Posts Tagged ‘தலித்-முஸ்லீம்கள். தலித்-காஃபிர்கள்’

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது – இந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளதுஇந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

முந்தைய அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட கமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2010ல் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம் மாறிய தலித்துகளுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்து மதத்தில் தான் தீண்டாமை பழக்கம் இருந்துள்ளதுகிறிஸ்தவ மதத்திலோ முஸ்லிம் மதத்திலோ தீண்டாமை வழக்கம் இல்லை. எனவே, இந்த மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரிய சலுகை அளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்து மதத்தை சேர்ந்த தலித்துகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். மதம் மாறிய தலித் குழந்தைகள், கான்வென்ட்டில் படிக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார் படேல் போன்றவர்கள் மதம் மாறிய தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை ஏற்கவில்லை.மதம் மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகை அளிக்கப்பட்டால் மேலும் மதமாற்றம் நடப்பது அதிகரிக்கும். இது ஆரோக்கியமான போக்கல்ல. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்த கமிஷன் அளித்த அறிக்கையை அமல்படுத்தக்கூடாது.அதே சமயம், புத்த அல்லது சீக்கிய மதத்தில் உள்ள தலித் என்கிறபோது அவர்கள் அடிப்படை வேறானதுசலுகை தொடர வேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].

2021ல் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சலுகை முடியாது என்று எடுத்துக் காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவின் படி முடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.

தமக்குள் ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இடவொதிக்கீடு கேட்கும் முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.

2008 – சதீஷ் தேஷ்பாண்டே கமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].

2024 தேர்தலும், பிஜேபி நிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தினமலர், மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை: பா.., எதிர்ப்பு, Added : மார் 27, 2010  04:29,

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=307

[3] தமிழ்.நியூஸ்.18, கிறிஸ்துவம், இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாதுசட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல், NEWS18 TAMIL, LAST UPDATED : FEBRUARY 13, 2021, 13:36 IST.

[4] https://tamil.news18.com/news/national/dalits-who-convert-to-islam-or-christianity-wont-get-quota-says-law-minister-in-rajya-sabha-aru-410541.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து: முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am

[6] https://tamil.indianexpress.com/india/ex-cji-named-head-of-panel-on-sc-status-for-dalit-converts-521852/

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

பட்டியலின மக்கள் பட்டியலில் 1950 இல் தலித் இந்துக்களைச் சேர்க்க முதல் உத்தரவு வந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது.  இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

30-08-2022 உச்சநீதி மன்ற தீர்ப்பும், கமிஷன் அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது[6].

அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை– 1950 தெளிவாக உள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.

சட்டப் பிரிவு 341-இன் கீழ் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

மூன்று அங்கத்தினர் கமிஷன் ஆராய வேண்டிய அம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:

* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.

* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.

* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.

மதம் மாறிய SCக்களுக்கு எப்படி SC அந்தஸ்து கொடுக்க முடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தமிழ்.இந்து, மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – மத்திய அரசு அமைத்துள்ள ஆணையத்தின் முழு விவரம், செய்திப்பிரிவு, Published : 08 Oct 2022 06:02 AM, Last Updated : 08 Oct 2022 06:02 AM.

[2] https://www.hindutamil.in/news/india/880117-sc-status-for-converts-full-details-of-the-commission-set-up-by-the-central-government.html

[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.

[4] தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழுமத்திய அரசு அறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST 

[5] https://tamil.news18.com/news/explainers/centre-sets-up-panel-on-sc-status-for-dalit-converts-815568.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை, By Mani Singh S Published: Saturday, October 8, 2022, 14:42 [IST]

[7] https://tamil.oneindia.com/news/delhi/commission-to-examine-and-decide-on-concessions-to-dalit-converts-central-govt-479570.html

[8]தினத்தந்தி, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன்மத்திய அரசு அமைத்தது, அக்டோபர் 8, 6:11 am.

[9]  https://www.dailythanthi.com/News/India/commission-set-up-by-central-government-to-examine-the-provision-of-concessions-to-dalit-converts-809695

[10] தினமணி, மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு, By DIN  |   Published On : 08th October 2022 12:28 AM  |   Last Updated : 08th October 2022 12:28 AM

[11] https://www.dinamani.com/india/2022/oct/08/sc-for-the-converted-dalit-community-3928696.html

“தலித்-முஸ்லிம்” கூட்டு, மாநாடு மற்றும் அரசியல்:  பொய் அறிக்கைகள், உச்சநீதி மன்ற தீர்ப்பு திரிப்புகள், செக்யூலரிஸ போர்வையில் மதவாத அரசியல் (2)

மே 8, 2018

தலித்முஸ்லிம்கூட்டு, மாநாடு மற்றும் அரசியல்பொய் அறிக்கைகள், உச்சநீதி மன்ற தீர்ப்பு திரிப்புகள், செக்யூலரிஸ போர்வையில் மதவாத அரசியல் (2)

Uday Narayanan Choudhary Patna

ஜூன் 24, 2018 அன்று பாட்னாவில்தலித்முஸ்லிம்மாநாடு: உதய் நாராயண சௌத்ரி என்ற முந்தைய பிஹார் மாநில சட்டசபை தலைவர் மற்றும் JDU கட்சிக்காரர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், முஸ்லிம்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு, “தலித்-முஸ்லிம்” மாநாட்டை ஜூன் 24ம் தேதி பாட்னாவில் நடத்த உத்தேசித்துள்ளார்[1]. மே 2018 முதல் வாரத்தில் ஒரு முஸ்லிம் மாநாடு நடந்ததில் மோடி அரசாங்கம் பலத்த விமர்சனத்துடன் தாக்கப் பட்டது[2]. இதெல்லாம் பிஜேபிக்கு எதிரான மற்றும் அதன் ஓட்டு வங்கியைக் குறைக்க போடுகின்ற திட்டம் என்று வெளிப்படையாக சொல்லப்பட்டது. இதனைக் கட்டுப் படுத்த பிஜேபி என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பிஹாரில் ஜிஹாதி தீவிரவாதம் அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில், இத்தகைய பிரிவினை சிததாந்தங்களினால், வேற்றுமை தான் அதிகம் வளர நேரிடும்.

Siddharamaiah, Lingayat- reservation politics

முஸ்லிம்கள் சீர்திருத்தங்களில் கவனம் செல்லுத்துவது மதஅடிப்படைவாதிகளுக்குப் பிடிக்கவில்லை: ஜனவரி 1, 2018 அன்று பீமா கொரேகாவில் எஸ்.சி-மற்ற ஜாதி இந்துக்களுக்கு இடையில் நடந்த மோதலை வைத்து, துலுக்கர் வலை விரித்துள்ளனர் என்று தெரிகிறது. நடந்த மாடுகளில் “மோடி எதிர்ப்பு” போர்வையிலும், அடிப்படைவாதிகள், தீவிர-சித்தாந்திகள், தேசவிரோத-சித்தாந்திகள் பங்கு கொண்டுள்ளது தெரிகிறது. மார்ச் 20, 2018 அன்று உச்சநீதி மன்ற தீர்ப்பை வைத்தும் துலுக்கர் வலை விரித்துள்ளனர், உண்மையில் சட்டம் நீர்க்கப்படவில்லை, இருப்பினும் அத்தீர்ப்பை திரித்து விளக்கம் கொடுப்பதும், ஊடகங்களில் செய்திகளாக வெளிவருவதும் தொடர்கின்றன. கலவரங்களில் எஸ்சிக்கள், துலுக்கருக்கு எதிராக செயல்படுவதைத் தடுக்க மௌலானா சித்திகி, பிரகாஷ் அம்பேத்கருடன் பேசியுள்ளது திட்டம் என்றே ஆகிறது. முத்தலாக் மற்ற முஸ்லிம் பெண்களுக்கு எதிராக உள்ள திருமண முறைகளை, அப்பெண்களே எதிர்த்ததுடன், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளதால், அவர்களுடைய ஓட்டு, பிஜேபிக்கு சென்றுவிடும் என்ற பயம் துலுக்கருக்கு வந்து விட்டது. மேலும், துலுக்க-குழந்தை கற்ப்பழிப்பாளி விவகாரங்களும், நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தட்டிக் கேட்பதும் முஸ்லிம்கள் தான். இதெல்லாம் மதவாத, அடிப்படைவாத துலுக்கருக்குப் பிடிக்கவில்லை.

Udaykumar, Rahul, tiruma

ஜூன் 2018ல் திருமாவளவன்ஒற்றுமைநாடாடு நடத்தபோகும் நிலை: திருமா வளவன், ராகுலை சந்தித்துப் பேசியதும் அந்த திட்டத்தில் அடங்கும், அதனால் தான் எஸ்சிக்கள் தமிழகத்தில் தாக்கப் படுகிறார்கள். திருமா வளவனின் படம் தாக்கப்பட்டதால் தான், தலித்-முஸ்லிம்கள் பதட்டம் உண்டாகியுள்ளது என்று “தி இந்து” எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் திருமா கண்டு கொள்ளவில்லை. ஆகவே, மே 1, 2018 அன்று ராகுல்-திருமா வளவன்-யச்சூரி சந்திப்பு, ஜூனில் சென்னையில் மாநாடு, என்பதெல்லாம் தொடரும் கலவர திட்டங்கள் போலிருக்கின்றன. ராகுல் சென்னைக்கு வந்தால் எப்பொழுதும் கருணாநிதியை பார்த்ததே இல்லை, ஆனால், இப்பொழுது ஸ்டாலினை சந்தித்த மர்மமும் திகைக்க வைக்கின்றன. இந்துத்துவவாதிகள்-பண்டிதர்கள் பிஜேபி எஸ்.சி பிரிவு மற்றும் காவி வீராதி-வீரர்-சூரர் முதலியோர் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை.

Marx manipulted, pro-muslim, communal report

அந்தோணி மார்க்ஸ் முஸ்லிம்களின் கூட்டோடு, மிக்க பொய்யான அறிக்கையை தயாரித்ததுமார்ச் 2013: பெரம்பலூரில் “தலித்-முஸ்லிம்” கலவரம் ஏற்பட்ட போது, “உண்மை அறியும் குழு” என்ற பெயரில்,

  1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
  2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR), புதுச்சேரி,
  3. பேரா. சே. கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL), காரைக்குடி,
  4. வழக்குரைஞர் கென்னடி, திருச்சி,
  5. வழக்குரைஞர் ஷாஜகான், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
  6. வழக்குரைஞர் அப்துல் காதர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,
  7. வழக்குரைஞர் அப்பாஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), மதுரை,

“அறிக்கை” வெளியிட்டார்கள்.

Dalit -Muslim unity- placard-2018

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள.களத்தூரில் சுமார் 6500 முஸ்லிம்கள், 3500 சாதி இந்துக்கள், 2000 தலித்கள் வசிக்கின்றனர், சமூக நல்லிணக்கத்துடன் காலங்காலமாக வசித்து வந்த இம்மக்கள் மத்தியில் மத அடிப்படையிலான மோதல்கள் 1951, 1984, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன. சென்ற பிப்ரவரி, 25 2013  அன்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் மாவட்ட ஆட்சியர் வசம் தம் குடும்ப அட்டைகளைக் கொடுத்துவிட்டு ஊரை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். 11-03-2013 அன்று சென்னையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டம் ஒன்றும் அவர்கள் சார்பாக நடத்தப்பட்டது”. அப்போது, அதில் பல பொய்யான விவரங்கள் இருந்ததுடன், முஸ்லிம் ஆதரவாக தயாரிக்கப் பட்டிருந்ததை, எஸ்சிக்கள் எடுத்துக் காட்டியபோது, அந்த தளத்தை நீக்கிவிட்டனர் –  கிளிக்கினால் “முடக்கி வைக்கப்பட்டுள்ளது” என்று வருகிறது[3]. அந்தோணி மார்க்ஸ் எழுத்துகள் “மார்க்சீய” தோரணை போன்று காணப்பட்டாலும், தனது கிருத்துவக் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் இருப்பதிலிருந்து, அவரது மத-அடிப்படைவாதம் நன்றாகவே புலப்பட்டது-படுகிறது. மேலே குறிப்பிடப் பட்ட மற்றவர் “மனித உரிமை” போர்வையில் உள்ள துலுக்கரின் ஆதரவாளர் மற்றும் துலுக்கர் தான். ஆகவே இத்தகைய, ஜோடித்த அறிக்கைகளை கவனமாக கண்கானிக்க வேண்டும்.

Siddharamaiah, Tipu Jayanti

நினைவு நாள், ஜெயந்தி, சமாதி முதலியவற்றை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது யார்?: திப்பு சுல்தானை வைத்துக் கொண்டு, கர்நாடகாவில், காங்கிரஸ் அதிகமாகவே அரசியல் செய்து வந்து கொண்டிருக்கிறது. அடுத்தது தெலிங்கானா மற்றும் தமிழ்நாடு செய்து வருகிறது. ஜெயந்தி கொண்டாடுவது, மணிமண்டபம் கட்டியது என்ற ரீதியில் இவையிரண்டும் செய்து வருகின்றன. ஜாதி தலைவர் நினைவு நாளை வைத்தும், தமிழக அரசியல்வாதிகள் கொண்டாடி வருகின்றனர். இதனாலும், ஜாதி வெறுப்பு-காழ்ப்பு-துவேசம் முதலியவை மறைமுகமாக வளர்க்கப் படுகின்றன. ஆக இவற்றில் ஒரு அமைதி குலைக்கும் மனப்பாங்குடன் உள்ள செயல்பாடுகள், திட்டமுறை, சதி-திட்டம், முதலியவை உள்ளது விளைவுகளில் வெளிப்படுகின்றன. “பேசுவது ஒன்று-நடப்பது வேறு” என்றுதான் உள்ளன. அந்நிலையில் தான், முஸ்லிம்கள் மற்றும் கிருத்துவர்கள் வந்து, தீ மூட்டி பலன் பெற திட்டங்களுடன் வந்து சேருகின்றனர். அவ்வாறு தான் அந்தோணி மார்க்ஸ் அறிக்கைகளும், “தலித்-முஸ்லிம்” மாநாடுகளும் இருக்கின்றன. ஆனால், அப்பாவி மக்கள் தான் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இவற்றால், உண்மையில், அமைதி கெடுகின்றது, தேச ஒற்றுமையும் பாதிக்கப் படுகின்றது.

Dalit riots- pune- Mumbai affected - Mewani

இடவொதிக்கீடு, சலுகைகள் முதலியவற்றை வைத்து அரசியல் பேரம், ஓட்டு வங்கி முதல்லியன: “தலித்” வார்த்தை பிரயோகம் கூடாது என்றெல்லாம், இத்தகைய பிரச்சினை வைத்துக்க் கொண்டு பிரச்சாரம் அதிகமாகிறது. எஸ்சிக்களும் பழங்குடி மக்களும் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இருந்தாலும், அதற்கேற்றபடி தங்களை தயார் செய்து கொள்ளாமல், இடவொதிக்கீட்டு முறையில் வேலை கிடைத்து, காலம் தள்ளாலாம் என்ற போக்கு தான் அவர்களனின்னும் பின்னுக்குத் தள்ளுகின்றன. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்ப்டுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாதி அடிப்படையில் தங்களுக்கு கல்வி – வேலைவாய்ப்பில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இப்படி கஷ்ட படாமல், தெருக்களில் வந்து கலாட்டா செய்வது, கலவரத்தி ஈடுபடுவது, போன்றவற்றில் ஈடுபட்கிறார்கள். இதனால், சமுதாயங்களுக்கு இடையே போட்டியும் பூசலும் ஏற்படுகிறது, என்பதனை விட, அரசியல்வாதிகளால் தூண்டி விடப் படுகின்றன. வன்கொடுமைச் சட்டங்களின் தீவிரத் தன்மையைக் குறைக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோருகின்றனர், என்று “தி இந்து” போன்றவையே திரித்து எழுதி வருகிறது. உச்சநீதி மன்ற தீர்ப்பை ஒழுங்காக படித்திருந்தால் அவ்வாறு எழுதப் பட்டிருக்காது.

© வேதபிரகாஷ்

08-05-2018

Tiruma meeting Yachuri 01-05-2018

[1] The Telegraph, Dal’s new Dalit rebel, Sanjeev Kumar Verma Apr 25, 2018 00:00 IST

https://www.telegraphindia.com/states/bihar/dal-s-new-dalit-rebel-225713

[2] https://www.telegraphindia.com/states/bihar/dal-s-new-dalit-rebel-225713

[3] http://www.peoplesrights.in/tamil/?p=623

“தலித்-முஸ்லிம்” கூட்டு, மாநாடு மற்றும் அரசியல்: உண்மையும், பொய்மையும், அரசியலும் (1)  

மே 8, 2018

தலித்முஸ்லிம்கூட்டு, மாநாடு மற்றும் அரசியல்: உண்மையும், பொய்மையும், அரசியலும் (1)

Ambedkar International conference, July 2017

ஜூலை 2017ல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆரம்பித்து வைத்த திட்டம்?: கர்நாடகாவில் எஸ்சி ஜனத்தொகை அதிகமாக இருக்கிறது என்பதால், சென்ற ஜூலை 2017ல், காங்கிரஸ் நான்கு கோடிகள் செலவில் அனைத்துலக அம்பேத்கர் மாநாடு நடத்தியது. அதில் ராகுல் காந்தி முதல் அமைத்து காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.  2018 தேர்தலை மனத்தில் வைத்துக் கொண்டு, எல்லா எஸ்சி இயக்கத்தினரையும், காங்கிரஸ் பக்கம் இழுக்கத்தான் அம்மாநாட்டின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. இருப்பினும், அவ்வியக்கங்களில் உள்ள வேறுபாடுகள், மாநாட்டு செயல்பாட்டில், கருத்தரங்க அமர்வுகளில், விவாதங்களில் வெளிப்பட்டன. அரங்கத்திலேயே, காங்கிரஸினால் எஸ்சிக்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்று குக்குரல் இட்டபோது, அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இருப்பினும், அவர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்கான வழிமுறைகள் அலசப்பட்டன. முடிவில், அது ஒரு பீஜேபி-எதிர்ப்பு மாநாடாக தோன்றியது. இதையும் இந்த்துவவாதிகள் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிந்தது.

Govind Gopal, Sambaji tombs 28-12-2017 - starting a riot

டிசம்பர் 28, 2017 – கோவிந்த கோபால் சமாதி அவமதிக்கப் பட்டது: பீமா கொரேகாவிற்கு அருகில் உள்ள, வது என்ற இடத்தில் / கிராமத்தில், கோவிந்த கோபால் என்ற மஹர் வீரரின் சமாதி உள்ளது. சிவாஜியின் மகன் சம்பாஜிக்கு, ஔரங்கசீப்பின் ஆணையை மீறி இறுதி சடங்குகளை செய்த, அவரின் சமாதி 28-12-2017 அன்று அவமதிக்கப் பட்டது. மஹர் சேனை, சம்பாஜி சேனை, மரத்தியர் சேனை என்ற பெயர்களில் சித்தாந்திகளில் கலவரங்களில் ஈடுபட்டனர். இதனால், பலர் கைது செய்யப் பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், அத்தகைய நபரே இல்லை என்று இன்னொரு குழு வாதிக்கிறது[1]. ஆக “நினைவு நாள்,” “சமாதி” போன்றவை கலவரத்தை உண்டாக்கப் பயன் படுத்துக் கொள்ளப்படுகிறது என்றாகிறது. அவ்விடம் பீமா-கொரேகாவிற்கு அருகில் தான் உள்ளது[2]. காங்கிரஸ் ஏற்கெனவே, இத்தகைய மாநில / உள்ளூர் பிரச்சினைகளை தேசிய ரீதியில் பெரிதாக்கி, 2019 தேர்தலில் லாபம் பெறலாம் என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது[3].Bima Goregaoan

ஜனவரி 1, 2018 – பீமா கோரேகாவ் போர் வெற்றி நாள் விழா கலவரமாக்கப் பட்டது: பீமா கோரேகாவ் போர் வெற்றி நாள் என்று ஜனவரி 1ந்தேதி, மஹாராஷ்ட்ரா எஸ்சிக்கள் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.  ஜனவரி 1, 1818 ந்தேதி, பூனாவை ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிக்க பேஷ்வா பாஜி ராவ்  II விரும்பி, படையை அனுப்பினார்.  அப்பொழுது ஆங்கிலேயரும் மராத்தியர்களை எதிர்க்க, ஒரு வலுவான சைனியத்தை அனுப்பினர். 12 மணி நேரம் நடந்த போரில், மராத்தியர் பின் வாங்க நேர்ந்தது. அப்பொழுது, ஆங்கிலேயர் படையில் மஹர் வீரர்கள் இருந்தனர்.  இதனை, மராத்தியர் மேல்ஜாதி அடக்குமுறையை மஹர் வெற்றிகண்ட நிகழ்ச்சியாக, “தலித்தியவாதிகள்” விளக்கம் கொடுத்தனர்[4]. வருடாவருடம் கொண்டாடுவது போல, இவ்வருடமும் கொண்டாடினர். 200வது ஆண்டு நினைவு நாள் என்பதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. வலதுசாரி அமைப்பினர், ஆங்கிலேயர் மராத்தியருக்கு எதிராக செயல்பட்ட நிலையில், அதனை “வெற்றி நாளாகக்” கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை என்று வாதாடினர். வாய்பேச்சு, கைச்சண்டையாகி, கலவரம் ஆகியது. போதாகுறைக்கு, இவ்வருடம் விக்னேஸ் மேவானி கலந்து கொண்டதால், வகுப்புவாத உணர்ச்சிகள் பொங்கின[5]. சில ஊடகங்கள் அதனை வெளிப்படையாகவும் செய்தியாக வெளியிட்டன[6].

Bima Goregaon -Mahar killed Beswas

வதுகிராமப் பிரச்சினை, புனே கலவரமாகி, மும்பையை பாதித்தது: புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது[7]. 02-01-2018 அன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது[8]. இதன் காரணமாக தானே, புனே உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேருந்து, கார், ஆட்டோ என பெரும்பாலான போக்குவரத்து முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. துலுக்க ஊடகங்கள் தமக்கே உரிய முறையில், “முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்க்க 2019 தேர்தலை நோக்கி,” என்ற ரீதியில், மாநாடுகள் நடத்தப் படுவதாக ஒப்புக் கொண்டன[9].

Bima Goregaon -Mahar killed 28,000 Beswas

தலித்முஸ்லிம் ஒற்றுமைமாநாடுகள்: “தலித்-முஸ்லிம் ஒற்றுமை” போர்வையில் துலுக்கர், மஹாராஷ்ட்ரா, உத்திரபிரதேசம், கர்நாடகா, தெலிங்கானா மாநிலங்களில் நடத்தி உள்ளனர். ஆனால் இந்துத்துவவாதிகள் மூச்சுக் கூட விடவில்லை. ஜமைத்-இ-இஸ்லாமி இந்த், மஜ்லிஸ்-இ-முஷாவரத், அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முதலியவை ஆதரவு கொடுத்து கலந்து கொண்டன. மஹமது மதானி பிரிவு தான் இவற்றை “தலித்-முஸ்லிம்க்ளுக்கான நீண்டகால கூட்டு தேவை” என்ற நோக்கில் முன்னின்று நடத்தியது. நான்கு முக்கிய மாநாடுகள் – தில்லியில் பிப்ரவரி 22, 2018; மார்ச் 8-பெங்களூரு; மார்ச் 10-கான்பூர்; மார்ச் 21-ஹைதராபாத் – நடந்துள்ளன.

  1. அம்பேத்கருடைய பேரன் பிரகாஷ் அம்பேத்கர்,
  2. மௌலானா ஆஜாத் உருது பல்கலையின் காஞ்சா இலையா,
  3. தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பின் அசோக் பாரதி,
  4. அகில இந்திய எஸ்டி இயக்கங்களின் கூட்டமைப்பின் பி.என். தெஜாவத்,
  5. ஶ்ரீ பெலிமட மஹாசஸ்தானத்தின் சிவருத்ர மஹாஸ்மாமிகலு முதலியோர் கலந்து கொண்டனர்.

உதாரணத்திற்கு சில அலசப்படுகின்றன. மற்றவையும், ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் இணைதளங்களில் காணப்படுகின்றன.

Dalit -Muslim conference - Hindustan Times - news-2018

07-04-2018 அன்று ஹைதராபாதில்மதவாத சக்திகளைஎதிர்த்து துலுக்கர் மாநாடு: அஸாதுதீன் ஒவைசி பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, 07-04-2018 அன்று, “தலித்-முஸ்லிம்”  [அவாமி ஏக்தா=தேசிய ஒற்றுமை] மாநாட்டில், “ஒவ்வொரு 15 நிமிடங்களில் ஒரு தலித் தாக்கப்படுகிறார், அவர்கள் மீது பதிவு செய்யப்படும் குற்றங்கள் 66% ஆக உயர்ந்துள்ளது. ….மோடி தலித்துகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்……..முஸ்லிம்களும் தாக்கப்பட்டு வருகிறார்கள். ஆகவே இரண்டு சமூகங்களும் ஒன்றாக சேரவேண்டும்ஆகையால் நாம் தலித் சகோதரகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டியுள்ளது,” என்று அடிக்கிக் கொண்டே போனார்[10]. தெலிங்கானா துணை முதல்வர் மொஹம்மது மக்மூத் அலி, எழுத்தாளர் ராம் புனியானி, ஜமாத்-இ-ஹிந்தின் தலைவர் அஷ்ரத் மதானி, முதலியோர் “மதவாத சக்திகளை” எதிர்த்து பேசினர்[11].

© வேதபிரகாஷ்

08-05-2018


Dalit riots- pune- Mumbai affected - TOI cutting

[1] It all began on December 28, when the tombstone of Dalit hero Govind Gopal at Vadhu was vandalised, leading to some 49 villagers being booked and nine arrested for an atrocity crime. According to one version of history, the Mahar community’s Govind Gopal defied Mughal emperor Aurangzeb to perform the last rites of Chhatrapati Sambhaji Maharaj, leading to his tombstone being built across that of the warrior king. On the other hand, a section of locals believes these two men never co-existed, leaving no reason to respect Govind Gopal for his deeds — this, many say, not only led to the desecration of his tomb last week, but also stoked the violence that followed.

Pune Mirror, Bhima Koregaon Violence: 2 versions of the past spark riots in present, By Prachee Kulkarni and Vijay Chavan, Pune Mirror | Updated: Jan 3, 2018, 09.57 AM IST

https://punemirror.indiatimes.com/pune/cover-story/2-versions-of-the-past-spark-riots-in-present/articleshow/62343010.cms

[2] The Hindu, State of conflict: on the Bhima-Koregaon violence, JANUARY 05, 2018 00:15 IST; UPDATED: JANUARY 04, 2018 23:45 IST

http://www.thehindu.com/opinion/editorial/state-of-conflict/article22369262.ece

[3] First Post, Bhima-Koregaon violence in Maharashtra: Path to 2019 Lok Sabha election will meander through social unrest, India Sreemoy Talukdar Jan 04, 2018 06:53:34 IST

[4] NDTV, Maharashtra Violence And The Battle Of Bhima Koregaon: A Backgrounder, Edited by Debjani Chatterjee | Updated: January 03, 2018 13:25 IST

[5] https://www.ndtv.com/india-news/maharashtra-violence-and-the-battle-of-bhima-koregaon-a-backgrounder-1795233

[6] https://www.firstpost.com/india/bhima-koregaon-caste-violence-in-maharashtra-path-to-2019-lok-sabha-election-will-meander-through-social-unrest-4285353.html

[7] மாலைமலர், புனே கலவரம்: மராட்டியத்தின் பல நகரங்களில் முழுஅடைப்புபொதுமக்கள் அவதி, பதிவு: ஜனவரி 03, 2018 09:49

[8] https://www.maalaimalar.com/News/National/2018/01/03094922/1138179/Bhima-Koregaon-Violence-in-Mumbai-and-Thane.vpf

[9] The Siasat Daily, Dalit-Muslim collaboration to fight injustice ahead 2019 general elections, April 21, 2018, 12:48 PM IST

https://www.siasat.com/news/dalit-muslim-collaboration-fight-injustice-ahead-2019-general-elections-1345432/

[10] The Hindu, Owaisi pitches for Dalit-Muslim unity, STAFF REPORTER, HYDERABAD, APRIL 07, 2018 23:34 IST; UPDATED: APRIL 07, 2018 23:34 IST

[11] http://www.thehindu.com/news/cities/Hyderabad/owaisi-pitches-for-dalit-muslim-unity/article23468991.ece

செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste] என்ற பிரயோகம் தான், சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனப்படியும் செல்லும் (1)

ஏப்ரல் 6, 2018

செட்யூல்ட் காஸ்ட் [Scheduled Caste] என்ற பிரயோகம் தான், சட்டப்படியும், அரசியல் நிர்ணய சாசனப்படியும் செல்லும் (1)

Census of India map - 1911

தாழ்த்தப் பட்ட ஜாதியினர், தீண்டப்படாதவர், பட்டியல் ஜாதியினர்: ஆங்கில அரசு தான் தாழ்த்தப் பட்ட ஜாதியினர் (depressed classes) வகுப்பினர் என்ற பிரயோகத்தை ஆரம்பித்தது. 1911ல் சென்சஸ் கமிஷனர் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதோர் என்று பிரிக்கும் போது, விலகப்பட்ட ஜாதியினர் [exterior caste] என்ற உபயோகம் இருந்தது[1]. அம்பேத்கர் உருவாக்கிய “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Backward Classes), அட்டவணை சாதிகள் (Scheduled Castes) மற்றும் பட்டிலில் இடப்பட்ட பூர்வகுடிகள் (Scheduled Tribes) என்றும் குறிப்பிடப் பட்டுள்ளன. 1920 மற்றும் 1935 காலகட்டத்தில் தாழ்த்தப் பட்ட வகுப்பினர் / ஜாதியினர் (“depressed classes”) என்ற பிரயோகம் இருந்தது. தீண்டத்தகாதோரை [untouchables], தாழ்த்தப் பட்டோர் [Depressed Classes], பட்டியல் ஜாதியினர் [Scheduled Castes], ஹரிஜன் மற்றும் அடிமை போன்றோர் [Servile – slave like Classes] என்றெல்லாம் உறிப்பிடப்பட்டனர்[2]. மேலும் தாழ்த்தப் பட்ட ஜாதியினர் (depressed classes) வகுப்பினர் என்பதை ஆங்கில அரசு தான் உபயோகப் படுத்தியது, காந்தி, ஹரிஜன் என்ற வார்த்தையை உபயோகித்தார். 1995ல் நான் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் விவரமாக விளக்கியுள்ளேன்[3].

Exterior caste, depressed class, Hrihan etc

தலித் உபயோகம், பிரயோகம், துஷ்பிரயோகம் திசைத் திரும்பியது: 1970களில் மராத்திய எழுத்தாளர்கள் மற்றும் தலித் பாந்தர் கட்சியினர், அவ்வார்த்தையை உபயோகித்தனர். இச்சொலின் மூலம் சமஸ்கிருதத்தில் உள்ளது. மராத்தி மற்றும் இந்து எழுத்தாளர்கள் “ஹரிஜன்” என்ற வார்த்தைக்குப் பதிலாக, தலித், துகித், பீடித், பிச்டே லோகோங் போன்ற சொற்களை, பிற்படுத்தப் பட்ட, அடிக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பாதிக்கப்பட்ட, போன்ற நிலையில் உள்ள மக்களைக் குறிக்க உரிச்சொல்லாக உபயோகப்படுத்தப் பட்டது[4].  சண்டாளன் என்ற வார்த்தை இருந்தாலும், அதனை உபயோகப் படுத்தப் படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 1967லிருந்து, தாழ்த்தப் பட்ட ஜாதியினர் மீது நடத்தப் பட்ட கொடுமைகள் அடுத்து, இலக்கிய பிரயோகம், ஊடகத்தினரால் அதிகமாக பிரயோகிக்கப் பட்டது[5]. பிறகு  1985ல் தலித் கிருத்துவர், உச்சநீதி மன்ற வழக்கில் தோற்றப் பிறகு, ஒரு தீவிரமான திட்டத்துடன் அப்பிரயோகம், பிரச்சார ரீதியில் முடிக்கி விடப்பட்டது.

Herbert Hope Risley

தலித்அம்பேத்கர் உபயோகப் படுத்தவில்லை, அது சட்ட விரோதமான சொல்லாடல் ஆகும்: அம்பேத்கரே இதனை உபயோகப் படுத்தினர் என்று “தலித்” சித்தாந்திகள் தாராளமாக பொய் சொல்வதுண்டு. பிறகு மறுத்த போது, இதை ஜோதி ராவ் பூலே என்கிறவர் அறிமுகப்படுத்தினார் என்று மாற்றிக் கொண்டனர். இதற்கும் ஆதாரத்தைக் கொடுப்பதில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாலே என்கிற சாதியில் வருகிற சத்திரிய ஜாதி வகுப்பைச் சேர்ந்த இவர், அழுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் (Suppressed) இச்சொல்லை உருவாக்கினார், என்றாள், அச்சொல்லைத்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். “மாலா” என்ற வார்த்தை, ஜாதி, தெலுங்கிலும் உண்டு. “அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது தவறுதலாக, பட்டியலின ஜாதிப்பிரிவினர் அரசியலுக்காக இந்தச் சொல்லை அந்தப் பிரிவில் இருக்கும் சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது”, என்று விக்கிபிடியா கூறுவதே வேடிக்கையாக இருக்கிறது[6]. அரசின் ஜாதி சான்றிதழ்களிலோ அரசு ஆணைகளிலோ இந்தப் பெயர் குறிப்பிடப்படுவதில்லை. அட்டவணை ஜாதிகள் என்றே குறிப்பிடப்படுகின்றன, ஏனெனில், அதுதான் சட்டமும், அம்பேத்கரின் திட்டமும் ஆகும்.

Herbert Hope Risleexterior caste

பட்டியல் சாதிகள், இனங்கள், பழங்குடிகள் அறிவிக்கப்படும், மாற்றப்படும் முறை: எஸ்.சிக்கள் இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரே சமூக, பொருளாதார, சமய நிலைகளில் இல்லை. அவர்களிலும் உயர்வு-தாழ்வு போன்ற உரையாடல்கள், பகிர்வுகள் மற்றும் நிலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு பட்டியல் இடப்பட்ட பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்களை வகைப்படுத்த / நுண் பகுப்புச் செய்யப்பட, அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் அனுமதி வழங்கலாம்[7]. சட்டவிதி 341 இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகள், இனங்கள், பழங்குடிகள் ஆகியவற்றுக்கு மாநில அரசுப் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு-எந்த விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு மாநில சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், தான் இயற்றும் சட்டத்தின் மூலம் நாடாளுமன்றம் வகைப்படுத்துதல் / நுண் பகுப்புச் செய்தல் முதலியவற்றை செய்ய, அரசியலமைச் சட்டத்திருத்தத்தின் மூலம் இச்சட்டப் பூர்வ அனுமதி வழங்கப்படும்.

NC for SC website

பட்டியல் சாதிகள், இனங்கள், பழங்குடிகள் அறிவிக்கப்படும், நீக்கப்படும் முறை: அதேபோல, பிரிவு 341 (2)ன் படி பட்டியலின ஜாதிகள் என்பது நிரந்தரமானது அல்ல. ஏனெனில், ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், பழங்குடிகள் மற்றும் சட்டவிதி 341 (1) மற்றும் (2)ல் கண்ட பட்டியல் சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பல்வேறு சாதிகள் மற்றும் குழுக்கள், அந்தந்த மாநில கவர்னருடன் கலந்தாலோசித்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் சட்டப்பூர்வ அறிவிப்பு ஆணை மூலம் நீக்கவும் அனுமதி வழங்கலாம்[8]. அதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஜாதிகள் என்ற அளவீடு அல்லாமல் சமூக பின்னடைவில் உள்ள சாதிகள் சேர்க்க படலாம் ஆனால் சலுகைகள் மூலம் முன்னேறிய ஜாதிகள் நீக்க படலாம். தமிழகத்தில் பட்டியலின ஜாதிகளை அரசு ஆணைப்படி ஆதிதிராவிடர் என்றும், அதற்கானத்துறையை ஆதி திராவிடர் நலத்துறை என்றும் இன்றுவரை வழங்கப்பட்டுவருகிறது. ஜாதி சான்றிதழ்களிலும் அப்படியே குறிப்பிடப்படுகிறது. பட்டியலினம் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், ஆந்திராவில், மாலா, மாதிக போன்ற ஜாதியினர் எஸ்.சி வகையில் உள்ளனர். ஆக, ஒரு மாநிலத்தில் எஸ்.சியாக இருப்பவர், இன்னொரு மாநிலத்தில் பி.சியாக இருக்கலாம். அதாவது “தலித்” ஆக முடியாது.

© வேதபிரகாஷ்

06-04-2018

Dalit, dalit-DALIT- in different languages

[1] Census of India (1911), Part – I, p.117.

[2] The reader will find that I have used quite promiscuously in the course of this book a variety of nomenclature such as Depressed Classes, Scheduled Castes, Harijans and Servile Classes to designate the Untouchables. I am aware that this is likely to cause confusion especially for those who are not familiar with conditions in India.

Ambedkar,What Congress and Gandhi have done to Untochables, Vol.9, Introduction, p.8

[3] Vedaprakash, Dalit- Precept, Problem and Politics, in “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114.

[4] The origin is definitely Sanskrit, initially used by the Marathi and Hindi writers in adjective form to describe the “Harijans”, as dalit, dhukit, pidit, pichde logon etc. to denote depressed, sorrowful, broken, affected, backward peoples.

[5] கீழ்கண்ட கொடுமைகள் மற்ற ஜாதியனரால், எஸ்.சிக்கள் மீது நடத்தப்பட்டன:

  1. In 1967, in Keelavenmani village in Thanjavur District of Tamilnadu, 44 Dalits were locked inside their huts and were burnt alive for the simple reason that they wanted a raise in their wages.
  2. In 1978, in Villupuram, 13 Dalits were killed when they rose up against their oppressors.
  3. In 1989, in the Bodi riots, the caste Hindus damaged the properties of Dalits and turned them into refugees.
  4. In 1991, in Tsundur in Andhra Pradesh 13 Dalits were killed and their bodies hacked to pieces.
  5. In the last two years (2001-2002), atrocities and violence against untouchables have been on the rise, particularly in South Tamilnadu, in Kodiyankulam, where the hatred and savagery of the caste Hindus manifested itself into attacks on Dalits and their properties.

[6] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D

[7] Article 341.—(1) The President may with respect to any State or Union Territory and where it is a State after consultation with the Governor thereof, by public notification specify the castes, races or tribes or .parts of or groups within castes, races or tribes which shall for the purposes of this Constitution be deemed to be Scheduled Castes in relation to that State . or Union Territory, as the case may be.

(2) Parliament may by law include in or exclude from the list of Scheduled Castes specified in a notification issued under clause of any caste, race or tribe or part of or group within_ any caste, race or tribe, but save as aforesaid a notification issued under the said clause shall not be varied by any subsequent notification.

[8] Article 342. Scheduled Tribes—(1) The President may with respect to any State or. Union Territory and where it is a State, after consultation with the Governor thereof by public notification, specify the tribes or tribal communities or parts of or groups within tribes or tribal communities which shall for the purpose of this Constitution be deemed to be Scheduled Tribes in relation to that State or Union Territory, as the case may be.

(2) Parliament may by law include in or exclude from the list of Scheduled Tribes specified in a notification issued under clause (1) any tribe or tribal community or part of or group within any tribe or tribal community, but save as aforesaid a notification issued under ‘the said clause shall not be varied by any subsequent notification.

1.2 Reservation in Services/ posts.—The relevant Articles of the Constitution which govern the entire reservation set up are the following :-

Article 16(4) “Nothing in this Article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.”

Article 46 “The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation.”

Article 335 “The claims of the members of the Scheduled Castes and the Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenane of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with • the affairs of the Union or of a State.”

 

தலித்-இஸ்லாமியர் கூட்டணியை உருவாக்குவோம்-திருமாவளவன்!

செப்ரெம்பர் 10, 2010

தலித்இஸ்லாமியர் கூட்டணியை உருவாக்குவோம்திருமாவளவன்:

ரமழான் / ரமலான் / ரமளான் / றமழான் / றமளான் / றமலான் பிரச்சினை: இவ்வருடம், முஸ்லீம்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ள கருத்து, அமைதியாக இருக்கவேண்டிய மாதம், அமைதியாக இருக்கவில்லை. உலகத்தில் பல இடங்களில், குறிப்பாக முஸ்லீம் வாழும் இடங்களில், முஸ்லீம் குழுக்களில், பலவித வேறுபாடுகளினால், குண்டுவெடிப்புகள், கொலைகள்……..என்று ஏற்பட்டிருக்கின்றன[1]. இதனால், உண்மையான முஸ்லீம்கள் மனம் நொந்து போயிருக்கிறர்கள். மனித குற்றங்களினால், இறைவனின் தண்டனையும் அதிகமாகிறது என்ற அளவில் பெரியவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்[2].

ரமழான் / ரமலான் / ரமளான் / றமழான் / றமளான் / றமலான்: அரசியலாக்கப்படும் பிரச்சினை: இந்தியாவில் இஃப்தார் விருந்து / ரோஜா இஃப்தார் விருந்து / ரோஸா இஃப்தார் பார்ட்டி என்றாலே அரசியல்தான் என்றாகிவிட்டது. அதிலும் தேர்தல் சமயம் என்றால் சொல்லவேண்டாம், இந்த பார்ட்டிகள் தடபுடலாக நடைபெறும். கூட்டணி, அமைச்சரவை மாற்றம், மந்திரி பதவி வேண்டல்-பரிந்துரை என பல இத்யாதிகள் பேசப்படும். உண்மையான முஸ்லீம்கள் இதை எப்படி அனுமதிக்கிறார்களோ தெரிவவில்லை. “காஃபிர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” எனும்போது, இது எப்படி சாத்தியம் ஆகும்? இந்நிலையில், திருமாவளவன் இப்படி பேசியுள்ளது, கவனிக்க வேண்டியதாக உள்ளது.

ரம்ஜான் பற்றி திருமாவளவன் அளிக்கும் விளக்கம்[3]: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், “இறைவனை[4] வணங்குவோம்; இல்லாதோருக்கு வழங்குவோம்என்னும் உயரிய கருத்தை உலகுக்கு உயர்த்தும் வகையிலான திருநாளாக ஈகைத் திருநாள் இஸ்லாமிய பெருங்குடி மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து இறைவனைத் தொழுது ஏழைஎளிய மக்களுக்கு உதவிகள் செய்து மாந்த நேயத்தை செழுமைப்படுத்தும் வகையில் ரமலான் மாதத்தின் நிறைவிலும்ஷவ்வால்மாதத்தின் துவக்கத்திலும் மூன்றாம் பிறை காணும் நாளில் ஈத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைமனித நேயத் திருவிழாஎன்றே அழைக்கலாம். இவ்விழாவின் உள்ளீடான கருத்தானது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பொருந்துவதாகும்.

இஸ்லாமியர்களும் தலித்துகளும் சமூகத்தளத்திலும், அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும்[5]: அத்தகைய சிறப்புக்குரிய ஈகைத் திருநாளில் இஸ்லாமியச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், இந்த மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் சமூகத்தளத்திலும், அரசியல் தளத்திலும் இணைந்து ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக வளரவேண்டும் என்றும் 2016ல் தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணியை உருவாக்கிட இந்நன்நாளில் உறுதியேற்போம் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுகிக்கிறோம்[6]. ‘உனக்கு’, ‘எனக்கு’ என்கிற இடைவெளியைத் தவிர்ப்போம் ‘நமக்கு’ ‘நமக்கு’ என்னும் நல்லுணர்வை வளர்ப்போம்!’’என்று கூறியுள்ளார் திருமா.

நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன்திருமாவளவன்[7]: திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் இஸ்லாமியர்களோடு இருப்பான். அரசியல் ஆதாயத்திற்காக பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எழும்பூரில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்காக 3 நாள் நோன்பு இருந்தார் திருமாவளவன்[8]. பின்னர் நேற்று விருந்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 ஆண்டுகளாக இப்தார் விருந்தை கொடுத்து வருகிறது.

நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை[9]: தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு நிரந்தர, நிலையான கூட்டணி எல்லா நிலையிலும் சமூக நிலையை உருவாக்குகின்ற வகையில் ஏற்பட வேண்டும். அந்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன். இஸ்லாமியர்களும், தலித்துக்களும் இணைந்து சமூக கூட்டணி உருவாக்க வேண்டும். அது ஒரு அரசியலில் மாற்றத்தை ஒரு கூட்டணியை உருவாக்குகின்ற எண்ணத்தில் திட்டமிட்டு செயல்படத் தொடங்கி இருக்கிறது. திருமாவளவன் வாழ்விலும், தாழ்விலும் உங்களோடு இருப்பான் அரசியல் ஆதாயத்திற்காக இங்கு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன். எனக்காக மட்டுமல்ல உங்களுக்காக, நமக்காக, எல்லோரையும் எவ்வளவு காலம் தோளில் சுமக்கிறோம். இவ்வளவு காலம் உழைத்தது போது இனி நமக்கு அதிகாரம் வேண்டும். 2016- சட்டசபை தேர்தலில் தலித்- முஸ்லிம் கூட்டணி உருவாகும். முஸ்லிம்கள் பல குழுக்களாக இருந்தாலும் ஒன்றாக இருக்க வேண்டும் இஸ்லாமிய மதம் கட்டுப்பாடுள்ள மதம். இதை வேறு எந்த மதத்திலும் பார்க்க முடியாது. நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை. தலைமை பண்பு கொண்டவர்கள் தேவை என்றார் திருமாவளவன்.

“நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள்: “நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை’, என்கிறாரே, என்ன அது? அதென்ன “நபிகள் நாயகம் போல்”, முஸ்லீம்கள் விளக்குவார்களா, ஒப்புக்கொள்வார்களா? “நபிகள் நாயகம் போல்”, எப்படி இன்னொருவர் வர முடியும்? அதிலும் “நபிகள் நாயகம் போல் தலைவர்”, வரமுடியும்? அதற்கும் மேலாக, “நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள்”, எப்படி-எப்படி முடியும்? இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, “நபிகள் நாயகம் போல் பல தலைவர்கள் தேவை’, என்கிறாரே, இணைவைக்கிறாரா இல்லையா என்பதனை முஸ்லீம்கள்தான் தீர்மானிக்க வேண்டும். முன்பு மதுரை ஆதினமும், இது போல சொன்னபோது, பொத்துக் கொண்டு வந்து விட்டதே முஸ்லீம்களுக்கு[10]. இப்பொழுது எப்படி அமைதியாக இருக்கிறார்கள்?

திருமாவளவனின் விஷமத்தனமான அரசியல்: திருமாவளவன் கிருத்துவர் என்றே அவரது நண்பர்கள் கூறுவர். சமீபத்தில்தான், குல்லா போட்டுக்கொண்டு, இவர் உலா வரும் வேளையில், முஸ்லீம்கள், இவர் மதம் மாறவும் தயாராக இருப்பது போல நினைத்து, “வாருங்கள்” என்றெல்லாம், சிவப்பு கம்பளம் விரித்தன. தந்தையார் காலமானபோது, சடங்குகள் செய்தபோது, அவர் மனத்தில் சில உணர்வுகள் எழத்தான் செய்தன. இருப்பினும், அரசியல் மாற்றங்கள் ஏற்படுகின்ற நிலையில், திடீரென்று, இப்படியொரு யுக்தியைக் கையாண்டுள்ளார் என்று தெரிகிறது. 2011லேயே இவரது அரசியல் நிலை தெளிவில்லாத நிலையில் இருக்கும் போது, 2016 என்று பேச ஆரம்பித்துவிட்டது வேடிக்கைதான்!

தலித் போர்வையில் / மாயையில் உழலும் அரசியல், மதமாற்றங்கள்: “தலித்” என்ற வார்த்தை, அரசியல் நிர்ணய சட்டத்தில் இல்லாதது மட்டுமன்றி மற்ற சட்டங்களிம் இல்லாததால், அதனை ஆவணங்களில் மாநில அரசுகள் பிரயோகிக்கக்கூடாது என்று தேசிய பட்டியல் ஜாதிகள் கமிஷன் / நேஷனல் செட்யூல்ட் காஸ்ட் கமிஷன் தனது சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளது[11]. ஆக சட்டத்திற்கு புறம்பாக ஒரு “தலித் மற்றும் இஸ்லாமியர் அரசியல் கூட்டணி” 2016ல் உருவாக்க, இப்பொழுதே குரல் கொடுக்கிறார் போலும்! எஸ்.சிக்கள் என்றாலே இந்துக்கள் தாம், ஆகவே, அவர்கள் மதம் மாறினால், எஸ்.சிக்களுக்கான சலுகைகளை இழக்க வேண்டும் என்று சட்டம் தெளிவாக உள்ளது. உச்சநீதி மன்றமும் தனது தீர்ப்புகளில், அதனைத் தெளிவாக வலியுருத்தி வருகின்றது. ஆக, இந்துக்கள்-முஸ்ல்லிம்கள் கூட்டணியை சட்டரீதியாக உருவாக்கப் போகிறாரா அல்லது சட்டத்திற்கு புரம்பான “தலித்-முஸ்லீம்” கூட்டணியை உருவாக்கப் போகிறாரா, என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இஸ்லாத்தால் சமூக உயர்வு ஏற்படுவதில்லை என்பதை இஸ்லாமே மெய்பித்துக் காட்டி வருகின்றது: இஸ்லாத்தைப் பற்றி அலச வேண்டிய அவசியம்-அவசரம் மற்றவர்களுக்கு தேவையை இந்திய அரசியல்வாதிகள்தாம் உருவக்கி வருகின்றார்கள். இஸ்லாம் உள்ள நாடுகளில், ஜாதிகள் உள்ளது, சில குறிப்பிட்ட முஸ்லீம் குழுக்களை கக்குஸ் / பாத்ரூம் கழுவுவது, போன்ற வேலைகளில் ஈடுபடுத்தத்தான் செய்கிறார்கள்[12]. அவர்கள், அதாவது அத்தகைய வேலையை செய்யும் முஸ்லீம்கள் மற்ற முஸ்லீம்களுடன் சரிசமமாக இருக்க முடியாது[13]. ஏன் மசூதிகளில் தொழமுடியாது. அவர்கள் தனியாக மசூதிகள் கட்டிக் கொண்டு தொழுதாலும், என்றாவது, அவை இடிக்கப்படும், அவர்களும் கொல்லப்படுவார்கள் என்ற நிலைதான் உள்ளது[14]. ஈரான், பாகிஸ்தான், இந்தோனேசியா, பங்களாதேஷம் முதலிய நாடுகளில் அவ்வாறு நடப்பது சர்வ சகஜமாக உள்ளது. சில வேளைகளில் அவர்கள் “முஸ்லீம் அல்லாதவர்கள்” அதாவது “காஃபிர்கள்” என்றும் முத்திரைக் குத்தப் பட்டு, அத்தகைய வேலைகளைக் கறந்து விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால், ஷேக்குகள் வீடுகளில் அடிமைகள் போலத்தான் வேலை செய்து வரவேண்டும். பெண்கள் என்றால், அவர்களுக்கு குஷி அதாவது வெலைசெய்ய வேலைக்கரி, ராத்திரியில் படுக்கையில் சல்லாபக்காரி[15]. இப்படித்தான் அங்கு “முஸ்லீம்களின்” நிலையுள்ளது. ஒருவேளை, முஸ்லீம்கள் அவர்களை “தலித்-முஸ்லீம்கள்”. “தலித்-காஃபிர்கள்”, “தலித்-ஜிம்மிகள்” என்று சொல்வார்களா?

தமிழகத்தில் “தலித்-முஸ்லீம்கள்”. “தலித்-காஃபிர்கள்”, “தலித்-ஜிம்மிகள்” கூட்டணி உருவகுமா? ஆக திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகள், உண்மையோடு தங்களது கருத்துகளை சொல்லவேண்டும். இந்துக்களை / செட்யூல்ட் காஸ்ட்டுகளை இப்படி ஏமாற்றக்கூடாது. அவர்களது உரிமைகளைப் பறித்து கஷ்டப்படுத்தக் கூடாது. இரட்டை வாழ்க்கை வாழுமாறு செய்யக் கூடாது. அதாவது, இடஒதுக்கீட்டிற்கு நான் இந்து, ஆனால் பின்பற்றும் மதம் இஸ்லாம் / கிருத்துவம் என்றால், அது மாபெரும் துரோகம் அல்லவா? முஸ்லீம்கள் அவ்வாறு இரட்டை வேடம் போட அனுமதிப்பார்களா? இந்துக்கள் / செட்யூல்ட் காஸ்ட்டு / ஆதி திராவிட இந்துக்கள் இவர்களின் ஏமாற்று வேலைகளைப் புரிந்து கொள்ளவேண்டும்.


[1] ஒரு கூகுள் தேடலில் இந்த விவரங்களைப் பார்த்து, படித்துப் புரிந்து கொள்ளலாம்.

[2] நம்பிக்கையாளர்களுக்கு என்றும் நம்பிக்கைதான், பகுத்தறிவு என்றேல்லாம் பேசி ஏமாற்றி, திராவிட அரசியல், நாத்திகம் முதலியவற்றை அங்கு பேச் முடியாது.

[3] http://thatstamil.oneindia.in/news/2010/09/09/karunanidhi-extend-ramzan-wishes.html

[4] அல்லவை வணங்குவோம், மற்ற கடவுளர்களை ஏசுவோம் என்றால், இந்திய செக்யூலரிஸம் எப்பதி இடம் கொடுக்கிறது?

[5] http://thatstamil.oneindia.in/news/2010/09/09/karunanidhi-extend-ramzan-wishes.html

[6] சரி, அவர் விட்டுவிட்டார், முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்வார்களா இல்லை உண்மையைச் சொல்லி, ஐயா காஃபிர்கள்கூட, நாங்கள் அப்படி உறவு வைத்துக் கொள்ளமுடியாது என்று கூறுவார்களா?

[7] தட் ஈஸ் தமிள், நான் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் பேசுகிறேன்திருமாவளவன், திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010, http://thatstamil.oneindia.in/news/2010/09/06/thirumavalavan-dalits-muslims-iftar-vck.html

[8] இந்த மூன்று நாள் நோன்பு என்ன சார்ட் கட் / குறுக்குவழியா?

[9] இணைவைக்கிறாரா இல்லையா என்பதனை முஸ்லீம்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

[10] எந்த மேடையிலும் பேச்சால் பொறி கிளப்பும் மதுரை ஆதீனம், தன்னுடைய தலைமையுரையில், “”பிறந்தநாள் கொண்டாடும் பெரியவாவை (ஜெயேந்திரர்) இயேசு வடிவத்தில் பார்க்கிறேன். ஏன்னா இயேசு சிவப்பா இருப்பார். இவரும் சிவப்பா இருக்கிறார். இவரை நபிகள் நாயகத்தின் அவதாரமா பார்க்கிறேன்” என மற்ற மதங்களை இழுத்துப்பேசியவர், ஜெயேந்திரர் நூற் றாண்டு வாழ, வந்திருந்தவர்களை கோஷம் போட வைத்தார்.

http://tamilheritage.wordpress.com/கிருத்துவ-முஸ்லிம்-மதங்க/

[11] National Commission for Scheduled Castes circular issued in the month of January 2008. After consultation with the legal department, the Commission said the “Dalit” word is neither constitutional nor the word has been mentioned in the current laws.

[12] WHO. ILO and other respectiove national documents prove that they have such people groups engaged in such menial works like scavenging, cleaning, disposal of dead, hospital waste etc.

[13] The Saudi Arabian nations have been consstent in their Acts and rules. Any vilation attracts severe punishment like death, lashes etc., and therefore, such Muslims or kafirs could not indulge in such activities or demand for any rights, which are available otherwise in other countries.

[14] The position of Shias, Ba’hais, Ahmeddhiyas and others could be noted. In Iran, Pakistan, Indonesia, Bangaladesh and other countries, they are hounded and killed on one pretext or the other. That even Taliban has been targeting them is inexplicable.

[15] இதைப் பற்றியெல்லாம் ஆயிரக்கணக்கான அறிக்கைகள் உள்ளன. எல்லாவற்றையிம் இங்குக் குறிப்பிடவேண்டியதில்லை. குறிப்பிட்ட ஆவணங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.