-by-central-government-to-examine-the-provision-of-concessions-to-dalit-converts-809695

[10] தினமணி, மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு, By DIN  |   Published On : 08th October 2022 12:28 AM  |   Last Updated : 08th October 2022 12:28 AM

[11] https://www.dinamani.com/india/2022/oct/08/sc-for-the-converted-dalit-community-3928696.html

சாதி ஒழிப்பு – முரண்பாடுகளும், தீர்வுகளும் – விவாத அரங்கம் – பேசிய பேச்சுகளும், அரைகுறை விவாதங்களும், மழுப்பப் பட்ட சித்தாந்த குறைகளும் – சரித்திர உண்மைகளை மறைத்த பேச்சாளர்கள்[4]

நவம்பர் 13, 2018

சாதி ஒழிப்புமுரண்பாடுகளும், தீர்வுகளும்விவாத அரங்கம்பேசிய பேச்சுகளும், அரைகுறை விவாதங்களும், மழுப்பப் பட்ட சித்தாந்த குறைகளும்சரித்திர உண்மைகளை மறைத்த பேச்சாளர்கள்[4]

Caste abolition seminar -TamilNeyan-10-11-2018

இந்தியா ஒழிந்தால் தான், ஜாதியம் ஒழியும் – 12.35 முதல் 12.50 வரை தமிழ்நேயன் பேசியது: தமிழ்நேயன் பேசும்பொழுது, தமிழரசன் மட்டும்தான் ஜாதியை ஒழிக்க ஒரு திட்டத்தை கொடுத்துள்ளார் என்று தன்னுடைய வாதத்தை ஆரம்பித்தார். இந்தியா என்ற தேசம் இருக்கும் வரையில், இந்து மதம் இருந்துகொண்டே இருக்கும். வேறுவிதமாக,  சொல்வதானால், இந்துமதம் இருக்கும் வரையில் இந்திய தேசம் இருந்துகொண்டே இருக்கும். அதனால் இந்து மதம் ஒழிந்தால் தான், ஜாதி ஒழியும், இதுதான் தமிழ்தேசிய கோட்பாடு, ஜாதியை ஒழிக்க முன்வைக்கப்படும் வாதமாகும். சீனிவாசராவ் போன்ற கன்னட பார்ப்பனர் முன்னமே “அத்துமீறி அடங்கமறு” என்றெல்லாம் சொல்லி, குரல் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக, அந்த உண்மை மறைக்கப்படுகிறது. அம்பேத்கராக் கூட, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வற்புறுத்தி செயல்பட்டாலும், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதே போல பெரியாரிஸவாதிகள், கலப்பு-திருமணம் செய்வதன் மூலம், ஜாதியம் குறைந்துவிடும் என்ற சித்தாந்தம் வலுபெற்றுள்ளது. ஆனால் இவ்வாறான கலப்பு திருமணங்கள், புதிய ஜாதி மற்றும் புதிய ஜாதிய அமைப்பு போன்றவற்றால் உருவாக்கப்படுகின்றன, உண்மையில், ஜாதிகள் அழிக்கப்படுவதில்லை அதேபோல கம்யூனிஸவாதிகளும், பெயருக்கான எந்த வரையறையும் கொள்கையும் செயல் திட்டமும் இல்லாமல் ஏதேதோ பேசி கொண்டு வருகிறார்கள் அதிலும் இப்போது LPG ஆதிக்கத்தில் இவற்றை ஆதரிக்கின்றனர் என்று சொல்லலாம். அதனால், ஜாதி அமைப்பை அழிக்க முடியாத நிலைதான் இருக்கின்றது.அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் போன்றவர்கள் தமிழர் மறுமலர்ச்சியின் முன்னோடி. கொள்கை போராளியாக பெரியார் உருவாகும் முன்னே , அவருக்கு முன்னோடியாக வர்ணாசிரமத்திர்க்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக போராடியவர் “அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர் ” என்ற வன்னியர். OC, BC, MBC, SC, ST என்றெல்லாம் சொல்லும் போதும், ஜாதியம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

Caste abolition seminar -LogaSankar-10-11-2018

இடைஜாதியினர் தான் ஜாதியத்திற்கு காரணம்லோக சங்கர் சிந்தனைப்பள்ளி, திருநெல்வேலி – 12.50 முதல் 1.20 வரை: இவர் பேசும் பொழுது ஜாதி திமிர், சாதி பெருமை என்பது எல்லா ஜாதிகளிலும் காணப்படுகிறது தீண்டாமை என்பது மிகவும் கொடூரமாக தான் செயல்படுகிறது. உதாரணத்திற்கு பாம்பே தொழிற்சாலையில், நூலிழை உற்பத்தி பகுதியில் எஸ்சிக்களை வேலைக்கு அமர்த்தப்பட முடியவில்லை. ஏனெனில் அவர்கள் தொட்ட அந்த நூலிழையை கூட மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இதனால் அவர்களுக்கு வேறு வேலை கொடுக்கப் பட வேண்டிய நிலை ஏற்பட்டது. நிதர்சனத்தில் குற்றங்கள் நடப்பதை, கவனிக்கும் போது மேல் ஜாதிக்காரர்கள், குறிப்பாக பார்ப்பனன் கீழ்ஜாதிக்கான் யாரையாவது கொலை செய்தான் என்று செய்தி வருவதில்லை. அதேபோல எஸ்.சிக்கள் தான் வன்கொடுமைகளுக்கு அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இடைஜாதிக் காரர்கள் தான், எதிராக இருக்கிறார்கள், அவர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு, வன்கொடுமைகளை செய்து வருகிறார்கள். எல்லா ஜாதியினரும், சேர்ந்துகொண்டு பார்ப்பனியத்தை எதிர்த்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் தாம், குற்றங்களில் குறிப்பாக ஜாதி சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டு உள்ளார்கள். அதனால் ஜாதி- ஜாதியத்தைத் தூக்கிப்பிடிக்கும் இந்த இடைஜாதியினரை, முதலில் கவனிக்க வேண்டியுள்ளது இவர்கள்தான் முதலில் மாற்ற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும். இரட்டை வாக்குரிமை கேட்டது அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதற்காக தனி தொகுதிகள் உருவாக்கப்பட்ட அல்லது அவற்றை சுழற்சிமுறை மூலம் பின்பற்றப்படாமல் உள்ளது பாராளுமன்றம், சட்டசபை முதலியவற்றிற்காக, தொகுதி ஒதுக்கீடு மூலம் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ராஜ்யசபைக்கு அத்தகைய இட ஒதுக்கீடு இல்லை. இவற்றையெல்லாம் நன்றாக கவனிக்க வேண்டும்.

Beef Food festival 10-12-2015 Osmania University

மதிய உணவில் மாட்டுக்கறி அரசியல் நடத்தப் பட்டது: பௌத்தத்திற்கு மாறினால், சாதியம் ஒழிந்து விடும், அம்பேத்கர் அப்படி செய்தார் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், பௌத்த மதத்தை பின்பற்றினால் அல்லது இந்து மதத்திலிருந்து விலகி அம்பேத்கர் சொன்னது போல, பௌத்த மதத்துக்கு மாறிவிட்டால், அஹிம்சாவாதியாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுகின்றது. சமீபகாலத்தில் மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் என்று வெளிப்படையாக, பசுவின் மாமிசத்தை தயாரித்து, அதனை எல்லோருக்கும் வினியோகம் செய்து, சாப்பிடுவது என்பது ஒரு புதிய நாகரிகமாகவே மாறிவிட்டது. அதனால் இந்தக் கருத்தரங்கிற்கு எல்லாம் பேசுபவர்களுக்கு அவர்கள் மட்டுக்கறி உள்ளது, சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டது வேடிக்கையாக இருந்தது. இதேபோல, பன்றி கறி சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது பௌத்தமதம் பின்பற்றுபவர்களிடையே, கேள்வியாக, வருமா வராதா என்பது அதிகமாகவே வேடிக்கையாக இருக்கிறது. 81 வயதில் புத்தர், தனது சீடன், சுண்டன்சமைத்துக் கொடுத்த பன்றிகறியை சாப்பிட்டதால், எலும்பு குடல்களில் சிக்கிக்கொண்டு, ரத்தப் பெறுக்கு ஏற்பட்டு இறந்துபோனார் என்றுள்ளது. இதனை அம்பேத்கரும் தனது புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார். பன்றி கறி சாப்பிடுவதற்கு தயாராக உள்ளதாக என்று அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டது போல வெளிப்படையாக சென்று தங்களது வீரத்தை வெளிப்படுத்தி கொண்டார்களா இல்லையா, என்று தெரியவில்லை. அதிலும் சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்கும் போது இத்தகைய மாட்டுக்கறி அரசியல் எல்லாம் கூட சேர்த்துக் கொண்டு இருப்பது திகைப்பாக இருக்கிறது.

Caste abolition seminar -Thyagu-10-11-2018

தமிழ் தேசியத்தால் ஜாதியம் அழியலாம்தியாகு பேசியது – 2.20 முதல் 3.00 மணி வரை: தியாகு பேசும்பொழுது இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தில், “We, the people of India” என்று உள்ளது ஆனால் உண்மையில் அது “We the peoples of India” என்றுதான் இருக்க வேண்டும். அதாவது இந்திய என்பது தேசம் என்ற நிலைக்கு இன்னும் வரவில்லை, “process of National formation” என்ற ரீதியில் தான் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்னால் இந்தியா என்ற தேசம் இல்லை. ஆகவே தமிழ் தேசியம் என்ற நிலையில் இருந்தால்தான் ஜாதியை ஒழிக்கப் படும், இதனால்தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டார். கீழ்ஜாதியினர்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைக்கவில்லை. அவர்கள் கற்றாழை சோறு தின்று கொண்டும், எலிக்கறி சாப்பிட்டுக் கொண்டுதான் சுற்றிக் கொண்டிருந்தார்கள் சுதந்திரத்திற்குப் பின்னும் ஜாதியம் வேலை செய்துகொண்டிருந்தது. அதனால் தான், அம்பேத்கரை சட்ட மந்திரியாகவும், சண்முகம் செட்டி நீதித்துறை மந்திரியாகவும், படேல் உள்துறை அமைச்சாரகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். ஆங்கிலேயர் காலத்திலும், தேர்தல் நடத்தப்பட்டது. பிராமணரல்லாத அரசியல்வாதிகள் முதலமைச்சராக இருந்துகொண்டு ஆட்சி செய்தனர். எனவே ஜாதி ஒழிப்பு என்பது சமூகத்தை மாற்றி அமைப்பது என்று சொல்லிக் கொண்டாலும், அது இல்லை ஜாதி ஒழிப்பு சாத்தியமே இல்லை எனும் போது அதற்கான வேலையை சரியாக செய்யவில்லை என்று தெரிகிறது. தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமை ஒழிப்பு, கலப்பு திருமணம் போன்றவை ஜாதி ஒழிப்பிற்கு ஓரளவு உதவுவானதாக இருக்கிறது. அதனால்தான் பெரியார் சொன்னபடி “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற ரீதியில், தமிழ்நாடு இந்திய தேசியத்தில் இருந்து விடுபட்டால்தான் ஜாதித்திற்கு தீர்வு காண முடியும் என்று சொல்லலாம்.

Caste abolition seminar -Kumaresan-10-11-2018.

குமரேசன் பேசியது – 3.10 முதல் 3.35 வரை: கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குமரேசன் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் பேச ஆரம்பிக்கும்போது “தேச விரோதிகளே, தேச துரோகிகளே, அர்பன் நக்ஸல்களே, ரூரல் நக்சல்களே” என்று ஆரம்பித்தார். கம்யூனிச ஆர்பாட்டங்களில், போராட்டங்களில் “போராளிக்கு தொழிலாளிக்கு ஜாதியில்லை, மதமில்லை” என்று உணர்ச்சி பொங்க, கூவி செல்லும்போது, தொழிலாளர்களுக்கு எல்லாம் ஜாதி இல்லை என்ற நினைப்பு ஏற்படும். ஆனால், உண்மையில் தொழிலாளர்களிடமும் ஜாதி இருக்கிறது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கம் போன்றவவை, வர்க்கபோராட்டத்தில் சுருக்கப்படுவதில்லை. இப்போது பொருளாதார நிலையில், ஜாதியம் என்பது முதலாளித்துவம் என்ற நிலையிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய-முதலாளித்துவமும் அத்தகைய ஜாதியத்தை உள்ளடக்கியே செயல்பட்டு வருகிறது. பிராமணியம் இடைஜாதிகள் மூலம்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இது மாமியார் மருமகள் விசத்தைப் போன்றது எந்த மதமுமே பெண்களை சமமாக நடத்துவதில்லை மதங்களும், ஜாதியமும் சேர்ந்திருப்பது உண்மையில் அதில் தான் அடங்கியுள்ளது. இதனால் சித்தாந்தவாதிகள் எல்லோரும் ஒன்றிணைந்து போராடவேண்டும். தமிழ்தேசியம் என்று இருப்பது போல மற்ற மாநிலங்களிலும் அந்தந்த மொழி தேசியம் இருக்கின்றது, இதனால் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டும் அப்போதுதான் ஜாதியம் ஒழியும் என்று கூறலாம்.

Caste abolition seminar -Arulmozhi-10-11-2018

திகவில் ஜாதியம் இல்லைஅருள்மொழி பேசியது – 3.40 முதல் 4.10 வரை: திராவிடகழகம், இப்பிரச்சனையை– சுயமரியாதை, சாதி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலை என்ற மூன்று காரணிகள் மூலம் அணுகுகிறது. பெரியார் இவற்றில் உறுதியாக இருந்து செயல்பட்டு வருகிறது தமிழகத்தில் கல்வி மற்றும் சமூக நீதி சிறந்துள்ளது என்றால் அதற்கு பெரியார் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும். தமிழகத்தில் பெரியார் போல, மற்ற மாநிலங்களில் சமூக மேம்பாட்டிற்காக நாராயணகுரு, பசவர் போன்றவர் பணியாற்றி உள்ளனர். சுயமரியாதை திருமணம் மூலம் ஜாதியம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஜாதி மறுப்புத் திருமணம் மற்றும் கலப்புத் திருமணம் திக, வெற்றிகரமாக நடத்தி வருகிறது இத்தகைய திருமணங்களில் ஒருவர் தலித் / எஸ்.சியாக இருக்கவேண்டும் என்றும் வற்புருத்தப்படுகிறது. திகவில் ஏன் ஒரு தலித் தலைவராக இல்லை என்று கேள்வி கேட்கப்படுகிறது. திகவில் யாரும் சாதி பார்ப்பதில்லை. வரதராஜன், சினக்க்த்தூசி, ஞானிபோன்றோர், பார்ப்பனர்கள் என்று பல பேருக்கு தெரியாது. அவர்களுடைய சித்தாந்தத்துடன் திக மாறுபட்டிருந்தாலும், அவர்களது முற்போக்கான கருத்துகளை நாங்கள் ஆதரித்தோம். திராவிடர் கழகம் இதில் உறுதியாக இருக்கிறது திக உறுப்பினர்கள் யாரும் தங்களது ஜாதி என்ன அல்லது வருபவர்கள் வருபவர்களிடம் ஜாதி என்ன என்றெல்லாம் கேட்கப் படுவதில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

13-11-2018

Caste abolition seminar -Audience-3-10-11-2018

“தலித்”துகளிடம் எஸ்.சிக்கள் படும் அவஸ்தை – ரோஹித் எஸ்.சி ஆனால் அவரது சகோதரன் பிசி, ஏனெனில் தாய் பிசி, ஆனால் தந்தை எஸ்.சி!

ஜனவரி 21, 2016

தலித்துகளிடம் எஸ்.சிக்கள் படும் அவஸ்தைரோஹித் எஸ்.சி ஆனால் அவரது சகோதரன் பிசி, ஏனெனில் தாய்  பிசி, ஆனால் தந்தை எஸ்.சி!

ரோஹித் பி.சி, எஸ்.சி அல்ல

ரோஹித்தலித்இல்லை பிசி என்ற வாதம்: ரோஹித் வேமுலா “தலித்”தா இல்லையா என்ற பிரச்சினை இப்பொழுது உருவெடுத்துள்ளது. ஆந்திரபிரதேச வருவாய்துறை கொடுத்துள்ள ஜாதி சான்றிதழின் படி, செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste (SC)] என்றுள்ளது. கே. சிவநாரயண மூர்த்தி, குண்டூர் மணலத்தின் தாசில்தாரின் டிஜிடல் கையொப்பத்துடன் உள்ள அச்சான்றிதழில் “மால” [మాలా] என்ற “செட்யூல்ட் காஸ்ட் ஜாதி” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோஹித் குண்டூரில் குர்ஜலா கிராமத்தில் பிறந்தவன். ஆனால் தெலுங்கில், ரோஹித்தின் தாயார் ராதிகா வேமுலா கொடுத்துள்ள ஒரு மனுவில், மகனின் ஜாதி “வடேரா” [వడ్డెరా] என்று குறிப்பிட்டுள்ளார். ஆந்திரபிரதேசத்தை பொறுத்த வரையில் “வெடேரா” என்பது பிற்படுத்தப்பட்ட [‘Vaddera’, a backward but not Scheduled Caste community in the state] ஜாதியாகும், செட்யூல்ட் காஸ்ட் ஜாதி ஆகாது[1]. இதை உள்ளூர் ஊடகங்களும் எடுத்துக் காட்டியுள்ளன[2]. சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில், ரோஹித்தின் பாட்டி எனப்படுகின்ற, ஒரு வயதான பெண்மணி, தாங்கள் எல்லோரும் “வெடேரா” சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதாக காணப்படுகிறது. “ரோஹித்தின் தந்தை மால, குர்ஜல ஊர்; தாய் வட்டெரா, குண்டூரு” என்று தெளிவாக கூறுகிறார்[3].

What is the caste of Rohit SC or BC- தெலுங்கு.2எஸ்சி மற்றும் பிசி கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தையின் ஜாதி என்ன?: ஒரு பிஜேபி தலைவர், ரோஹித் 2015ல் தான், தான் செட்யூல்ட் காஸ்ட் ஜாதி என்பதற்கான சான்றிதழுக்கு மனுசெய்து பெற்றுக் கொண்டாதாகவும், முன்னர் அவ்வாறில்லை என்றும் எடுத்துக் காட்டுகிறார். மேலும் அச்சான்றிதழில் ரோஹித்தின் பிறந்த தேதி ஜனவரி.30, 1989 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தெலிங்கானா போலீஸார் கிராமத்திற்கு இதைப் பற்றி விசாரிக்கச் சென்றுள்ளனர்[4]. ரோஹித்தின் தந்தை அவனை சிறுவயதில் விட்டு சென்றுவிட்டார். ஆனால், ஒரு குழந்தை அவன் அல்லது அவளது “தலித்” பெற்றோர் “தலித்” சுற்றுப்புற சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டால், அவன் அல்லது அவள் “தலித்” என்று எடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளதாக, காங்கிரஸ் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கே. ராஜு கூறுகிறார். உச்சநீதி மன்றத்தின் 2012 தீர்ப்பின் படி, கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைக்குரிய சலுகைகள், அவனது பெற்றொர்களில் ஒருவர் உயர்ஜாதி என்பதால் மட்டும் மறுக்க முடியாது என்றுள்ளது[5]. எஸ்.டி மற்றும் எஸ்.டி இல்லாத ஜாதியினர் கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் போது, கணவன் உயர்ஜாதியாக இருக்கும் போது, சந்தேகம் வரலாம். ஆனால், தாய் எந்த ஜாதியைச் சேர்ந்தவள் என்பதை வைத்துதான் குழந்தையின் SC/ST நிலை தீர்மானிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. இதனால், பன்டாரு தத்தாத்ரேயாவின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், இப்பிரச்சினை பற்றிய கேள்வி எழுப்பப்படலாம் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[6].

What is the caste of Rohit SC or BC- தெலுங்குரோஹித்தின் தாய் வடெரா, தந்தை மால என்று அரசு அதிகாரிகள் அறிந்தது: போலீஸார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 20-01-2016 புதன்கிழமை அன்று குர்ஜலாவுக்குச் சென்று, ரோஹித்தின் தாத்தா-பாட்டி, பள்ளி முதலியவர்களிடம் விசாரித்தனர். ராஜா சைத்தன்ய குமார் என்ற ரோஹித்தின் சகோதரனின் ஜாதி சான்றிதழை ஏபிவிபியினர் வெளியிட்டனர், அதில் அவனது ஜாதி “வடெரா” என்றுள்ளது. “வடெரா” என்பது கற்களை உடைக்கும் ஜாதி என்று பிறபடுத்தப்பட்ட ஜாதியில் வருகின்றது. இவ்வாறு சகோதர்களில் இருவன் எஸ்.சி மற்றோருவன் பிசி என்றுள்ளதை ஊடகங்கள் கவனித்து உஷாராகின. ரோஹித்தின் குடும்பத்தினர், தாய் ராதிகா பி.சி என்றும் தந்தை எஸ்.சி என்றும் கூறுகின்றனர்[7]. இருப்பினும் மகன் தாய் அல்லது தந்தையின் ஜாதியை ஏற்றுக் கொண்டு அதன்படியே சான்றிதழைப் பெறலாம் என்று வருவாதுறை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்[8]. ஆனால், ஒருவரே இரு இடத்தில், இரண்டு ஜாதிகளைக் குறிப்பிட்டு சான்றிதழைப் பெறலாமா என்று தெரியவில்லை. மேலும் ஒரே பெற்றொருக்குப் பிறந்த இரு மகன்கள் ஒருவர் பிசி என்றும் இன்னொருவர் எஸ்.சி என்றும் சான்றிதழ் பெறுவது சரியா என்றும் தெரியவில்லை.

Misusing this Hindu ignorance by Hindutva demagogues is understandable if unacceptableரோஹித்தலித்அல்லதுதலித் இல்லைஎன்பது ஏன் பிரச்சினையாகிறது?: “தி.நியூஸ்,மினூட்” என்ற ஊடகம், “இதற்கான விளக்கத்தை அறிய, நாங்கள் ரோஹித்தின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான சிட்டிபாபு படவலா என்பவரை சந்தித்தோம். அவர், “தந்தையின் ஜாதி தானாகவே அல்லது சட்டப்படி மகனின் ஜாதியாகிறது என்பது ஒரு இந்துவின் அறியாமை ஆகும். ஏனெனில் சட்டம் இதைப்பற்றி தெளிவாக்கியுள்ளது. பேற்றோர் வெவ்வெவேறான ஜாதிகளைக் கொண்டுருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தமக்கு வேண்டிய ஜாதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தகைய இந்துஅறியாமையை இந்துத்துவவாதிகள் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பது புரிந்துகொள்வதாக இருக்கிறது, ஆனால், ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், ஊடகங்கள் இடத்தையும், நேரத்தையும் இதற்கு ஒதுக்கி துஷ்பிரயோகம் செய்வது, இப்பொழுது பிரச்சினையாகியுள்ளது. உண்மையினை தாராளமாக சரிபார்த்துக் கொள்ளக் கூடிய நிலையில் ஊடகங்களின் விமர்சனம் உள்ளது”, என்றார்.

protest-in-hyderabad_not to politicize his deathஎஸ்சிக்கள் இந்துக்கள் என்றால், “தலித்” போர்வையில் இந்து-விரோதிகளாக எப்படியிருக்க முடியும்?: பெற்றோரின் ஜாதியை வைத்து குழந்தையின் ஜாதி தீர்மானிக்கப்படவில்லை என்று “இந்து-அறியாமை”யை எடுத்துக் காட்டும் அதிபுத்திசாலிகள், இந்துக்களுக்கு எதிராக ஏன் செயல்படவேண்டும்? அம்பேத்கர் சட்டப்படி இந்துமதத்தை எதிர்க்கவில்லை, இந்துக்களின் உரிமைகளை அப்படியே அரசியல் நிர்ணய சட்டப் பிரிவுகளில் வைத்தார். அதனால் தான் ஜாதி சான்றிதழ்கள் எஸ்.சி / எஸ்.டி என்று தான் கொடுக்கப்படுகின்றன. குறிப்பாக எஸ்.சி என்றால் இந்து என்றுதான் சட்டப்படி கொடுக்கப்படுகின்றன. அம்பேத்கர் விரும்பியிருக்காவிட்டால், ஜனாதிபதி ஆணை 1950 அவ்வாறி இருந்திருக்காது. ஆனால், அம்பேத்கர் பெயரைச் சொல்லி “தலித்” போர்வையில் உழலும் மாணவர்கள் தான் குழம்பியுள்ளார்கள்.

What is the caste of Rohit SC or BCஇந்துக்கள் என்றால், இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதன் நோக்கம் என்ன?: அம்பேத்கரைப் பின்பற்றாமல், தேசவிரோதிகளைப் பின்பற்றி வருகிறார்கள். அம்பேத்கரின் “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற புத்தகத்தைப் படித்தால், முஸ்லிம்களைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டிருப்பர். ஆனால், அம்பேத்கர் புத்தகங்களைப் படிப்பதில்லை. அடுத்தவர்கள் அம்பேத்கர் இப்படி சொன்னார், அப்படி சொன்னார் என்று கேட்டுக் கொண்டு, நம்பி, ஏமாறி, மற்றவர்களையும் ஏமற்றிக் கொண்டு, இந்தியாவையும் ஏமாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தான், “தலித்” போர்வையில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத முஸ்லிம்களுடன் கைகோர்த்துக் கொண்டு போராட வேண்டும்? குழப்பங்களை உருவாக்க வேண்டும்? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு அவர்கள் பதில் சொல்வதாக இல்லை. இப்பொழுது தாக்கப்பட்ட சுசில்குமாரும் “தலித்” என்கிறார்கள்.  கடைசியில் நாங்கள் “இந்துக்கள்” தான், ஆனால், அது “இந்துக்களுக்கு”ப் புரியவில்லை என்றால், அவர்களது காரியங்கள் அந்த அளவிற்குள்ளன என்பது அவர்களுக்கே தெரிந்துள்ளது. “தலித்” என்ற முகமூடி, போர்வை மற்றும் மாயை அவர்களது புத்தியை, மனங்களை குழப்பியுள்ளது. இதனால், அவர்கள் தங்களையும் குழப்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

© வேதபிரகாஷ்

21-01-2016

[1] Controversies over Rohith Vemula’s Scheduled Caste (SC) status continue even as a certificate from the revenue department of the Andhra Pradesh government shows he was a Dalit. The certificate bearing the digital signature of K Sivannarayana Murti, the tehsildar of Guntur mandal, states that Rohith belonged to the Mala community, categorised as Schedule Caste. A section of the BJP in Delhi pointed to a snapshot of a Telugu petition that suggested Rohith’s mother Radhika Vemula declared her other son as ‘Vaddera’, a backward but not Scheduled Caste community in the state.

The Hindustan Times, Contradictory claims over Rohith Vemula’s dalit identity, HT Correspondent, Hindustan Times, New Delhi,  Updated: Jan 21, 2016 00:42 IST.

[2] Nayanika, Unknown facts about Vemula Rohit and his caste, Jan 19, 2016, http://www.telugupopular.com/unknown-facts-about-vemula-rohit-and-his-caste/

[3] https://www.youtube.com/watch?v=84WfeBg2lmU

[4] An unverified video also popped up on social media where an elderly woman, claiming to be Rohith’s paternal grandmother, said they were Vadderas. “There are contradictory claims about the SC status of the student. The caste certificate was issued to Rohith in 2015. He did not apply for it earlier,” a BJP leader said. The SC certificate gives Rohith’s date of birth as January 30, 1989, but it mentions his name as ‘Rohit’. A Telangana police team has been sent to his village to ascertain the facts. http://www.hindustantimes.com/india/contradictory-claims-over-rohith-vemula-s-dalit-identity/story-UFgzqvGPUZZqYs3a71s5aK.html

[5] Congress leader K Raju, a former IAS from Andhra Pradesh, said, “His father had left Rohith at a very young age. But a Supreme Court order said if a child is brought up in a Dalit environment by his or her Dalit parent, he or she will be treated as a Scheduled Caste.” In 2012, the SC had ruled that children born out of inter-caste wedlock cannot be denied the benefits of reservation merely on the grounds that one of the parents belonged to an upper caste.

The Hindustan Times, Official certificate scotches doubts over rohit’s dalit identity,  Saubhadra Chatterji, Hindustan Times, New Delhi, Updated: Jan 20, 2016 14:48 IST.

[6] “This presumption may be stronger in the case where in the inter-caste marriage or a marriage between a tribal and a non-tribal, the husband belongs to a forward caste. But by no means the presumption is conclusive … It is open to the child of such marriage to lead evidence to show that he/she was brought up by the mother who belonged to the SC/ST,” the apex court had observed. The BJP leaders argued that the validity of the case against minister Bandaru Dattatreya would be questioned due to doubts about Rohith’s SC status.

http://www.hindustantimes.com/india/official-certificate-scotches-doubts-over-rohith-vemula-s-dalit-identity/story-6mppXAleTcXjSAyJfXK2VM.html

[7] Deccan Herald, AP officials verify Rohith’s caste, January.21. 2016. http://www.deccanherald.com/content/524242/ap-officials-verify-rohiths-caste.html

[8] http://www.deccanchronicle.com/current-affairs/200116/caste-of-rohith-kicks-off-storm-rohith-s-tiff-with-abvp-poster-goes-viral.html