Posts Tagged ‘அட்டவணைச் சாதியினர்’

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது – இந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளதுஇந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

முந்தைய அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட கமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2010ல் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம் மாறிய தலித்துகளுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்து மதத்தில் தான் தீண்டாமை பழக்கம் இருந்துள்ளதுகிறிஸ்தவ மதத்திலோ முஸ்லிம் மதத்திலோ தீண்டாமை வழக்கம் இல்லை. எனவே, இந்த மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரிய சலுகை அளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்து மதத்தை சேர்ந்த தலித்துகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். மதம் மாறிய தலித் குழந்தைகள், கான்வென்ட்டில் படிக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார் படேல் போன்றவர்கள் மதம் மாறிய தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை ஏற்கவில்லை.மதம் மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகை அளிக்கப்பட்டால் மேலும் மதமாற்றம் நடப்பது அதிகரிக்கும். இது ஆரோக்கியமான போக்கல்ல. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்த கமிஷன் அளித்த அறிக்கையை அமல்படுத்தக்கூடாது.அதே சமயம், புத்த அல்லது சீக்கிய மதத்தில் உள்ள தலித் என்கிறபோது அவர்கள் அடிப்படை வேறானதுசலுகை தொடர வேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].

2021ல் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சலுகை முடியாது என்று எடுத்துக் காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவின் படி முடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.

தமக்குள் ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இடவொதிக்கீடு கேட்கும் முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.

2008 – சதீஷ் தேஷ்பாண்டே கமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].

2024 தேர்தலும், பிஜேபி நிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தினமலர், மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை: பா.., எதிர்ப்பு, Added : மார் 27, 2010  04:29,

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=307

[3] தமிழ்.நியூஸ்.18, கிறிஸ்துவம், இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாதுசட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல், NEWS18 TAMIL, LAST UPDATED : FEBRUARY 13, 2021, 13:36 IST.

[4] https://tamil.news18.com/news/national/dalits-who-convert-to-islam-or-christianity-wont-get-quota-says-law-minister-in-rajya-sabha-aru-410541.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து: முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am

[6] https://tamil.indianexpress.com/india/ex-cji-named-head-of-panel-on-sc-status-for-dalit-converts-521852/

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது!

பட்டியலின மக்கள் பட்டியலில் 1950 இல் தலித் இந்துக்களைச் சேர்க்க முதல் உத்தரவு வந்தது. ஜாதி அமைப்பு மற்றும் தீண்டாமை என்ற நடைமுறை இந்து சமூகத்தில் மட்டுமே இருந்ததாக அரசாங்கம் அறிவித்து மற்ற மதத்தவர்களை சேர்க்க முடியாது என்ற நிலை உள்ளது.  இதனை சூசை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா (Soosai vs UOI 1985 SC) உச்சநீதி மன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப் பட்டது. பின்னர் சீக்கியம் மற்றும் பௌத்தம் இந்து மதத்தின் கிளையாக கருதப்பட்டு அவர்களை மட்டும் பட்டியலின மக்கள் பட்டியலில் 1956 மற்றும் 1990 ஆம் ஆண்டுகள் முறையே இணைத்தனர்[1]. தவிர இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு 25ன் படி, இந்து என்றால் ஜைன, பௌத்த மற்றும் சீக்கியரும் அடங்குவர் என்றுள்ளது. அதனால், இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்திற்கு மாறியவர்களுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசு அறிவித்தது[2]. ஆனால், கிருத்துவர்கள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், கிருத்துவத்தில் நிறவெறி, நிறவெறித்துவம், பாகுபாடு முதலியவை இறையியல் ரீதியில் இருக்கின்றன என்பதனை பலநாடுகளில் பல நேரங்களில் மெய்ப்பிக்கப் பட்டுள்ளன[3]. இதனால், “விடுதலை இறையியல்” (Liberation Theology) என்ற போர்வையிலும் தங்களது நிறவெறித்துவத்தை மறைத்து ஆர்பாட்டம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

30-08-2022 உச்சநீதி மன்ற தீர்ப்பும், கமிஷன் அமைப்பும்: கடந்த ஆகஸ்ட் 30 2022 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஜாதி இடஒதுக்கீட்டை மதத்திலிருந்து பிரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது[4]. விசாரணையைத் தொடர்ந்து அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தலித் மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மூன்று வாரங்களுக்குள் சமர்பிப்பதாக உறுதியளித்தார்[5]. பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் போன்றவை இதை எதிர்த்து வந்தாலும், சில பிஜேபி எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்கள்-வருகிறார்கள். அரசியல் நிர்ணய சாசனப் பிரிவைத் திருத்த மூன்றில் இரண்டு ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவாக ஓட்டளிக்கவும் தயார் என்று கையெத்தும் போட்டதாக முன்னர் செய்தி வந்துள்ளது. இப்பொழுது, உச்சநீதி மன்ற விசாரணையினால், அதன் பேரில் கமிஷன்  அமைக்கப்பட்டுள்ளது[6].

அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை– 1950 தெளிவாக உள்ளது: நமது நாட்டின் அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950, இந்து, சீக்கிய, பவுத்த மதத்தை தவிர்த்து பிற மதங்களை சேர்ந்த ஒருவரும் எஸ்.சி. வகுப்பினராக கருதப்பட முடியாது என்று கூறுகிறது[7]. அதாவது ஜாதீய அமைப்பு, ஜாதி இல்லை என்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பிரகடனப் படுத்திக் கொண்டு வருகின்றன. சமத்துவம், சகோரத்துவம், எல்லோரும் சமம் என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு அவர்களுக்கு இடவொதிக்கீடு ஏன் என்று தெரியவில்லை. ஆகவே, ஜாதியின் பெயரில் அவர்கள் இடவொதிக்கீடு கேட்க முடியாது. அப்படி கேட்க வேண்டும் என்றால், தங்கள் மதங்களிலும் அத்தகைய ஜாதிகள், ஜாதிப் பிரிவுகள் உண்டு என்று வெளிப்ப்டையாக அறிவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. இருப்பினும், இஸ்லாமிய, கிறிஸ்தவ குழுக்கள் தங்கள் மதங்களுக்கு மாறியுள்ள தலித்துகளுக்கு எஸ்.சி. வகுப்பினருக்குரிய அந்தஸ்து, சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன[8]. ஆனால் இந்த கோரிக்கையை பா.ஜ.க. எதிர்க்கிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது[9], என்று முன்பே குறிப்பிடப் பட்டது.

சட்டப் பிரிவு 341-இன் கீழ் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது: இந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு ஒரு கமிஷனை அமைத்துள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த கமிஷனில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ரவீந்தர் குமார் ஜெயின், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியர் சுஷ்மா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கான கெசட் அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகார வழங்கல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 341-இன் கீழ் அவ்வப்போது வெளியிடப்படும் குடியரசுத் தலைவா் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை ஆய்வு செய்யும்[10]. மேலும், தலித் சமூகத்தினா் வேறு மதங்களுக்கு மாறிய பிறகு அவா்களின் பழக்கவழக்கங்கள், மரபுகள், அவா்களின் சமூக பாகுபாடு மற்றும் தாழ்வு நிலை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இவா்களுக்கு மீண்டும் எஸ்.சி. அந்தஸ்து அளிக்கப்படும்போது தற்போதைய எஸ்.சி. பிரிவினருக்கு ஏற்படும் தாக்கங்ளையும் ஆய்வு செய்து, அதுதொடா்பான அறிக்கையை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[11].

மூன்று அங்கத்தினர் கமிஷன் ஆராய வேண்டிய அம்சங்கள்: கமிஷனின் பார்வையில், கீழ்கண்ட அம்சங்கள் ஆராயவேண்டியுள்ளது:

* வரலாற்று ரீதியாக தாங்கள் எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 341-வது ஷரத்தில் குறிப்பிடப்படாத பிற மதங்களுக்கு மாறி உள்ளோம் என்று கூறுகிறவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து இந்த கமிஷன் ஆராயும்.

* தலித்துகள் மதம் மாறிய பிறகு, அவர்களது பழக்கவழக்கங்கள், மரபுகள், சமூக பாகுபாடு, தாழ்வு நிலை ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த முடிவினால் ஏற்படுகிற தாக்கங்கள் குறித்தும் இந்த கமிஷன் ஆராயும்.

* இந்த விவகாரத்துடன் பொருத்தமானதாக கருதும் மற்ற தொடர்புடைய கேள்விகளையும் மத்திய அரசுடன் கலந்தாலோசித்து அதன் ஒப்புதலுடன் கமிஷன் ஆராயும்.

மதம் மாறிய SCக்களுக்கு எப்படி SC அந்தஸ்து கொடுக்க முடியும்?: இந்த கமிஷன் டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும். இந்த கமிஷனின் தலைவர் பொறுப்பேற்றது முதல் 2 ஆண்டுகளுக்குள் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் மத்திய அரசின் ‘கெசட்’ (அரசிதழ்) அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தலித் மக்களுக்கு எஸ்.சி. வகுப்பினருக்கான அந்தஸ்து வழங்கினால், அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சலுகை, இவர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி நாட்டில் சில குறிப்பிட்ட இனத்தை ‘பட்டியலின மக்கள்’ என்று வகைப்படுத்தி அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பிக்கலாம். SC களாகக் கருதப்படும் ‘இனம், பழங்குடியினர், சாதிகள் அல்லது பிற குழுக்களை’ அடையாளம் காண ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் இதற்கு எவ்வாறு எதிர்வினை உரிவார்கள் என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தமிழ்.இந்து, மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. அந்தஸ்து? – மத்திய அரசு அமைத்துள்ள ஆணையத்தின் முழு விவரம், செய்திப்பிரிவு, Published : 08 Oct 2022 06:02 AM, Last Updated : 08 Oct 2022 06:02 AM.

[2] https://www.hindutamil.in/news/india/880117-sc-status-for-converts-full-details-of-the-commission-set-up-by-the-central-government.html

[3] Apartheid Enquiry Commission கூட இதனை இவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.

[4] தமிழ்.நியூஸ்.18, மதம் மாறிய தலித்துகளுக்கு எஸ்சி அந்தஸ்து? ஆராய குழுமத்திய அரசு அறிவிப்பு !, NEWS18 TAMIL, Published by:Ilakkiya GP, First published: October 08, 2022, 09:20 IST , LAST UPDATED : OCTOBER 08, 2022, 09:23 IST 

[5] https://tamil.news18.com/news/explainers/centre-sets-up-panel-on-sc-status-for-dalit-converts-815568.html

[6] தமிழ்.ஒன்.இந்தியா, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை, By Mani Singh S Published: Saturday, October 8, 2022, 14:42 [IST]

[7] https://tamil.oneindia.com/news/delhi/commission-to-examine-and-decide-on-concessions-to-dalit-converts-central-govt-479570.html

[8]தினத்தந்தி, மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய கமிஷன்மத்திய அரசு அமைத்தது, அக்டோபர் 8, 6:11 am.

[9]  https://www.dailythanthi.com/News/India/commission-set-up-by-central-government-to-examine-the-provision-of-concessions-to-dalit-converts-809695

[10] தினமணி, மதம் மாறிய தலித் சமூகத்தினருக்கு எஸ்.சி. அந்தஸ்து: ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு, By DIN  |   Published On : 08th October 2022 12:28 AM  |   Last Updated : 08th October 2022 12:28 AM

[11] https://www.dinamani.com/india/2022/oct/08/sc-for-the-converted-dalit-community-3928696.html

சாதி ஒழிப்பு – முரண்பாடுகளும், தீர்வுகளும் – விவாத அரங்கம் – பேசிய பேச்சுகளும், அரைகுறை விவாதங்களும், மழுப்பப் பட்ட சித்தாந்த குறைகளும் – சரித்திர உண்மைகளை மறைத்த பேச்சாளர்கள்[3]

நவம்பர் 12, 2018

சாதி ஒழிப்பு முரண்பாடுகளும், தீர்வுகளும் விவாத அரங்கம் பேசிய பேச்சுகளும், அரைகுறை விவாதங்களும், மழுப்பப் பட்ட சித்தாந்த குறைகளும் சரித்திர உண்மைகளை மறைத்த பேச்சாளர்கள்[3]

Caste abolition seminar -KUMAR-10-11-2018

கே.எஸ்.குமார் பேசியதுகம்யூனிஸ்டுகள் ஜாதி ஒழிப்புப் பற்றி பேசமாட்டார்கள் (11.25 முதல் 11.50 வரை): குமார் பேசும்பொழுது, தங்கள் கட்சியை பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்றெல்லாம்தான் குறிப்பிடுவர். நாங்கள் கம்யூனிட் பொதுக்கூட்டத்தில் சாதி ஒழிப்பு போன்ற கருத்துகளை பேசமாட்டோம். ஏனென்றால் 85சதவீதம் சாதி உணர்வுள்ளவர்கள்தான் இருக்கிறார்கள். அதனால் கம்யூனிஸ்டுகளான எங்களுக்கு ஓட்டு கிடைக்காது. அதனால் இப்படியான கருத்தரங்களில் பேச முடிகிறது, என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். சாதி ஒழிய தீர்வு இந்து மத த்தினுடைய சுருதி, ஸ்மிருதி ஆகியவற்றை ஒழித்துக்கட்ட வேண்டும். அது அண்ணலே சொன்னதுதான். அண்ணல் சாதி இந்துக்களுக்கு சொன்னது இது. பட்டியல் சமூகத்தவர்களுக்கு சாதி ஒழிய பௌத்தம் மாறுங்கள் என்று சொன்னார். தொடர்ந்து சாதி ஒழிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார். 2000வருடமாக தீண்டாமை உள்ளது என்று சொல்லப்படுகிறது அது உண்மையல்ல. 700 ஆண்டுகளாகத்தான் இது நடைமுறையில் உள்ளது. விஜயநகர பேரரசு வந்ததிலிருந்து இதை ஆரம்பிக்கலாம். சாதியம் ஒழிய வேண்டுமென்றால், இந்துமதம் அழிய வேண்டும், என்று அம்பேத்கர் பௌத்தத்தைத் தேர்ந்தெடுத்தது மஹர்களை பௌத்த மதத்தில் சேர்த்தார். ஆனால் பெருவாரியான எஸ்.சி மக்கள் அவரை பின்பற்றவில்லை.

Caste abolition seminar -Audience-10-11-2018

சுமார் 50-60 பேர் கலந்து கொண்டிருப்பார்கள்.

Caste abolition seminar -Audience-LHS-10-11-2018

அம்பேத்கரை பின்பற்றி எல்லோரும் பௌத்தத்திற்கு மாறவில்லை: அதேபோல சேரிகள் எனப்படுவது தாழ்த்தப்பட்டவர்களுக்கு (எஸ்.சி மக்களுக்கு) மட்டும்தான் உருவாக்கக்கப்படுகிறதே தவிர மற்ற ஜாதியினருக்கு இல்லை. பொதுவாக சேரிகள் இவ்வாறு உருவாக்கப்பட்டு, பிறகு அவை மற்ற காரணங்களால் மறைந்தாலும், இடம் இருந்தாலும், மறுபடியும் புதிய இடங்களில் புதிய சேரிதிகள் அதே மக்களுக்காக உருவாக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு சேரிகள் இல்லை. இதை அரசாங்கமும் ஊக்குவித்து வருகிறது ஓட்டு கிடைக்கும் என்பதால் புதிய சேரிகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தின் படி மக்களுக்கு தனி தொகுதிகளும் இருக்க வேண்டும், இரட்டை வாக்குரிமை கேட்டு போராடினர். ஆனால் அதை எதிர்த்து காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் என்று ஆரம்பித்து அம்பேத்கரை ஒப்பந்தத்திற்கு கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்தார். காந்தி எரவாடா சிறையில் இருக்கும் போது, பூனா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது[1]. மக்களின் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன இப்பொழுது கூட மதுரையில் நடந்த கொலை முதலில் சாதாரண கொலைக்குற்றம் என்றுதான் போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. பிறகு போராட்டத்தினால் அது பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது, பிறகு அழுத்தத்தினால்,  தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதாவது மக்களின் மீதான கொடுமைகளை அரசு அதிகாரம் முதலியவை மறைக்கவே செயல்பட்டு வருகின்றன.

Caste abolition seminar -Gulam Md-10-11-2018

குலாம் முகமது பேசியது 11.50 முதல் 12.10 வரை: தனது பேச்சை இறைவனின் திருப்பெயரால் என்றும், சத்தியமும் சமாதானமும் உருவாகுவதாக என்றெல்லாம் ஒரு இஸ்லாமிய பிரசங்க ரீதியில், தனது பேச்சை ஆரம்பித்தார். ராதாகிருஷ்ணன், இந்தியாவில் ஜாதி கட்டுப்பாடு 2000 வருடங்களாக இருந்து இன்னும் இரண்டாயிரம் வருடங்களுக்கு அது இருக்கும் என்று பதிவு செய்துள்ளார். இஸ்லாம் இங்கு வந்ததால் தான், சீதிருத்தகாரர்கள், இந்து மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினர். “பிரம்மா” என்ற ஒருத்துவ கடவுளும் உருவாக்கப்பட்டது[2]. இதனால் மதம் மாறுவது குறைக்கப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் ஜாதியும் ஒழிய வேண்டுமானால், மதம் மாற்றம் ஒன்றுதான் வழி. அம்பேத்கர் தான் இந்துவாக பிறந்தேன், ஆனால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று முடிவு செய்து, எந்த மதத்திற்கு மாற வேண்டும் என்று அலசிக் கொண்டிருந்த நேரத்தில், மூஞ்சே என்ற இந்துத்துவவாதி, அவரைச் சந்தித்து மூன்று நாட்கள் உரையாடி, சீக்கிய மதத்துக்கு மாறுங்கள், ஆனால் இஸ்லாம் அல்லது கிருத்துவ மதத்திற்கு மாறாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்[3]. கடிதம் மூலமாகவும் பதிவு செய்ததாக தெரிகிறது. இதனை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் எம்.சி. ராஜாவுக்கு சென்றதால், அவர் அக்கடிதத்தை வெளியிட்டார்[4]. பெரியார் கூட ஜாதியை ஒழிப்பதற்கு இஸ்லாம் தான் வழி என்று முன்னூறு தடவை சொல்லியிருக்கிறார். மனிதன் விடுதலை அடைய வேண்டுமானால், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். திருமாவளவன் மீனாக்ஷிபுரத்தில் நடந்த மதமாற்றத்தை பற்றி பி.எச்டி செய்து முடித்தால், அதை பற்றிய விவாதம் தொடங்கி உள்ளது. 35 வருடங்களுக்குப் பிறகு மதம் மாறிய இந்துக்கள் எவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்து உள்ளார்கள் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதனால் ஜாதி ஒழிய வேண்டும் என்றால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றெல்லாம் பேசி “லா இல இல்லல்லா,” என்று சொல்லிக்கொண்டே தனது உரையை முடித்துக்கொண்டார்.

Caste abolition seminar -Ramachandran-10-11-2018

பேராசிரியர் சி. ராமசந்திரன் 12.15 முதல் 12.20 வரை: பேராசிரியர் ராமச்சந்திரன் பேச ஆரம்பித்தவுடன், குலாம் அகமது இஸ்லாத்தில் ஜாதி இல்லை என்பதனை மறுத்து, சையது, ராவுத்தர் லெப்பை என்று பல ஜாதிகள் இருப்பததை எப்படி மறுக்க முடியும் என்று வெளிப்படையாக வினாவை எழுப்பினார்[5]. அதுமட்டுமல்லாது, புதியதாக மதம் மாற வரும்பொழுது, இதில் எந்த பிரிவில் வைப்பீர்கள் என்று வினா எழுப்பினார்[6]. அது மட்டுமல்ல, இஸ்லாத்தில் மதம் மாறிய தகித்துகள் சமமாக நடத்தப்படுவது இல்லை என்பதனையும் உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்[7]. வீடுகளுக்கு செல்லும்போது அவர்கள் ஒரு விதமாதமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். வீட்டிற்குள் எதுவரை உள்ளே செல்லலாம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதாவது அந்த நிலைமையை அவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஜாதிகளும் ஜாதியமும் இருக்கிறது நல்லதல்ல என்று, காந்தியும் அம்பேத்கரும் ஜாதியும் ஒழிய பாடுபட்டார்கள். ஆனால், மாறுபட்டார்கள். தொழிற்சாலைகள், குறிப்பாக பெரிய தொழிற்சாலைகள் இருக்க வேண்டும் என்று அம்பேதகர் பரிந்துரைத்தார். அதனால் ஓரளவுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் வேலைக்குச் செல்லும் போது, அவர்களது பொருளாதார நிலையும் உயரும், அதனால் ஜாதியும் அழியும் என்ற நிலையில் ஒப்புக் கொண்டார். ஆனால் காந்தி கிராம தொழில்கள், குறிப்பாக சிறு தொழில்கள், சிறு தொழிற்சாலைகள் முதலியவற்றை ஆதரித்தார். அதாவது கிராமங்களை காப்பாற்றுவது பொருளாதார நிலை உயரும் என்பது அவருடைய கொள்கை, என்று சுருக்கமாக பேசி தனது உரையை முடித்துக்கொண்டார்.

Caste abolition seminar -Yakkan-10-11-2018

யாக்கன் பேசியது – 12.20 முதல் 12.35 வரை: யாக்கன் என்பவர் பேசும் பொழுது, சாதி கட்டமைப்பு எப்படி, எங்கிருந்து, ஏன் உருவானது என்பதை பற்றிய கேள்விகளை எழுப்பினார். அதுமட்டுமல்லாது இந்த சாதி அமைப்பினை, கட்டுப்பாட்டை, தங்களது அதிகாரத்தை யார் வைத்திருக்கிறார்கள், செயல்படுத்தி வருகிறார்கள் என்பதையும் நாம் அலசிப் பார்க்க வேண்டும். அம்பேத்கர் இதைப் பற்றி மிகவும் ஆழமாகவும் அதிகமாகவும் ஆய்ந்து,  ஜாதியம் மற்றும் தீண்டாமைக்கு, இந்து மதத்தில் உள்ள தர்ம சாஸ்திரங்கள் தான் காரணம், என்பதனை தெளிவாக எடுத்துக் காட்டினார். இதனால்தான் அவர் தீண்டாமை மற்றும் ஜாதியம் ஒழிய வேண்டும் என்றால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார். இருப்பினும், இந்து மதத்தை அழிப்பது, இப்போது தனது குறிக்கோள் அல்ல, ஜாதிய முறையை, ஜாதியத்தை தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள் என்பதை வெளிப்படுத்தினார். அதனால் ஜாதியம் ஒழிய வேண்டுமானால் அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறினார். அம்பேத்கரை பின்பற்றி நாம் அக்கொள்கைகளை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். அப்படி என்றால் ஜாதியை ஒழிக்க முடியும். ஆகவே ஜாதியத்தை ஒழிக்க வேண்டுமானால் இந்து மதத்திலிருந்து விலகி, அம்பேத்கர் போன்ற பணிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

© வேதபிரகாஷ்

12-11-2018

Caste abolition seminar -Audience-backside-10-11-2018

[1] Poona pact, an agreement between Dr. Babasaheb Ambedkar and Mahatma Gandhi was signed 84 years ago on September 24, 1932. The agreement was signed by Pt Madan Mohan Malviya and Dr. B. R. Ambedkar and some Dalit leaders at Yerwada Central Jail in Pune, to break Mahathma Gandhi’s fast unto death.

What were the terms of the Poona Pact?

  • Seat reservation for the Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST) in provincial legislature
  • The STs and SCs would form an electoral college which would elect four candidates for the general electorate
  • The representation of these classes was based on the standards of joint electorates and reserved seats
  • About 19 per cent of seats were to be reserved for these classes in legislature
  • The system of election to the panel of candidates in both, Central and Provincial Legislature should come to end in 10 years, unless it ends on mutual terms
  • The representation of the classes through reservation should continue as per clauses 1 and 4 until determined, else by mutual agreement between the communities
  • The franchise for the Central and Provincial Legislatures of these classes should be indicated in the Lothian Committee report
  • There should be a fair representation of these classes
  • In every province, the SCs and STs should be provided with sufficient educational facilities.

[2] இதெல்லாம், பொதுப்படையான திரிபுவாதங்கள், “”பிரம்மம்” ஒன்றே என்பதெல்லாம், வேதங்களிலேயே உள்ளது. அதனால், முகமதியம் வந்துதான், அறியப்பட வேண்டிய தேவையில்லை.

[3] இது ஒன்றும் ரகசியம் அல்ல, 1936ல் மூஞ்சே-அம்பேத்கர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம், எல்லோருக்கும் அறிந்தது தான் Meenakshi Jain, THE RAJAH-MOONJE PACT: A FORGOTTEN ACCORD ON DEPRESSED CLASS RESERVATIONS, Proceedings of the Indian History Congress, Vol. 68, Part One (2007), pp. 912-920.

[4] The Rajah-Moonje Pact based on joint electorates with reservation of seats was criticized and opposed by Ambedkar. It was also repudiated by the All-India Depressed Classes Congress held at Kamptee in May 1932. This Congress stood behind Ambedkar and the minorities.

[5] Vedaprakash, Dalit – Precept, Problem and Politics, Published in “Dimensions of Conversion”, the Vivekananda Kendra Patrika, Vol. 24, Feb. 1995, pp. 98-114. இஸ்லாமும், ஜாதியும் என்பதன் கீழ்பார்க்கவும்.

[6] இஸ்லாத்தில் ஜாதி கட்டமைப்பு உள்ளது என்பதனை பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். மண்டல் தீர்ப்பிலேயே, எவ்வாறு நூற்றுக் கணக்கான ஜாதிகள் இருக்கின்றன என்பதனை எடுத்துக் காட்டியது.

[7] தேவையென்றால், ஜாதியுள்ளது என்று, இடவொதிக்கீடு கேட்பது, சச்சார் கமிட்டி அறிக்கையை அமூல் படுத்து என்றெல்லாம் பேசுவது, ஆர்பாட்டம் செய்வது, இன்னொரு பக்கம்ம் இப்ப்படி, பொய்களை அள்ளி வீசுவது என்று முகமதியர் இருப்பது திகைப்பாக இருக்கிறது.

‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ இவர்களில் யார் தலித்?

ஜனவரி 7, 2015

தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்இவர்களில் யார் தலித்?

Arunthati Roy book - Annihilation of Caste - released March 2014

Arunthati Roy book – Annihilation of Caste – released March 2014

இன்று இணைதளத்தில் இப்படியொரு குறிப்பு படிக்க நேர்ந்தது. “இந்திய இழிவு” கட்டுரையில் அருந்ததிராய் கீழ்க்கண்டவாரு சொல்கிறார், என்று ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார் : “இன்றைய இந்திய அறிவாளிகள் கூட வெளிப்படுத்தத் தயங்கும் உணர்வு நடையில் அம்பேத்கர் 1945இல் எழுதினார்: ‘தீண்டப்படாதோருக்கு இந்து மதம் கொடூர அரங்காய்த் திகழ்கிறது.’ ஓர் எழுத்தாளர் சக மனிதர்களை வர்ணிப்பதற்கு ‘தீண்டப்படாதோர்’, ‘அட்டவணைச் சாதியினர்’, ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’, ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்’ போன்ற பதங்களைப் பயன்படுத்த வேண்டியிருப்பது கொடூர அரங்கில் வாழ்வதை ஒத்ததே. அம்பேத்கர் ‘தீண்டப்படாதோர்’ என்னும் சொல்லைத் தயக்கமேதுமின்றி ஆழ்ந்த கோபத்துடன் பயன்படுத்திய காரணத்தால், நானும் அதையே செய்வேன். இன்று ‘தீண்டப்படோதோர்’ என்னும் சொல்லுக்கு மாற்றாக ‘தலித்’ (‘குலைந்துபோன மக்கள்’) என்னும் மராத்தியச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லோ ‘அட்டவணைச் சாதியினர்’ என்பதற்கு மாற்றீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அறிஞர் ரூப விஸ்வனாத் குறிப்பிடுவது போல் சரியான நடைமுறையன்று. ஏனென்றால் தலித் என்னும் பதத்துக்குள் சாதிக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க மற்ற மதங்களுக்கு மாறிய (என் கிராமத்தில் கிறித்துவத்துக்கு மாறிய பறையர் போன்ற) தீண்டப்படாதோரும் அடங்குவர். ஆனால் இவர்கள் ‘அட்டவணைச் சாதியினர்’ பதத்தில் அடங்க மாட்டார்கள். இப்படிக் கேடான ஒன்றுக்குப் பெயர்சூட்டும் சடங்கு ஒரு பக்கம் இருக்க, இந்த முயற்சியுங்கூட மூட அதிகாரிகளின் கோப்புக் குறிப்புகள் போன்று குழப்பமிக்கதாய் உள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு நான் எப்போதும் இல்லா விட்டாலும் பெரும்பாலும் கடந்தகாலம் தொடர்பாக எழுதுகையில் ‘தீண்டப்படோதோர்’ என்ற சொல்லையும், நிகழ்காலம் பற்றி எழுதுகையில் ‘தலித்’ என்ற சொல்லையும் பயன்படுத்துகிறேன். நான் மற்ற மதங்களுக்கு மாறிய தலித்துகள் பற்றி எழுதுகையில் தலித் சீக்கியர்கள், தலித் முஸ்லிம்கள் அல்லது தலித் கிறித்துவர்கள் எனக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.”,என்று ஒரு பிளாக்கில் குறிப்பிட்டிருந்தது[1]. சரி, என்ன விசயம் என்று வழக்கம்  போலா ஆராய்ந்து பார்த்தேன். பழைய விசய்ம் என்றாலும், இப்பொழுது எழுப்பப் பட்டுள்ளதாலும், இவ்விசயத்தைப் பற்றி எப்பொழுது வேண்டுமானாலும், விவாதிக்கலாம் என்பதாலும், இதைப் பற்றிய விவரங்களை பதிவு செய்கிறேன்.

Ramalingam-Arundhati Roy cannot hide from Hyderabad without answering.

Ramalingam-Arundhati Roy cannot hide from Hyderabad without answering.

தலித் அறிவிஜீவிகள் அருந்ததி ராயை எதிர்த்தது ஏன்?: “ஜாதியை ஒழித்துக் கட்டுவது எப்படி?” என்ற அம்பேத்கரின் புத்தகம், அருந்ததி ராய் எழுதிய முன்னுரை மற்றும் குறிப்புகளுடன் “மஹாத்மாவுக்கு ஒரு பதில் என்ற விதத்தில் நாராயண பதிப்பகத்தாரால் 2014ல் வெளியிடப்பட்டது[2]. அப்பதிப்பகம் தன்னுடைய இணைதளத்திலேயே பல விவரங்களைக் கொடுதுள்ளது[3]. ஹைதராபாதில் மார்ச்.9, 2014 அன்று நடக்கவிருந்த அப்புத்தக வெளியீட்டு விழா தலித்துகள் எதிர்ப்பார்கள்[4] என்ற அச்சத்தினால், ரத்து செய்யப்பட்டது[5]. தலித் அடிப்படைவாதிகள் அல்லது தீவிரவாதிகள் (Dalit Radicals), அருந்ததி ராய் அம்பேத்கரைப் பற்றி எழுத விரும்பவில்லை என்றும் கட்டுரைகள் உள்ளன[6]. அப்புத்தகம் தடை செய்யப் படவேண்டும் என்றும் சில தலித் இயக்கங்கள் குரல் எழுப்பின. மேலும் அந்த அருந்ததி ராய்-நாராயண திட்டம், ஒரு பார்ப்பன சதி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது[7]. அருந்ததி ராய், அம்பேத்கரை விட காந்தியைப் பற்றி முன்னுரையில் அதிகமாக எழுதியிருக்கிறார், மாவோயிஸ சித்தாத்திக்கு அம்பேத்கரைப் பற்றி எழுத முடியுமா,ஆம்பேத்கரைப் பற்றி எழுத அவருக்குத் தகுதி இருக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினர்[8]. அருந்தியின் பேட்டி[9] மற்றும் கட்டுரை[10] அவர்களால் எதிர்க்கப்பட்டன. காந்தியைப் பற்றிய அவரது எழுத்துகளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது அருந்ததியை எதிர்க்க வெறென்ன காரணம் இருந்தது என்று புரியாமல் தான் இருந்தது[11]. “தலித்” அறிவுஜீவிகள் ஒட்டு மொத்தமாக எதிர்த்தபோது, ஆதரவு, முஸ்லிம்-ஆதரவு இணைதளத்திலிருந்து வந்திருப்பது சிந்திக்க வைப்பதாக இருக்கிறது[12].

அருந்ததி ராய் எதிப்பு

அருந்ததி ராய் எதிப்பு

அருந்ததி ராய் –உயர்ஜாதி பெண்மணி என்று விமர்சிக்கப்பட்டது: முன்னுரையின் கடைசியாக, “தங்களை புரட்சியாளர் என்று கூறிக்கொள்பவர்கள் பிராமணிஸத்தை அடிப்படைவாதத்துடன் விமர்சித்தாலொழிய ஜாதியை அழித்துவிட முடியாது”, என்று குறிப்பிட்டது அவர்களை சீண்டியுள்ளது. இதனால், “ஒருவேளை ஜாதியை ஒழிப்பது எப்படி போன்ற விசயங்களை வெளிநாட்டுக்காரர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னால், இவர் தன்னுடைய உயர்ஜாதி பழக்கவழக்கங்கள் மற்றும் சலுகைகள் முதலியவற்றைக் காட்டிக் கொண்டே (தன்னுடைய பெயரில் ஜாதி அடையாளத்தை எப்பொழுதும் காட்டிக்கொண்டிருப்பதைப் பொல்ல) தலித் அரசியலுக்கு பங்களிக்கலாம்”, என்று முரளி சண்முகவேலன் என்பவர் நக்கலடித்து எழுதியுள்ளார்[13]. அப்புத்தகம் [The Doctor and the Saint] அம்பேத்கருக்கோ அல்லது தலித்துகளுக்கோ பயனுள்ளதாக இல்லை, மாறாக அவருக்கு பயனுள்ளதாக இருக்கலாம். அவருடைய செயல், ஒரு நவீன உலக ஏழ்மையான பெரும்பணக்காரன், உலகம் முழுவதும் பறந்து சென்று தன்னுடைய சேவைகளை ஏழ்மையினை குறைக்க செய்யும் முறையைப்போலத்தான் உள்ளது என்றும் கிண்டலடித்துள்ளார்[14].

தி டாக்டர் அன்ட் தி செயின்ட் புத்தகம்

தி டாக்டர் அன்ட் தி செயின்ட் புத்தகம்

அருந்ததி ராய் பதில் அளித்தது[15]: “தலித் கேமரா” என்ற பெயரில் மார்ச்.15, 2014 அன்று அருந்ததி ராயுக்கு “ஒரு திறந்த கடிதம்” என்று கேள்விகள் கேட்டு வெளியிடப்பட்டது[16]. அதற்கு அடுத்த நாளே அவர் பதிலளித்தார், “என்னுடைய முன்னுரையில் உள்ள பல விசயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளன. “செயின்ட்” போன்ற வார்த்தைகளை, அம்பேத்கர் எப்படி “மஹாத்மா”ஆன்ற வார்த்தையை உபயோகித்தாரோ, அவ்வாறே, நான் உயர்வு-நவிற்சியில் உபயோகப்படுத்தியுள்ளேன்……மஹர்கள் தான் அம்பேத்கரைப் பற்றி நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள், அதுபோல தலித்துகள் தான் அப்புத்தகத்திற்கு முன்னுரை எழுதமுடியும், மற்றவர் எழுதக் கூடாது என்ற வாதத்தை நான் மறுக்கிறேன்…. அதனால், நாளைக்கு பனியாக்கள் தாங்கள் தான் காந்தியைப் பற்றி எழுதலாம் அல்லது தலித்துகள் அம்பேத்கரைப் பற்றி எழுதக் கூடாது என்று சொல்லமுடியுமா?….அம்பேத்கர் தனது புத்தகத்தில் சமஸ்கிருத சுலோகங்களை மொழிபெயர்ப்பு இல்லாமல் கொடுத்துள்ளார். அதற்கு மொழிபெயர்ப்பைச் சேர்த்துள்ளேன். புரிந்து கொள்வதற்கு விளக்கம் கொடுத்துள்ளேன், இவையெல்லாம் குற்றமாகி விடுமா?…நான் ஜாதி-எதிப்பு கோணத்தில் தான் முன்னுரையில் எழுதியுள்ளேன்”.

Annihilation of the Caste - Ambedkar 1936 -Columbia University

Annihilation of the Caste – Ambedkar 1936 -Columbia University

ஜாதி எதிர்ப்பு, ஜாதி ஆதரவு இரட்டை நிலைப்பாடு: அம்பேத்கர் ஒரு புரட்சியாளராகவும் இருந்து, இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் தந்தையாகவும் இருப்பது முரண்பாடாக உள்ளது என்று சிலரால் சுட்டிக்காட்டப்பட்டது[17]. அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவிய போதும், அது நிர்ணயச் சட்டத்தின் 25வது பிரிவில் இந்து-ஜைன-பௌத்த-சீக்கிய என்று ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளதை சிலர் எடுத்துக் காட்டினர்[18]. குறிப்பாக ஆங்கிலத்தில் உள்ள அவரது சொற்றொட்ர்கள், சொல்லாடல்கள், முதலியவை விமர்சனத்திற்கு உள்ளாகியது[19]. அவரது நவீன, மேற்கத்தைய பொருளாதார கொள்கைகள் ஆதரிப்பு அதிகமாகவே சட்டப்பட்டது. “நவீன வாழ்க்கை, நகர நாகரிகம் முதலியவை தலித்துகளை மாற்றியமைக்கலாம், ஆனால், அவர்கள் பட்ட துன்பங்கள், கொடுமைகள் முதலியவற்றின் வடுக்கள் மறைந்து விடாது…………..இந்நாட்டு தொழிற்முறைகள் மறைந்தது, அடித்தட்டு ஜாதிகளை அதிகமாகவே பாதித்திருக்கின்றது………..” போன்ற கருத்துகள் எடுத்துக் காட்டப்பட்டன[20]. ஏற்கெனவே, “காரவன்” என்ற பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரை, (அருந்ததியின் முன்னுரை முழுவதும் உள்ளது) சர்ச்சயினை கிளப்பி விட்டது[21]. குறிப்பாக காந்தி மற்றும் அம்பேத்கர் உரையாடல்களில் உள்ள வர்ணாஸ்ரமம் மற்றும் ஜாதிமுறை விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது. ஜாதியை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டு, எல்லா கட்சிகளும் ஜாதி அடிப்படையில் தான் எல்லாவற்றையும் செய்து வருகின்றன என்ற உண்மைதான், கடந்த 67 ஆண்டுகளாக கவனிக்கப்பட்டு வருகிறது.

© வேதபிரகாஷ்

07-01-2015

[1]http://raattai.wordpress.com/2015/01/06/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%A9/

[2] A Reply To The Mahatma– Excerpted from Annihilation of Caste: The Annotated Critical Edition, published by Navayana, New Delhi.B.R. AMBEDKAR

[3] http://navayana.org/product/annihilation-of-caste/#_amscckbx

[4] “……And yes, the launch was cancelled by Navayana for a number of reasons, including an SMS that was circulated that said: “Save Ambedkar writings. Oppose Navayan publication. Annihilation of Caste is our holy book. Arundhati Roy and Anand. S contaminated it. Participate in the protest on 9th March at Sundaraiah Vigynana Kendram, Hyderabad.” From Arunthati’s letter.

http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=7284:arundhati-roy-replies-to-dalit-camera&catid=119&Itemid=132

[5] Strangely, some Dalit radicals and intellectuals have a problem with Arundhati Roy reading, learning from and expounding about Ambedkar. On March 9, Roy was to be in Hyderabad to launch the book. But the event was cancelled because the publisher feared protests from Dalit radicals who have been upset about the book.

[6] http://scroll.in/article/658279/Why-Dalit-radicals-don’t-want-Arundhati-Roy-to-write-about-Ambedkar

[7] அப்பிரசுரத்தின் நாராயணன் என்ற இளைஞர் ஒரு பிராமணர் என்பதால், அவ்வாறு கூறப்பட்டது.

[8] In other words, Dalit intellectuals think it is their right, by virtue of their caste, to decide whether a Maoist sympathiser can write on Ambedkar; whether one can write on the Ambedkar debate with Gandhi; or whether one is allowed to write more words in criticism of Gandhi than in praise of Ambedkar.

[9] http://www.outlookindia.com/article/We-Need-AmbedkarNow-Urgently/289691

[10] http://www.outlookindia.com/article/The-Doctor-And-The-Saint/289693

[11]  http://www.newsyaps.com/ambedkar-arundhati-roy-and-the-politics-of-dalit-representation/102338/

[12] http://twocircles.net/2014mar13/dalit_intellectuals_voices_should_be_heard_arundhati_roys_ambedkar_introduction.html#.VKx3evmSynU

[13] A t the end of her introduction, she says caste cannot be annihilated “unless those who call themselves revolutionary develop a radical critique of Brahminism.” She could contribute more to Dalit politics by reflecting on her own everyday upper caste practices and privileges (such as the ever-present caste identity in her name) before introducing Annihilation of Caste to ‘foreigners’.

http://www.independent.co.uk/arts-entertainment/books/features/arundhati-roys-book-on-caste-rejected-by-some-anticaste-activists-9929233.html

[14] In The Doctor and the Saint, neither Ambedkar nor the Dalits, but solely Roy appears to be the only beneficiary of this project. Her life, be it in her activism or this book, appears, to me, chillingly similar to a neoliberal ‘poverty baron’ who flies around the world offering her services to reduce poverty.

http://www.indepedent.co.uk/arts-entertainment/books/features/arundhati-roys-book-on-caste-rejected-by-some-anticaste-activists-9929233.html

[15] http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=7284:arundhati-roy-replies-to-dalit-camera&catid=119&Itemid=132

[16] http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=7283:an-open-letter-to-ms-arundhati-roy&catid=119&Itemid=132

[17] Using the Constitution as a subversive object is one thing. Being limited by it is quite another. Ambedkar’s circumstances forced him to be a revolutionary and to simultaneously put his foot in the door of the establishment whenever he got a chance to. His genius lay in his ability to use both these aspects of himself nimbly, and to great effect. Viewed through the prism of the present, however, it has meant that he left behind a dual and sometimes confusing legacy: Ambedkar the Radical, and Ambedkar the Father of the Indian Constitution.

http://www.thehindu.com/books/books-authors/the-doctor-and-the-saint/article5740369.ece

[18] அதனால் தான், எஸ்.சி மதம் மாறினால், அச்சலுகை பறிபோகிறது என்பதனைப் புரிந்து கொள்ளாமல், தலித் போர்வையில், மற்ற இயக்கங்கள், மதம் மாறியவர்களுக்கும் அச்சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு வருகின்றன.

[19] http://www.shunya.net/Text/Blog/OnRoyAmbedkar.htm

[20] இவை சுததேசி அல்லது இந்துத்துவக் கொள்கைகளைப் போலிருப்பதும் கவனிக்கத் தக்கது.

[21] http://caravanmagazine.in/reportage/doctor-and-saint