Posts Tagged ‘சத்திரிய மாடு’

கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது – இந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

ஒக்ரோபர் 10, 2022

கிறிஸ்தவஇஸ்லாம் மதங்களுக்கு மாறிய SCக்களுக்கு, தொடர்ந்து SC அந்தஸ்து கொடுக்க முடியுமா? சாத்தியக்கூறை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டுள்ளதுஇந்துத்துவம் நீர்க்கிறதா? (2)

முந்தைய அரசாங்கங்களால் உருவாக்கப்பட்ட கமிஷன்கள்: நாட்டில் மத சிறுபான்மையினரின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய பல்வேறு அரசாங்கங்களால் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ் அமைந்த UPA அரசாங்கம் இரண்டு குழுக்களை அமைத்தது. முதலில், மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினருக்கான ரங்கநாத் மிஸ்ரா தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இரண்டாவது, முன்னாள் தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சாரின் கீழ் ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டது. சச்சார் கமிட்டி நாட்டில் முஸ்லிம்களின் இழிவான சமூக-பொருளாதார நிலையைக் கண்டறிந்து சில சமயங்களில் முஸ்லிம்களின் நிலை தலித்துகளை விட மோசமாக இருப்பதாகக் கூறியது. மறுபுறம், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரசு வேலைகளில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீட்டையும், மற்ற சிறுபான்மையினருக்கு 5% இடஒதுக்கீட்டையும் பரிந்துரைத்தது. மிஸ்ரா கமிஷனின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று பட்டியல் சாதியினரிடையே மத பாகுபாடின்மையை உறுதி செய்வது. மேலும் 1950 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்ட சாதி மக்கள் பட்டியலில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஜெயின்கள் மற்றும் பார்சிகளை விலக்கி வைக்கபட்டத்தை எதிர்த்தது. அதை நீக்க அறிவுறுத்தியது. இருப்பினும், போதுமான தரவு இல்லாததால், பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

2010ல் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் நிலைப்பாடு: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது[1]: “மதம் மாறிய தலித்துகளுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்து மதத்தில் தான் தீண்டாமை பழக்கம் இருந்துள்ளதுகிறிஸ்தவ மதத்திலோ முஸ்லிம் மதத்திலோ தீண்டாமை வழக்கம் இல்லை. எனவே, இந்த மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரிய சலுகை அளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்து மதத்தை சேர்ந்த தலித்துகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். மதம் மாறிய தலித் குழந்தைகள், கான்வென்ட்டில் படிக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார் படேல் போன்றவர்கள் மதம் மாறிய தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை ஏற்கவில்லை.மதம் மாறியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகை அளிக்கப்பட்டால் மேலும் மதமாற்றம் நடப்பது அதிகரிக்கும். இது ஆரோக்கியமான போக்கல்ல. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்த கமிஷன் அளித்த அறிக்கையை அமல்படுத்தக்கூடாது.அதே சமயம், புத்த அல்லது சீக்கிய மதத்தில் உள்ள தலித் என்கிறபோது அவர்கள் அடிப்படை வேறானதுசலுகை தொடர வேண்டும்,” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்[2].

2021ல் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சலுகை முடியாது என்று எடுத்துக் காட்டியது: கிறிஸ்துவம் அல்லது இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது என பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்துள்ளார்[3]. மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார்[4]. இது தொடர்பாக ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவர்களால் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாது. அவ்வாறு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து (reserved constituencies) இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் போட்டியிட முடியாது எனவும் கூறினார். அதே நேரத்தில் இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு பலன்களை கோரவும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து தேர்தலை சந்திக்க தகுதி பெற்றவர்களாகவும் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டப் பிரிவின் படி முடியாது; அரசியலமைப்பின் பாரா 3 (பட்டியல் சாதிகள்) உத்தரவு, இந்து, சீக்கிய அல்லது பெளத்த மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு மதத்தை சார்ந்த எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டாது என்பதை குறிப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். ரவிசங்கர் பிரசாத் தனது பதிலில், பட்டியலினத்தவர்கள் இஸ்லாம், கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வோருக்கும், இந்து மதத்தை ஏற்றுக்கொள்வோருடன் தெளிவான வேறுபாடு இருப்பதை தெளிவுபடுத்தினார். 2015 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், “ஒரு நபர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவுடன், இந்து மதத்தின் காரணமாக எழும் சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் நின்றுவிடுகின்றன, எனவே அவருக்கு இனி பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை, இதன் காரணமாக அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்று கருதப்படுகிறார்.” என கூறியுள்ளது.

தமக்குள் ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இடவொதிக்கீடு கேட்கும் முரண்பாடு: இங்கு கூட இடவொதிக்கீடு மதரீதியில் அல்லது ஜாதி ரீதியில் கொடுக்கப் படவேண்டுமா, கூடாதா என்ற பிரச்சினை உள்ளது. செக்யூலரிஸ நாட்டில், மத ரீதியில் யாருக்கும் இடவொதிக்கீடு கொடுப்பதில்லை. ஆகவே, முஸ்லிம்கள்-கிறிஸ்தவர்கள் என்று இடவொதிக்கீடு கேட்பதும், கொடுப்பதும் அட்டப் படி இயலாது. பிறகு பொருளாதார ரீதியில் கொடுக்கப் பட வேண்டும் என்றாலும், அது மற்ற எல்லா மதத்தினருக்கும் பொறுந்தும். ஆனால், அவ்வாறும் இடவொதிக்கீடு கொடுக்கப்படுவதில்லை. எனவே, இவ்விசயத்தில், அவர்களது இரட்டை வேடங்களே அவர்களுக்கு எதிராக இருக்கின்றன மற்றும் அவர்களது போலித் தனத்தை வெலிப்படுத்திக் காட்டுகிறது. மதம் மாற்றமே பொய்யானது, நிச்சயமாக சமுதாயத்தில் உயர-மேன்மைப் பட ஜாதியக் கொடுமைகளினின்று விடுபட-மேன்பட உதவுவது இல்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது. அந்நிலையில், தமக்கும் இடவொதிக்கீடு வேண்டும் என்று கேட்பது கவனிக்கத் தக்கது.

2008 – சதீஷ் தேஷ்பாண்டே கமிஷன்: இருப்பினும், 2008 ஆம் ஆண்டில், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், புகழ்பெற்ற சமூகவியலாளர் சதீஷ் தேஷ்பாண்டேவின் கீழ், தலித் முஸ்லிம்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் இந்து, சீக்கிய மற்றும் பௌத்த சகோதரர்களுடன் ஒப்பிடுதல் மற்றும் அவர்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ய மூன்று களங்களை ஆராய ஒரு ஆய்வை நியமித்தது. சாதிகளுக்கு இடையேயான திருமணம் முதல் இட ஒதுக்கீட்டு வரையிலான பல்வேறு அடிப்படையில், இந்த ஆணையம் தலித் மதம் மாறியவர்களுக்கு எதிராக வலிமையான பாகுபாட்டைக் கண்டறிந்தது. இருப்பினும், இந்த அறிக்கைகள் எந்தவொரு செழிப்பான வளர்ச்சிக்கும் வழிவகுக்கவில்லை[5]. ஏனெனில், அவர்களது மதத்தலைவர்களிடம் உடன்பட்ட, ஒப்புக்கொள்ளும் ரீதியில் ஒத்த கருத்து உருவாக முடியவில்லை. நிச்சயமாக, ஆசார கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் இதனை ஏர்ருக் கொல்வதில்லை. அரசியல் ரீதியில் தான் தீவிரமாக இடவொதிக்கீடு கேட்டு வருகிறார்கள். தற்போது இதே காரணத்திற்காக, முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது[6].

2024 தேர்தலும், பிஜேபி நிலையும்: 2024க்குள் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றால், அவ்வாண்டில் பாராளுமன்ற தேர்தலும் நடக்கப் போகின்றது. இருமுறை அமோக வெற்றி பெற்று ஆட்சியில் இருக்கும் பிஜேபிக்கு இது ஒரு முக்கியமான தேர்தல் என்றாகிறது. மூன்றாவது முறையாக வெற்றி பெற்றி ஆட்சி அமைக்க முடியுமா, சீட்டுக்கள் குறையுமா, சரிகட்ட கூட்டணி ஏற்படுத்தி போட்டியிடுமா போன்ற பல வினக்கள் எழும் நிலையில், இந்த விசயம், மைனாரிடி / சிறுபான்மையினரை கட்டுப் படுத்தும், பாதிக்கும் விவகாரம் ஆகையால், எவ்வாறு அணுகும் என்றும்கவனிக்க வேண்டியுள்ளது. நிச்சயமாக, அரசியல் நிர்ணய சட்டத்தின் படி, அரசியல் சாசனம் (பட்டியல் சாதிகள்) ஆணை- 1950 –யின் படி, இது முடியாது. அப்படியென்றால், நிச்சயமாக அதை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்து- SCக்கள் நிச்சயமாக பாதிக்கப் படுவார்கள். அதனால், இந்துக்கள் ஓட்டு பிஜேபிக்குக் குறையலாம், பிறகு, சிறுபான்மையினற் ஓட்டு தேவையாகிறது. அந்நிலையில் பேரம் அதிகமாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

10-10-2022


[1] தினமலர், மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை: பா.., எதிர்ப்பு, Added : மார் 27, 2010  04:29,

[2] https://www.dinamalar.com/news_detail.asp?id=307

[3] தமிழ்.நியூஸ்.18, கிறிஸ்துவம், இஸ்லாமுக்கு மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் இட ஒதுக்கீடு சலுகைகளை கோர முடியாதுசட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல், NEWS18 TAMIL, LAST UPDATED : FEBRUARY 13, 2021, 13:36 IST.

[4] https://tamil.news18.com/news/national/dalits-who-convert-to-islam-or-christianity-wont-get-quota-says-law-minister-in-rajya-sabha-aru-410541.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு எஸ்.சி அந்தஸ்து: முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு, Written by WebDesk, October 8, 2022 10:36:26 am

[6] https://tamil.indianexpress.com/india/ex-cji-named-head-of-panel-on-sc-status-for-dalit-converts-521852/

தமிழச்சி, இந்துத்துவச்சி, கிருஷ்ணசாமி: ஜல்லிக்கட்டில் சித்தாந்த சிதறல்கள், மோதல்கள் மற்றும் பிறழ்சிகள்!

ஜனவரி 25, 2017

தமிழச்சி, இந்துத்துவச்சி, கிருஷ்ணசாமி: ஜல்லிக்கட்டில் சித்தாந்த சிதறல்கள், மோதல்கள் மற்றும் பிறழ்சிகள்!

radharajan-free-sex-comments-bbc

21-01-2017 அன்று ஆத்தூரில் புகார் கொடுத்தது: சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் சார்பில், பீட்டா உறுப்பினர் ராதா ராஜன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி, 21-01-2017 அன்று, ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளிக்கப்பட்டது[1]. மனுவில் குறிப்பிட்டுள்ள விபரம் வருமாறு[2]: “தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் எனும், ஜல்லிக்கட்டு பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. பீட்டா அமைப்பு, தமிழர்களின் பாரம்பரிய கால்நடை வளர்ப்பை அழிக்கும் வகையில், உச்சநீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரி, சென்னை மெரினா கடற்கரையில், மாணவ, மாணவியர், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். லண்டன் பி.பி.சி.,யின் தமிழோசை வானொலி செய்தி பிரிவுக்கு, கடந்த, ஜாவரி.19ல், சென்னையை சேர்ந்த, ‘பீட்டாஅமைப்பை சேர்ந்த ராதா ராஜன், ‘தனி தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து சிலர் போராடினால், அதற்கு, 25 ஆயிரம் பேர் திரண்டு வருவர் என்பது உள்ளிட்ட வார்த்தைகளில் குறிப்பிட்டார். இது, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘பீட்டாராதா ராஜனின் எல்லை மீறிய, அநாகரிகமான, இழிவான பேச்சு, தமிழ் பெண்களை இழிவு செய்வதாக உள்ளது. பொது அமைதிக்கு எதிராக பேசி வரும் ராதா ராஜன் மீது வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது[3].

radharajan-house-besieged-by-mdmk

மன்னிப்பு கேட்ட ராதாராஜன்[4]: எதிர்ப்புகள் அதிகமாகிவிட்ட, இந்நிலையில், ராதா ராஜன் ‘தனது கருத்துகள் மக்கள் தமிழக மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். நான் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது ஒரு உதாரணத்துக்கு இப்படி பதில் கூறினேன். மாறாக மக்களின் மனதை காயப்படுத்துவது என்று நோக்கமல்ல. என் வார்த்தைகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்காக என் வீட்டு முன்பு போராட்டம் நடத்த வேண்டாம்‘ என கேட்டுக்கொண்டுள்ளார்[5]. ஆனால், இவ்விசயத்தில் கூட தமிழ் ஊடகங்கள் தமக்கேயுரிய விதத்தில் தலைப்பிட்டு கொச்சைப்படுத்தியுள்ளன[6]. வெறுப்பை தொடர்ந்து வளர்ப்பது எப்படி என்றால், அதனை இவர்களிடமிருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது[7].

radharajan-free-sex-comments-counter-poster-vulgar

பார்ப்பனக் கொழுப்பு வாதத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை[8]: யுவகிருஷ்ணா, பத்திரிகையாளர், என்பவர், “த டைம்ஸ் தமிழ்.காம்” என்ற இணைதளத்தில், இப்படி எழுதியுள்ளார். “ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்று. ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் சொல்கிறார். “அப்படியே தடை வந்துட்டாலும் கூட எங்கிட்டே இருபது ஏக்கர் இடம் இருக்கு. முன்னூறு காளைகள் இருக்கு. நான் நடத்திட்டுப் போறேன். யாரென்ன பண்ணுவாங்கன்னு பார்த்துக்கறேன்”. அவருக்கு பதிலடியாக ராதா ராஜன் என்கிற விலங்குகள்நல ஆர்வலர் சொல்கிறார். “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன். என்னை வந்து நீங்க கேட்கக்கூடாது”. நெறியாளர் குணசேகரன் அப்படியே திகைத்துப் போகிறார். சீமானுக்கு என்ன பதிலடி கொடுப்பது என்றே தெரியவில்லை. அந்த விவாத மேடையில் இருந்த யாரும் இந்த பார்ப்பனக் கொழுப்பு வாதத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருந்தது. திமுகவின் மனுஷ்யபுத்திரனோ, தமிழன் பிரசன்னாவோ.. அதிமுகவின் சமரசமோ, மா.கம்யூவின் அருணனோ அல்லது கட்சிசாரா இளங்கோ கல்லாணையோ, எவிடென்ஸ் கதிரோ அந்த விவாதத்தில் இருந்திருந்தால் இப்படி பேசியிருக்க முடியுமா? இங்கு மட்டுமல்ல. அம்பேத்கரிய, பெரியாரியவாதிகள் இடம்பெறாத இந்தியாவின் எந்த மேடைகளிலும் தமிழ்தேசியம், திராவிடம், மார்க்ஸியம், சமூகநீதி மாதிரி முன்னேற்ற சிந்தனைகளோடு மனிதமும் பார்ப்பனத் தினவெடுத்த சீண்டல்களில் தோற்கும் என்பதே யதார்த்தம். அரசியல் கற்காமலேயே அரசியலில் எல்லாம் தெரியும் என்று 2009க்கு பிறகு வாய் மட்டுமே கிழிய பேசும் காளான்கள் இதை முதலில் உணரவேண்டும்.ஒட்டுமொத்த இந்துவிரோத சித்தாந்திகளைக் குறிபிட்டு, அப்படி பேசியிருக்க முடியுமா என்று கேட்டால், சொன்னது அற்றவர்களுக்கு புரிந்தது, ஆனால், இவருக்கு மட்டும் வேறுவிதமாக தெரிகின்றது என்றாகிறது[9]. அதாவது, சட்டமீறல் உதாரணத்திற்கு, இன்னொரு சட்டமீறல் உதராணம் கொடுக்கப்பட்ட போது, அது பார்ப்பனீயமாக முத்திரைக் குத்தப்பட்டது. ஜாதியப் பிரச்சினை மறைத்து, ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன் வைத்தாலும், அது வெளிப்படத்தான் செய்தது.

 webdunia-anti-sc-postings-19-01-2017

சமூக வலைத்தளங்களில் ஜாதிப் பெயர்களை சொல்லி கொச்சைப்படுத்தியது[10]: தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்ட உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் எனவும், விலங்குகள் நல வாரியமான ‘பீட்டா’ அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு என தொடங்கிய இந்த போராட்டம் தமிழகமெங்கும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து சென்று வருகின்றனர். மேலும், பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிலர் சமூக வலைத்தளங்களில் ஜாதிப் பெயர்களை சொல்லி கொச்சைப்படுத்தி வருகின்றனர். சிலர், ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட ஜாதியினருக்கே சொந்தம் என்கிற ரீதியிலும், ஒரு சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஒற்றுமையை வலியுறுத்தியும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்று தமி.வெப்துனியா எடுத்துக் காட்டியது[11].

krishnaswamy-urging-to-take-care-of-cattle

கிருஷ்ணசாமி ஜல்லிக்கட்டை நிராகரித்துப் பேசிய வீடியோ[12]: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி ஜல்லிக்கட்டை நிராகரித்துப் பேசிய வீடியோ ஒன்றைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு தடை நீக்கப் போராட்டத்தில் பீட்டா அங்கத்தினர்களையும், அவர்களது ஆதரவாளர்களையும் தவிர்த்து தமிழகம் முழுதுமே ஒற்றுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்; மாணவப் போராட்டம் குறித்து அவர் முன் வைத்த விவகாரங்கள் அத்தனையும் கருத்தில் கொண்டு யோசிக்க வேண்டிய விசயங்கள் தான். ஏனெனில் இன்று களமாடிக் கொண்டிருக்கும் நம் இளைஞர்கள் அவர் முன் வைத்த குற்றச்சாட்டை கிடப்பில் போட்டு விட முடியாது.  கிருஷ்ணசாமி முன் வைத்த விவகாரத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்களை நோக்கி, “இன்று நீ ஜல்லிக்கட்டு வேண்டும், நாட்டு மாடு வேண்டும் என்று போராடி, மத்திய, மாநில அரசுகளை நிர்பந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வரச் செய்து ஜல்லிக்கட்டு நடத்துவாய். அது மட்டும் போதுமா நாட்டுக்காளைகளை வளர்க்க? 60களில் வந்த பசுமைப் புரட்சி உனக்கு வேண்டாம், 80 களில் வந்த வெண்மைப் புரட்சியும் உனக்கு வேண்டாம், கார், ரயில், விமானத்தில் பயணம் செய்யாதே, பெற்றோர்களிடம் சொல்லி நாட்டுக் காளை வாங்கி, கட்டை வண்டியில் பூட்டி அதிலேயே பயணம் செய். அப்போது தானே காளைகளை வளர்க்க முடியும்? ஒரு நாள் ஜல்லிக்கட்டு மட்டும் நடத்தினால் எப்படி நீ காளையை வளர்க்க முடியும்? நிறைய நாட்டுக் காளைகள் உற்பத்தி வரணும், சாணம் போடனும், அப்போ தான் ஆர்கானிக்னு சொன்னா, நீ வீட்டுக்கு வீடு இரண்டு காளைகள் அல்லது 4 பசுமாடுகள் இல்ல வச்சிருக்கணும். அப்படி வச்சிருந்தா அதை வளர்ப்பது யார்? கம்ப்யூட்டர் கல்வி படித்து விட்டு நீ சென்னையிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும் இருந்தால் இங்கே மாடு வளர்ப்பதற்கு யார் இருப்பார்கள் கீழே? இளிச்சவாயன் தாழ்த்தப் பட்டவன் கிடைப்பான், அவனை மாடு மேய்க்கப் போட்டு விட்டு நீ அமெரிக்கா போய் விடுவாய். இது தான் தமிழர் கலாச்சாரமா? மீண்டும் தமிழ் சமுதாயத்தை ஆண்டான் அடிமை சமூக நிலைக்கு கொண்டு போவதற்கு தான் நீங்கள் இப்போது போராடிக் கொண்டிருக்கிறீர்களா?” என்று தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்வொன்றில் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

 krishnaswamy-urging-to-take-care-of-cattle-opposing-jallikattu

கிருஷ்ணசாமிக்கான பதில்[13]: என்று தினமணி வெளியிட்டதில் யார் என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் டாக்டரே! தாழ்த்தப் பட்டவர்கள் மாடு மேய்த்த காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. இன்று அவர்கள் அரசியல் அதிகாரங்களுடன், அரசு வேலை வாய்ப்புகளுடன் செளகரியமாக வாழ தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தலைமுறையும், முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் சமூக அங்கீகாரம் பெற்று தலை நிமிர்ந்து வாழும் முயற்சியில் வெற்றி காணத் தொடங்கி இருக்கிறது. ஆண்டான் என்றும், ஆதிக்க ஜாதி என்றும் நீங்கள் பட்டியல் வாசிக்கக் கூடியவர்களும் கூட இன்று படித்து, பதவிகளில் இருக்கக் கூடிய தாழ்த்தப் பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள். கல்வியும், அதன் மூலமாகக் கிடைத்த அங்கீகாரமும் அவர்களுக்கு அந்த மரியாதையை நீடித்திருக்கச் செய்கிறது. ஒரு வேலை நீங்கள் சொல்வது போல நாட்டு மாடுகளை வளர்க்க விரும்பினால் மாணவர்கள் அவரவர் சொந்தக் குடும்பத்தாரை நம்பி வளர்க்க வேண்டிய நிலையில் தான் இப்போது இருக்கிறார்களே தவிர இன்று கிராமங்களில் கூட தாழ்த்தப் பட்டவர்கள் மாடு மேய்ப்பதில்லை. கிராம சமுதாயத்தில் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை; மாடு மேய்க்க, தோட்ட வேலை செய்ய, வீடுகளில் ஏவல் பணி செய்ய, கிராமத்தில் இளவு விழுந்தால் அண்டை, அசலுக்குச் சொல்லி அனுப்ப, என்றெல்லாம் ஏவல்பணி செய்து கொண்டிருந்த மக்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கிறார்கள் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீகள்? இல்லை அவர்கள் தலை நிமிரத் தொடங்கி வெகு காலம் ஆகிறது. உங்களைப் போன்ற அரசியல்வாதிகள் தான் சுயலாபத்துக்காக அவர்கள் அப்படியே இருப்பதாக பொய்க்கனலை விசிறி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

jallikkatu-campaigners-vulgar-placards-against-trisha

மாணவர்களிடம் ஒரு விண்ணப்பம்: இன்று ஜல்லிக்கட்டுக்காகவும், நாட்டுக்காளைகளுக்காகவும் போராடும் நாம் ஜல்லிக்கட்டை முடித்து விட்டு என்ன செய்வதாக இருக்கிறோம்? வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு வளர்க்கலாம். ஏன் நம்மால் முடியாதா என்ன? இருபது வருடங்களுக்கு முன்பு வரை மாடுகள் வளர்க்கப்படாத வீடுகள் தான் அரிதாக இருந்தன. ஒவ்வொரு வீட்டின் வாசலைக் கடந்ததும் முன்புறமாகாவோ, கொல்லைப் புறத்திலோ, அல்லது வீட்டை ஒட்டிய இடைகழியிலோ நிச்சயம் மாட்டுத் தொழுவம் இருந்ததே! தொழுவத்தில் சாணி மிதிக்காத, தோட்டத்துக்கு எருச்சாணம் சுமக்காத அன்றைய பிள்ளைகள் எவரேனும் சம்சாரி வீடுகளில் உண்டோ! மாடு மேய்ப்பது அப்படி ஒன்றும் நமக்கு அந்நியமான வேலை இல்லை. ஆதியில் வேட்டைச் சமுதாயமாக பரிணமித்தது தான் மனித குலம் மொத்தமுமே! அவர்கள் வேளாண் கற்றுக் கொண்டதன் வெற்றிப் பண்டிகை தான் தைப் பொங்கல் திருநாள். வேளாண் சமூகத்தின் அடிப்படையான மேய்ச்சல் தொழில் என்பது அதன் ஒவ்வொரு பிரிவுக்கும் அறிமுகமானது தான். அதனால் ஜல்லிக்கட்டு தடை நீங்கி வீட்டுக்கு வீடு நாட்டு மாடுகள் வளர்க்கப் படும் சூழல் வந்தால் அப்போது ஆண்டான் அடிமை பேதமைகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றாக மாடு மேய்க்கலாம். ஆரம்பத்தில் எல்லாமும் கஷ்டமாகத் தான் இருக்கும். பிறகு பழகிப் போகும். இப்படி முடித்திருந்தாலும், ஜாதிய பிரச்சினை உள்ளதை வன்னிய அரசும் டிவி-பேட்டியில் எடுத்துக் காட்டினார்.

© வேதபிரகாஷ்

25-01-2017

jallikkatu-campaigners-vulgar-placards

[1] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=274235

[2] தினமலர், தமிழக இளைஞர்களை இழிவாக பேசியபீட்டாராதா ராஜன் மீது போலீசில் புகார், பதிவு செய்த நாள்.22, 2017.06.29.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1695224

[4] தமிழ்.ஒன்.இந்தியா, மன்னித்து விடுங்கள்கொந்தளிப்பைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்ட ராதா ராஜன்!, By: Suganthi, Updated: Tuesday, January 24, 2017, 12:02 [IST]

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/radha-rajan-member-peta-asked-unconditional-apology-jallikattu-protesters-272463.html

[6] பத்திரிக்கை.காம், விலங்கு பெண்மணிராதா ராஜன், பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்!, Posted on January 22, 2017 at 9:58 pm by Nivetha .

[7] https://www.patrikai.com/animal-lady-radha-rajan-publicly-apologized/

[8] thetimestamil.com, அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!, ஜனவரி.12, 2016.

[9]https://thetimestamil.com/2016/01/12/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

[10] தமிழ்.வெப்துனியா, ஜல்லிக்கட்டில்ஜாதியை திணிக்கும் சில குள்ளநரி கூட்டங்கள்!, Last Modified: வியாழன், 19 ஜனவரி 2017 (15:17 IST).

[11] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/somebody-posts-like-as-caste-hatred-on-social-websites-117011900034_1.html

[12] தினமணி, தாழ்த்தப் பட்டவர்கள் மாடுமேய்த்த காலமெல்லாம் மலையேறி விட்டது டாக்டரே! , By கார்த்திகா வாசுதேவன்,  Published on : 21st January 2017 05:41 PM .

[13] http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/jan/21/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D

 

தமிழச்சியும், இந்துத்துவச்சி – நோக்கில் பார்ப்பனீயத்தைத் தாக்குவதேன்?: ஜல்லிக்கட்டில் சித்தாந்த சிதறல்கள், மோதல்கள் மற்றும் பிறழ்சிகள்!

ஜனவரி 25, 2017

தமிழச்சியும், இந்துத்துவச்சி – நோக்கில் பார்ப்பனீயத்தைத் தாக்குவதேன்?: ஜல்லிக்கட்டில் சித்தாந்த சிதறல்கள், மோதல்கள் மற்றும் பிறழ்சிகள்!

jallikattu-banianwalas

கருப்பு சட்டை அணிந்து மெரினா கடற்கரையில் அதிகபேர் குவிந்து இருந்தது எல்லோருக்கும் தெரியும். இவர் யார் என்று எனக்கு தெரியாது: வீடியோவில் பெண் பேசுகையில்[1], “சில விஷயங்களை தெளிவுபடுத்தவே இந்த வீடியோவை வெளியிடுகின்றேன் யாரும் பயப்பட வேண்டாம், வரும் வதந்திகளை பரப்ப வேண்டாம், நான் பத்திரமாக உள்ளேன். என்மீது சிலர் அரசியல் சாயம் பூச விரும்புகிறார்கள், எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவள் கிடையாது நான். தென் மாவட்டத்தை சேர்ந்த நான் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக போராடதான் வந்தேன், சாதாரண பெண்மணியாகவே வந்தேன். இன்றும் நான் சாதாரண பெண்மணியாகவே இருக்க விரும்புகின்றேன். அரசியல் சாயம் என் மீது பூசப்படுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் அதிமுக, திமுக என எந்தஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவள் கிடையாது. எனக்கும் கட்சிக்கும் எந்தஒரு சம்பந்தமும் கிடையாது. எனக்கு பின்னால் கருப்பு சட்டை போட்ட ஒருநபர் கோஷம் போட்டதாகவும், அவர் திமுகவில் இருந்ததாகவும், எனவே நானும் திமுகவை சேர்ந்தவள் என சொல்லிக் கொண்டு உள்ளார்கள். அவர் யார் என்று எனக்குதெரியாது. கருப்பு சட்டை அணிந்து மெரினா கடற்கரையில் அதிகபேர் குவிந்து இருந்தது எல்லோருக்கும் தெரியும். இவர் யார் என்று எனக்கு தெரியாது. தெரிந்துக் கொள்ளவேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது. எனக்குஅதிக மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நான் இதனை கண்டு பயப்பட போவது கிடையாதுநான் ஒரு தமிழ் பெண், தமிழ் வீரப்பெண்ணாக இதற்காக போராடுவேன்.”

 jallikattu-anti-modi

அவர்கள் (மோடி முதலியோர்) வந்து எங்களுக்கு பேசக்கூடிய இடத்தில் உள்ளார்கள், அவர்களுடைய பார்வை எங்களது மீது திரும்ப வேண்டும், அதற்காகவே இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டது: “தமிழச்சி” தொடர்கிறார், “பிரதமர் மோடி அவர்களையோ, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அம்மாவையோ விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவோ, அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ இதுபோன்ற கோஷங்களை எழுப்பவில்லை. அவர்கள் வந்து எங்களுக்கு பேசக்கூடிய இடத்தில் உள்ளார்கள், அவர்களுடைய பார்வை எங்களது மீது திரும்ப வேண்டும், அதற்காகவே இந்த கோஷங்கள் எழுப்பப்பட்டது. அவர்களை விமர்சனம் செய்யும் நோக்கத்தில் எழுப்பப்பட்டது கிடையாது. திரும்பவும் சொல்கிறேன் நான் எந்தஒரு அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் கிடையாது, நான் ஒரு தமிழ் பெண், ஒரு தமிழ் பெண்ணாகவே இருக்க விரும்புகின்றேன். நன்றி”, என கூறிஉள்ளார்[2].  இனி ராதா ராஜனைப் பற்றி பார்ப்போம்.

radharajan-attacking-hindu-nationalismயார் இந்த ராதா ராஜன்?[3]: விகடன் “யார் இந்த ராதாராஜன்வில்லங்க பக்கங்கள் ” என்ற தலைப்பில், கீழ்கண்ட விவரங்களைக் கொடுத்துள்ளது. “பா... மூத்த தலைவர்களான சுப்பிரமணியன்சுவாமி, ஹெச்.ராஜா மற்றும் ராதாராஜன் ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள். இதில் சுப்பிரமணியன் சுவாமி, ராதாராஜன் ஆகியோர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப் பட்டுள்ளதுஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஓட்டுமொத்த தமிழர்களும் குரல் கொடுத்து வரும் நேரத்தில் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சென்னையை சேர்ந்த ராதாராஜன் என்பவர் பேசினார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ராதா ராஜனின் வீடு, சென்னை பெசன்ட் நகர், கலாஷேத்ரகாலனியில் உள்ளது. அந்த வீட்டை வழக்கறிஞர் எழில் என்பவரின் தலைமையில் முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ராதாராஜன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.[4]

jallikattu-girl-at-marina-and-radh-rajan-attacked
ராதாராஜனுக்கு நெருக்கமான ஒருவர் குறித்த தகவலை விகடனிடம் பகிர்ந்தது: ராதாராஜன் குறித்த தகவலை நம்மிடம் [விகடனிடம்] பகிர்ந்தார் அவருக்கு நெருக்கமான ஒருவர். “விலங்குகள் நல ஆர்வலரான ராதாராஜன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வாடிக்கை. தற்போது கூட ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினரை அவதூறாக விமர்சித்ததால் அவருக்கு எதிராக இளைஞர் பட்டாளமே திரண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை பெற்றத்தில் இவருக்கும் பங்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இருந்தார். அதோடு பல சமூக அமைப்புகளுடன் சேருவதும் அதிலிருந்து விலகுவதும் இவரது வாடிக்கை.  ராதாராஜன், பொது நல வழக்குகளையும் தொடர்ந்துள்ளார். கோயில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக கொடிப்பிடித்தார். திருவண்ணாமலையில் கோசாலையில் மாடுகள் இறந்தது தொடர்பாக போராடினார்.  நீதிபதிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.  .தி.மு.. முன்னணி கட்சித் தலைவர்களில் ஒருவரை ராதாராஜன் எதிர்த்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நடந்த கருத்து மோதல், பிறகு பிரபலமான கட்சி நிர்வாகியால் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. ராதாராஜன், பீட்டாவில் இருந்ததாக சொல்லப்படும் தகவல் உண்மையல்ல. இவர், ஆன்லைனில் ஒரு வெப்சைட்டில் கட்டுரைகளையும் எழுதுவதுண்டு, “என்றார்.

 tamizhatchi-attacks-radharajan

ராதாராஜனை தொடர்பு கொள்ள விகடன் முயற்சித்தது: விகடன் தொடர்ந்து, “ராதாராஜன் வீட்டை முற்றுகையிட சென்ற வழக்கறிஞர் எழில் கூறுகையில், “ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராடி வருகின்றனர். அந்த போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில் ராதாராஜன் பேசி உள்ளார். இதனால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம்என்றார்ராதாராஜன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பால் முகவர்கள் சங்கம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராதாராஜனுக்கு எதிர்ப்பு குரல்கள் அதிகளவில் கேட்கத் தொடங்கி உள்ளன.  இதுகுறித்து ராதாராஜனின் செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. தொடர்ந்து பல வகையில் அவரின் கருத்தைக் கேட்க முயற்சித்தோம். ஆனால் அவர் தரப்பு பதிலை பெற முடியவில்லை. அவர் தன்னுடைய கருத்தை சொன்னால் வெளியிட தயாராக இருக்கிறோம்” என்று முடித்துள்ளது.

radharajan-apologizesராதாராஜன் 19-01-2017 அன்று கூறியது[5]: 19-01-2017 அன்று பிபிசிக்கு கொடுத்த கேளோலி பேட்டியில், ராதாராஜன் இவ்வாறு பேசியது, “இப்போ தனி தமிழ்நாடு வேணும்னு கேட்டா ஒரு 25,000 பேர் வருவாங்களா? வருவாங்க. பிரீயா செக்ஸ்ன்னு ஒரு டாபிக் வச்சன்னா அந்த குரூப்புக்கு 50,000 பேர் வருவாங்களா, வருவாங்க கண்டிப்பா. ஒரு பிரச்சனை வந்தா, அதுக்கு மக்கள் தெருவுக்கு வந்துதான் போராடனும் என்றால் அந்த சென்டிமென்டிற்கு, வில் நாட் அக்ரீ.  இல்லை. நம்ம நாட்டு மக்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவங்கரூல் ஆப் லாஅதனால் உச்சநீதிமன்றம் சொன்ன தீர்ப்ப மதிக்கணும் நாம் மதிக்கவேண்டும். ………….(இன்னொரு கேள்விக்கு பதில்) ஜல்லிகட்டில் பெட்டிங் / சூதாட்டம் நடக்கிறது……., ……கிரிக்கெட்டில் மனிதர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் தெரிந்து தான் விளையாடுகிறார்கள்…….இங்கு காளைகள் விருப்பப்பட்டு போட்டிக்கு வருவதில்லை,” என தெரிவித்தார்.

radharajan-attacked-for-her-free-sex-remarksபிரி செக்ஸ்பற்றிய விளக்கம்வியாக்யானம்: இங்கு “பிரி செக்ஸ்” என்பதை தமிழில் பலவிதமாக விவரிக்கப்பட்டு, பெரிதாக்கப்பட்டிருக்கிறது. “ப்ரி செக்ஸ் என்றால் 50 ஆயிரம் பேர் வருவார்கள்”, “இலவசமாக செக்ஸ்” என்றது இன்னொரு தளம். “Free sex ஆர்வலர் ராதா ராஜன் !” என்றது இன்னுமொரு தளம்!  “உடல் தேவைக்காக கூடிய கூட்டம்” என்ற அர்த்தத்தில் பேசியுள்ளார், என்றது தினகரன் செய்தி[6].  “ஓசி செக்ஸ்” என்றது சமயம்.காம்[7]. “ஓசி செக்ஸ் உறவுக்கு கூடத்தான் இவ்வளவு பேர் வருவாங்க..!”-போராட்டத்தை கொச்சைப்படுத்திய பீட்டா ஆர்வலர்..! விவாதத்திற்கு, “பிரீயா செக்ஸ்ன்னு ஒரு டாபிக் வச்சன்னா அந்த குரூப்புக்கு 50,000 பேர் வருவாங்களா, வருவாங்க கண்டிப்பா”, என்றது இந்த அளவுக்குச் சென்றுள்ளது. ஆக, யாதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதை வைத்துக் கொண்டு இந்துத்துவவாதிகளை போட்டுத் தாக்குவது என்று தீர்மானமாக உள்ளது தெரிகிறது. ஏனெனில், மெரினாவில், மோடியைப் பற்றி அத்தகைய கேவலமான, போசமான, ஆபாசமான வார்த்தைகள் கொண்ட பதாகைகள் பற்றி இதே ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து கொண்டன. ஒரு பெண்ணை சசிகலா போலவும், இரு பையன்களை மோடி, ஓ.பி.எஸ் போலவும் சித்தரித்து முத்தம் கொடுப்பது போன்று நடித்துக் காட்டியபோதும், இந்த ஊடகக்கரர்களுக்கு கொச்சையாகத் தெரியவில்லை, அர்த்தம் புரியவில்லை. ஆனால், ராதாராஜன் சொன்னவுடம்ன் புரிந்து விட்டது போலும்.

© வேதபிரகாஷ்

25-01-2017

radharajan-attacked-for-her-free-sex-comments

[1] நான் நலமாக இருக்கின்றேன்.. எந்தக் கட்சியிலும் கிடையாது…” ஜல்லிக்கட்டு ஆதரவு தமிழச்சி விளக்கம் , 24 ஜனவரி 2017 07:25:03 GMT

[2] http://www.dailythanthi.com/News/State/2017/01/24105743/I-am-not-a-member-of-any-political-party-jallikattu.vpf

[3] விகடன், யார் இந்த ராதாராஜன்வில்லங்க பக்கங்கள் , Posted Date : 16:09 (21/01/2017); Last updated : 16:12 (21/01/2017).

[4] http://www.vikatan.com/news/tamilnadu/78355-shocking-facts-regarding-radha-rajan.art

[5] http://www.bbc.com/tamil/38670535

[6] தினகரன், கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ராஜன் மீது போலீசில் புகார், 2017-01-22@ 00:52:20

[7] http://tamil.samayam.com/latest-news/state-news/peta-activist-radharajan-vulgarising-jallikattu-protest-in-tamilnadu/articleshow/56676685.cms

பெயர் தெரியாத தமிழச்சியும், இந்துத்துவச்சி ராதா ராஜனும்: ஜல்லிக்கட்டில் சித்தாந்த சிதறல்கள், மோதல்கள் மற்றும் பிறழ்சிகள்!

ஜனவரி 25, 2017

பெயர் தெரியாத தமிழச்சியும், இந்துத்துவச்சி ராதா ராஜனும்: ஜல்லிக்கட்டில் சித்தாந்த சிதறல்கள், மோதல்கள் மற்றும் பிறழ்சிகள்!

jallikkatu-campaigners-vulgar-placards-against-ops

20-01-2017 அன்று தெருக்களில் வெளிப்பட்ட ஆபாசம், அருவருப்பு, கொச்சைத்தனம்: சமீத்தைய ஜல்லிகட்டு போராட்டம் மாணவர் எழுச்சி, மக்கள் எழுச்சி, அரசு-சார்பற்ற உந்துதல் மீதான பாராட்டம் என்றெல்லாம் விவரித்த நிலையில், கருப்பு சட்டைகள் அதிகமாக-அதிகமாக, தமிழ் அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற நிலைகளில் வெளிப்பட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-எதிர்ப்பு, ஓ.பி.எஸ்-எதிர்ப்பு என்றெல்லாம் மாற ஆரம்பித்தன. பெண்கள்-குழந்தைகள் என்று குடும்பத்தோடு கலந்து கொண்டனர் என்றேல்லாம் ஊடகங்களில் காட்டப்பட்டன. ஆனால், அவற்றின் இடையில் இந்திய-விரோத பதாகைகள், பேச்சுகள் முதலியவற்றையும் மக்கள் கவனிக்கத்தான் செய்தனர். 20-01-2017 வெள்ளிக்கிழமையன்று இது மவுண்ட் ரோடில் வெட்ட வெளிச்சமாகியது. கருப்புச் சட்டை கோஷ்டிகளில் பாதாகைகள் வெளிப்படுத்தன. அருவருப்பான, கொச்சையான, ஆபாசமான வார்த்தைகளுடன் அவை இருந்ர்தன. ஒரு பக்கம் “Fuck” போன்ற வசைகளுடன் தங்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்தினர். பஸ்-ஸ்டேன்டில் நிற்கின்ற பெண்கள் முக சுளித்தனர் என்று கவனித்தபோது, பதாகைகளை திருப்பினர், மறைத்துக் கொண்டனர். பிறகு பேரூந்துகள், சேர் ஆட்டோக்கள் நிறுத்தப் பட்டன. ஆட்டோக்களும் நினேஅன. பொது மக்கள் வீட்டிற்கு செல்ல தவித்தனர். ஆனால், யாரும் அவர்களது அவதி, கஷ்டம் முதலியவற்றைக் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும், ஜல்லிகட்டு பற்றிய வாத-விவாதங்கள் தொடர்ந்தன.

jallikattu-girl-at-marina-chinnamma-ops

ஜல்லுகட்டுக்கு மல்லுக்கட்டிய பிரச்சார பெண்ணின் நிலை[1]: கடந்த 60 வருடங்களாக திராவிட பேச்சாளர்கள்-ஆர்பாட்டம்-போராட்டம்-ஊர்வலங்களில் எழுப்பப்படும் வாசகங்கள் முதலியவற்றை நன்கு கவனித்து வருகிறேன். “பெயர் தெரியாத தமிழச்சியின்” கூச்சலில் சில:

  1. ‘நேத்து வந்த ஆயம்மா நீயேல்லாம் சியம்மா’,
  2. ‘ஊற சுத்துற மோடி மெரீனா பக்கம் வாடி’,
  3. ‘எபிசிடி மோடி ஒரு கேடி’,
  4. ‘சின்னம்மா சின்னம்மா ஓபிஸ் எங்கம்மா’,
  5. ‘பனமரத்துல வவ்வாலா தமிழருக்கே சவாலா’,
  6. ‘வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்’,
  7. ‘இந்த சவுண்டு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா’,
  8. ‘மோதாதே மோதாதே தமிழன்கிட்ட மோதாதே’,
  9. ‘மோடி மோடி தாடி வச்ச கேடி’,
  10. ‘பீட்டா பீட்டா பிஞ்சிரும்டா பேட்டா’,
  11. ‘தடை செய்… தடை செய்… பீட்டாவை தடை செய்’,
  12. ‘ஊர் சுத்துற மோடி, மதுர பக்கம் வாடி’,
  13. ‘கலாசலா கலசலா, எங்க போன சசிகலா’
  14. ………………………………..

இவைற்றையெல்லாம் அவள் அல்லது எந்த எண்ணுமே இயற்கையாக, உடனடியாக, தற்செயலாக மெரினாவில் கத்தியிருக்க முடியாதஃபெழுதி வைத்து, படித்து மனப்பாடம் ஆகியிருக்க வேண்டும்.

jallikattu-girl-at-marina

இந்த தமிழச்சி எங்கே பயிற்சி பெற்றாள்?: சித்தாந்த ரீதியில் ஒரு பெண் இந்த அளவுக்கு பேச முன் வந்திருக்கிறாள் என்றால், நிச்சயமாக அவளுடைய தைரியம், திறமை, சக்தி, முதலியவற்றை பாராட்ட வேண்டும். திராவிட கட்சிகளில் ஒருசிலரே அத்தகைய திறமைகளுடன் இருக்கிறார்கள். ஆனால், இடதுசாரி குழுக்களில், சித்தாந்த பிரிவுகளில் பல பெண்கள் இருக்கிறார்கள். சிறுவயதிலிருந்தே, திறமை கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் செய்யப்படுகிறார்கள். பேசுவது, ஆடுவது, நடிப்பது என்று இருக்கும் போது, பெண் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலியவற்றிலிருந்து விடுபட்டு, கற்றுக்கொண்டு, தேர்ந்து தயாராகிறாள். அத்தகைய பாவனை, நிலை இவளது திறமையில் வெளிப்படுகிறது. நிச்சயமாக, இந்துத்தவச்சிகளிடம் இத்தன்மை குறைவாகவே உள்ளது. இடதுசாரிகளுடன், வலதுசாரிகள் போட்டியிட வேண்டுமானால், நிச்சயமாக இத்திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

jallikattu-girl-with-dmk-man

முயற்சி, பயிற்சி, தேர்ச்சி பெற்றுள்ள மெரினா புகழ் தமிழச்சி: இத்தகைய பிரச்சாரங்களில், இரண்டு பெண்கள் பேசியது, கத்தியது மற்றும் பிரச்சாரம் செய்தது சர்ச்சைகளுக்குட்பட்டன. பெயர் தெரியாத தமிழச்சியும், இந்துத்துவச்சி ராதா ராஜனும் தான் அவர்கள் இருவரையுமே தமிழக மக்கள் அறியாதவர்கள் என்றே சொல்லலாம். ஆனால், அவர்கள் சீக்கிரம் கவனத்தில் கொண்டுவரப்பட்டு, ஊடகங்களினால், சமூக வலைதளங்களினால் பிரசித்தி பெற்று விட்டார்கள்.  தமிழச்சி என்ற இளம்பெண்ணைப் பொறுத்த வரையில், அப்பெண்ணின் முகபாவம், கை-கால் அசைவுகள், பேச்சும் விதம், பேச்சின் தோரணை, உச்சரிப்பு, குரல் ஏற்றம்-இறக்கம் முதலியவற்றை கவனிக்கும் போது, மிக்க பயிற்சி பெற்ற பெண்ணாகக் காணப்படுகிறாள். நிச்சயமாக இதில் முயற்சி, பயிற்சி, தேர்ச்சி பெற்றுள்ளது தெரிகிறது. இல்லையென்றால், மோடியைப் பற்றி அவ்விதமாக நக்கலோடு பேசியிருக்க அவசியமில்லை. சுப்ரமணிய சுவாமியின் “பொறுக்கி” பேச்சிக்கு, அவ்வாறே பதில் கொடுத்து கத்த வேண்டிய அவசியம் இல்லை. தவிர ஓ.பி.எஸ், சசிகலா முதலியோரை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை. இளங்கன்று பயமறியாது என்பது உண்மைதான், ஆனால், அப்பெண்ணைச் சார்ந்தவர்கள், தெரிந்தவர்கள், அச்சித்தாந்த கூட்டத்தினர்களுடன் தான் அப்பெண் பலநிற உடைகளில், பலவிதமாக பேசியுள்ளது, இளைதளங்களில் உள்ளன. எனவே அவற்றை மறைக்க முடியாது.

jallikkatytu-demo-anti-modi-placard-and-slogans

மோடி-எதிர்ப்பு தமிழச்சி: ‘ஊற சுத்துற மோடி மெரீனா பக்கம் வாடி’, ‘எபிசிடி மோடி ஒரு கேடி’, ‘மோடி மோடி தாடி வச்ச கேடி’, ‘ஊர் சுத்துற மோடி, மதுர பக்கம் வாடி’, ……என்று, பல்வேறு கோஷங்களை எழுப்பி சென்னை மெரினாவில் கலந்துகொண்ட பெண் இறந்துவிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. இவர் போராட்டத்தில் கலந்துகொண்ட வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் ‘வீரத் தமிழச்சி’ என்று வலம் வந்தது. இந்நிலையில், இந்தப் பெண் இறந்துவிட்டதாகவும், கட்சி சார்பானவர் என சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக, திமுக-வை சேர்ந்தவர் எனக் கூறப்பட்டது. போராட்டத்தில் அரசியல் தலைவர்களை விமர்சித்ததுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மிரட்டல்கள் அவருக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த இரு தினங்களாக அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் கூறி, ‘ஜல்லிக்கட்டுக்காக வந்துகொண்டிருந்தபோது மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த பவித்ரா என்ற பெண்ணின் புகைப்படத்தையும் இவரையும் இணைத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளிவந்தவண்ணம் இருந்தது[2]. இதெல்லாம் திசைத்திருப்பும் போக்காகக் கொள்ளலாம். இன்றைக்கு முகமதியருக்கு அடுத்தபடி, தமிழ்-பிரிவினைவாதிகள், இந்திய தேசிய விரோதிகள் இக்கலையில் வல்லவர்களாக இருக்கின்றனர்.

jallikattu-girl-missing

“பெயர் தெரியாத தமிழச்சி”க்கு இன்னும் பிரச்சாரம் நடைபெறுகிறதா?: தினத்தந்தி, இப்பெண்னைப் பற்றி, “சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்ற போது பெண் ஒருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். உற்சாகம் குறையாது, உணர்வு பொங்க கோஷங்களை எழுப்பினார். பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவியதுஇதற்கிடையே கோஷம் எழுப்பிய பெண் குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என விமர்சனங்கள் எழுந்தது. சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பபட்டது. பெண்ணிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என்றும், காணவில்லை என்றும் தகவல்கள் பரப்பபட்டதுஇப்போது குறிப்பிட்ட பெண் தனியார் பத்திரிக்கைக்குசெல்ஃபி  வீடியோஒன்றை அனுப்பிவைத்து விளக்கம் அளித்து உள்ளார்[3]. அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை”, என்று விவரித்து செய்தியை வெளியிட்டது, ஆனால், அது இப்பொழுது காணப்படவில்லை, அதாவது, காரணம் சொல்லாமல் எடுத்து விட்டார்கள்.  சரி அந்த பெண் சொன்னதை பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

25-01-2017

jallikkatu-turns-anti-modi-campaign

[1] மின்னம்பலம், நான் நலமாக இருக்கிறேன்வதந்திகளை நம்ப வேண்டாம்!, செவ்வாய், 24 ஜன 2017

[2] https://minnambalam.com/k/1485242605

[3] https://www.youtube.com/watch?v=aSC8zAU1MTA ; Published on Jan 23, 2017

சூத்திர மாடு, பார்ப்பன மாடு எனும் போது, ஏன் சத்திரிய மாடு, வைசியமாடுகளைப் பற்றிப் பேசுவதில்லை?

மே 23, 2010

சூத்திர மாடு, பார்ப்பன மாடு எனும் போது, ஏன் சத்திரிய மாடு, வைசிய மாடுகளைப் பற்றிப் பேசுவதில்லை?

செம்மொழி மாநாட்டு திருச்சி செல்வேந்திரன், நேரிடையாக பெயர்களைக் குறிப்பிட்டு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்றெல்லாம் சொல்லி, நாத்திகத்தையே ஆதாரமாக வைத்துக் கொண்டு அகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

ஆக திமுகவிலும், நாத்திகத்திலும் அத்தகைய வர்ணாஸ்ரம வித்தியாசங்கள் பார்ப்பது போன்ற வழக்கம்-பழக்கம் உள்ளது எனத் தெரிகிறது.

வித்தியாசம் இல்லையென்றால், சமத்துவம் உள்ளதென்றால், அங்கேயிருந்த பாரபட்சம், அங்கு சென்று அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்.

ஏற்கெனெவே பல ஆய்வாலர்கள் தாங்கள் நாயைவிட கேவலமாக நடத்தப் பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் [உடனே நமது உற்சாகமான அறிவுஜீவிகள் நாய்களில்கூட பிராமண நாய், சத்திர நாய், வைசிய நாய், சூத்திர நாய் என்றெல்லாம் உண்டா என்று ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை].

தமிழால் எல்லாம் முடியும்: தமிழ்நாட்டு அறிவுஜீவிகள் தமிழ் என்று சொல்லி என்ன வியாபாரமும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம், அரசு தரப்பில் உள்ள பரிசுகள், விருதுகள் எல்லாவற்றையும் அள்ளலாம். பொய்களையே சொல்லிக் கொண்டு உணர்ச்சியோடு கத்திப் பேசினால், உண்மையாக்கிவிட முடியும் என்று ஆர்பாட்டமும் செய்யலாம். இணைத்தளங்களிலோ சொல்லி மாளாது.

மாடுகளிலும் சூத்திரமாடு, பார்ப்பன மாடு உண்டு: இப்படி ஒரு இணைத்தள அதிரடியாளர், தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார். சரி, பிறகு அந்த சத்திரிய மாடு, வைசிய மாடுகள் எல்லாம் இருக்கவேண்டுமே? அவை எங்கே மேயப் போய்விட்டன?